.
மரியாள் மகனாய்ப் பிறப்பு
மரித்தும் மீண்டு(ம்) வந்த அற்புதம்
வியத்தகு உந்தன் சிறப்பு
பெத்தலகமில் பிறந்த பாலகன்
பணிவுடன் பிரபஞ்சத்தை வந்து இரட்சிக்க
அன்பை அள்ளிதந்த காவலன்
சாண்டா தந்திடும் பரிசுகள்
சகோதரத்துவ சமத்துவப் பாடம் பறைசாற்ற
சண்டைத் தீர்த்திடும் வழிகள்
அழகாய் அலங்கரிக்க மரங்கள்
அகிலத்தில் அனைவரையும் பாசத்தை பகிர
ஒன்றாய்ச் சேர்த்திடும் கரங்கள்
புத்துணர்ச்சிப் பூத்திடப் புத்தாடை
தீமை எண்ணம் சிந்தையில் அகற்ற
அகசுத்தம் செய்யும் நீரோடை
அதிகாலை தேவாலயப் பிரார்த்தனை
பலன் எதிர்பாராப் பண்பை பாரில்பரப்ப
அகத்தில் அழித்திடும் மனவேதனை
எல்லோர் வீட்டிலும் மின்(னும்)நட்சத்திரம்
வேற்றுமை விடுத்து எழில் கொஞ்சும்
ஒற்றுமை ஒளிவீசும் விசித்திரம்
தேவனைத் துதித்திடும் தேவகானம்
இறைத்தேனைப் பருக தேனீயாய் ரீங்காரம்
இதயத்தை இதமாக்கும் இனியகானம்
மத்தாப்பூப் பூத்திடும் வானவேடிக்கை
நிறங்களாய் நிஜ வாழ்க்கையில் வர்ணம்
மகிழ்ச்சிப்பூ மன(ண)த்திலே வாடிக்கை
பாசத்தைப் பகிர்ந்திடும் விருந்து
தண்ணீர் திராட்சை இரசமான மாயத்துடன்
வறியவரின் வறுமைக்கு மருந்து
- அபிநயா,துபாய்.
No comments:
Post a Comment