யாழ் மத்திய கல்லூரியின் நாதவினோதம் என் பார்வையில் செ.பாஸ்கரன்

. 


சென்ற சனிக்கிழமை 08 07 2017 அன்று சிட்னி வாழ் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் அமைப்பு நாதவினோதம் என்ற இசை நிகழ்ச்சியை SEYMORE CENTER இல் நாடாத்தியது. மண்டபம் நிறைந்த மக்களோடு காணப்பட்டது. வழமை போலவே யாழ் மத்திய கல்லூரியின் நாதவினோதம் குறிப்பிட்ட நேரமான 5.30 மணிக்கே ஆரம்பமானது பாரட்டுக்குரியது.
விஜே தொலைக்காட்சி SUPPER SINGAR இசைக்குழுவான MANI BAND இசைக் கலைஞர்கள் சுற்றியிருக்க நடு நாயகமாக வீணை இசை வித்தகர் ராஜேஷ் வைத்தியா அமர்ந்திருந்தார். 5.30 மணிக்கு ராஜேஷ் வைத்தியாவே ஒலிவாங்கியை எடுத்து வணக்கம் கூறிவிட்டு கணபதி துதியும் தொடர்ந்து அம்மாவென்றழைகாத பாடலையும் வாத்திய இசையில் தந்தார்கள். தொடர்ந்து உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல என்று வீணையில் இசைத்ததும் சபையோரின் கரகோஷம் அதிரவைத்தது. தொடர்ந்து அழகே அழகே ஓவியம் என்றும் இசைத்து அசத்தி விட்டார்கள். அருமையான தொடக்கமாக இருந்தது.
புதியவர்களுக்கு இசை நிகழ்வு எந்த அறிவிப்பாளரும் இல்லாமல் நிகழ்வு தொடங்கியது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து  யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் நிகழ்வை பார்ப்பவர்களுக்கு இது தெரிந்தே இருக்கும்.  நிகழ்ச்சி ஆரம்பிக்கும் எந்த இடையூறும் இல்லாமல் தொடரும் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவடையும். பொன்னாடை பன்னாடை எதுவும் இருக்காது அறிவிப்பாளர்களின் சுய தம்பட்டம் இருக்காது. நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்கள் பார்த்து ரசித்து விட்டு செல்வார்கள். தொடர்ந்தும் நிகழ்ச்சியை ரசிகர்களுக்காகவே நடாத்தும் உங்கள் பபணி தொடரட்டும்.




இந்த நாதவினோத வாத்திய இசையை தொடர்ந்து கலக்கபோவது யாரு நவீன் அறிவிப்பாளராக வந்து இரத்தின சுருக்கமாகவும் நகைச்சுவையாகவும் பேசி பல குரல் மன்னன் என்பதை காட்டிவிட்டு பாடகர்களை அழைத்தார்.
Anand Aravind acshan வெள்ளைப் புறா ஒன்று என்ற பாடலை மிக அழகாக பாடினார் தொடர்ந்து வந்த ஹரிப்ரியா மன்னவன் வந்தானடி என்ற பாடலோடு ஆரம்பித்தார் அவருடைய விருப்பப் பாடல் பல மேடைகளில் அவர் பாடிய பாடல் இருந்தும் இங்கு அந்தப் பாடலில் ஏனோ தெரியவில்லை உயிர் இருக்கவில்லை. தொடர்ந்து ஆனந்த் அரவிந்த் அக்சன் கண்ணம்மா கனவில்லையா என்ற பாடலை ஆரம்பித்ததும் சபையில் பலத்த கரகோஷம். உயிர் உருக பாடியபோது நம் உள்ளமே உருகிவிட்டது. அதுவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நினைவலைகளோடு  நெஞ்சமெலாம் நிறைந்த அந்த பாடலை அவர் பாடியதும் மணி இசைக்குழுவினர் கீழ் ஸ்தானியில் வாசித்ததும் ராஜேஷ் புகுந்து விளையாடியதும் மிக அற்புதமாக இருந்தது. பின்பு இருவரும் சேர்ந்து மலரே மௌனமா பாடினார்கள். மிக நன்றாக சென்றுகொண்டிருந்தது. ஆனால் பல வேளைகளில் ஒலிவாங்கி ஒத்துழைக்காமல் பாதாள கிணற்றில் இருந்து வருவது போன்ற ஒலியாக இருந்தது.


அடுத்து யேசுதாஸின் அருமையான பாடலான விழியே கதை எழுது என்ற பாடலை ஆனந்த் அரவிந்த் அக்சன் ஆரம்பித்தபோது ரசிகர்களுக்கு ஒரு உற்சாகம் பிறந்தது ஆனால் ஹரிப்பிரியா ஆயத்தம் இல்லாதவராக பல இடங்களில் ஆரம்பிக்காமலும் சுருதி பேதத்தோடும் ஏனோ தானோ என்று பாடிமுடித்துவிட்டு நான் சரியா பாடல என்று கூறிக்கொண்டார். அதன் பிறகும் ஒரு பாடலில் அசிரத்தையகவே இருந்தார். மிகச் சிறந்த ஒரு பாடகி மேடைக்கு வருவதற்கு முன்பு பலதடவை பாடிப் பார்க்க வேண்டாமா. அல்லது சிட்னியில் உள்ள தமிழர்கள் இசைஞானம் இல்லாதவர்கள் என்ற நினைப்பா?  அல்லது காசு பெறாமல் இலவச சேவை புரிய வந்தாரா புரியவில்லை.
 இது இப்படி அமைந்தது என்றால் நன்றாக சென்று கொண்டிருந்த இசை நிகழ்வின் இறுதிப்பகுதி ராஜேஷ் வைத்தியாவின் கேட்பாரற்ற நிகழ்வாக நிகழ்த்தப் பட்டது. ஏறக்குறைய 25 பாடல்களுக்கு வீணையில் இசை வழங்கு கின்றார் Drum player mono beat கொடுத்துக் கொண்டே இருக்கின்றார். ராகங்கள் மாறுகின்ற போதும் ஒரே அடிதான் ரசிப்பதற்கு பதிலாக வெறுப்பே வருகிறது. மிக அருமையான மணி band எதுவுமே செய்யாது பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். அற்புதமான புல்லாங் குழல் கலைஞர் குழலை எடுப்பதும் வைப்பதுமாக இருக்கின்றார். சுருதி பேதத்துடன் வாசிக்க அவர் விரும்பவில்லைப் போல் தெரிந்தது. ஏன் வாத்திய கலைஞர்களும் வீணைக் கலைஞரும் ஒத்துபோகவில்லை என்பது கேள்வியாகத்தான் இருந்தது. முதல் பாதியில் அற்புதமாக இசைத்த கலைஞர்களுக்கு இறுதியில் என்ன நடந்தது? இது நான் மட்டும் கேட்கும் கேள்வியல்ல பலர் கேட்டிருந்தார்கள்.  நிகழ்வு 10.30 மணிக்கு சரியான நேரத்தில் முடிக்கப் பட்டது. அது மத்திய கல்லூரியின் ஒழுங்கமைப்பு அதற்கு பாராட்டுக்கள்.


நவீன் என்ற இளைஞன் தன பங்கினை மிக அழகாக செய்து முடித்தார். இன்னும் கொஞ்ச நேரம் அவருக்கு கொடுத்திருக்கலாம் பாடகர்களுக்கு மிக மிக சொற்ப பாடல்களே கொடுக்கப் பட்டது அவர்களுக்கு இன்னும் சில பாடல்களை கொடுத்திருக்கலாம். என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது. அன்றைய இரவு ஒரு நல்ல இரவாக அமைந்தது.
இந்த கொத்துப் புட்டுக்கு ஏன் இவங்கள் பத்து டொலர்கள் போட்டவங்கள் என்று கேட்டுக் கொண்டே புட்டை பிரட்டி வாயில் போட்டுக் கொண்டு நின்ற பலரை இடை வேளையின் போது காணக் கூடியதாக இருந்தது.
நாதவினோதம் மனம் நிறைந்த நிகழ்வாகவே இருந்தது குறித்த விடயங்களையும் பார்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இந்த பதிவிற்கு பதில் எழுத விரும்பினால் தயவு செய்து எழுதி tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பினால் அடுத்தவாரம் பிரசுரிக்கப் படும்.








No comments: