மொழிகாக்கப் போராட்டம்
இனம்காக்கப் போராட்டம்
மதம்காக்கப் போராட்டம்
மன்னருக்கும் போராட்டம்
ஏழைக்கும் போராட்டம்
கோழைக்கும் போராட்டம்
இவ்வுலகில் போராட்டம்
எத்தனையோ நடக்கிறது !
இல்லாமை காரணமாய்
எடுக்கின்றார் போராட்டம்
வல்லமையை நிலைநிறுத்த
வகைவகையாய் போராட்டம்
வாழவெண்ணி நடத்துகிறார்
வாழ்வெல்லாம் போராட்டம்
நீழமாய் தொடர்கிறது
நீழ்புவியில் போராட்டம் !
முதலாளி போராட்டம்
முதல்பெருக வைப்பதற்கு
தொழிலாளி போராட்டம்
தோல்வியின்றி வாழ்வதற்கு
அரசியலார் போராட்டம்
ஆட்சியிலே அமர்வதற்கு
அவர்மனதில் போராட்டம்
அதிகசொத்துச் சேர்ப்பதற்கு !
மாணவர்கள் போராட்டம்
மதிப்பெண்கள் பெறுவதிலே
பெற்றவர்கள் போராட்டம்
பிள்ளைகளை உயர்த்துவதில்
ஆசிரியர் போராட்டம்
ஊதியத்தைப் பெருக்குவதில்
ஆழுகின்றார் போராட்டம்
அனைத்தையுமே பதுக்குவதில் !
மதுவொழிக்கப் போராட்டம்
நடக்கின்ற தொருபக்கம்
மதுக்கடைகள் திறப்பதற்கு
வருகின்றார் ஒருபக்கம்
குடிநீரே இல்லயென்று
குடிகள்செய்வார் போராட்டம்
குடித்துவிட்டு பலபேர்கள்
குழப்பிடுவார் நாட்டினிலே !
பார்க்கின்ற இடமெல்லாம்
பலநிலையில் போராட்டம்
போராட்டம் என்பதற்கே
அர்த்தமின்றிப் போகிறது
மனட்சாட்சி தனைநிறுத்த
போராட்டம் தேவயன்றோ
மனமெல்லாம் மாறிவிட்டால்
போராட்டம் ஓடிவிடும் !
No comments:
Post a Comment