உலகச் செய்திகள்


அறுதி பெரும்பான்மையை நோக்கி செல்லும் மக்ரோன்..!

லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தீ: பலியானோரின் எண்ணிக்கை 30ஆக உயர்வு

 அமெரிக்க யுத்தக்கப்பல் - பிலிப்பைன்ஸ் கொள்கலன் கப்பல் மோதி விபத்து : 7 பேரைக்காணவில்லை

பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் கத்தியுடன் ஒருவர் கைது







அறுதி பெரும்பான்மையை நோக்கி செல்லும் மக்ரோன்..!

12/06/2017 பிரான்சில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் முதல் சுற்று வாக்கு பதிவுகளின் முடிவில், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கட்சி அறுதி பெரும்பான்மையை பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று பிரான்ஸின் 25ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட இம்மானுவேல் மக்ரோன், மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை கைப்பற்ற வேண்டுமென்ற நிலையில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில், பெரும்பான்மை பலத்தைப் பெறும் இலக்கை நோக்கி அவரது சென்டிரிஸ்ட் கட்சி முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல் சுற்று வாக்களிப்புகளின் பிரகாரம், மக்ரோனின் சென்டிரிஸ்ட் கட்சி 32.3% வாக்குகளையும், பிரண்ட் நேஷனல் கட்சி 13.2% வாக்குகளையும் மற்றும் சோஷலிஸ்ட் கட்சிக்கு 9.5% வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்நாட்டு தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு பிரான்ஸில் மொத்தமுள்ள 577 பாராளுமன்ற தொகுதிகளில், சுமார் 445 தொகுதிகளில் மக்ரோனின் சென்டிரிஸ்ட் கட்சி வெற்றி பெறுமென தேர்தலுக்கு முன்னைய கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன. 
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் 50% அதிகமான வாக்குகளை பெறவேண்டும். அப்படி எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லையோ, குறித்த தொகுதிகளில் குறைந்தபட்சம் 12.5 சதவீத வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களை கொண்டு 2ஆவது சுற்று தேர்தல், எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
பிரான்ஸின் நாடுகடந்த 11 தொகுதிகளில் இடம்பெற்ற வாக்குபதிவுகளில், ஜனாதிபதி மக்ரோனின் சென்டிரிஸ்ட் கட்சி 10 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 








லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தீ: பலியானோரின் எண்ணிக்கை 30ஆக உயர்வு

17/06/2017 லண்டனின் மேற்கு பகுதியிலுள்ள கிரென்ஃபெல் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
“இந்த சம்பவம் பற்றி முழு விசாரணை மேற்கொள்ளப்படும்” என்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட லண்டன் பிரதர் திரேசா மே தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, உயிரிழந்தோரின் எண்ணிக்கை  100 ஐ விட அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தீ விபத்தில் காயமடைந்த 24 பேர் தற்போதும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களோடு தன்னுடைய நினைவுகளும், பிரார்த்தனைகளும் இருப்பதாக சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட பிரித்தானிய இளசவரசி எலிசபெத் தெரிவித்திருக்கிறார்.   நன்றி வீரகேசரி 











அமெரிக்க யுத்தக்கப்பல் - பிலிப்பைன்ஸ் கொள்கலன் கப்பல் மோதி விபத்து : 7 பேரைக்காணவில்லை

17/06/2017
அமெரிக்க கடற்படைக்குச்  சொந்தமான யூ.எஸ்.எஸ். பிற்ஸ்கிரல்ட் என்ற யுத்தக்கப்பலே இவ்வாறு மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது 7 அமெரிக்க கடற்படைவீரர்கள் காணாமல்போயுள்ளதாகவும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தானது யப்பானின் யொகுஷ்கா கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது காணாமல்போக கடற்படையினரைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 











பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் கத்தியுடன் ஒருவர் கைது

16/06/2017 பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் கத்தியுடன் உலாவிய நபரொருவரை பிரித்தானியப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அண்மைக்காலங்களில் லண்டனில் இடம்பெற்ற இருவேறு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் பலர் கொல்லப்பட்டதையடுத்து பிரித்தானியாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 





No comments: