முன்னாள் கியூப அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவு

.

கியூபாவின் முன்னாள் அதிபரும், கம்யூனிச புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro 9௦) காலமானார்.
13 ஆகஸ்ட் 1926ம் ஆண்டு பிறந்த இவர் 25 நவம்பர் 2016 இல் காலமானார் .  இந்த துயர சம்பவத்தை ராகுல் காஸ்ட்ரோ அவர்கள் அறிவித்திருக்கிறார்.
ஏறத்தாழ 50 வருடங்கள் கியூபா நாட்டை கட்டி காத்துவந்த பிடல் காஸ்ட்ரோ  உடல்  நலக்குறைவால்  2008ம் ஆண்டு தனது சகோதரனான ராகுல் காஸ்ட்ரோவிடம் ( Raúl Castro)ஆட்சியை ஒப்படைத்தார் . உலகத்தில் அதிக வைத்தியர்களை உருவாக்கி  உலக நாடுகளுக்கு வைத்திய உதவிக்காக வைத்தியர்களை அனுப்பி உதவி புரிந்தவர்  என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் குல மாணிக்கத்தை  வைத்தியர்களால்கூட காப்பாற்ற முடியாமல் போய்  விட்டது என்பது கவலையே.


 இவர்  பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் தோழர் சேகுவேராவுடன் இணைந்து புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் கொடிய அரசிடமிருந்து மக்களை விடுவித்து தலைப்பு பொறுப்பை ஏற்று வழிநடத்தியவர். 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ரு  ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே.

SeGuevara and Castro

அமெரிக்காவின்  அருகில் இருந்துகொண்டு  (150 கிலோமீட்டர் )  கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும்.
மெக்ஸிகோவில் இவர் இருக்கும் போதுதான் சேகுவேரா இவருக்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது .

உலக ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாது நிமிர்ந்துநின்று மக்களை வழி நடத்திய  மாபெரும் போராளிக்கு தமிழ்முரசு தனது அஞ்சலியை தெரிவிக்கின்றது .
No comments: