உலகச் செய்திகள்


7.3 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் : 140 பேர் பலி, 1000 ற்கும் மேற்பட்டோர் காயம்

நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு

ஆப்கானிஸ்தான், தாலிபான்கள் தாக்குதலில் 8 பொலிஸார் பலி.

இரா­ணு­வத்தால் வீட்டுக் காவலில் வைக்­கப்­பட்­டி­ருந்த முகாபே முதல் தட­வை­யாக பொது வைபவத்தில் பங்­கேற்பு

றொபர்ட் முகாபே விரைவில் நாடு கடத்தப்படுவார்?






7.3 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் : 140 பேர் பலி, 1000 ற்கும் மேற்பட்டோர் காயம்

13/11/2017 ஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்குண்டு 140 உயிரிழந்துள்ள நிலையில் 1000 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


ஈரான் - ஈராக் எல்லையிலுள்ள ஹலாப்ஜா நகருக்கு அண்மையில் இன்று அதிகாலை 7.3 ரிச்டர் அளவிலான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 350 கிலோ மீற்றர் தொலைவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலநடுக்கத்தால் பாரிய கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி சுமார் 140 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1000 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

எனினும் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடையும் சாத்தியங்கள் உள்ளதாக செய்திகய் தெரிவிக்கின்றன.

சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கமானது பாகிஸ்தான், ஈரான், குவைத், டுபாய், இஸ்ரேல் ஆகிய நாடுகளையும் அதிரவைத்துள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு ஈரானில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுமார் 26,000 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.








நன்றி வீரகேசரி









நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு

14/11/2017 ஈரான் - ஈராக் எல்லையில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர்.  இந்த நிலநடுக்கத்துக்குப் பிறகும் நில அதிர்வுகள் நேற்று காலை வரை தொடர்ந்து கொண்டே  இருந்தமையால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறும்போது,
‘‘கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை நில அதிர்வுகள் தொடர்ந்தன. ஈராக்கின் வடக்கில் குர்திஸ் பகுதியில் உள்ள சுலைமானியா நகரின் தென்கிழக்குப் பகுதியில் ஹலாப்ஜா என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது’’ என்று உறுதிப்படுத்தியது.
இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு குவைத், துபாய், பாகிஸ்தான் பகுதிகளிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஈரான் நாட்டின் சர்போர்-இ-சஹாப் நகரைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஈராக்கில் 7 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
நிலநடுக்க பாதிப்பு உள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லைப் பகுதியில் அவசர நிலையை சுலைமானியா அதிகாரிகள் பிரகடனப்படுத்தினர்.
கடந்த 2003 ஆம் ஆண்டு ஈரானில் 6.6 ரிச்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது வரலாற்றுச் சிறப்புமிக்க பாம் நகரம் முற்றிலும் சேதம் அடைந்தது. இதில் 26 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து செய்திகளை வெளியிட்டு வரும் அல் ஜஸீரா நிருபர் இம்ரான் கான் கூறும்போது,
‘‘வழக்கமாக பாக்தாத் நகரம் நில நடுக்கத்துக்குட்பட்ட பகுதிகளில் வரவில்லை. ஆனால் நிலநடுக்கத்தின் பாதிப்பு உணரப்பட்டது. முதலில் வெடிகுண்டுதான் வெடித்து சிதறியது என்று எண்ணினேன். சில விநாடிகளுக்குப் பிறகுதான் நிலநடுக்கம் என்பதை உணர்ந்தேன். வீதிகளுக்கு ஓடிவந்த மக்கள் முகத்திலும் நிலநடுக்கத்தின் பீதி இருந்தது’’ என்றார்.   நன்றி வீரகேசரி














ஆப்கானிஸ்தான், தாலிபான்கள் தாக்குதலில் 8 பொலிஸார் பலி.
14/11/2017 ஆப்கானிஸ்தானில் பராஹ் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று அதிகாலை தாலிபான்கள்  தொடர்ந்து 10 முதல் 15 நிமிடங்கள்வரை மேற்கொண்ட தாக்குதலில் சோதனைச் சாவடியிலிருந்த 8 பொலிஸார் பலியாகியுள்ளனர்.

அமெரிக்க அதிபரான ட்ரம்ப் ஆப்கனில் உள்ள அமெரிக்கப் படைகள் குறைக்கப்படும் என்று   கூறியுள்ள நிலையிலும்  ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறாமல் இருப்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாலிபான்கள் தொடர்ந்து ஆப்கான் அரசுப் படைகள் மற்றும் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர் என அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  நன்றி வீரகேசரி













இரா­ணு­வத்தால் வீட்டுக் காவலில் வைக்­கப்­பட்­டி­ருந்த முகாபே முதல் தட­வை­யாக பொது வைபவத்தில் பங்­கேற்பு

18/11/2017 இரா­ணு­வத்தால் வீட்டுக் காவலில் வைக்­கப்­பட்­டி­ருந்த சிம்­பாப்வே  ஜனா­தி­பதி முகாபே முதல் தட­வை­யாக நேற்று வெள்­ளிக்­கி­ழமை பொது இடத்தில் தோன்­றி­யுள்ளார். அவர் தலை­நகர் ஹரா­ரேயில் இடம்­பெற்ற பட்­ட­ம­ளிப்பு வைப­வத்தில் பெரும் பாது­காப்­புக்கு மத்­தியில் கலந்து கொண்டார். 
சிம்­பாப்­வேயில் நீண்ட கால­மாக ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த அவ­ருக்கு  பதவி வில­கு­வ­தற்கு  கடும் அழுத்தம். கொடுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில், அவர்  பத­வியைத் துறக்க மறுப்புத் தெரி­வித்து வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. 
அந்­நாட்டின் கட்­டுப்­பாட்டை இரா­ணுவம் கடந்த புதன்­கி­ழமை கைப்­பற்­றியதைய­டுத்து ரொபேர்ட் முகாபே ஹராரே நக­ரி­லுள்ள 5 மில்­லியன் ஸ்ரேலிங் பவுண் பெறு­ம­தி­யான அவ­ரது  வீட்டில் இரா­ணு­வத்தால்  வீட்டுக் காவலில் வைக்­கப்­பட்­டி­ருந்தார்.
இந்­நி­லையில் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை தென் ஆபி­ரிக்க  அபி­வி­ருத்தி சபையைச் சேர்ந்த இரு தூது­வர்­களும்  இரா­ணுவத் தலை­வரும் 93 வய­தான முகா­பே­யுடன் சந்­திப்பை மேற்­கொண்­டனர்.  
 இதன்­போது அவ­ருக்கு பதவி வில­கு­வ­தற்கு கடும் அழுத்தம் கொடுக்­கப்­பட்­ட­தா­கவும் ஆனால் முகாபே பதவி வில­கு­வ­தற்கு மறுப்புத் தெரி­வித்­த­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.
 முகா­பே­யு­ட­னான மேற்­படி பேச்­சு­வார்த்­தை­யா­னது  அவ­ருக்கு பல ஆண்டு கால­மாக பழக்­க­மான ரோமன் கத்­தோ­லிக்க மத­கு­ரு­வான அருட்­தந்தை பிடெலிஸ் முகோ­னோ­ரியின் மத்­தி­யஸ்­தத்தில் இடம்­பெற்­றது.
 முகா­பே­யுடன்  அந்த வீட்டில் அவ­ரது மனைவி கிரேஸும் இருந்­துள்ளார்.
  இந்த சந்­திப்­பின்­போது உரை­யா­டப்­பட்ட விட­யங்கள் குறித்து உத்­தி­யோ­க­பூர்வ அறிக்கை எதுவும் வெளி­யி­டப்­ப­டாத போதும், முகாபே பதவி வில­கு­வ­தற்கு இணங்க மறுத்­தி­ருந்­த­தாக அர­சாங்க தரப்பு வட்­டா­ரங்கள் கூறு­கின்­றன.
 முகாபே  உட­ன­டி­யாக பதவி விலக வேண்டும் என்­பது மக்­களின் விருப்­ப­மா­க­வுள்­ளது என எதிர்க்­கட்சித் தலைவர் மோர்கன் தஸ்­வான்­கிரே தெரி­வித்­துள்ளார்.
 முகாபே  தனக்குப் பின்னர் தனது மனைவி கிரேஸ் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­பதை உறுதி செய்யும் முக­மாக உப ஜனா­தி­பதி எமர்ஸன் மனான்­க­வாவை  கடந்த வாரம் பணி நீக்கம் செய்­த­த­தை­ய­டுத்து,  இரா­ணு­வ­மா­னது அந்­நாட்டின் கட்­டுப்­பாட்டைக் கைப்­பற்­றி­யுள்­ளது.
 எனினும் மேற்­படி ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்கை சதிப்­பு­ரட்­சி­யொன்று அல்ல என அந்­நாட்டு இரா­ணுவம்  வலி­யு­றுத்­தி­யுள்­ளது.  இந்­நி­லையில் அந்­நாட்டு இரா­ணுவம் தனது  ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கையை  நியா­யப்­ப­டுத்தும் வகையில் ரொபேர்ட் முகா­பேக்கு பதவி விலகுவதற்கு அழுத்தம் கொடுக்
கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
அந்நாட்டில் வெள்ளையின சிறுபான்மையினரின் ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது முதற் கொண்டு ரொபேர்ட் முகாபே சிம்பாப்வேயின் ஆட்சி
அதிகாரத்தில் இருந்து வருகிறார்.  நன்றி வீரகேசரி















றொபர்ட் முகாபே விரைவில் நாடு கடத்தப்படுவார்?

19/11/2017 அதி­காரம் பறிக்­கப்­பட்ட சிம்­பாப்வே ஜனா­தி­பதி  றொபர்ட் முகாபே விரைவில் நாடு கடத்­தப்­ப­டுவார். அவ­ரது மனைவி மற்றும் ஊழல் செய்த முக்­கிய அமைச்­சர்கள் கைதா­வார்கள் என தெரி­ய­வந்­துள்­ளது. சிம்­பாப்வே நாட்டின் ஜனா­தி­ப­தி­யான றொபர்ட் முகாபே (93) கடந்த 37 ஆண்­டு­க­ளாக இந்தப் பத­வியில் நீடித்து வந்தார். இந்த நிலையில் சற்றும் எதிர்­பா­ராத வகையில்  சிம்­பாப்­வேயில் திடீ­ரென இரா­ணுவ புரட்சி ஏற்­பட்­டது.
தலை­நகர் ஹரா­ரேயில் களம் இறங்­கிய இரா­ணுவம் ஆட்­சியைக் கைப்­பற்­றி­ய­தாக அறி­வித்­தது. ஜனாதிபதி ரொபர்ட் முகாபே கைது செய்­யப்­பட்டு வீட்டுக் காவலில் சிறை வைக்­கப்­பட்­டுள்ளார்.
இதற்­கி­டையே, முகா­பேக்கும் இரா­ணு­வத்­துக்கும் இடையே சம­ரசப் பேச்சு வார்த்­தையில் மூத்த கிறிஸ்­தவ தேவா­லய தலை­வர்கள் அயல் நாடான தென் ஆபி­ரிக்­காவின் தூதர்கள் ஈடு­பட்­டனர்.
அப்­போது இரா­ணுவ உயரதிகாரிகள் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் மோர்கன் டஸ்­வாங்­கி­ரையும் முகாபே தனது ஜனா­தி­பதி பத­வியை இரா­ஜி­னாமா செய்ய வேண்டும் என வலி­யு­றுத்­தினர்..
ஆனால் அவர் பதவி விலக மறுத்து விட்டார். அதைத் தொடர்ந்து தற்­போது முகா­பே­யுடன் தென் ஆபி­ரிக்க வளர்ச்சிக் குழுமம் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கி­றது. முகாபே பதவி நீக்கம் செய்­யப்­படும் பட்­சத்தில் அடுத்த ஜனா­தி­ப­தி­யாகும் வாய்ப்பு எ­மர்சன் நங்காக் வாவுக்கு கிடைக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில், அதி­காரம் பறிக்­கப்­பட்ட சிம்­பாப்வே ஜனா­தி­பதி  ரொபர்ட் முகாபே விரைவில் நாடு கடத்­தப்­ப­டுவார். அவ­ரது மனைவி மற்றும் ஊழல் செய்த முக்­கிய அமைச்­சர்கள், உய­ர­தி­கா­ரிகள் கைதா­வார்கள் என தெரி­ய­வந்­துள்­ளது.   நன்றி வீரகேசரி


No comments: