தேர்தல் - சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

.
 உஷாரய்யா  உஷாரு ! உஷாரய்யா  உஷாரு !
காலை பிடிச்சி , கையை பிடிச்சி ,
பல்லைக் காட்டி , பணிவைக் காட்டி ,
ஒட்டு வாங்க , துட்டு குடுத்து 
தோடு குடுத்து , குடத்தைக் குடுத்து , 
சேலை குடுத்து ,வேட்டி குடுத்து ,
வக்கணையா சிரிச்சி பேசி 
வஞ்சகமா வலையை வீசி  
வாக்குறுதி அள்ளி வீசி 
ஓட்டு  கேட்க வாராங்க  , உஷாரய்யா உஷாரு . 

சாதிக்காரன்  என்பாங்க.
மதத்துக்காரன் என்பாங்க.
கட்சிக்காரன் என்பாங்க 
கொள்கைக்காரன் என்பாங்க   
பல  வருஷப் பதவிக்காக 
இலவசங்க குடுப்பாங்க 
ஓட்டு வாங்கி ஜெயிச்சிப்புட்டா 
ஓடிப் போயிடுவாங்க 
தேடி நீங்க போயி நின்னா 
திரும்பிப் பார்க்க மாட்டாங்க. 


வாக்குறுதியைப் பத்திக் கேட்டா 
வாயை மூடி சிரிப்பாங்க . 
அதட்டி நீங்க கேட்டுப்புட்டா 
அடியாளு  வருவாங்க  
பக்குவமா தொகுதி நிதியைப் 
பதுக்கி உள்ளே வைப்பாங்க . 
திட்டங்களைப் போட்டு போட்டு 
துட்டு சேர்க்கப் பாப்பாங்க ,
அஞ்சு வருஷ காலத்துலே 
அஞ்சாம ஊழல் செஞ்சி 
அஞ்சாறு தலைமுறைக்கு 
சொத்து சேர்த்து வைப்பாங்க. 

காவல் துறை அவர்களுக்கு 
ஏவல் செய்யும் ,அதனாலே  
சட்டமீறல் அவங்களுக்கு 
சாதாரண வேலையாம் .
வழக்கு யாரும் போட்டாலும் 
வாய்தாவா  கேப்பாங்க  
நீதிமன்ற தீர்ப்பு வந்தா 
மனு  போட்டு இழுப்பாங்க . 

இவங்களுக்கு பாடம் புகட்ட 
இருக்கறது ஒரே வழி . 
நல்லவங்களாப் பாத்து   
நாம ஓட்டு போடணும். 
விவேகமா சிந்திச்சி 
வாக்களிக்க செய்யணும். 
அஞ்சு  வினாடி சிந்திச்சி 
அழகா ஓட்டுப் போட்டுட்டா 
அஞ்சு வருஷம் நிம்மதியா 
அக்கடான்னு இருக்கலாம்.