அன்பு கொண்ட இரண்டு உள்ளம்
அருகருகாய் அமர்ந்திருக்க
புன்னகையும் பொன்னகையும்
பூவைதனை அலங்கரிக்க
உற்றவரும் பெற்றவரும்
உவகையுடன் வாழ்த்தி நிற்க
உளம் நிறைந்த சபையினிலே
களித்திருக்கும் தம்பதிகாள்
இனிதாக இல்லறத்தில்
இணைந்திடவே வாழ்த்துக்கிறோம்

காதல் கொண்ட கண்ணியவள்
ஸ்ரீரஞ்சன்  ராதை பெற்ற  செல்ல  மகள்
கோபிகா எனும் அழகுத் தேவதையாள்
கொஞ்சும் மொழி வஞ்சியினள்
புன்னகை முகத்திலாட
பூமாலை கழுத்திலாட
வந்து மெல்ல மணவறையில்
கணவனுக்காய் காத்திருக்கசீர் நிறைந்த செல்ல மகன்
யோகானந்தம் ஜெயந்தியின் அன்பு மகன்
ஜெனோதன் எனும் சீராளன்
காதல் கொண்ட நங்கைதனை
கைப்பிடித்து வாழவென
கோலத்திருவுருவாய்
மணவறைக்கு வந்திருக்க

நீள் விழியாள்  மாதுமையாள்
கோபிகையாம் கன்னியவள்
காதல் கொண்டாள்  கனிவு கண்டாள்
கரம்பிடித்து உனை அடைந்தாள்
காதலுடன் காலமெலாம் களிப்புடனே
ஈருடலும் ஓருயிரும் போன்றே என்றும்
இனிதாக கலந்தொன்றாய் வாழ்க வாழ்கஅன்புடன் மாமா
செ .பாஸ்கரன்


No comments: