வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு : மாதம்தோறும் வருகை தருவேன் - ஜனாதிபதி
நாடு முழுவதும் பதினாறு இன,மதவாத சம்பவங்கள் ; 5 பேர் கைது
விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஆளுநரிடம் கையளிப்பு (நேரலை)
வடக்கு முதலமைச்சர் யார்..? ; இறுதி முடிவு இன்று மாலை
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக போராட்டம்
சம்பந்தன் – விக்கி சமரசம் பிரேரணை மீளப்பெறப்படும்?
முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஒன்று கூடிய பொதுஅமைப்புக்கள்
சி.வி.யின் கையிலேயே முடிவு இருக்கின்றது : சம்பந்தன்
வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு : மாதம்தோறும் வருகை தருவேன் - ஜனாதிபதி
13/06/2017 யாழ்.மாவட்டத்திலுள்ள காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்புச் சபையில் இன்று கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாதம் ஒரு முறை யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் இம் மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளு க்கு படிப்படியான தீர்வுகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொருத்து வீட்டுத்திட்டத்தினைமுன்னெடுப்பது குறித்து மக்களின் விருப்புக்களை அறிந்த பின்னரே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, வடக்கின் அபிவிருத்தியில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
யாழ். மாவட்ட அபிவிருத்தி குறித்த விசேட கூட்டமொன்று நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர்களான டி.எம். சுவாமிநாதன், ராஜி சேனாரத்ன ஆகியோர் பங்கேற்றதோடு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்.மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, த. சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் , வடமாகாண அமைச்சர்களான குருகுலராஜா, சத்தியலிங்கம், மாகாண சபை உறுப்பினர்கள், பொலிஸ் மா அதிபர், அரச அதிகாரிகள் படைத்தரப்பு அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
முன்னரே நிகழ்ச்சி நிரல் வழங்கப்படாத நிலையில் கூட்டம் ஆரம்பித்தது. எனினும் அதன் பின்னர் சுற்றாடல், பாதுகாப்பு, வீதி அபிவிருத்தி, மீள் குடியேற்றம், காணி விடுவிப்பு, சுகாதார விடயங்கள் என்பன தொடர்பில் கலந்துரையாடுவதாக நிகழ்ச்சி நிரல் ஒன்று அவசரமாக கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து மக்கள் பிரதிநிதிகள் அடுத்துவரும் காலப்பகுதி மழை காலமென்பதால் வீதிகளை மீள் புனரமைக்கும் செயற்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டனர்.
அத்துடன் வீதி நிர்மாணத்திற்காக கிரவல் பெறுதலிலுள்ள நெருக்கடிகள் மற்றும் இன்னோரென்ன விடயங்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அத்துடன் நிர்மாண பணிகளுக்காக மணல் பெற்றுக்கொள்வதிலுள்ள நெருக்கடிகள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதன்போது ஜனாதிபதி குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அதிகாரிகளிடத்தில் வலியுறுத்தியதோடு குறிப்பாக மணல் விவகாரத்திற்கு ஒரு வார காலத்தில் தீர்வளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு ஜனாதிபதி செயலாளர் ஒருவர், மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளடங்கிய குழுவொன்றையும் நியமித்தார்.
அதனையடுத்து மீள் குடியேற்ற விடயம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. இச் சமயத்தில் மாவை சேனாதிராஜா எம்.பி, வலி. வடக்கில் காணிகள் விடுவிக்கப்படாதுள்ளமை, விடுவிக்கப்பட்ட காணிகளில் மீள்குடியேற்றத்தில் உள்ள தாமதங்கள் தொடர்பாக எடுத்துரைத்தார். அத்துடன் இராணுவம் காணிகளை கையகப் படுத்தியுள்ளதால் மீள் குடியேற்றத்தில் தாமதங்கள் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, நாளைய தினம் (இன்று) பாதுகாப்புச் சபை கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் தாங்கள் குறிப்பிடும் பகுதியிலுள்ள காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு துறையினரோடு கலந்துரையாடி நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதேநேரம் மயிலிட்டி துறைமுக விடுவிப்பு குறித்தும் மாவை.சேனாதிராஜா எம்.பி கோரிக்கையை முன்வைத்தபோது, யாழ்.பிராந்திய படைத்தரப்பு அதிகாரிகள் அதற்குரிய நடவடிக்கைள் எடுத்து வருதாக குறிப்பிட்டனர்.
இதனையடுத்து சுமந்திரன் எம்.பி ,வட மாகாணத்தில் பொருத்து வீட்டு திட்டத்தை முன்னெடுப்பது தவரானது அத்திட்டத்தினை நிறுத்தி நிரந்தரமான கல் வீட்டு திட்டத்தினை முன்னெடுக்வேண்டும். அதுவே மக்களின் ஏகோபித்த விருப்பமாகும். அதனை தாங்கள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடத்தில் கோரினார்.
இச் சமயத்தில் குறித்த விடயம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் அது குறித்து முடிவெடுக்கலாம் என ஜனாதிபதி குறிப்பிட்டார். ஏனினும் சுமந்திரன் எம்.பி பொருத்து வீடு திட்டமானது வட மாகாணத்திற்கு பொருத்தமற்றது என்பதில் விடாப்பிடியாக இருந்தார்.
இதனையடுத்து சிறிதரன் எம்.பி இரணைத்தீவு விவகாரத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இரணைத்தீவில் காணப்படும் நிலங்கள் கடற்படையினரிடத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மக்களிடத்தில் கையளிக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டினார்.
இதன்போது அமைச்சர் சுவாமிநாதன், அங்கு அதிநவீன ராடர்கள் பொருத்தப்பட்டுள்ளமையால் அது பொது மக்களுக்கு பாதிப்பாக அமையும். ஆகவே பொதுமக்களுக்கு மாற்று இடங்களை வழங்குவது குறித்து கலந்துரையாடல்கள் செய்யப்படவுள்ளது என்றார்.
இச்சமயத்தில் சிறிகரன் எம்.பி, பொது மக்கள் மீள் குடியேற்றப்பட்டால் ராடர்களின் தாக்கம் இருக்கும் என்று கூறுகின்றீர்களே அவ்வாறாயின் அங்கு எவ்வாறு கடற்படை வீரர்கள் தங்கியிருக்கின்றார்கள் என்று கேள்வி எழுப்பினார். அத்தோடு கேபாப்புலவு மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றார்கள்.
அவர்களின் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். அத்துடன் இணைதீவிலுள்ள ராடர்கள் அங்குள்ள சிறு தீவுகளுக்கு மாற்றப்பட்டு பொதுமக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். மேலும் யாழ்.மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி கிளிநொச்சிக்கும் வருகைதந்து இதேபோன்ற ஒரு கூட்டத்தை நடாத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து சுகாதார தொண்டர் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதோடு, பட்டதாரிகளின் பிரச்சினைகளும் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன்போது அமைச்சர் ராஜித சேனாரத்ன, இந்த பகுதியில் மூன்று தசாப்தகாலமாக அசாதாரண நிலைமைகள் இருந்தன. அதனை நாம் கருத்திற் கொண்டு நடடிவக்கைகளை எடுக்கவுள்ளோம். அந்த விடயம் சம்பந்தமாக உரிய கவனத்தினை செலுத்துகின்றேன் என்றார்.
மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடத்தில் பொலிஸ் துறையில் என்ன பிரச்சினைகள் காணப்படுகின்றன எனக் கேள்வி எழுப்பியபோது, பொலிஸ் துறைக்கான விண்ணப்பங்கள் போதியளவில் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இதேவேளை இரணைமடு குடிநீர் விவகாரம் தொடர்பாகவும் ஜனாதிபதியிடத்தில் அதிகாரிகளால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, நான் அதிகாரமிக்க ஜனாதிபதியாக பணிப்புரைகளை யாருக்கும் விடுக்கவில்லை. மாறான பாதிப்படைந்த இந்தப் பகுதியினை அபிவிருத்தியில் முன்னேற்ற வேண்டும் என கருதுகின்றேன். அதற்காக அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றேன். இன்று இந்தக் கூட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் வருகை தந்து தமது கருத்துக்களை முன்வைத்தமைக்கு எனது நன்றிகள் என்றார். நன்றி வீரகேசரி
12/06/2017 இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் வண்ணம் நாடளாவிய ரீதியிலான இரண்டுபள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் உட்பட 16 பிரதான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
இந்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளில் இது வரை மூன்று சம்பவங்கள் தொடர்பில் ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
திருகோணமலை, நுகேகொட - மஹரகம, தந்துரே ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இன, மதவாத நடவடிக்கைகள் தொடர்பிலேயே இவர்கள் கைதுகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன. கைதானோரில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தோர் மூவரும், முஸ்லிம், தமிழர் ஒருவரும் அடங்குகின்றனர்.
தந்துரே பகுதியில் முகப்புத்தகத்தில் புத்தரை அவமதிக்கும் வகையில் பதிவிட்டதாக கூறப்படும் முஸ்லிம் இளஞர் ஒருவரும், அந்த பதிவை அடுத்து அப்பகுதியில் முஸ்லிம் வீடுகள் மீது கல் வீச்சு தககுதலை நடத்திய இரு பெரும்பானமை இனத்தவர்களும் கைது செய்யப்ப்ட்டு ஜூன் மாதம் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மஹரகம - நுகேகொடை பகுதிகளில் நான்கு கடைகள் மீது தீ வைத்த பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நிலையில், திருமலையில் பள்ளிவாசல் மீது தீ வைத்த தமிழ் இளுைஞர் கைது செய்யப்பட்டார்.
இதனைவிட பல சம்பவங்கள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் விசாரணைகள் சரியான திசையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன மதவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் கடந்த வாரம் சுற்று நிருபம் ஒன்றினை அனுப்பியிருந்தார்.அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தை அமுல் செய்ய அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், உதவி பொலிஸ் அத்தியட்சர்களுக்கும் பொலிஸ் மா அதிபரால் உத்தர்விடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஆளுநரிடம் கையளிப்பு (நேரலை)
14/06/2017 வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் சற்றுமுன்னர் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைக்கு வடக்கு மாகாண சபையின் 21 உறுப்பினர்களின் கையெழுத்துடன் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
வடக்கு முதலமைச்சர் யார்..? ; இறுதி முடிவு இன்று மாலை
15/06/2017 வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளும் தரப்பினரால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதினை அடுத்து வடக்கு மாகாண சபையின் இடைக்கால முதல்வர் இன்று மாலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வட மாகாண சபையின் ஆளும் கட்சியின் 16 உறுப்பினர்களும் எதிர்கட்சியின் 6 உறுப்பினர்களும் மொத்தமாக வட மாகாண சபையின் 21 உறுப்பினர்களின் கையெழுத்துடன் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் நேற்று நள்ளிரவு கையளிக்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற வடக்கு வடக்கு மாகாண சபை சிறப்பு அமர்வில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனையும், வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராசாவும் தாங்களாகவே பதவி விலக வேண்டும் என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் பா.டெனீஸ்வரன், பா.சத்தியலிங்கம் இருவரும் விடுமுறையில் செல்ல வேண்டும் என்றும் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளமையின் பின்னரே குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இது தொடர்பில் இன்று யாழ்.தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக போராட்டம்
15/06/2017 வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். கைதடியிலுள்ள வடக்கு மாகாண சபை வளாகத்துக்கு முன்னால் தற்போது கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்று வருகின்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம், பொது அமைப்புக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலதரப்பினர் கலந்து கொண்டுள்ளனர்.

விக்னேஸ்வரனுக்கு எதிராக நேற்று நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை ஆளும் தரப்பு முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையிலேயே முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்கும் போராட்டத்திற்கு சமூக ஊடகங்களினூடாக அழைப்பு விடுக்கப்பட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி
சம்பந்தன் – விக்கி சமரசம் பிரேரணை மீளப்பெறப்படும்?

16/06/2017 முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரனுக்கு எதிராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து ஏற்பட்டிருந்த கடும் முறுகல் நிலைக்கு பேச்சுவார்த்தைமூலம் சமரசத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவ ருமான இரா.சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ் வரனுடன் நேற்று தொலைபேசியில் உரையாடியதையடுத்து இந்த முறுகல்நிலைக்கு சமரசத் தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்
புௌாட் அமைப்பின் தலைவரும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இருவருக்குமிடை யில் மத்தியஸ்தராக செயற்பட்டு இந்த சமரச முயற்சியினை மேற்கொண்டுள்ளார்.
வடமாகாண சபை அமைச்சர்கள் நால்வ ருக்கும் எதிராக இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டதையடுத்து அது தொடர்பாக விசாரணை நடத்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ் வரன் விசார ணைக் குழுவை நியமித்திருந்தார். இந்த விசாரணைக்குழு தனது விசாரணையினை மேற்கொண்டு அறிக்கையினை கடந்த 3 ஆம் திகதி முதலமைச்சர் விக்கினேஸ்வ ரனிடம் சமர்ப்பித்திருந்தது. இந்த விசா ரணை அறிக்கையில் விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, ஆகியோர் மீதான குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளமையி னால் அவர்கள் பதவி விலக வேண்டு மென்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதே போன்று சுகாதார அமைச்சர் ப.சத்திய லிங்கம், போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் ஆகியோர் மீதான குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமையினால் அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் அறிக் கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி மாகாண சபை அமர்வில் விசாரணைக் குழுவின் அறிக்கையினை சமர்ப்பித்திருந்த முதலமைச்சர் விக்கினேஸ்வரன் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை தன்னிலை விளக்கம் அளிப்பதற்கான கால அவகாசத்தை வழங்கியிருந்தார். அமைச்சர்களின் தன்னிலை விளக்கத்தை அடுத்து அறிவிப்பு வெளியிட்ட விக்கி னேஸ்வரன் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப் பட்ட அமைச்சர்களான பொ. ஐங்கரநேசன், த. குருகுலராசா ஆகியோர் தாமாகவே பதவி விலகவேண்டுமென்றும் ஏனைய அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், பா. டெனீஸ்வரன் ஆகியோர் மீதான குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடை பெறும் என்றும் அதுவரை ஒருமாத காலம் விடுமுறையில் செல்லுமாறும் கோரியிருந் தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை அடுத்து சபையிலிருந்து தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர். இதனையடுத்து தமிழரசுக்கட்சியின் தலை வர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் கூடிய தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் முதலமைச்சரின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்ததுடன் அவருக்கு எதிராக நம் பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்து அவரை பதவி நீக்குவது என முடிவு செய்தனர்.
தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் உட்பட எதிரணி உறுப்பினர் ஒருசிலர் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத் திட்டதுடன் அதனை நேற்று முன்தினம் இரவு வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரேயிடம் சமர்ப்பித்திருந்தனர். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அமை ச்சர்களான த.குருகுலராசா, ப.சத்தியலி ங்கம், பா.டெனீஸ்வரன், அவைத் தலை வர் சி.வி.கே.சிவஞானம், பிரதி அவைத் தலைவர் வீ.கமலேஸ்வரன் ஆகியோர் உட்பட உறுப்பினர்களான அஸ்மின், இ. ஆர்னோல்ட், கே.சயந்தன், எஸ்.சுகிர்தன், சு.பசுபதிப்பிள்ளை, எஸ்.அரியரட்ணம், ரி. சிவயோகம், சிராய்வா, ஜவாகீர், அ. பரஞ் சோதி, ஜெயதிலக ஆகியோர் கையொப்ப மிட்டிருந்தனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆளுநரிடம் கையளித்திருந்தார். அத்துடன் மேலும் ஐந்து உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாகவும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் ஆளுநரிடம் தெரிவித்தி ருந்தனர். இந்த நிலையில் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையினை தமி ழரசுக் கட்சியினர் முன்வைத்து அவரை பதவி விலக்க முயன்றமை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் உட்பட பல அமைப்புக்களும் கடும் கண்ட னங்ளை தெரிவித்திருந்தன. சமூக வலை யத்தளங்களில் கடுமையான எதிர்ப்பு தெரி விக்கப்பட்டது. தொடர்ச்சியான போராட் டங்களுக்கும் அமைப்புக்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டன.
இத்தகைய சூழ்நிலையிலேயே முதலமை ச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுடன் கூட்டமை ப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரு மான இரா. சம்பந்தன் நேற்று முற்பகல் சமரச பேச்சுவார்த்தையினை நடத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற புௌாட் அமைப்பின் தலைவரும் எம்.பி. யுமான தர்மலிங்கம் சித்தார்த்தன் முதல மைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள் ளார். இந்த பேச்சுவார்த்தையை அடுத்து சித்தார்த்தன் எம்.பி. எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் எம்.பி.க்கு தொலைபேசி அழை ப்பை எடுத்து அவருடன் கலந்துரையாடிய பின்னர் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள னர்.
இந்த சமரசப் பேச்சுவார்த்தையின் போது குற்றம்சாட்டப்பட்ட இரண்டு அமை ச்சர்களுக்கும் எதிராக முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையை ஆமோதித்த சம்பந் தன் எம்.பி. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக் கப்படாத இரண்டு அமைச்சர்கள் மீது விசாரணைகளை தொடர்வதை தான் எதிர்க்க வில்லை என்றும் ஆனால் அவர்களை உட னடியாகவே விடுமுறையில் அனுப்பும் விடயத்தை முதலமைச்சர் மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண் டதாக தெரிகின்றது.
சம்பந்தன் எம்.பி.யின் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டதுடன் அந்த இரு அமைச்சர்கள் மீதான விசாரணை தொடரும் என்று தெரிவித்ததாக நம்பகர மாக தெரியவருகிறது. இதனையடுத்து முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையினை தமிழரசுக் கட்சி வாபஸ் பெறும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் முதலமைச்சரிடம் தெரிவித்தி ருக்கின்றார். இந்த இணக்கப்பாட்டின் அடி ப்படையிலேயே இருவருக்குமிடையில் சமரசம் ஏற்பட்டுள்ளது.
இந்த சமரசத்திற்கிணங்க குற்றம் நிரூபிக் கப்படாத இரண்டு அமைச்சர்களை விடு முறையில் அனுப்பும் செயற்பாட்டை முதல மைச்சர் கைவிடுவார் என்றும் இதற்குப் பதிலாக நம்பிக்கையில்லாப் பிரேரணை யினை தமிழரசுக்கட்சியினர் மீளப்பெறு வார்கள் என்றும் தெரியவருகின்றது. இன்று பிரேரணை மீளப்பெறப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சம்பந்தனுடனான பேச்சு வார்த்தை தொடர்பில் முதலமைச்சர் விக்கி னேஸ்வரனிடம் கேட்டபோது,
கூட்டமைப்பின் தலைவர் என்னுடன் பேசினார். குறிப்பாக நான்கு அமைச்சர்கள் மீதான எனது முடிவு தொடர்பில் அதாவது இரண்டு அமைச்சர்கள் ஒரு மாதகால விடுமுறையில் அமைச்சுக்கு செல்லாது இருப்பது தொடர்பான விடயத்தை கூட்ட மைப்புத் தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த இரண்டு அமைச்சர்களும் தகுந்த உத்தரவாதம் தந்தால் அந்த கடப்பாட்டை நீக்கமுடியும் என்று தெரிவித்துள்ளேன். இதுதொடர்பில் சித்தித்து அவர்கள்தான் பதில் கூற வேண்டும் என்றார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீள பெறுவது தொடர்பில் ஏதாவது முடிவு அறிவிக்கப்பட்டதா என கேள்வி கேட்ட போது, அவ்விடயம் தொடர்பில் இதுவரை எதுவித தகவலும் கிடைக்க வில்லை எனத் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கைத் தமிழரசுக்கட் சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி. இவ்விடயம் குறித்து தெரிவிக்கையில்
விக்கினேஸ்வரனும் சம்பந்தனும் தொலை பேசியில் என்ன உரையாடினார்கள் என்பது குறித்து என்னால் கருத்துக்கூறமுடியாது. அதே நேரம் எமது உறுப்பினர்கள் ஆளுநரிடம் கையளித்த தீர்மானம் தொடர்பாக என்னைச் சந்திப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். அதனையேற்று அவரை சந்தித்த நான் எமது கட்சி உறுப்பினர்களின் தீர்மானத்தை குறிப்பிட்டேன். அதன்போது அவர் அடுத்த முதலமைச்சர் அமைச்சர்கள் தொடர்பாக கேள்வியெழுப்பினார். இச்சமயத்தில் எமது கட்சியின் செயலாளர் இன்றைய தினம் (நேற்று) காலை வருகைதந்து உறுப்பினர்களுடன் கலந்துரையாடுகின்றார். அதன் பின்னரே அவ்விடயம் குறித்து தீர்மானிக்க முடியும் என குறிப்பிட்டேன். எவ்வாறாயினும் எமது உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் ஆளுநர் நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்த்துநிற்கின்றோம் என்றார். நன்றி வீரகேசரி
முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
16/06/2017 வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் முதலமைச்சருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தும் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னாள் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னாள் ஒன்று திரண்ட பொது மக்கள் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவா்கள் ஊழலுக்கு தண்டனை வழங்கு நீதியை, மக்களுக்காக ஆளுநரை சந்திக்க மறுத்தவா்கள் பதவிக்காக ஆளுநரின் காலில், ஊழலுக்குத் துணை நின்றால்தான் பதவியில் நீடிக்கலாமா? , தமிழரசுக் கட்சியே முதல்வரும் ஊழலுக்கு உடந்தையாக வேண்டுமா?, முன்னுதாரணமான முதலமைச்சரின் செயலுக்கு தடையா?, நம்பிக்கையில்லா தீர்மானத்தை உடன் இரத்துச் செய், எங்கள் முதல்வர் எங்களுக்கு வேண்டும், பதவிக்காக ஆளுநரிடம் சரணடைந்ததா தமிழரசுக் கட்சி, நீதிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், நீதியின் குரலை நீக்குவதற்கு நீங்கள் யார்?, குற்றவாளிகள் நீதிமானை தண்டிப்பதா?, பதிவி ஆசையே நம்பிக்கையில்லா பிரேரணை, ஊழலை மறைக்க எதிரியுடன் கூட்டா?, தமிழரசுக் கட்சியே நீ இலங்கை அரசின் கைக் கூலியா? போன்ற கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.


வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஒன்று கூடிய பொதுஅமைப்புக்கள்
16/06/2017 வவுனியா விருந்தினர் விடுதியில் வடக்கு முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா மாவட்ட பொதுஅமைப்புக்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.

தமிழ் மக்களின் தேசிய கொள்கையுடன் செயற்பட்ட வடமாகாண முதலமைச்சரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனை தடுக்க தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.

முதலமைச்சரை மாகாணசபையிலிருந்து வெளியேற்றுவதற்கு முழுமையான எதிர்ப்பினை வெளியிடுகின்றோம். தமிழரசுக் கட்சி மத்திய அரசாங்கத்துடன் சேர்ந்து மிகப்பாரிய தவறு ஒன்றை செய்து கொண்டிருக்கின்றது.

வவுனியா மாவட்டத்தை பிரநிதிப்படுத்துக்கின்ற அமைச்சர் முதலமைச்சரை வெளியேற்றுவதற்கு ஆதரவு தெரிவித்தால் அவரது வீட்டை முற்றுகையிடுதல் மற்றும் இன்றைய தினம் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்துவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சி.வி.யின் கையிலேயே முடிவு இருக்கின்றது : சம்பந்தன்
17/06/2017 வடமாகாணசபையில் எழுந்துள்ள நெருக்கடியான நிலைமையை எவ்விதமான கருமங்களை முன்னெடுத்து முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்பதை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனே தீர்மானிக்கவேண்டும். அவரின் கையிலேயே முடிவு தங்கியுள்ளது என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வடமாகாண இரண்டு அமைச்சர்கள் மீது விசாரணைக் குழு குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்த நிலையில் அவர்களை பதவி நீக்கம் செய்வது நியாயமான செயற்பாடாக இருந்தாலும் ஏனைய இரண்டு அமைச்சர்கள் மீதும் எவ்விதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் அவர்கள் மீது விசாரணை நடத்துவதாகவும் அதற்காக அவர்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அறிவித்திருப்பது அரசியல் சாசனத்திற்கு முரணான செயற்பாடாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் உள்ள வடமாகாண சபையில் தற்போது முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் குறித்த விவகாரத்தினை சுமுகமாக தீர்த்துக்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்தீர்கள்? அதன் பிரகாரம் சாத்தியமான நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றனவா? என்பது தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது;
வடமாகாண சபையில் உள்ள அமைச்சர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதன் காரணத்தால் அவற்றை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக முதலமைச்சரால் மூவர் கொண்ட விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது.
அந்தக்குழுவாது ஒரு அமைச்சர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் மற்றொரு அமைச்சர் நிர்வாக சீர்கேடுகளில் ஈடுபட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டி விசாரணை அறிக்கையை முதலமைச்சரிடத்தில் சமர்ப்பித்திருந்தது.
அதனையடுத்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நான்கு அமைச்சர்களையும் நீக்குவதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றார் என்ற தகவல்கள் எனக்கு கிடைக்கப்பெற்றதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை நான் முதலமைச்சருடன் தொலைபேசியில் உரையாடியிருந்தேன்.
அதன்போது நான் அவரிடத்தில் இந்த விடயங்கள் குறித்து கேள்வி எழுப்பினேன். அதாவதுஇ நீங்கள் நியமித்த விசாரணைக்குழு இரு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது. அவ்வாறான நிலையில் நீங்கள் ஏனைய இரு அமைச்சர்கள் உள்ளடங்கலாக நால்வரையும் நீக்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருதாக அறியக்கிடைத்துள்ளது. அது உண்மைதானா? அவ்விதமான கருமங்களை முன்னெடுக்கின்றீர்களா? என வினவியிருந்தேன்.
அதன்போது முதலமைச்சர் இரண்டு அமைச்சர்களை பதவிவிலக கோரவிருப்பதாகவும் ஏனைய இருவர் மீதும் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதற்காக அவர்களுக்கு விடுமுறை வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அச்சமயத்தில் நான் அவரிடத்தில் சிலகருத்துக்களை முன்வைத்திருந்தேன். தாங்கள் நியமித்த விசாரணைக்குழுவானது இரண்டு அமைச்சர்கள் மீதே குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றது. அவ்வாறான நிலையில் தாங்கள் ஏனைய இரண்டு அமைச்சர்கள் மீதும் நடவடிக்கைகளை எடுப்பது பொருத்தமான செயற்பாடாக எனக்குத் தெரியவில்லை. இவ்வாறான செயற்பாடு எடுக்கப்படுமாகவிருந்தால் உறுப்பினர்கள் மத்தியில் பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பிருக்கின்றன. ஆகவே அந்த செயற்பாட்டை தாங்கள் மறுபரி சீலனை செய்ய வேண்டும்.
மேலும் தாங்கள் இந்த விடயம் சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியிருக்கின்றீர்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியானஇ வடமாகாண சபையில் அதிகளவு உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவுடன் கலந்துரையாடவில்லை. அவ்விதமான நிலையில் தாங்கள் அவருடன் கலந்துரையாடுவது அவசியம் என்றேன்.
அதன்போது முதலமைச்சர் நான் அவருடன் கலந்துரையாடுவதற்கான நேரகாலம் இருந்திருக்கவில்லை. இன்றையதினம் (செவ்வாய்க்கிழமை) நிச்சயமாக அவருடன் தொடர்பு கொண்டு பேசுவேன் என்று குறிப்பிட்டார்.
அதனையடுத்து முதலமைச்சர் மாவை.சேனாதிராஜாவுடன் தொடர்பு கொண்டு பேசினார். அச்சமயத்திலும் நான் வலியுத்தியதைப்போன்றே மாவை.சோனாதிராஜாவும்இ இரண்டு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதால் அவர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். அதில் தவறில்லை. ஆனால் குற்றம் சாட்டப்படாத அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவறு. அவ்வாறு நீங்கள் நால்வரையும் நீக்குவதென்றால் ஐவரும் பதவியிலிருந்து விலக வேண்டிய நிலைமையே ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் முதலமைச்சர் 14ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வின்போது இரண்டு அமைச்சர்களை நீக்குவதாகவும் ஏனைய இரண்டு அமைச்சர்கள் மீதும் விசாரணை மேற்கொள்வதாகவும் அதற்காக கட்டாய விடுமுறை அளிப்பதாகவும் அறிவித்தார்.
இதனையடுத்தே நெருக்கடியான நிலைமைகள் எழுந்தன. இந்நிலையில் நான் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாவை.சேனாதிராஜாவுடனும் செல்வம் அடைக்கல நாதனுடனும் சிவசக்தி ஆனந்தனுடனும் சித்தார்த்தனுடனும் சி.வி.கே.சிவஞானத்துடனும் சத்தியலிங்கத்துடனும் தொலைபேசியூடாக பேசினேன். அவர்களின் கருத்துக்களையும் பெற்றுக்கொண்டேன்.
இந்நிலையில் இந்த விவகாரத்தினை சுமுகமாக தீர்த்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தேன். சித்தார்த்தன் முதலமைச்சரின் யாழிலுள்ள வீட்டுக்குச் சென்று அங்கிருந்து என்னுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டார். முதலமைச்சருடன் உரையாடுமாறு கேட்டுக்கொண்டார்.
அதற்கமைவாக நான் முதலமைச்சரிடத்தில் பேசினேன். அதன்போது நான் அவரிடத்தில் இந்த நெருக்கடியான நிலைமையை சுமுகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான கருமங்களை முன்னெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டேன். அதன் பிரகாரம் தாங்கள் (முதலமைச்சர்) விசாரணை அறிக்கையின் பிரகாரம் ஊழல் மோசடிஇ நிர்வாக சீர்கேடு ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இரண்டு அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்கள்.
ஆனால் ஏனைய இரண்டு அமைச்சர்களுக்கு கட்டாய விடுமுறை அளித்துள்ளீர்கள். அந்த முடிவு தவறானது. அமைச்சர்களை நியமிக்கவோ அல்லது நீக்கவோ தான் முதலமைச்சருக்கு அரசியல் சாசனத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது. கட்டாய விடுமுறை அளிப்பதற்கு இடமளிக்கப்பட்டிருக்கவில்லை. ஆகவே தாங்கள் அந்த அறிவிப்பை மீள் பரிசீலனை செய்து அக்கூற்றை மீளப்பெறுவீர்களாயின் இந்த விடயத்தினை சுமுகமாக தீர்த்துக்கொள்வதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன எனக் குறிப்பிட்டேன்.
அச்சமயத்தில் முதலமைச்சர், எனக்கு எதிராகவும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. நான் அந்த விடயத்தை பரிசீலனை செய்யத்தயாராக இருக்கின்றேன். குறித்த இரண்டு அமைச்சர்களிடத்திலிருந்தும் எழுத்து மூலமான உத்தரவாதமொன்றை எனக்குப் பெற்றுக்கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அச்சமயத்தில் எழுத்து மூல உத்தரவாதம் போன்ற விடயங்களை தவிர்த்து தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் அதன் ஊடாக இப்பிரச்சினைக்கு தீர்வைப் பெறமுடியும் என குறிப்பிட்டேன். அதனையடுத்து அந்த தொலைபேசி உரையாடல் நிறைவுக்கு வந்தது.
அதன் பின்னர் இந்த விடயம் தொடர்பாக நான் மீண்டும் மாவை.சேனாதிராஜாவுடனும், குறிப்பிட்ட அமைச்சர்களான சத்தியலிங்கம், டெனிஸ்வரன் ஆகியோரிடத்தில் பேச்சுக்களை நடத்தினேன். விசாரணைக் குழுவின் மூலம் குற்றம் சாட்டப்படாத நிலையில் அவர்கள் எழுத்துமூலமான உத்தரவாதத்தினை வழங்குவது பொருத்தமில்லை. அதற்கு அவசியமும் இல்லை.
நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் தான். அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. மத்தியில் ஊழல் நிறைந்த ஆட்சியை மாற்றுமாறு குரல்கொடுத்து வந்திருந்தோம். தற்போதும் எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. இலஞ்சம்இ ஊழல் மோசடிகள் நிறுத்தப்படவேண்டும். அதில் ஈடுபட்டவர்கள் நீதித்துறையின் பிரகாரம் முறையாக தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.
ஆனால் குற்றம் சாட்டப்படாதவர்கள் மீது நடவடிக்கைகளை எடுப்பது பொருத்த மற்றதொன்றாகும். அரசியல் சாசன ஒழுங்கு விதிகளை மீறிச் செயற்படுவது பொருத்தமற்றது. குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் படாதவர்களிடத்தில் உத்தரவாதத்தை எழுத்துமூலம் கேட்பதும் நியாயமற்ற கோரிக்கை. அரசாங்க ஊழியர்களை தான் குற்றச்சாட்டுக்களுக்காக விடுமுறையில் அனுப்ப முடியும். அதற்கான ஏற்பாடே இருக்கின்றது.
ஆகவே அவ்விதமான கோரிக்கைகளை முதலமைச்சர் மீளப்பெற்றுக்கொள்வராயின் இப்பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொள்ள முடியும். அவ்வாறான முடிவொன் றுக்கு முதலமைச்சர் வராத பட்சத்தில் நிலைமைகள் வேறுவடிவத்திற்கு செல்ல முடியும்.
எவ்வாறாயினும் நான் தொடர்ந்தும் அனைத்து உறுப்பினர்களுடனும் பேசிக்கொண்டிருக்கின்றேன். இந்தப் பிரச்சினை யையை சுமுகமாக தீர்ப்பதற்குநான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுகின்றேன். எனினும் முதலமைச்சர் கையில் தான் முடிவு இருக்கின்றது. அவர் தான் இந்த விவகாரத்தினை ஆரம்பித்தவர். தற்போதும் அவரின் அறிவிப்பில் தான் முடிவு இருக் கின்றது என்றார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment