“ஞானாம்பிகை” என்ற தமிழன்னைக்கு முத்துவிழா

.


யாழ்ப்பாணம் வேம்படி மகளீர் கல்லூரி பழைய மாணவிகளின்சங்கத்தின் அவுஸ்ரேலியா சிட்னி கிளையினரால்அப்பாடசாலையின்முன்னாள் ஆசிரியையும் பேராசியருமான ஞானாம்பிகைகுலேந்திரன் அவர்களின் மாணவிமுனைவர் ஜெயவித்தியாஅவர்களால் உருவாக்கப்பட்ட “ஞான கானம்” நூல் முத்து விழாமலராக இன்று வெளியீட்டுவைக்கப்பட்டது
திருமதி ஞானாம்பிகை குலேந்திரன் தஞ்சாவூர் அறிவியற் கலைகல்லூரியின் பேராசிரியராக கடமையாற்றி ஓய்வுபெற்றவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கே.சுப்பிரமணியம் தம்பதிகளுக்கு இரண்டாவதுவாரிசாக அவதரித்த ஞானாம்பிகை சிவசுப்ரமணியம் அவர்கள்கொழும்புமெதடிஸ் கல்லூரியில் கல்வி பயின்று இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதுகலை முனைவர்எனஅனைத்து பட்டங்களையும் அடுத்தடுத்து தனதாக்கிக் கொண்டார்யாழ்ப்பாணம் வேம்படி மகளீர்கல்லூரிஆசிரியராகவும்பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளராகி பின்னர் தஞ்சாவூர்பல்கலைக்கழகத்தில்ஆய்வுக்கல்வியைத் தொடர்ந்து அதே பல்கலையில் பேராசிரியராகவும் இசை மற்றும் பரதநாட்டியத்துறைகளின்தலைவராகவும் பதவி வகித்து ஈழ மண்ணிற்கு பெருமைக்குரியவர் ஆனார்.


பேராசிரியர் .குலேந்திரனுடன் திருமண பந்தத்தில் இணைந்து சிறீகிருஸ்ணாசிறீநாராயணி அபிமன்யூஏனவாரிசுகளின் தாயானார்.
தான் பெற்ற கல்வியை தன்னுடன் நின்று விடாது மற்றவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் தமிழ்இனத்திற்குபெருமை சேர்க்கும் வகையில் பல நூல்களின் ஆசிரியரானார்.


முதன்நூலாக “பரத இசை மரபு” (1994) என்று தொடங்கி 
Music in the dance of ancient Tamils
Musical traditions of Bharathanatyam
பரத நாட்டியத்தின் தமிழசைப் பாடல்கள்
Karaikkal Ammaiyar – Mother of South Indian Music
காரைக்காலம்மையார் – தென்னிந்திய இசையில் தாய் (1996)
தெய்வத் தமிழிசை (2008)
Music and Dance in the Thanjavur Big Temple (2004)
இப்படி பல நூல்களை சமூகத்திற்கு வழங்கினார்
நூல்கள் உருவாக்கத்துடன் மட்டும் நின்று விடாது பல விருதுகளையும் தனதாக்கிக் கொண்ட பெருமைக்குரியவர்
அந்த வகையில் சுவாமி விபுலானந்தர் விருது (கரந்தை தமிழ்ச் சங்கம்)
1994ம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூலுக்கான தமிழக அரசு விருது பரத இசை மரபு நூலுக்குவழங்கப்பட்டது.
2009ம் ஆண்டு சான்றோருக்கான விருது இலங்கை கம்பன் கழகத்தால் வழங்கப்பட்டது
அவுஸ்ரேலியா மண்ணிலும் விருது பெறத்தவறவில்லை அந்த வகையில்
2016ம் ஆண்டு தமிழ் மொழி இலக்கியத் தொண்டுக்கான விருது – தமிழர் நலன் காப்புக்கழகம் கிறான்வில் – வழங்கிகௌரவிக்கப்பட்டது.
2016ம் ஆண்டு தெய்வத்திருமங்கை என்ற அழகான காவிய விருது அவுஸ்ரேலியா கம்பன் கழகத்தினரால்வழங்கிஇன்னும் பெருமைக்குரியவரானார்.
இவ்வாறு தமிழுக்கு பெருமை சேர்த்த சீமாட்டியை கௌரவிக்கும் வகையில் அவரது அகவை எண்பதில்அவவிற்குஅவரது மாணவிகளால் “முத்து ” விழாவை எடுத்ததையிட்டு பெரு உவகையடைகிறோம்.
இவ்விழாவானது வென்வெத்விலில் அமைந்துள்ள றெஜ்பேன் மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றதுவிழாவிற்குவருகைதந்தோரால் அரங்கு நிறைந்து விழா முடிவுறும் வரை பலர் நின்ற படியே பங்கேற்றுமகிழ்ந்தனர்.
இவ்விழாவை மங்களவாழ்த்து திருமதி சுகந்தி நிமலன் திருமதி ஞான அசோகன் அழகுறவழங்கி விழாவைஆரம்பித்துவைத்தார்கள்.
தொடர்ந்து தேசிய கீதத்தை யஜ்னேஸ் மற்றும் தருனேஸ் ஸ்ரீ கிருஸ்ணா தங்களின் தேன் மதுரக்குரல்களால்வழங்கிஇருந்தார்கள் . வந்தோரரை வரவேற்கும் முகமாக வரவேற்புரையை பழைய மாணவ சங்க உப தலைவிதிருமதி சாந்தாதிருவருட்செல்வன் நிகழ்த்தி சபையோரை வரவேற்றார்.
தொடாந்து தலைமையுரையை சங்கத் தலைவி  டாக்டர் பூமகள் குமார் அவர்கள் அழகுற நிகழ்த்தி சபையைமேலும்மெருகேற்றினார்.
அதனைத் தொடர்ந்து நூல் அறிமுகத்தினை நூலாசிரியரும் திருமதி ஞானாம்பிகை குலேந்திரனின்தஞ்சாவூர்பல்கலைக்கழகத்தின் பழைய மாணவியுமான டாக்டர் என்.ஜெவித்தியா அவர்கள் தன் குருவின் சிடன்என்பதைஅரங்கிற்கு ஆணித்தரமாக தனது பேச்சாற்றலால் நீருபணம் செய்து நூலை அறிமுகம் செய்துவைத்தார்
தொடர்நது அறிமுக உரையை திருமதி ஞானாம்பிகை குலேந்திரன் யாழ் வேம்படி மகளீர் கல்லூரி  பழையமாணவியான டாக்டர் சாந்தா ஜெயராஜ் அவர்கள் நிகழ்தினார்கள்.
மேலும் விழாவின் சீமாட்டியை சீரும் சிறப்புமாக வாழ்க என  வாழ்த்துரைகளை முறையே ஸ்ரீநிர்மலேஸ்வரக்குருக்கள்டாக்டர் விமனோமோகன்திரு.அனகன் பாபு திரு.தேவராஜன் மற்றும் திருமாத்தளைசோமு போன்ற பெரியார்கள்வழங்கி வாழ்த்தினார்கள்
விழாவின் கௌரவத்தையும் வாழ்த்துக்களையும் ஏற்புரையையும் விழாவின் நாயகியுமான  பேராசிரியர்திருமதிஞானாம்பிகை குலேந்திரன் அவர்கள் சபையின் முன் ஏற்றுக் கொண்டு தனது ஏற்புரையைமிகவும்அவையடக்கத்துடனும் தமிழுக்கே உரித்தான பண்புடனும் நிகழ்த்தி சபையினரை மெய்சிலிர்க்கவைத்தார். 
விழாவை மெலும் மெருகூட்ட விணை இசையினை செல்வி சிவந்தி பகீரதன் வழங்கி அணிசெய்கலைஞராகமிருதங்கம் சேயோன் ராகவனும் சேர்ந்து சபையினரை மெய்மறக்க செய்து இசை சமர்பணம்செய்தார்கள்
தொடர்ந்து நன்றியுரையை பழைய மாணவிகள் சங்க செயலாளர் திருமதி மாலினி  பிரபாகரன் வழங்கிவிழாவைநிறைவு செய்தார்கள்இனிமையான சிற்றுண்டிகளும் பரிமாறினார்கள் அன்பு நிறைந்த அரங்கம்அணைவரும் நிழல்படங்களை பதிவிட்டது மட்டுமன்றி  வாழ்த்து பாரட்டுக்களுடன்  நிறைவு செய்தார்கள் 
tamilcnn.lk

No comments: