வித்தியாவின் மரணத்திற்கு காரணமான மூன்று காரணிகள்
சவூதி இளவரசரை விமான நிலையத்தில் வைத்து வரவேற்ற இராஜாங்க அமைச்சர்
ஊடகவியலாளரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை
மக்கள் மகிழ்ச்சியில் ; இராணுவத்தினரிடமிருந்து 27 வருடங்களின் பின் மயிலிட்டி துறைமுகம் விடுவிப்பு
மக்களே அவதானம் : 80 ஆயிரத்தை தாண்டியது டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை
வித்தியாவின் மரணத்திற்கு காரணமான மூன்று காரணிகள்
06/07/2017 சிவலோகநாதன் வித்தியாவுக்கு கூட்டுப்பாலியல் வல்லுறவின் போது தலை யில் ஏற்படுத்தப்பட்ட காயத்தினால் ஏற்பட்ட குருதிப்பெருக்கு, கழுத்துப் பகுதியானது கழுத்துப் பட்டியினால் நெரிக்கப்பட்டமை, உள்ளாடையினை வாயினுள் திணித்தமையால் சுவாசப்பாதை தடை செய்யப்பட்டமை ஆகிய மூன்று பிரதான காரணங்களினாலேயே அவரது மரணம் சம்பவித்துள்ளது.
இக்காயங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக மரணத்தை ஏற்படுத்த கூடியனவாக காணப்பட்டன என்பதுடன் வித்தியா சம்பவ தினத்தன்று காலை 7.30 க்கும் 9.30 க்கும் இடைப்பட்ட நேரத்திற்குள்ளேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு புங்குடுதீவு மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டுப்பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் 23 ஆவது சாட்சியான சட்டவைத்திய விசேட நிபுணர் டாக்டர் உருத்திரபசுபதி மயூரதன் ட்ரயல் அட்பார் நீதிமன்றில் சாட்சிமளித்தார்.
வித்தியாவின் கூட்டு பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கானது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் மொழி பேசும் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றில் தொடர் விசாரணையாக இடம்பெற்று வருகின்றது.
நேற்றைய தினம் தொடர் வழக்கு விசாரணையின் ஐந்தாவது நாளாக சாட்சிப் பதிவிற்காக மன்று கூடியிருந்தபோது இவ் வழக்கில் 23ஆவது சாட்சியின் சாட்சிப் பதிவுகள் ஆரம்பமாகியிருந்தது. இந்த சாட்சியத்தை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்துடனும் ஏனைய அரச சட்டவாதிகள் குழுவினருடனும் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார்ரட்ணம் நெறிப்படுத்தினார்.
இதன்போதே சட்ட வைத்திய நிபுணர் இவ்வாறு சாட்சியமளித்தார்.
மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டுப்பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் 23 ஆவது சாட்சியான சட்டவைத்திய விசேட நிபுணர் டாக்டர் உருத்திரபசுபதி மயூரதன் ட்ரயல் அட்பார் நீதிமன்றில் சாட்சியமளித்தார்.
வித்தியாவின் கூட்டு பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கானது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் மொழி பேசும் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான அன்னலிங்கம் பிரேம்சங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றில் தொடர் விசாரணையாக இடம்பெற்று வருகின்றது.
நேற்றைய தினம் தொடர் வழக்கு விசாரணையின் ஐந்தாவது நாளாக சாட்சிப் பதிவிற்காக மன்று கூடியிருந்தபோது இவ் வழக்கில் 23ஆவது சாட்சியின் சாட்சிப் பதிவுகள் ஆரம்பமாகியிருந்தன. இந்த சாட்சியத்தை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்துடனும் ஏனைய அரச சட்டவாதிகள் குழுவினருடனும் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார்ரட்ணம் நெறிப்படுத்தினார். இதன்போதே சட்ட வைத்திய நிபுணர் இவ்வாறு சாட்சியமளித்தார்.
சிவலோகநாதன் வித்தியாவுக்கு கூட்டுப்பாலியல் வல்லுறவின் போது தலையில் ஏற்படுத்தப்பட்ட காயத்தினால் ஏற்பட்ட குருதிப்பெருக்கு, கழுத்துப் பகுதியானது கழுத்துப் பட்டியினால் நெரிக்கப்பட்டமை, உள்ளாடையினை வாயினுள் திணித்தமையால் சுவாசப்பாதை தடை செய்யப்பட்டமை ஆகிய மூன்று பிரதான காரணங்களினாலேயே அவரது மரணம் சம்பவித்துள்ளது.
இக்காயங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக மரணத்தை ஏற்படுத்த கூடியனவாக காணப்பட்டன என்பதுடன் வித்தியா சம்பவ தினத்தன்று காலை 7.30 க்கும் 9.30 க்கும் இடைப்பட்ட நேரத்திற்குள்ளேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு புங்குடுதீவு மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டுப்பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் 23 ஆவது சாட்சியான சட்டவைத்திய விசேட நிபுணர் டாக்டர் உருத்திரபசுபதி மயூரதன் ட்ரயல் அட்பார் நீதிமன்றில் சாட்சியமளித்தார்.
வித்தியாவின் கூட்டு பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கானது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் மொழி பேசும் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான அன்னலிங்கம் பிரேம்சங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றில் தொடர் விசாரணையாக இடம்பெற்று வருகின்றது.
நேற்றைய தினம் தொடர் வழக்கு விசாரணையின் ஐந்தாவது நாளாக சாட்சிப் பதிவிற்காக மன்று கூடியிருந்தபோது இவ்வழக்கில் 23ஆவது சாட்சியின் சாட்சிப் பதிவுகள் ஆரம்பமாகியிருந்தன. இந்த சாட்சியத்தை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்துடனும் ஏனைய அரச சட்டவாதிகள் குழுவினருடனும் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார்ரட்ணம் நெறிப்படுத்தினார்.
இதன்படி பிரதி சொலிசிட்டர் ஜெனரலுடைய வினாக்களுக்கு சாட்சி அளித்த சாட்சிப் பதிவுகள் பின்வருமாறு;
கேள்வி : உங்களுடைய பெயர் என்ன?
பதில் : உருத்திரபசுபதி மயூரதன்.
கேள்வி : உங்களுடைய தொழில் என்ன?
பதில் : சட்ட வைத்திய விசேட நிபுணர்.
கேள்வி : எங்கே பணியாற்றுகிறீர்?
பதில் : யாழ். போதனா வைத்தியசாலையில்.
கேள்வி : இதுவரை எத்தனை சடலங்களை பிரேத பரிசோதனை செய்துள்ளீர்?
பதில் : நான்காயிரம் வரை.
கேள்வி : அவற்றில் எத்தனை சம்பந்தமாக நீதிமன்றுக்கு சாட்சியமளித்துள்ளீர்?
பதில் : 60 க்கும் மேற்பட்ட சடலங்களின் பிரேத பரிசோதனை சம்பந்தமாக சாட்சியமளித்துள்ளேன்.
கேள்வி : 2015.05.14 ஆம் திகதி பிரேத பரிசோதனையொன்றை மேற்கொண்டிருந்தமை தொடர்பாக ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தீரா?
பதில் : ஆம்.
கேள்வி : என்ன வழக்கு சம்பந்தமாக?
பதில் : வித்தியாவின் வல்லுறவு கொலை தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை சம்பந்தமாக.
கேள்வி : அந்த வழக்கிலக்கம் என்ன?
பதில் : B116/15
கேள்வி : அவர் இறந்தது எப்போது?
பதில் : அவரது உடல் 14.05.2015 கண்டெடுக்கப்பட்டது.
கேள்வி : அந்த பிரேத பரிசோதனையை மேற்கொள்ள கட்டளையிட்டது யார்?-
பதில் : ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் லெனின்குமார்.
கேள்வி : சடலத்தை யார் பிரேத பரிசோதனையின் போது அடையாளம் காட்டியது?
பதில் : குறித்த பெண்ணின் சித்தியான சறோஜினி மற்றும் சகோதரனான கார்த்தி.
கேள்வி : சடலம் காணப்பட்ட ஸ்தலத்தில் அது எவ்வாறு இருந்தது?
பதில் : மல்லாக்காக முகம் மேலே பார்த்தவாறு இரண்டு கைகளும் பின்புறம் மடித்து பிடரிப் பகுதியில் வைத்து பச்சை நிற ரிபனால் பெருவிரல்கள் இரண்டையும் சேர்த்து கட்டப்பட்டிருந்தது. வெள்ளை நிற பெனியனாலும் கூந்தலின் ஒரு பகுதியினாலும் கட்டப்பட்டிருந்தது. கால்கள் இரண்டும் 180 பாகைக்கு அதிகமாக விரிக்கப்பட்டு இரண்டு மரங்களில் கட்டப்பட்டிருந்தன. வலது காலானது கறுப்பு நிற மார்புக் கச்சையின் கிழிந்த ஒரு பகுதியினால் அலரி மரத்திலும் இடது காலானது இடுப்புப் பட்டியால் அலரி மரத்திலும் கட்டப்பட்டிருந்தன. இதனை எனது ஸ்தலக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளேன். (சாட்சி இதனை சைகை மூலம் செய்து காட்டினார்).
கேள்வி : ஸ்தலக் குறிப்பில் தலை பற்றி எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?
பதில் : வலப்புறமாக திரும்பி இருந்தது. பழுதடைதல் நிலை ஆரம்பமாவதற்கான அறிகுறி தென்பட்டது. கண், மூக்கு வீங்கியிருந்தன.
கேள்வி : காது தொடர்பாக?
பதில் : இரத்தக் கசிவு இடப் பக்கக் காதில் ஏற்பட்டிருந்தது. இங்கு இரத்தம் கலந்த திரவமொன்று அதாவது இறந்த உடலிலிருந்து வெளியேறும் திரவமும் காணப்பட்டது.
கேள்வி : மூக்குத் தொடர்பாக?
பதில் : அதுவும் காதில் ஏற்பட்டிருந்ததைப் போன்றே காணப்பட்டது.
கேள்வி : வாய் தொடர்பாக?
பதில் : பகுதி அளவில் திறந்து காணப்பட்டது. அதனுள் பெண்கள் அணியும் உள்ளாடை திணிக்கப்பட்டிருந்தது.
கேள்வி : வாயினுள் திணிக்கப்பட்டிருந்த உள்ளாடை தெளிவாகத் தெரிந்ததா?
பதில் : முதலாவது பார்வையில் தெரியவில்லை. பின்னர் பாடசாலை செல்லும் பெண்ணொருவர் அணியும் ஆடைகளை கணக்கிட்டுப்பார்த்தபோது உள்ளாடை இருக்கவில்லை. இதன் பின்னர் அவதானித்தபோது வாயினுள் உள்ளாடை திணிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டிருந்தது. வாயில் இருந்து வெளியேறும் உமிழ் நீரால் குறித்த உள்ளாடை நனைந்து நாக்குப் போலவே முன்னர் தெரிந்தது.
கேள்வி : ஸ்தலக் குறிப்பில் உடலில் மற்றைய பகுதி தொடர்பாக ?
பதில் : மார்பு, உடல் காயங்கள் இல்லை. கட்டப்பட்டிருந்த கட்டுக்களை நீக்கி உடலை பின்புறம் திருப்பிப் பார்த்தபோது பிட்டப் பகுதியில் உராய்வுக் காயம் காணப்பட்டது. முதுகில் காயம் இல்லை.
கேள்வி : கட்டுக்களை அவிழ்க்க உதவியது யார்?
பதில் : சோக்கோ பிரிவுப் பொலிஸார்.
கேள்வி : ஸ்தலத்தில் வைத்து உடலில் இருந்து வேறு என்ன சான்றுகளை எடுத்தீர்கள்?
பதில் : யோனிப் பகுதியிலிருந்து இரண்டு மாதிரிகளையும் மார்புப் பகுதியிலிருந்து இரண்டு தலை முடிகளையும் எடுத்தோம்.
கேள்வி : சடலத்தின் கழுத்துப் பகுதியை அவதானித்தீரா?
பதில் : பாடசாலை கழுத்துப் பட்டியான பச்சை நிறமான பட்டியால் இறுக்கப்பட்டிருந்தது. இடப் பக்கக் கழுத்தின் மேற்பகுதியில் ஒரு நுனியும் மறு நுனியானது அலரி மரத்தில் கட்டப்பட்டிருந்தது. இவ்வாறு கட்டப்பட்டிருந்தமையானது நிலத்திலிருந்து இரண்டு அடி உயரத்திலாகும்.
கேள்வி : பிரேத பரிசோதனையின்போது உடலில் எத்தனை காயங்கள் இருந்தன?-
பதில் : எட்டுக் காயங்கள்.
காயம் 1 :– தலையில் தோலுக்கும் எலும்புக்கும் இடையில் குருதிப் பெருக்கு 16x 8 செ.மீ. வலப் பகுதியில் காணப்பட்டது. மண்டையோட்டு எலும்பு உள்ளே மூளையில் இரத்தக் கசிவும் மூளை வீங்கியும் காணப்பட்டது. இக்காயங்களானது மொட்டையான விசையினால் உருவாக்கப்பட்டது. தலையானது வன்மையான ஒரு பிரதேசத்தில் அடிக்கப்படும்போது இது ஏற்பட்டிருக்கும். இக்காயம் பொதுவாக உயரமான பிரதேசத்திலிருந்து கீழே விழுவதன்மூலமே ஏற்படும். அவ்வாறு விழும்போது மண்டையோட்டு எலும்புகள் உடைந்து காணப்படும். ஆனால் இங்கு மண்டையோட்டு எலும்புகள் உடையவில்லை. எனவே மீண்டும் மீண்டும் ஓரிடத்தில் தாக்கப்பட்டதால் ஏற்பட்டிருக்கலாம்.
காயம் 2 :– தலையின் மேற்பகுதியில் உச்சிப் பகுதியில் ஏழுக்கும் மேற்பட்ட காயங்கள் காணப்பட்டன. இவையும் குருதிப் பெருக்கு காயங்களே. 12X10 செ.மீ. மொட்டையான விசையால் ஏற்படலாம், கூந்தலை பலமாக இழுக்கும்போதும் ஏற்படும்.
காயம் 3 :– இது கண்டல் வகையான காயம். 3X3 செ.மீ. அளவில் வலது பக்க கன்னப் பகுதியில் காணப்பட்டது. மொட்டையான விசையால் இறுக்கமாக அழுத்தும் போது அல்லது தாக்கப்படும்போது இத்தகைய காயம் ஏற்படலாம்.
காயம் 4 :– மேல் உதட்டில் உட்புறத்தில் காயம். மொட்டையான விசையினால் தாக்கப்பட்டமையினால் அல்லது இறுக்கமாக அழுத்தப்படும்போது ஏற்படும்.
காயம் 5 :– உராய்வுக் காயம். கழுத்தினைச் சுற்றி 35x1 செ.மீ. அளவு. இது கழுத்துப் பட்டியால் அழுத்தும்போது ஏற்படும் காயத்திற்கு சமனானது. தசைப் பகுதியில் கண்டல் காணப்பட்டது. கழுத்து எலும்புகள் முறிவடையவில்லை.
காயம் 6 :– கண்டல் வகைக் காயம். இது தோலை வெட்டி பார்த்தபோது கண்டறியப்பட்டது. வலது பக்க இடுப்பில் சற்று மேற்பக்கத்தில் 18x12 செ.மீ அளவுடையது. இது வன்மையான பிரதேசத்தில் தாக்கும்போது அல்லது மென்மையான தலைப் பகுதியில் குறித்த பெண்ணின் உடல் இருக்கும்போது மேலிருந்து விசை பிரயோகிக்கப்படும்போது ஏற்படும். ஆனால் பிரயோகிக்கப்பட்ட விசை இடைத்தரப்பு விசை ஆகும்.
காயம் 7 :– உராய்வுக் காயம் வெளிப்புறமாகக் காணப்பட்டது. உடலில் இரண்டு பிட்டங்களிலும் காணப்பட்டது. வலது பக்கத்தில் 12x7 செ.மீ. இடது பக்கம் 7x5 செ.மீ. அளவுடையது.
காயம் 8 :– வலது கால் பகுதியில் காட்டு முள் ஒன்று குத்தி இருந்தது. இம்முள்ளானது காயாத பச்சை முள்ளாகும். காயத்தினுள் இம்முள்ளானது காணப்பட்டது.
மன்றின் கேள்வி : காயம் 6, 7 இவற்றிற்கு இடையிலான தூரம் எவ்வளவு?
பதில் : அண்ணளவாக 6 அங்குலம்.
கேள்வி : கண் தொடர்பாக எதனைக் குறிப்பிட்டுள்ளீர்?
பதில் : கண்ணில் உள் மடலில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது. இடது கண்ணில் வெளிப்புறத்தில் ஒட்டக்கூடிய தன்மையுடைய திரவம் ஒன்று காணப்பட்டது. கண்ணின் உள் மடலில் ஏற்பட்ட இரத்தக் கசிவானது பொதுவாக மூச்சுத் திணறலின்போது ஏற்படும் மரணங்களில் இது நிகழும்.
கேள்வி : கூந்தலின் நீளம் எவ்வளவு?
பதில் : ஒரு மீற்றருக்கு அண்மையாக (88 செ.மீ)
கேள்வி : வாய் தொடர்பாக?
பதில் : வாயினுள் பிங் கலர் உள்ளாடை திணிக்கப்பட்டிருந்தது.
கேள்வி : பல் தொடர்பாக ?
பதில் : அனைத்துப் பற்களும் காணப்பட்டன.
கேள்வி : உடலில் ஆரம்ப தளர்ச்சி தொடர்பாக ?
பதில் : உடலானது அழுகிப்போகும் நிலைக்கு மாறியிருந்தது.
கேள்வி : இவ் அழுகும் நிலையானது மரணித்து எத்தனை மணித்தியாலங்களின் பின்னர் ஏற்பட்டிருக்கும்?
பதில் : 18 மணித்தியாலங்களின் பின்
கேள்வி : அப்படியாயின் மரணம் எப்போது இடம்பெற்றிருக்கும்?
பதில் : நான் பிரேத பரிசோதனை செய்ய ஆரம்பித்த நேரத்திலிருந்து 18 – 32 மணித்தியாலங்களுக்கு முன்பு.
மன்றின் கேள்வி – ஏன் விரைவாக உடலானது அழுகிப்போக தொடங்குகிறது?
பதில் : அது சூழலைப் பொறுத்தே கணிக்கப்படும். அந்த வகையில் வெப்ப வலய பிரதேசமாக எமது நாடு இருப்பதால் இவ்வாறான நிலை ஏற்படுகிறது.
கேள்வி : பெண் உறுப்புத்தொடர்பாக ?
பதில் : சில காயங்கள் காணப்பட்டன. அவை கன்னி மென்சவ்வு பல இடங்களில் கிழிந்தும் பல இடங்களில் அழிவடைந்தும் இல்லாமலும் போயிருந்தது. யோனித்துவாரத்தின் உட்பகுதியில் கீழாக 2 செ.மீ. கிழிவுக் காயம் காணப்பட்டது. இது செங்குத்தாக காணப்பட்டது. இக்காயமானது ஆண்குறி உட்செல்லும்போது சாதாரணமாக ஏற்படும் காயத்தை விட மோசமானது. அதாவது சாதாரண உடலுறவுக்கு அப்பால் ஓர் குறுகிய நேரத்தில் பலரால் பலமுறை ஆண்குறி உட்செலுத்தப்பட்டமையினால் ஏற்பட்டது.
ஒரு ஆண் பெண்ணின் மீது இருந்து உடல் உறவில் ஈடுபடும்போது விசையானது கீழ்ப்பகுதியை நோக்கித்தான் செல்லும். அந்த வகையில் இக்காயமானது வன்மையாக பலாத்காரமாக மேற்கொள்ளப்பட்டதால் ஏற்பட்டது. ஏற்கனவே குறிப்பிடப்பட்ட காயங்களான 6, 7 ஆகிய காயங்கள் ஏற்படுவதற்கு யோனிப்பகுதியில் இக்காயம் ஏற்படுவதற்கு காரணமாகிய காரணத்திற்கு தொடர்புகள் உண்டு. அதாவது பலாத்கார வன்புணர்வின்போது தலைப்பகுதி வன்மையாக தொடர்ந்து மோதும்போது ஏற்படக்கூடியது.
கேள்வி : உங்களது அனுபவத்தின் படி மேற்படி வித்தியாவின் வயதை உடைய பெண்களுக்கு இவ்வாறான காயங்கள் ஏற்படுமா?
பதில் : பல பிள்ளைகளை பெற்றவர்களை விட சாதாரணமாக உள்ளவர்களுக்கு இப்படியான காயங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. இது மிகவும் பாரதூரமான காயம்.
கேள்வி : நெஞ்சுப் பகுதி தொடர்பாக?
பதில் : சுவாசப்பை வீங்கியும் அதனுள் குருதிக் கலங்கள் தேங்கியும் சுவாசப்பை விரிவடைந்தும் காணப்பட்டது. இது ஒருவர் மூச்செடுப்பதற்கு கஷ்டப்பட்டு திணறல் ஏற்பட்டு இதயம் செயல் இழக்கும்போது ஏற்படும்.
கேள்வி : வயிற்றுப்பகுதி தொடர்பாக?
பதில் : இரப்பையினுள் 100 மி.லீ. அளவுடைய மஞ்சள் நிறமான தேநீரை ஒத்த திரவம் காணப்பட்டது. அதில் மதுசாரம், நஞ்சு கலந்து காணப்படவில்லை.
கேள்வி : தேநீர் ஜீரணமாக எவ்வளவு நேரம் தேவை?
பதில் : பொதுவாக உணவு 4 – 6 மணி நேரத்தில் ஜீரணமாகும்.
கேள்வி : அப்படியாயின் தேநீர் அருந்தி எவ்வளவு நேரத்தில் இறப்பு இடம்பெற்றது?-
பதில் : இரண்டு மணி நேரத்திற்குள்.
கேள்வி : குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் என்ன?
பதில் : இதற்கு மூன்று காரணங்கள் உண்டு. அதாவது தலையில் ஏற்பட்ட காயத்தால் குருதிப்பெருக்கானது ஏற்பட்டிருந்தமை, கழுத்துப்பகுதியானது பாடசாலை கழுத்துப்பட்டியால் இறுக்கி நெரிக்கப்பட்டிருந்தமை மற்றும் உள்ளாடை வாயினுள் திணிக்கப்பட்ட நிலையில் அது தொண்டைப் பகுதியில் அடைத்தமை ஆகிய மூன்று காரணங்களாலுமே இறப்பு இடம்பெற்றிருந்தது.
கேள்வி : பிரேத பரிசோதனை அறிக்கையில் உங்களது குறிப்பு என்பதில் எதனைக் குறிப்பிட்டுள்ளீர் ?
பதில் : உடலில் அவரை பிடித்து அழுத்திப்பிடித்த சான்றுகள் உள்ளன. கை, கால் கட்டப்பட்டும் கன்னப்பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. பின்பகுதியில் கண்டல் காயங்கள் ஏற்பட்டிருந்தமையை சேர்த்துப்பார்க்கின்றபோது இதற்கான சான்றுகள் தெளிவாக உள்ளன. மேலும் யோனிப்பகுதியில் ஆண்குறியானது செலுத்தப்பட்ட சான்றுகள் தெளிவாக உள்ளன.
உடலில் ஏற்பட்டிருந்த காயங்களை தொகுத்துப் பார்க்கின்றபோது கழுத்து, தலை, வாய் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டிருந்த காயங்கள் தனித்தனியாக மரணத்தை ஏற்படுத்தக்கூடிய காயங்கள் ஆகும்.
கேள்வி : தலைப்பகுதியில் ஏற்பட்ட காயம் உடனடியாக மரணத்தை ஏற்படுத்துமா?
பதில் : குறிப்பிட்ட நேரத்தை கூறமுடியாது. அது மூளையில் ஏற்பட்ட தாக்கமும் இரத்தப்பெருக்கின் அளவைப் பொறுத்துமே கூறமுடியும்.
மன்றின் கேள்வி : தலையில் ஏற்பட்ட காயத்திற்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டால் உயிரை காப்பாற்றியிருக்க முடியுமா?
பதில் : இது சாதாரணமாக சத்திர சிகிச்சை மேற்கொண்டு அகற்றிட முடியாது. மூளையின் பல பாகங்களுடன் தொடர்புபட்டது. மருந்துகளையும் கொடுத்து முயற்சித்துப் பார்க்கலாம். ஆனால் நிச்சயமில்லை.
கேள்வி : வாய்க்குள் துணி அடைவதால் மரணம் ஏற்படுமா?
பதில் : வாயில் இருந்து உமிழ் நீர் சுரக்கும்போது வாய்க்குள் திணிக்கப்பட்ட துணியை நனைப்பதால் அத்துணி பாரமடைந்து தானாக தொண்டைக்குள்சென்று சுவாசத்தை அடைத்தால் மரணம் ஏற்படும். குறித்த இப்பெண்ணின் பிரேத பரிசோதனையின் போது அவரது வாய்க்குள் திணிக்கப்பட்டிருந்த உள்ளாடை அவரது தொண்டைவரை சென்று இறுகியிருந்தது.
மன்றின் கேள்வி : வாய்க்குள் துணி அடைக்கப்பட்டும் கழுத்து இறுக்கப்படுவதும் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தால் எவ்வளவு நேரத்தில் மரணம் ஏற்படும்.
பதில் : சில நிமிடங்களில்.
கேள்வி : குறித்த சடலத்தின் வேறு பகுதிகளில் விந்தணுக்கள் ஏதேனும் எடுக்கப்பட்டதா?
பதில் : சடலம் கண்டெடுக்கப்பட்ட அன்றும் அதற்கு முன்பும் மழை பெய்திருந்ததால் உடலில் இருந்த விந்தணுக்கள் மழை நீரில் கழுவி செல்லப்பட்டிருக்கலாம்.
கேள்வி : சடலத்தில் மொய்த்த எறும்புகளால் விந்தணுக்கள் அழிக்கப்பட்டிருக்க முடியுமா?
பதில் : சடலத்தில் எறும்புகள் காணப்பட்டிருந்தன. விந்தணுக்களில் இனிப்புக்கள் அதிகமாக இருப்பதால் அவற்றை எறும்புகள் கவர்ந்திருக்கலாம்.
கேள்வி : சடலம் கட்டிப்போடப்பட்டிருந்த இடத்தில் வல்லுறவு இடம்பெற்றிருந்ததற்கான சான்றுகள் ஏதேனும் காணப்பட்டதா?
பதில் : அது அவ்வாறு இடம்பெற்றிருக்க சந்தர்ப்பம் இல்லை. ஏனெனில் மீண்டும் மீண்டும் வல்லுறவு இடம்பெறும்போது அவ்விடத்தில் இருந்த மரங்களில் இருந்து வீழ்ந்த இலைகுழைகளில் மாற்றங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால் ஸ்தலத்தில் அவதானித்தபோது யோனிமடலுக்கு கீழாக நான்கு அடிவரை அங்கு காணப்பட்ட இலைகுழைகளில் மாற்றங்கள் எதுவும் காணப்பட்டிருக்கவில்லை. அத்துடன் நான் கூறிய காயங்கள் அவ்வாறான ஒரு காய்ந்த இலைகுழைகள் நிறைந்த மெத்தைபோன்று மென்மையான இடத்தில் ஏற்பட்டிருக்காது. எனவே இதனை வைத்து அவ்விடத்தில் வல்லுறவு இடம்பெறவில்லை எனக் கூறமுடியும்.
இதேவேளை குறித்த பெண்ணின் வாயினுள் இருந்து எடுக்கப்பட்ட உள்ளாடையானது ஜீன்டெக் தனியார் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு மன்றுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் அதனை நேற்று சட்ட வைத்திய நிபுணர் அடையாளம் காட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து குறித்த உள்ளாடையானது சான்றுப்பொருள் வ.20 என அடையாளம் இடப்பட்டது.
அதேபோன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றின் இவ்வழக்குத்தொடர்பாக காணப்படும் மூல வழக்கேட்டில் இருந்து பிரேத பரிசோதனை அறிக்கையை பிரித்தெடுத்து மேல் நீதிமன்ற ட்ரயல் அட்பார் நீதிமன்ற வழக்கேட்டில் சான்றுப்பொருள் வ.21 என இணைக்குமாறும் இதனை உறுதிப்படுத்தி அதனை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றுக்கு அனுப்புமாறும் மன்றானது ட்ரயல் அட்பார் நீதிமன்ற பதிவாளர்களுக்கு உத்தரவிட்டது. நன்றி வீரகேசரி
சவூதி இளவரசரை விமான நிலையத்தில் வைத்து வரவேற்ற இராஜாங்க அமைச்சர்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சவூதி இளவரசர்
அப்துல் அஸீஸ் அல் சௌத்தை, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க,
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.
இலங்கைக்கு விஜயம் அப்துல் அஸீஸ் அல் சௌத் 4 மணித்தியாலங்கள் இங்கு தங்கியிருந்த போது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு விஜயம் அப்துல் அஸீஸ் அல் சௌத் 4 மணித்தியாலங்கள் இங்கு தங்கியிருந்த போது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை
05/07/2017 ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை வழக்கில் கொலையாளிக்கு மரண தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிரேஷ்ட பெண் வணிக ஊடகவியலாளரும், சண்டே டைம்ஸ், ஏ.எப்.பி. போன்ற ஊடகங்களின் முன்னாள் ஊடகவியலாளருமான மெல் குணசேகர கொலை வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் மெல் குணசேகரவை கொலை செய்துவிட்டு அவரது கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்டமை ஆகிய குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏ.ஜோர்ஜ் அல்லது ' பெயின்ட் பாஸ்' என அறியப்படும் பிரதிவாதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகள் நிறைவுற்றுள்ள நிலையிலேயே, இன்று அந்த வழக்கின் தீர்ப்பானது மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல் இடம்பெற்ற நீண்ட விசாரணைகள் நிறைவுற்றுள்ள நிலையிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி தலங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பத்தரமுல்ல பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த மெல் குணசேகர சமையலறையில் இருந்த கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தார். அத்துடன் மெல் குணசேகரவின் பிளக்பெரி ரக தொலைபேசியும் 1200 ரூபா பணமும் வீட்டில் இருந்து கொள்ளையிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் விசாரணை செய்த மிரிஹான பொலிஸார் சி.சி.ரி.வி., கொள்ளையிடப்பட்ட பிளக்பெரி தொலைபேசி ஆகியவற்றை மையப்படுத்தி சந்தேக நபரைக் கைது செய்ததுடன் அந்த பிளக்பெரி தொலைபேசியையும் கொள்ளையிடப்பட்ட பணத்தில் 720 ரூபா மிகுதியையும் மீட்டனர்.
இந் நிலையில் மெல் குணசேகரவின் வீட்டுக்கு வர்ணம் பூச வந்தவரே இந்த கொலையை செய்துள்ளமையும் திருடுவதற்காக வீட்டுக்குள் புகுந்த போது மெல் குணசேகர அங்கு இருந்ததை அவதானித்து இந்த கொலையை அவர் செய்திருந்தமையும் விசாரணைகளில் உறுதியானது.
குறித்த சந்தேக நபரை பிரதிவாதியாக குறிப்பிட்டு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பே இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
மக்கள் மகிழ்ச்சியில் ; இராணுவத்தினரிடமிருந்து 27 வருடங்களின் பின் மயிலிட்டி துறைமுகம் விடுவிப்பு
05/07/2017 யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 27 வருடங்களாக இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் உள்ளிட்ட மயிலிட்டி துறை வடக்கு ஜே. 251 கிராமசேவகர் பிரிவில் 54 ஏக்கர் மக்களுக்கு சொந்தமான காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளன.
குறித்த காணிகளை யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, யாழ்.மாவட்டச் செயலரிடம் இன்று காலை உத்தியோகபூர்வமாக கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
மக்களே அவதானம் : 80 ஆயிரத்தை தாண்டியது டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை
07/07/2017 நாட்டில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி டெங்கு சிகிச்சை நடவடிக்கைகளுக்காக விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட 250 இற்கும் அதிகமான வைத்தியர்களை நாடுபூராகவும் கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆண்டின் அதிகூடிய நோயாளர்கள் எண்ணிக்கை பதிவாகிய ஆண்டாக இந்த ஆண்டு கருதப்படுகின்றது. இந்நிலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்த சகல விதங்களிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பொதுமக்கள் தமது சூழலை சுத்தமாக வைத்திருக்க தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வருகின்றது.
நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்துவரும் நிலையில் சுகாதார அமைச்சு மற்றும் அரச நிறுவனங்களை இணைத்துக்கொண்டு அரசாங்கம் விரைவான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக நீர்கொழும்பு, தலங்கம, வேதர, பாணந்துறை மற்றும் ஐ.டி.எச். ஆகிய வைத்தியசாலைகளில் டெங்கு சிசிச்சைக்கான விசேட பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அதேபோல் டெங்கு பரவல் காரணமாக நாளாந்தம் தேசிய வைத்தியசாலையை நாடும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதன் காரணமாக டெங்கு சிகிச்சைக்கான விசேட பிரிவுகளை ஸ்தாபிக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் நிலவும் பகுதிகளில் நுளம்புப் பெருக்கம் தொடர்பிலான அறிக்கைகளை பெற்றுக் கொள்வதற்கும் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அந்தவகையில் நுளம்பு குடம்பிகள் தொடர்பிலான ஆராய்ச்சி உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
பாடசாலைகள், வேலைத்தலங்கள், மதஸ்தலங்கள் மற்றும் ஏனைய நிறுவன வளாகங்களில் 60 வீதமான நுளம்பு பெருக்கம் பதிவாகியுள்ளது. எஞ்சிய 40 வீதமான நுளம்புப் பெருக்கம் குடியிருப்புக்களை அண்மித்துக் காணப்படுவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் மருந்து வகைகளை கியூபா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் டெங்கு சிகிச்சைகளுக்காக பயன்படுத்தும் டெக்ஸ்ட்ரன் சேலைன் வகையை தாய்லாந்திலிருந்து கொண்டுவருவதற்கும் சுகாதார அமை ச்சு தீர்மானித்துள்ளது. இதற்காக தாய் லாந்து அரசாங்கம் தமது விருப்பத்தை தெரிவி த்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment