இருநூறு வயதுகளில் நடைபயிலும் யா. யூனியன் கல்லூரி

.

இருநூறு வயதுகளில் நடைபயிலும் எமது கல்லூரித் தாய்
யா. யூனியன் கல்லூரி,தெல்லிப்பழை 1816 - 2016
யாழ் கல்லூரிகளின்  மூத்த தலைமகள் இருநூற்றாண்டு விழா காணும் எமது யூனியன்  தாய்க்கு வாழ்த்துச் சொல்ல வாய ப்புத் தந்த இறைவனுக்கு நன் றி சொல்வதோடு எனது மனப்பதிவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்
“எழுத்தறிவித்தவன் இறைவன்” என்ற கூற்றுக்கிணங்க கல்விப் பணியானது
இறைவனால் தரப்பட்ட நற்பணியாகும ;. கல்வியின் மூலமே ஒரு சமுதாயம் உன்னத நிலையை அடைகின்றது. அந்த வகையில் யாழ் மண்ணில் தெல்லியூரில்  ஆலம் விழுதாய் அழியாது நிற்கும் யூனியன்  கல்லூரி ஆற்றும் பணியும் காலத்தால் அழியாதது என்பதற்கு அவளின் இருநூறு வயதுகளே ஒரு சான்றாகும்.






இருநூறு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு வந்த கல்வி ஆர்வலர்களின் சிந்தனைக் கருவூலத்தில் முகிழ் ந்த இவ்வறிவாலயம் இன்று தலை நிமிர்நது நிற்கின்றது. இக்கல்லூரியானது மாணவர்கள் ஆசிரியர்களை விரும்பி வரவழைக்கும் விதத்தில் மகிழ்ச் சியானதும் ரம்மியமானதுமான கற்றல் சூழல் அமையப்பெற்றது. இவ்வாறு அமையப்பெற்ற இக்கல்லூரியின் வளர்ச்சியும ; எழுச்சியும ;
எமது தமிழ் மாணவர்களின் வளர்ச் சியினையும ; எழுச்சியினையும் பறைசாற்றும்.


“அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” காரணம் மனிதனால் தான் முக்காலத்தையும ; உணரவும்  எண்ணவும் முடியும்  அதிலும்  இளமையும்  மாணவர் வாழ்க்கையும் அளவற்ற சக்தியை தன்னுள் அடக்கிக் கொண்டிருப்பதாகும். அந்த வாழ் க்கையில் நன்மை தீமை எதையும் ஆராயந்து பரிசோதனை செய்து பார்க்கும் காலமும் ஆகும். வாழ்க்கையில் எந்த ஒரு காரியத்தையும் சாதிப்பதற்கு அளவற்ற சக்தியும் தைரியமும் உறுதியான
மனமும் வேண்டும். சுவாமி விவேகானநதர் அடிப்படைக் குணங்களை கொண்டவர்கள் மேல் அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார். அதனால்தான் “தூய்மையான சுயநலமற்ற ஒரு நூறு இளைஞர்களை கொடுங்கள் இந்த உலகத்தையே ஆட்டிப்படைத்துக் காட்டுகின்றேன்” என்று சொன்னார். அதைப் போன்றே புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது கல்லூரித் தாயை நினைவு கூர்ந்து பிறநத மண்ணிற்கும் பெற்ற கல்விக்கும் பெருமை சேர்க்கும்
யூனியன் கல்லூரி பழைய மாணவர்களின் செயலும் முயற்சியும்  வெற்றி பெற்று எமது கல்லூரியின் பணி மேன்மேலும் சிறப்புடன் தொடர வேண்டி வாழ்த்துகின்றேன்.


இதுமட்டுமல்லாது சிட்னி பழைய மாணவர் சங்கம் யூனியன் தாயின் இருநூற்றாண்டு விழாவை யூனியன் இசைமாலை எனும் மாபெரும் நிகழ் வாக இவ்வருடம் மே மாதம் 28ஆம்  திகதி மாலை 6:00 மணிக்கு Sydney Bahai Centre இல் கொண்டாடவுள்ளது.
இந்நிகழ்வுக்கு அனைவரும் வருகை தந்து எமது கல்லூரித்தாய்க்கும் எமது பழைய மாணவர்களின் முயற்சிகளுக்கும் பெருமை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி!
யூனியன்  தாய் யாழ் மண்ணின் மைந்தர்களின் கல்விக்குறுதி!
வாழ்க யூனியன் தாய் வாழியவே!
A.J. ஜெயச்சந்திரா
தலைவர் 2016
சிட்னி பழைய மாணவர் சங்கம