கடவுள் இருக்கான் குமாரு
இன்றைய ட்ரெண்ட் இளைஞர்களின் பல்ஸ் பிடித்து படம் நடிப்பவர் தான் ஜி.வி.பிரகாஷ். இவர் படம் என்றாலே அடெல்ட் ஒன்லீ ரேஞ்சில் இருக்க முதன் முறையாக ராஜேஸ் கூட்டணியில் அதிலும் யு சான்றிதழுடன் வெளிவந்துள்ள படம் தான் கடவுள் இருக்கான் குமாரு. ராஜேஸ் படம் என்றாலே ஜாலி, கேலி பஞ்சம் இருக்காது. அப்படி நம்மை ஜாலியாக கொண்டு சென்றதா? இந்த கடவுள் இருக்கான் குமாரு, பார்ப்போம்.
கதைக்களம்
தமிழ் படத்திற்கே உண்டான பாரம்பரியம் ஹீரோவுக்கு வேலையில்லை. நண்பருடன் அரட்டை அடித்து ஊரை சுற்றுகிறார் ஜி.வி. முதல் காட்சியிலேயே அவருக்கு நிக்கி கல்ராணியுடன் திருமண ஏற்பாடு நடக்கின்றது.
திருமணத்திற்கு முந்தைய நாள் பாலாஜியுடன் பேச்சுலர் பார்ட்டி சென்று வரும் நேரத்தில் போலிஸ் இவர்கள் வந்த காரை வழிமறிக்கின்றது.
கார் நிறைய சரக்கு பாட்டில்கள் இருக்க, போலிஸான பிரகாஷ்ராஜ் பணம் எதிர்ப்பார்க்கிறார். அவர்களிடமிருந்து ஜிவி, பாலாஜி தப்பிக்க, போலிஸ் அவர்களை துரத்த, பிறகு திருமணம் நடந்ததா? இல்லையா? என்று எங்கெங்கோ கதை செல்கின்றது.
படத்தை பற்றிய அலசல்
ஜி.வி இன்னும் எத்தனை படத்தில் தான் இப்படியே நடிப்பார், போதும் ஜி.வி என்று சொல்ல வைக்கின்றது. ஆனந்தியுடன் முந்தைய காதல், அப்படியே த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு எபிசோட் பார்ப்பது போல் உள்ளது.
ஆர்.ஜே.பாலாஜியின் ஹைலைட்டே அவரின் ட்ரெண்ட் வசனங்கள் தான், தற்போது வழக்கத்தில் உள்ள வசனத்தை கலாய்த்து இளைஞர்களிடம் அப்லாஸ் வாங்குகிறார். ராஜேஸ் படத்தில் இப்படி ஒரு சொதப்பலா, சந்தானம் இல்லாத குறை தெரிகிறது பாஸ்.
ஆனந்திக்கு கூட இரண்டு, மூன்று காட்சிகள் இருக்க, நிக்கி கல்ராணி ஏதோ வைக்க வேண்டுமே என்று வைத்துள்ளார்கள். ராஜேஸ் படத்தில் நாம் மிகவும் எதிர்ப்பார்த்து போவது காமெடி தான்.
யாரையும் விட்டு வைக்கமாட்டார், கலாய்த்து எடுத்துவிடுவார். இதிலும் பஞ்சாயத்து பேசும் ஒரு நிகழ்ச்சியை கலாய்க்கும் காட்சி, சிரிப்பிற்கு கேரண்டி. ஆனால், படம் முழுவதும் ராஜேஸ் டச் மிஸ்ஸிங்.
கலாய்ப்பு வசனம் இருக்கலாம், அதற்காக ஒருத்தரை மனம் நோகடிக்கும் படியான வசனம் தேவையா? ஸ்ருதிஹாசனை கிண்டல் செய்யும் வசனம் எதற்கு? பேய் எபிசோட் எல்லாம் எதற்கு? இப்படி பல கேள்விகள் நாமே கேட்டுக்கொண்டால் தான் உண்டு.
ஜி.வி ஹீரோ ஆயிட்டிங்க, ஓகே, இசையமைப்பாளர் வேறு யாரையாவது கமிட் செய்யலாமே? பாடல்களும் அத்தனை கொடுமை.
க்ளாப்ஸ்
பிரகாஷ் ராஜ், ரோபோ ஷங்கர், சிங்கம் புலி வரும் ஒரு சில காட்சிகள்.
கிளைமேக்ஸ் கலகலப்பு.
பல்ப்ஸ்
தெளிவே இல்லாத திரைக்கதை, அதிலும் பேய் சீன்கள் எல்லாம் பொறுமையை சோதிக்கின்றது.
மொத்தத்தில் கடவுள் இருக்கான் குமாரு ரொம்ப சோதனை குமாரு.
Cast:
No comments:
Post a Comment