தமிழ் சினிமா

குற்றம்-23

தமிழ் சினிமாவில் த்ரில்லர் வகை கதை என்பது மிகவும் அரிது, அப்படியே வந்தாலும் அதை திறம்பட கையாள பெரிதும் ஆட்கள் இங்கு இல்லை,
ஆனால், தொடர்ந்து த்ரில்லர் வகை படங்களை சிறப்பாக எடுத்து வரும் அறிவழகன் இந்த முறை மெடிக்கல் கிரைம் பற்றி பேசியுள்ளார், இந்த கிரைமையும் அறிவழகன் வெற்றிகரமாக முடித்தாரா? பார்ப்போம்.

Kuttram 23கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே சர்ச்சில் ஒரு இரண்டு கொலை நடக்கின்றது, அதில் கர்ப்பமான ஒரு பெண் இருக்க, அந்த கேஸ் அருண்விஜய் கைக்கு வருகின்றது. அவரும் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்த கேஸை திறம்பட கையாள்கிறார்.
இந்த கொலை நடந்த இடத்தில் இருந்தது மஹிமா தான், அவரை விசாரணை செய்ய அருண்விஜய் அடிக்கடி சந்திக்கின்றார், அவர் உண்மையை சொல்லிவிடுவாரா என்ற அச்சத்தில் அந்த கொலை செய்த கும்பல் இவரையும் தாக்க வருகின்றது.
அருண்விஜய் அவரை காப்பாற்றுகிறார். அதை தொடர்ந்து கர்ப்பமாக இருப்பவர்களே தொடர்ந்து ஒரு சிலர் இறக்க, கேஸில் எந்த ஒரு எவிடன்ஸும் கிடைக்காமல் அருண்விஜய் இருக்க, மஹிமாவை தேடி அந்த கும்பல் மீண்டும் வருகின்றது.
இதை மஹிமா அருண்விஜய்யிடம் சொல்ல, அவர் அங்கு உடனே வர, அந்த கும்பல் எஸ்கேப் ஆகின்றது, ஆனால், பிறகு தான் தெரிகின்றது, அவர்கள் கொல்ல வந்தது மஹிமாவை அல்ல, அருண்விஜய்யின் அண்ணியை என்று? அவர்கள் ஏன் இவருடைய அண்ணியை கொல்ல வேண்டும், இந்த தொடர் கொலைகளுக்கு என்ன காரணம் என்பதை விறுவிறுப்பான காட்சிகளில் அறிவழகன் அசத்தியிருக்கின்றார்.

படத்தை பற்றிய அலசல்

அருண்விஜய் விக்டராக மிரட்டிய கையோடு அடுத்து வெற்றிமாறனாக கலக்கியிருக்கிறார், ஆர்ப்பாட்டம் இல்லாத அறிமுகம், அடுத்தடுத்து அவர் விசாரணை செய்யும் யுக்தி, காதலை கூட கண்ணியமாக சொல்லும் விதம், குறிப்பாக அருகில் நடக்கும் விஷயங்களை வைத்தே கேஸில் ஒவ்வொரு முடிச்சுகளை கண்டுப்பிடிக்கும் விதம் என விக்டரின் 2 வருட இடைவெளியை FullFill செய்கின்றார்.
மஹிமாவும் அட இந்த பொண்ணு சேட்டை படத்தில் நடித்ததா? என ஆச்சரியமாக வைக்க வைக்கின்றது, படத்திற்கு சம்மந்தமே இல்லாமல் வந்து போகும் கதாநாயகிகள் மத்தியில் இவரை வைத்து கதை நகர்வது அறிவழகன் சூப்பர்.
அண்ணியாக நடித்திருக்கும் அபினயா குழந்தை இல்லாததால் மாமியாரிடம் திட்டு, பிறகு கர்ப்பம் தரித்ததும் அவர் காட்டும் ரியாக்‌ஷன் அதை விட இரண்டாம் பாதியில் வரும் ப்ளாஷ்பேக் காட்சிகள் என நாடோடிகள், ஈசனுக்கு பிறகு கவனிக்க வைக்கின்றார்.
மெடிக்கல் கிரைம் அதிலும் கர்ப்பம் என்பதில் எப்படியெல்லாம் மருத்துவமனையில் நம் கண்களுக்கு தெரியாமல் ஒரு சில விஷயங்கள் நடக்கின்றது என்பதை தோல் உரித்து காட்டுகின்றது, ஒரு நிமிடம் நமக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
சமீப காலமாக போலிஸ் மீது வெறுப்பாக இருக்கும் மக்களுக்கு, இந்த போலிஸ் கொஞ்சம் ரசிக்க தான் வைக்கின்றார், விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் 2 தான் என்றாலும், கதையுடன் வருவது சலிப்பு தட்டவில்லை, பின்னணியில் மிரட்டியிருக்கின்றார், ஆனால், ஆரம்பம் தீம் மியூஸிக்கை ஏன் போட்டிருக்கின்றார் என்று தான் தெரியவில்லை, பாஸ்கரின் ஒளிப்பதிவு நம்மையும் மெடிக்கல் மற்றும் போலிஸ் விசாரணைக்குள் அழைத்து செல்கின்றது.

க்ளாப்ஸ்

கதைக்களம் பல படத்தில் சமீப காலமாக பார்த்து வருவது என்றாலும் திரைக்கதையில் செம்ம ஸ்கோர் செய்கிறார் அறிவழகன்.
அருண்விஜய்யின் கதாபாத்திரம் ஒரு ரியல் லைஃப் போலிஸை பார்த்த அனுபவம்.
படத்தின் ஒளிப்பதிவு, அதிலும் இரண்டாம் பாதியில் ஒரு நாடக நடிகையை சேஸ் செய்யும் காட்சி சீட்டின் நுனிக்கு வரவைக்கின்றது, மிகவும் லைவ்வாக படம்பிடித்துள்ளனர்.

பல்ப்ஸ்


மொத்தத்தில் குற்றம்-23 படத்தில் அருண்விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் தான் படத்தின் ரிசல்ட்டும்- வெற்றிஇரண்டாம் பாதி ப்ளாஷ்பேக் காட்சியை இன்னும் கொஞ்சம் வேகமாக சொல்லியிருக்கலாம்.
நன்றி cineulagam