உலகச் செய்திகள்


ஜப்பானில் பாரிய பூமியதிர்ச்சி ; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

 27 மணி நேர வரலாற்று சத்திரசிகிச்சை ; தலை ஒட்டி பிறந்த குழந்தைகள் முதல் தடவை சந்தித்த கண்கொள்ளா காட்சி

 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : மறுபடி வாக்கு எண்ணிக்கை நடத்த ஹிலாரி அணி கோரிக்கை

 பக்தாத்தில் குண்டு வெடிப்பு :பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வு

கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் கெஸ்ட்ரோ  காலமானார்







ஜப்பானில் பாரிய பூமியதிர்ச்சி ; சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

22/11/2016 ஜப்பானில் பாரிய பூமியதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது. 
இதனை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2011 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டு கடும் பாதிப்புக்குள்ளான புக்குஷீமா அணு சாலைகளுக்கு அண்மித்த பகுதியிலேயே இம்முறையும் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது 7.4 ரிச்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
http://video.dailymail.co.uk/video/mol/2016/11/22/7827615896245061365/640x360_MP4_7827615896245061365.mp4
http://video.dailymail.co.uk/video/mol/2016/11/21/3335941884605252494/640x360_MP4_3335941884605252494.mp4
http://video.dailymail.co.uk/video/mol/2016/11/21/6108827971759523269/640x360_MP4_6108827971759523269.mp4
http://video.dailymail.co.uk/video/mol/2016/11/21/2809500234695593/640x360_MP4_2809500234695593.mp4
நன்றி வீரகேசரி













27 மணி நேர வரலாற்று சத்திரசிகிச்சை ; தலை ஒட்டி பிறந்த குழந்தைகள் முதல் தடவை சந்தித்த கண்கொள்ளா காட்சி

23/11/2016 ஒருவரை ஒருவர் பார்க்க முடியாதவாறு தலை ஒட்டிய நிலையில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் முதல் தடவையாக ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இன்று  வெளியிடப்பட்டுள்ளது. 
சிக்காகோ நகரைச் சேர்ந்த நிகோலி மக்டொனால்ட்டுக்கு 14 மாதங்களுக்கு முன்னர் பிறந்த ஜேடன் மற்றும் அனியஸ் என்ற குறித்த இரட்டை ஆண் குழந்தைகளுக்கு கடந்த ஒக்டோபர் 13 ஆம் திகதி வேறு பிரிப்பதற்கான 27 மணி நேர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 
குறித்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதையடுத்து அந்தக் குழந்தைகளுக்கு கடந்த 5 வாரங்களாக வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. 
இதனையடுத்து தற்போது அந்தக் குழந்தைகள் ஒருவரையொருவர் நேருக்கு நேர் முதன் முதலாக பார்த்துக் கொள்ளும் அரிய வாய்ப்பை கிடைத்தவேளையினை புகைப்படம் எடுத்துள்ளனர்.
குறித்த புகைப்படமானது சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 














அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : மறுபடி வாக்கு எண்ணிக்கை நடத்த ஹிலாரி அணி கோரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 8 ஆம் திகதி நடைபெற்றது. இதில், ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டொனால்ட் டிரம்ப் வெற்றியடைந்தார்.
இந்நிலையில், மக்கள் அளித்த வாக்குகள் எண்ணிக்கையில் ஹிலாரிக்கு தான் அதிக வாக்குகள் கிடைத்திருந்தன. 
அமெரிக்காவின் நடைமுறைப்படி ஜனாதிபதி தேர்வு செய்ய தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த தேர்வாளர்கள் தான் ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும்.
அதன்படி டொனால்ட் டிரம்புக்கு தான் அதிக தேர்வாளர்கள் கிடைத்தனர். எனவே, அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தேர்தலில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. ஹிலாரி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிக்சிகான், பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் டெனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க தேர்தலில் ஒவ்வொரு மாகாணங்களிலும் ஒவ்வொரு முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. வாக்கு சீட்டு முறை, வாக்கு எந்திர முறை, மின்னஞ்சல் ஓட்டுக்கள் அனுப்பும் முறை என பல வகை வாக்கு பதிவு முறை பயன்படுத்தப்பட்டது.
இதில் இந்த 3 மாகாணங்களிலும் கணனி உதவியுடன் செயல்பட்ட வாக்கு எந்திர முறை பயன்படுத்தப்பட்டது. அந்த வாக்கு எந்திரத்தை ஹேக்கிங் முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தகவல்களை மாற்றி முறைகேடு செய்திருக்கலாம் என பிரபல கணனி துறை பேராசிரியர் அலெக்ஸ்ஹால்டர்மென் கூறி இருக்கிறார்.
எனவே, இதில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.இதையடுத்து ஹலாரி ஆதரவாளர்கள் 3 மாகாணங்களிலும் மறுபடியும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். தவறு நடந்ததா? என கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 














பக்தாத்தில் குண்டு வெடிப்பு :பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வு

25/11/2016 ஈராக்கின் பக்தாத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 77ஆக அதிகரித்துள்ளது. 
பக்தாத்தின் கர்பலா பிரதேசத்தில் உள்ள எரிப்பொருள் நிரப்பு நிலையம் ஒன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
குறித்த சம்பவத்தினால் மேலும் 40 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
இத் தாக்குதலிற்கு ஜ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி













கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் கெஸ்ட்ரோ  காலமானார்

26/11/2016 கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் கெஸ்ட்ரோ தனது 90 ஆவது வயதில் இன்று காலமானதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
1976 ஆம் ஆண்டு முதல் 2008 ஆண்டுவரை கியூபாவின் அதிபராக இருந்த கெஸ்ட்ரோ , உடல் நலம் குன்றியதால் 2008 ஆம் ஆண்டு அதிபர் பதவியை அவரது சகோதரர் ராவல் கெஸ்ட்ரோவிடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி

































































No comments: