இலங்கைச் செய்திகள்


தமிழ் மக்­களின் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­ம் ஜனா­தி­பதி மைத்­திரி : மனோ புகழாரம்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கைது

பொலிஸ் மா அதிபரை சந்தித்தார் ட்ராவிஸ் சின்னையா

காணாமல் போனோரின் உற­வு­களை கொழும்பில் சந்­திக்கும் ஜனா­தி­பதி

"முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமை மனவருத்தத்தையளிக்கிறது"

கிளிநொச்சி மாணவன் சிங்கப்பூர் கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு 

தொடரும் சீரற்ற காலநிலையின் எதிரொலி தீவிரமடைகின்றது டெங்கு நோய் பரவல் 

இரு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்தனர் : மத்தள விமானநிலைய விவகாரமே முக்கிய பேச்சு 

சீரற்ற காலநிலையால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு


தமிழ் மக்­களின் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­ம் ஜனா­தி­பதி மைத்­திரி : மனோ புகழாரம்

04/09/2017 ஐக்­கிய தேசிய முன்­னணி ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யுடன் இணைந்து ஆட்­சியை நடத்­து­வது தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வினை வழங்­கு­வ­தற்­கே­யாகும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ் மக்­களின் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக திகழ்­கின்றார் என்று தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன்  தெரி­வித்தார்.
 
ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் 66ஆவது மாநாடு நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு பொரளை கெம்பல் மைதா­னத்தில் இடம்­பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே   அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 
அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 
ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தனது 66 ஆவது மாநாட்­டினை நடத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தேசிய சக­வாழ்­வுக்கு அடை­யா­ள­மாக திகழ்ந்து கொண்­டி­ருக்­கின்றார். 
முதற்­த­ட­வை­யாக இந்த நாட்டில் உள்ள சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்­கான தனித்­துவ அடை­யா­ளங்கள் காப்­பாற்­றப்­படும்  என்ற வாக்­கு­றுதி வழங்­கப்­பட்டு அனை­வரும் இலங்­கை­யர்கள் என்ற அடை­யா­ளமும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. 
இந்த நாட்டில்   சிங்­கள, தமிழ், முஸ்லிம் உணர்­வுகள் இருக்­கின்­றன. பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்­தவ உணர்­வு­களும் இருக்­கின்­றன. ஆனால் அவை அனைத்­துக்கும் மேலாக இலங்­கையர் என்ற உணர்வு அனை­வ­ரி­டத்­திலும் இருக்­கின்­றது. அந்த யுகம் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது
இந்த நாட்டில் ஒரு மொழி,இனம், மதம் என்ற பிற்­போக்குத் தன்மை ஒழிக்­கப்­பட்டு பல இனம், மொழி, மதம் என்ற முற்­போக்­கான எண்ணம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அதன் கார­ணத்­தினால் தான் வடக்­கிலும், கிழக்­கிலும், மேற்­கிலும், மலை­ய­கத்­திலும் வாழும் தமிழ் மக்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக கரு­து­கின்­றார்கள்.
அத­ன­டிப்­ப­டையில் தான் 2015ஆம் ஆண்டு அவரை இந்த நாட்டின் தலை­வ­ராக தெரிவு செய்­தார்கள். அந்த நம்­பிக்கை வீண்­போ­காது. ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யுடன் இணைந்து   ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி இணைந்து நல்­லாட்­சியை நடத்­து­கின்­றது என்றால் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அனை­வரும் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய தீர்­வினை வழங்­கு­வ­தற்­கா­க­வே­யாகும்.  
அதற்­கான பாரிய பொறுப்பு மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு உள்­ளது. அதே­நேரம் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தனது உரையின் போது தற்­போது ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தமிழ், சிங்­கள, முஸ்லிம் மக்­களை பிர­நி­தித்­து­வப்­ப­டுத்­தி­யுள்­ளது. தனியே பெரும்­பான்மை மக்­களை பிரநிதித்துவப்படுத்தவில்லை எனவும் குறிப்பிட்டார். 
அது மிகச் சிறந்த விடயமாகும். அந்த நிலைப்பாட்டினை கொண்டமையை நான் வரவேற்கின்றேன். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இலங்கையர்களை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியாக என்றும் திகழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் என்றார்.  நன்றி வீரகேசரி 

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கைது

04/09/2017அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரும்  முன்னாள் பிரதி அமைச்சருமான சரண குணவர்தன, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபிவிருத்தி லொத்தர் சபையின் பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அவர் இன்றைய தினம் அவர் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக ஆஜராகியிருந்த நிலையிலேயே  கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  நன்றி வீரகேசரி

பொலிஸ் மா அதிபரை சந்தித்தார் ட்ராவிஸ் சின்னையா

05/09/2017 இலங்கை கடற்படையின் 21ஆவது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அத்மிரல் ட்ராவிஸ் சின்னையா பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பொலிஸ் தலைமையகத்தில் வைத்து நேற்று சந்தித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபரை சந்திக்க பொலிஸ் தலைமையகத்திற்கு சென்ற ட்ராவிஸ் சின்னையா பொலிஸ் சிறப்பு அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்கப்பட்டுள்ளார்.
கடற்படை தளபதியாக பொறுப்பேற்ற பின்னர் ட்ராவிஸ் சின்னையா பொலிஸ்மா அதிபருடன் மேற்கொண்ட முதல் உத்தியோக பூர்வமான சந்திப்பு இதுவாகும்.
பொலிஸ்மா அதிபர் கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு ட்ராவிஸ் சின்னையாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.
வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதன் பின்னர் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக ஆரோக்கியமான விவாதத்தில் இரு தரப்பினரும் ஈடுப்பட்டனர்.
இறுதியில் இச் சந்திப்பை பதிவு செய்யும் பொருட்டு இரு தரப்பினராலும் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.


 காணாமல் போனோரின் உற­வு­களை கொழும்பில் சந்­திக்கும் ஜனா­தி­பதி

06/09/2017 வடக்கின் சகல மாவட்­டங்­க­ளிலும் இருந்து பிர­தேச செய­லாளர் பிரிவு ரீதி­யாக காணாமல் போனோரின் உற­வு­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சந்­திக்­க­வுள்ளார்.  இந்தச் சந்­திப்பு கொழும்பில் இன்று இடம்­பெ­ற­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  
Image result for காணாமல் போனோரின் உற­வு­ virakesari
சகல பிர­தேச செய­லாளர் பிரி­வு­களில் இருந்தும் தலா ஒருவர் வீதம் இந்த சந்­திப்­புக்­காக தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு தேர்வு செய்­யப்­பட்­ட­வர்கள் மாவட்டச் செய­ல­கங்­களின் ஏற்­பாட்டில் கொழும்­பிற்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­றனர்.
இதே­வேளை, இவர்­க­ளுக்­கான தேர்வு மற்றும் பயண ஒழுங்­குகள் அனைத்தும் மாவட்டச் செய­ல­கங்­களே முன்­னெ­டுத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  
காணாமல் போனோரின் உற­வுகள் கடந்த 200 நாட்­க­ளாக தமது உற­வு­களின் நிலையைத் தெரி­விக்­கு­மாறு கோரி யாழ். மரு­தங்­கேணி , கிளி­நொச்சி , முல்­லைத்­தீவு , வவுனியா ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தி வரும் சூழலில் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி "முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமை மனவருத்தத்தையளிக்கிறது"

06/09/2017 "வடமாகாணத்தின் மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் மக்களைக் கொண்ட எருக்கலம்பிட்டிக் கிராம மக்கள் 1990ஆம் ஆண்டில் இப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் நாட்டின் நாலா பக்கங்களிலும் சிதறுண்டு வாழ்ந்து வருவது மனவருத்தத்திற்குரியது" என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று   மாலை இடம் பெற்ற ஹஜ் பெருவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
"எருக்கலம்பிட்டியிலிருந்து வெளியேறிச் சென்ற மக்களில் கணிசமான தொகையினர் மீள தமது பிரதேசங்களுக்கு வந்து குடியமர்ந்துள்ள போதிலும் குறிப்பிட்ட தொகையினர் இடம் பெயர்ந்து சென்று வாழ்ந்த இடங்களில் தமக்கென இருப்பிடங்களைத் தயாரித்துக் கொண்டு அப் பகுதியிலேயே தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர்.
ஒரே குடும்பம் போன்று இந்த எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் வாழ்ந்து வந்த போதிலும் 1990ல் ஏற்பட்ட குழப்ப நிலைமைகள் அவர்களின் சிதறுண்ட வாழ்க்கை அமைப்பை உருவாக்கி விட்டது.
எருக்கலம்பிட்டி வாழ் முஸ்லிம் மக்கள் பற்றி நான் ஓரளவு அறிவேன், இவர்கள் பகைமை உணர்வு அற்றவர்கள், அனைத்து மதத்தவர்களையும் சகோதரர்களாக கருதுபவர்கள், இவர்களின் வாழ்வு இன்று சிதறுண்டு கிடக்கின்ற போதும் இஸ்லாமிய மக்களின் 5வது இறுதிக் கடமையாகிய ஹஜ் விழா நிகழ்விலாவது எருக்கலம்பிட்டி வாழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் இங்கு வந்து ஒன்று கூடி தமது அன்பையும் மகிழ்வையும் தெரிவித்து இஸ்லாத்தின் அதி உயர் கடமைகளை சிறப்புற ஆற்ற வேண்டும் என்ற கொள்கையில் 2002ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வானது இந்த வருடமும் சிறப்புற கொண்டாடப்படுவது மகிழ்விற்குரியது.
இந்து சமயத்தில் ஒரு இறையடியார் சரிதம் உண்டு, சிறுத் தொண்ட நாயனார் என்ற ஒரு அடியவர் தினமும் தான் உணவு உண்பதற்கு முன்பதாக ஒரு சிவனடியாரை அழைத்து வந்து உணவு அருந்தச் செய்து அவர் உணவு அருந்திய பின்பே தாம் உணவு அருந்தும் வழக்கத்தை கொண்டிருந்தார். 
ஒரு நாள் அவர் எங்கு தேடியும் ஒரு சிவனடியாரைக் காண முடியவில்லை, அத் தருணம் அருகே உள்ள சிவன் கோவில் மண்டபத்தில் ஒரு சிவனடியாரைக் கண்டு உணவருந்த வருமாறு அழைக்கின்றார், மாறு வேடத்திலிருந்த இறைவன் இவரைச் சோதிப்பதற்கு திருவுளம் கொண்டு நான் உணவருந்த வருவதாயின் நர பலி உணவு படைக்க வேண்டும் அதுவும் இளம் பாலகனின் உடலைக் கறி செய்து தர வேண்டும் என உத்தரவிடுகிறார், ஒரு கனம் கலங்கிய சிறுத்தொண்ட நாயனார் பக்தி மேலீட்டினால் வீட்டிற்கு ஓடிச் சென்று மனைவியாரிடம் இவ் விடயத்தை கூறி பதிலுக்குக் காத்திராமல் பாடசாலைக்கு ஓடிச் சென்று தமது சிறிய பாலகனை அழைத்து வந்து பன்னீரால் குளிப்பாட்டி ஆரத்தழுவி அறுத்துக் கறி சமைத்து சிவனடியாருக்கு உணவு படைத்த போது இவர்களின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த இறைவன் மீண்டும் இவர்களின் பாலகனை உயிர் பெறச் செய்து மீள ஒப்படைத்ததாக சிறுத்தொண்ட நாயனார் வரலாறு கூறுகிறது.
இஸ்லாத்தின் 5வது இறுதிக் கடமையும் இந்து சமயத்தின் சிறுத் தொண்ட நாயனார் கதைக்கு ஒப்பானதே. ஈத் அல் அதா என்பது தியாகத் திருநாளாகும்.  நபிமார்கள் பட்டியலில் இருந்த இப்ராகிம் - காஜரா உம்மா தம்பதிகள் இந்த தியாகத் திருநாளின் 8வது பிறையில் கனவு காண்கிறார்கள்.
சைத்தானின் தூண்டுதலால் ஏற்பட்ட கனவின் படி 100 ஒட்டகங்களை அறுத்து அல்லாவுக்குக் காணிக்கையாக அளிக்கின்றார்கள். ஒன்பதாவது நாளும் மீண்டும் அதே கனவு காண்கிறார்கள். இப்போது 200 ஒட்டகங்களை அறுத்து அல்லாவுக்கு காணிக்கையாக்குகின்றார்கள். மீண்டும் 10ம் நாள் அதே கனவு. அல்லாவிடம் என்ன செய்ய வேண்டும் என இரந்து கேட்கின்றார்கள். 
அவர்கள் யாரை மிகவும் நேசிக்கின்றார்களோ அவரை அறுத்து காணிக்கையாக செலுத்த வேண்டும் என அருள் வாக்கு கிடைக்கப்பெறுகின்றது. இத் தம்பதியினர் 96 வயதிலேயே ஒரு அரிய மகனைப் பெற்று இஸ்லாத்தின் வழியே அன்புடன் வளர்த்து வருகின்றார்கள். ஆண்டவனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு 6 வயது நிரம்பிய இஸ்மாயிலை அறுக்கத் துணிகின்றார்கள். இஸ்மாயிலும் அன்புடன் ஏற்றுக் கொள்கின்றான்.
தன்னை அறுக்கும் போதும் தந்தை கலங்கக் கூடாது என்பதற்காக அவரை கறுப்புத் துணியினால் முகத்தை மூடிக் கொண்டு அல்லது தன்னைக் குப்புற இட்டு அறுக்குமாறு கூறுகின்றான். துயர மிகுதியுடன் பிள்ளையை அறுக்கின்றார்கள். அறுக்க முடியவில்லை. அந்தக் கத்தியால் பாறாங்கற்களை வெட்டுகின்றார்கள். அவை தூள் தூளாக உடைந்து நொருங்குகின்றன. 
ஆனால் பிள்ளையின் கழுத்தை அறுக்க முடியவில்லை. அப்போது நபி அவர்களின் தூதுவரிடமிருந்து ஒரு செய்தி கிடைக்கின்றது, ஒரு ஆட்டைப் பலியிட்டு இந்த இறை கடமையை நிறைவேற்று என்று, அவ்வாறே அக்கடமை நிறைவேற்றப்படுகின்றது.
இந்த நிகழ்வை நினைவுறுத்தும் வண்ணமே தியாகத் திருநாளன்று ஒரு மிருக பலி இடப்பட்டு அதன் மூன்றில் ஒரு பங்கு ஏழை எளியவர்களுக்கும் அடுத்த மூன்றில் ஒரு பங்கு உற்றார் உறவினருக்கும் மிகுதிப் பங்கு குடும்பத்தாருக்கும் பங்கிடப்படுகின்றது. 
இந்த இரண்டு சம்பவங்களும் இந்து சமயத்திலும், இஸ்லாம் மதத்திலும் முழு நம்பிக்கையுடன் ஒழுகக்கூடியவர்களுக்கு ஏற்படக் கூடிய சோதனைகளையும் அவர்களின் மன உறுதியைக் கண்டு அவர்களை இறைவன் ஆட்கொள்கின்ற தன்மையையும் எடுத்துக் கூறுகின்றன. எனவே எல்லா மதங்களும் அன்பையும் இறைவனை நேசிக்கும் தன்மையையும் பிறரிடத்தில் அன்பு செலுத்துகின்ற மார்க்கங்களையுமே எடுத்துரைக்கின்றன. 
ஆனால் தியாகமே மார்க்க வழி, தியாகத்தையே இறைவன் விரும்புகின்றான். அதை எங்கள் இரு மதங்களுமே வலியுறுத்துகின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து எருக்கலம்பிட்டியைச் சென்றடைவதற்கு வெவ்வேறு  பாதைகள் உண்டு.
பூநகரி சங்குப்பிட்டியூடாக ஒரு பாதை, வவுனியா செட்டிகுளம் ஊடாக இன்னோர் பாதை, மதவாச்சி முருங்கன் ஊடாக இன்னோர் புகையிரதப் பாதை இவை போன்றதே எமது சமய வழிகாட்டல் பாதைகள். இந்து சமயத்திற்கு ஒரு பாதை, இஸ்லாம் சமயத்திற்கு இன்னொரு பாதை, கிறிஸ்தவ சமயத்திற்கு மற்றொரு பாதை. 
ஆனால் தொடக்கம் முடிவு இரண்டும் நிரந்தரமானவை செல்கின்ற பாதைகள் மட்டுமே  வெவ்வேறானவை.
எனவே இன்றைய இந்த ஹஜ் விழா நிகழ்வுகளில் என்னையும் கலந்து கொண்டு இவ் விழாவை சிறப்பிக்க வேண்டும் என றயீஸ் விரும்பியதால் உங்கள் அனைவர் சார்பான அழைப்பினை ஏற்று பல கடமைகளைப் பின் போட்டுவிட்டு இன்று இங்கே வருகை தந்திருக்கின்றேன். இந்த நல்ல நிகழ்வில் இறை பக்தர்களான உங்கள் நிகழ்வில் கலந்துகொண்டு ஒரு புதிய உணர்வைப் பெற்றிருக்கின்றேன். 
இறைவனின் படைப்பிலே ஆறறிவு கொண்ட ஒரு உயிரினமாக விஷேடமாகப் படைக்கப்பட்டது மனித குலம். ஆனால் அதே மனித குலம் மதத்தின் பெயரால் அடித்துக் கொண்டு சாவதும், பிரிந்து நிற்பதும் எமது அறியாமை, இதனை அனைத்து மதங்களும், மதத் தலைவர்களும் இடித்துரைக்கின்ற போதும் அதனை நாம் கேட்பதாக இல்லை.
இந்து சமுத்திரத்தின் முத்தென விளங்குகின்ற இந்த ஈழமணித் திருநாட்டில் வாழ்கின்ற மூவின மக்களும் பகைமைகளை மறந்து சகோதரர்களாக வாழத் தலைப்பட்டால் இந்த நாட்டுக்கு இணை இந்த நாடு மட்டுமே இருக்க முடியும்.
எனவே காலங்கடந்த இந்த நிலையில் கூட எமது மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்து இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு முயற்சிக்க வேண்டும். சமஷ்டிப் பாதையே அந்த ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.
அதுவே எமக்கு நிலையானதும், நிரந்தரமானதுமான ஒரு தீர்வாக அமையும் எனத் தெரிவித்து இஸ்லாம் மதத்தின் இந்த உன்னத நாளில் இஸ்லாம் சகோதர சகோதரிகள் அனைவரையும்  உளமார வாழ்த்தி எனது உரையை நிறைவு செய்கின்றேன் "என தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி
கிளிநொச்சி மாணவன் சிங்கப்பூர் கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு

06/09/2017 வடக்கு மாகாணக்கல்வித்  திணைக்களத்தால் நடத்தப்பட்ட கனிஷ்ட பிரிவுக்கான மாகாண மட்ட கணித வினாடி வினாப் போட்டியில் கிளிநொச்சி வலய அணி முதலாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நேற்று நடைபெற்ற மேற்படி போட்டியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பன்னிரெண்டு கல்வி வலய அணிகள்  பங்கு கொண்டன.
இப்போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தெரிவான யாழ்ப்பாண வலய அணியினை வீழ்த்தி கிளிநொச்சி  வலய அணி சம்பியனானது. 
அத்துடன் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண அணிக்கு கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் 6 இல் கல்வி கற்கும்  தெ.திருக்குமரன் தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இம்மாணவன் அண்மையில் நடைபெற்ற தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் தெரிவு செய்யப்பட்டு சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சர்வதேசமட்டப் கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.  நன்றி வீரகேசரி

 தொடரும் சீரற்ற காலநிலையின் எதிரொலி தீவிரமடைகின்றது டெங்கு நோய் பரவல்

06/09/2017 நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் டெங்கு நோய் உட்பட பல சுகாதாரப்பிரச்சினைகளின் தாக்கம் மேலும் அதிகரிக்ககூடிய  வாய்ப்புள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Image result for சீரற்ற காலநிலை virakesari
இதுவரையில் நாடளாவிய ரீதியில் 1 இலட்சத்தி 46 ஆயிரத்தி 710 டெங்கு நோயாளர்கள் இனங்கானப்பட்டுள்ள நிலையில் 360 க்கும் மேற்பட்டோர் இந்நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் அவ்வமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி


இரு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்தனர் : மத்தள விமானநிலைய விவகாரமே முக்கிய பேச்சு

