NSW பல்கலைக்கழக அஞ்சலி தமிழ் சங்கம் - The Aunty Network

.

NSW பல்கலைக்கழக அஞ்சலி தமிழ் சங்கம் 1991ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை தமிழ் இளைஞர்கள் இடையே தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் மேம்படுத்துவதற்காக அஞ்சலி தமிழ் சங்கம் பல நிகழ்வுகளை ஆண்டுதோறும் நடாத்தி வருகிறது. அவற்றுள் மிகவும் பிரபல்யமானது ஒலி ஒளி எனப்படுகின்ற நிகழ்வு. வருடாவருடம் இடம் பெறும்  இந்த நிகழ்வில் சேர்க்கப்படும் நிதியாவது UNIFUND திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. கடந்த மூன்று வருடங்களாக ஒலி ஒளி ஒரு புதிய பரிணாமத்தில் இசை நாடகத் தயாரிப்பாக வெளிவந்திருக்கிறது. அந்த வைகையில் இந்த வருடமும் ஒலி ஒளி 2017ல்  “The Aunty Network “ எனும் ஒரு புதிய இசை நாடகத் தயாரிப்பு அரேங்கேறவுள்ளது. இது முற்றுமுழுதாக பல்கலைக்கழக மாணவர்களால் எழுத்தப்பட்டு , இயக்கப்பட்டு , தயாரிக்கப்பட்டு அவர்களாளேயே அரங்கேற்றப்படவுள்ளது.


UNIFUND திட்டமானது தாயகத்திலே வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் வாழும் தமிழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதாகும். பெற்றோரையும் ,குடும்பத்தையும் இழந்து வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமால் ,பல்கலைக்கழக வாழக்கைக்குப் பொருளாதார ரீதியாக ஈடுகொடுக்க முடியாதவர்களுக்கு பண உதவி அளிக்கும் முகமாகவே இந்த புலமைப்பரிசில் வழங்கப்படுகிறது. இதுவரைக்கும் 155 மாணவர்கள் இந்த புலமைப்பரிசில் மூலம் தமது பட்டப்படிப்பை முடித்துள்ளார்கள். இதில் 54 மாணவர்களுக்கு அஞ்சலி தமிழ் சங்கம் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

NSW பல்கலைக்கழக அஞ்சலி தமிழ் சங்கம் சர்வதேச அங்காடி, தமிழ் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி, வலைப்பந்தாட்ட போட்டி, அஞ்சலி சுற்றுலா, இளைஞர் பொங்கல் விழா, வெல்லும் சொல் திறனாளர் பேச்சுப் போட்டி போன்ற நிகழ்வுகளில் சிலவற்றை நடாத்தியும் ஏனையவற்றில் பங்குபற்றியும் வருகிறது.
சிட்னி வாழ் பல்கலைக்கழக தமிழ் இளைஞர்களின் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக இந்த ஒலி ஒளி 2017இல் பங்குபற்றி உங்கள் ஆதரவை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 


மாதுமை கோணேஸ்வரன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

அஞ்சலி தமிழ் சங்கம்