09/09/2017 இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்திய திட்டங்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடனான சந்திப்பில் சுஷ்மா சுவராஜ் கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது மத்தள விமான நிலைய விவகாரம் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கூட்டு முயற்சியில் மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல்  மற்றும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் கைச்சாத்திடல் உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய திட்டங்களை இலங்கையில் முன்னெடுப்பதில் பல்வேறு இழுபறி நிலைகள் ஏற்பட்டுள்ளது. இலங்கை தரப்பில் சாதகமான வெளிப்பாடுகள் மத்தள விமான நிலையத்தை கூட்டு முயற்சியில் அபிவிருத்தி செய்வது தொடர்பில் வெளிப்படவில்லை.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துக்கொள்ள இலங்கை வந்த வெளிவிவகார அமைச்சர் இந்திய திட்டங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடனான சந்திப்பின் போது கலந்துரையடினார்.
இந்நிலையில் இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அந்நாட்டு தலைவர்கரளை சந்தித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து கலந்துரையாடி திலக் மாரப்பன இலங்கையின் நிலைப்பாடடை தெளிவுப்படுத்தியுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு  இந்தியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக்  மாரப்பன இன்று  இந்திய வெளிவிவகார அமைச்சர்  சுஷ்மா சுவராஜை சந்தித்துள்ளார். இருதரப்பு உறவை வலுப்படுத்துல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இதன் போது பேசப்பட்டுள்ளது.
அமைச்சருடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர்  பிரசாத் காரியவசம், தெற்காசிய மற்றம் சார்க் பிரிவுக்கான வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் எம்.ஏ.கே.  கிரிஹகம  ஆகியோரும் வெளிவிவகார  இந்தியா சென்றுள்ளனர். நன்றி வீரகேசரிசீரற்ற காலநிலையால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

08/09/2017 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் நாடளாவிய ரீதியிலுள்ள ஏழு மாவட்டங்களில் 2 ஆயிரத்தி 907 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 152 பேர் பாதிகப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மண்சரிவு, வெள்ளம், கடும் காற்று ஆகிய அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான 139 குடும்பங்களை சேர்ந்த 542 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஒருவாரகாலமாக நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையினால் தொடர்ந்தும் கடுமையான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதனால் நாடளாவிய ரீதியில் ஏழு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு, வெள்ளம், கடுமையான காற்று மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் ஆகிய அனர்த்தத்தினால் இதுவரையான ஒருவாரக்காலப்பகுதியில் மாத்திரம் நாடளாவிய ரீதியிலுள்ள ஏழு மாவட்டங்களில் 2 ஆயிரத்தி 907 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்தி 152 பேர் பாதிகப்பட்டுள்ளனர்.
கம்பஹா, காலி, இரத்தினபுரி,கேகாலை,வவுனியா,குருணாகலை,பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் வாழ்வோரே குறித்த அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் நான்கு வீடுகள் முற்றாகவும் 360 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
வெள்ளம், மண்சரிவு, கடுமையான காற்று காரணமாக பாதிக்கப்பட்ட 139 குடும்பங்களை சேர்ந்த 542 பேரை தற்காலிகமாக பாதுகாப்பான 13 பிரதேசங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்தும் நாட்டின் பல பாகங்களிலும் மழை தொடருவதால் பாதுகப்பற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான பிரதேசங்களுக்கு தங்கவைப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
வெள்ளம் ஏற்பட்ட வீதிகளில் மக்கள் பயணிக்க முடியாத நிலைக்கானப்படுகின்றது. இதனால் இரத்தினபுரி, காலி, களுத்துறை, கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களின் பிரதேச செயலகபிரிவுகள் ஊடாக தற்போது படகு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இரத்தினபுரி மாவட்ட பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறையளிக்கப்பட்டிருந்தது.
மேலும் பாதிக்கப்பட்டுள்ளோர்களுக்கு அவசர உபகரணம், மருத்துவ உதவிகள் என்பனவை அரசாங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிப்பேற்படும் பகுதிகளில் மக்களுக்கு விரைந்து உதவிகளை வழங்குவதற்கும் பொலிஸார், இராணுவம், விமானப்படை போன்றவற்றுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தென் மற்றும் மேல் மாகாணத்தில் பல பகுதிகளிலும் நேற்றும் தொடர்ச்சியாக கடும் மழையின் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். குறிப்பாக மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதால் நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் அதிகரித்ததுள்ளதுடன் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பாரிய வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக கொழும்பின் பிரதான நகரங்களில் பாரிய வாகன நெரிசல் கானப்பட்டதுடன் மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி
No comments: