தமிழகத் தேர்தல் -- வழக்கறிஞர் சந்திரிகா சுப்ரமண்யன்

.
கட்சிகளும் காட்சிகளும்

அண்ணாவின் அன்புத் தம்பியின் அரசியல் சாகசம்

அம்மாவின் “விலையில்லா”அரசியல் முன் எடுபடுமா?

தமிழகத்தில் 15வது சட்டசபைக்கான ஆயத்தங்கள் விறுவிறுப்பாக நடை பெற்றுக்கொண்டிருக்கும் அதே வேளையில் பரபரப்பான கட்சிக் கூட்டணிஇ மற்றும் கட்சி முறிவுகளும் நடந்துகொண்டிருக்கின்றன.

தமிழகம் தேர்தல் களை கட்டத் தொடங்கி விட்டது. கட்சிகள் சேர்வதும்இ கலைவதுமாக் இருக்கின்றன.  உச்ச பட்ச இறுக்கத்தில் திமுகவும்இ சகல அலட்சியமாக அதிமுகவும் இருக்கின்றன. தேர்தல் களத்தில் விஜயகாந்தின் தே தி மு க யார் பக்கம் என்று பரபரப்பான எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கும் வேளையில்இ நாம் தனித்தே நிற்போம் என்று விஜய்காந்த் குரல் கொடுக்க ஆடி போனது திமுக .




தமிழக சட்டசபை வரலாறு

முதலாவது சட்டசபை 1952–1957

இரண்டாவது சட்டசபை 1957 - 1962

மூன்றாவது சட்டசபை 1962 - 1967

 இந்த மூன்று சட்டசபைகளிலும் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சிஅமைத்தது

நான்காவது சட்டசபை தேர்தல் 1967–ம் ஆண்டு நடந்ததுஇ இதில் அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைத்தது. அவர் மறைவின் பின் கருணாநிதி முதலமைச்சரானார். ஆனால்இ இந்த சட்டமன்றம் முழுமையாக இயங்காமல்இ 1971–ல் கலைக்கப்பட்டது. மீண்டும் 5–வது சட்டசபை 1971 முதல் 1976 வரை தி.மு.க.தலைமையில் இயங்கியது. ஆனால் நெருக்கடிநிலை பிரகடன நேரத்தில் சட்டசபை கலைக்கப்பட்டது.

அடுத்து 1977–ம் ஆண்டு நடந்த 6–வது சட்டசபை தேர்தலில் அமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.ஆனால் 1980–ம் ஆண்டு அவர் ஆட்சி கலைக்கப்பட்டது.7–வது சட்டசபை தேர்தல் 1980–ல் நடந்து 1984 வரை அ.தி.மு.க. தலைமையில் இயங்கியது.

எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சைப்பெற்ற நேரத்திலே 8–வது சட்டசபைக்கான தேர்தல் 1985–ம் ஆண்டில் நடந்தது. அந்த தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்றது ஆனால்.இ 1987–ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தவுடன்இ 1988 தொடக்கத்தில் கலைந்தது. 1989–ம் ஆண்டு 9–வது சட்டசபைக்கான தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று 1991–ம் ஆண்டுவரை ஆட்சியில் இருந்தது. 1991–ம் ஆண்டு அந்த ஆட்சி கலைக்கப்பட்டது.

மீண்டும் 10–வது சட்டசபைக்கான தேர்தல் 1991–ம் ஆண்டு நடந்து அதில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. வெற்றிபெற்றது. இந்த சட்டமன்றம் முழுமையாக 5 ஆண்டுகள் இயங்கியது. 1996–ம் ஆண்டில் 11–வது சட்டசபைக்கான தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று 2001–ம் ஆண்டுவரை பதவியில் இருந்தது. மீண்டும் 2001–ம் ஆண்டு நடந்த 12–வது சட்டசபைக்கான தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.

அடுத்து 2006–ம் ஆண்டில் 13–வது சட்டசபைக்கான தேர்தல் நடந்தது. இதில்இ தி.மு.க. வெற்றிபெற்று 2011 வரை கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைத்தது. மீண்டும் 2011–ம் ஆண்டு 14–வது சட்டபைக்கான தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது.



அரசியல் வாரிசா? வாரிசு அரசியலா?

எம் ஜீ ஆர் ஒரு தலமையேற்க“அரசியல் வாரிசை” உருவாக்கி விட்டுத்தான் சென்றார் என்பதை  எவரும் மறுக்க முடியாது.அந்த ஒரு பணியை தி முக செய்யாததின் விளைவு தான் “வாரிசு அரசியலின்” அவலம்இ



அதிமுகவுக்கு மாற்று இல்லை என்ற  நிலைமையை உருவாக்கி உள்ளது.தி மு கவின்  நிலைமை கட்சிக்குள்ளேயே மிக பலவீனப்பட்டுள்ளதற்கும் இதுவே காரணமாகும்.



இரண்டாவது கடந்த தேர்தலில் இ ’நாற்பதும் நமதே! என்று மார்தட்டிக் கொள்ளும் பெருமை  அதிமுகவிற்கு கிட்டியது இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் தி.மு.க.  பங்காளி சண்டையில் மைந்தர்கள் இ சொத்துக் குவிப்பில் பேரன்கள்இ கலைஞரின் கையால் ஆகாத வெறும் வாய்ப்பேச்சு  என்று தி.மு.க.  ஆட்சியில் நடந்த அராஜக செயல்களால் வெறுத்துப் போயிருந்த வாக்காளர்கள்இ எஞ்சியிருந்த மாற்றான அதிமுகவுக்கு வாக்களித்து ஜெயை மீண்டும் கோட்டைக்கு அனுப்பினார்கள்.



ஆறு முறை ஆட்சி கட்டிலைப் பிடித்த கட்சி என்ற பெருமையை பெற்றது தி.மு.க.   தி மு க வை திராவிட முன்னேற்ற கழகம் என்பதை விடஇ திருவாரூர் முத்து வேல் கருணா நிதி என்பது சாலப் பொருந்தும்.

1949 செப்டம்பர் 17-ல் திராவிட முன்னேற்றக்கழகத்தை (தி.மு.க.) அறிஞர்அண்ணா தொடங்கினார்.தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமியால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து கா. ந. அண்ணாதுரையும்இ வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 1949 செப்.இ 17ம் தேதிஇ தி.மு.க.இவை துவக்கினர்.பல கட்டப் போராட்டங்களின் பின் தி மு க காங்கிரசை  தோற்கடிக்கத் தொடங்கியது.

அடுத்துஇ 1967ல்இ நடந்த சட்டசபை தேர்தலில்இ ராஜாஜியின் சுதந்திரா கட்சிஇ முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துஇ 138 இடங்களை பிடித்துஇ முதன் முறையாக ஆட்சியை பிடித்தது; அண்ணாதுரை முதல்வரானார். அவரது மறைவுக்கு பின்இ 1969ல் கருணாநிதி முதல்வரானார்.

பின்ன ர்வந்த தேர்தல்களில்  1971இ 1989இ 1996இ 2006இ ஆகிய சட்ட சபை தேர்தல்களில்இ தி.மு.க.இ வெற்றி பெற்று தட்சிணாமூர்த்தி என்ற  கருணாநிதி முதல்வரானார்

அப்போது தொடங்கியது  கருணா நிதி இ எம் ஜீஆர் பனிப்போர்.ஆரம்பத்தில் கரணா நிதியின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் பங்களித்தவர் எம் ஜீஆர் என்பது மறைக்கவோ இ மறிக்கவோ முடியாத உண்மை. ஆனால் கருணா நிதி அண்ணாவின் பாதையிலிருந்து விலகி  தி முக - திராவிட முன்னேற்ற கழகம் என்பதை விட்டு இ திருவாரூர் முத்து வேல் கருணா நிதி –என மாறத்தொடங்கியதும் எம் ஜீ ஆர் விழித்துக் கொண்டார்.

முடிவில் எம் ஜீ ஆர் பிரிந்து அ தி முக உதயமானது. . எம் ஜீ ஆரின் மறைவு தமிழக அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. அது தான் பெண் தலைமைத்துவத்தை அறிமுகப்படுத்தி  ஜெயலலைதாவுக்கு அசைக்க முடியாத அடித்தளத்தை இட்டுத்தந்தது.

இன்று வரை அதிமுக நிலைத்து ஆளும் ஆட்சி எம் ஜீ ஆர் என்ற மாமனிதரின் தனிப்பட்ட செல்வாக்கும்இ அரசியல் செல்வாக்குமே என்பது மறுக்க முடியாதது.

ஆனால் கருணாநிதியின்  நிலைமை?  இன்றுஇ கூட்டணி பேசக்கூடஇ தகுதியான ஆட்கள் இன்றி திணறிக் கொண்டிருக்கிறது. கூட்டணியை இலகுவாக ஏற்படுத்தி வந்தஇ தி.மு.க.இவுக்கு சமீபத்தில் ஏற்பட்டு வரும் சறுக்கல் களுக்கு காரணம் என்ன?

தி.மு.க.இவில் தலைமைத்துவம் அடுத்த வாரிசை உருவாக்கத் தவறிவிட்டது.மாறாக வாரிசு போட்டிகளை உருவாக்கி விட்டது.

எந்த தேர்தலிலும் தோல்வியே காணாமல் 13-வது முறையாக களம் இறங்கும் கலைஞர்ஒரு புறம் இருந்தாலும் கூட வாரிசுகளால் உருவான ஏழரை மறுபுறம் காலை இழுத்துக் கொண்டிருக்கிறது.ஆனாலும் தமிழக அரசியல் வரலாற்றை எழுதும்போது தவிர்க்க  முடியாத  ஒரு நபராக இன்றும் அவர் இருக்கிறார். தமிழக பொதுத் தேர்தல்களில் திராவிட முன்னேற்ற கழகம் ஐந்து  முறை தோல்வியை தழுவிய நிலையிலும் கருணாநிதி வெற்றி பெற்றுள்ளார்.



கருணாநிதி வெற்றி பெற்ற தேர்தல்கள் விவரம்:



1957- குளித்தலை - 8இ296 வாக்குகள் வித்தியாசம்



1962- தஞ்சாவூர் - 1928 வாக்குகள் வித்தியாசம்



1967- சைதாப்பேட்டை - 20இ482 வாக்குகள் வித்தியாசம்



1971 - சைதாப்பேட்டை - 12இ511 வாக்குகள் வித்தியாசம்



1977- அண்ணா நகர் - 16438 வாக்குகள் வித்தியாசம்



1980 - அண்ணா நகர் - 699 வாக்குகள் வித்தியாசம்



1989- துறைமுகம் - 31இ991 வாக்குகள் வித்தியாசம்



1991- துறைமுகம் - 890 வாக்குகள் வித்தியாசம்



1996- சேப்பாகம் - 35இ784 வாக்குகள் வித்தியாசம்



2001- சேப்பாக்கம் - 4இ834 வாக்குகள் வித்தியாசம்



2006- சேப்பாக்கம் - 8526 வாக்குகள் வித்தியாசம்



2011- திருவாரூர் - 50இ 249 வாக்குகள் வித்தியாசம்



காரணம் இ அளப்பரிய பேச்சாற்றல்இ அரசியல் உத்திஇ அபார  நினைவாற்றல்இ  அயராத உழைப்புஇ சாணக்கியத்தனம்  ஆகிய அரசியலுக்கு   தேவையான தகுதிகளால் இந்த நூற்றாண்டின் இளைஞர்களுக்கும் சவால் விடும் வகையில் சமூக வலைத்தளங்களிலும் மீண்டும் ஒரு சுற்று  இயங்கி வருகிறார் கருணாநிதி. தற்போதைய நிலையில் சுமார் 5இ24இ085 பேர் முகநூலில் கருணாநிதியை பின்தொடருகின்றனர்.

ஆனாலும்  குடும்ப அரசியலையும் அவரது வாரிசுகளின் போட்டியையும்   அவரால் வெல்ல முடியவில்லை என்பதே உண்மை.

அண்ணாவின் அன்பு தம்பி எனப்பட்ட  கலைஞரோடு இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கிய பேராசிரியர் அன்பழகன் கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த நிலையில்இ தற்போது நடைபெறவிருக்கும் தேர்தலில் தனது பேரனுக்கு வழிவிடும் நிலையில்இ கருணாநிதி தனது 92 வயதிலும் தேர்தல் களத்தில் நிற்கிறார்.

கருணாநிதி தாமாகவே இரு  முறை  தனது பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து தனது உறுப்பினர் பதவியை 1983 ஆம் ஆண்டு ராஜிநாமா செய்தார். அடுத்துராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில் 1991 ஆம் ஆண்டு தேர்தலில் ஒற்றை ஆளாக துறைமுகம் தொகுதியில்  வெற்றி பெற்றார். எனினும் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

முன்பு 1976-ம் ஆண்டு அப்போதைய தி.மு.க. அரசினை ஊழல் காரணம் காட்டி  டிஸ்மிஸ் செய்தது இ இந்திராகாந்தி அரசு. கருணாநிதியின்  மீது ஊழல்கள்  விசாரிக்கப்பட்ட வீராணம் ஊழல்இ பூச்சி மருந்து ஊழல்இ கோதுமை பேர ஊழல் உள்ளிட்ட புகார்கள் குறித்து அந்த சட்டத்தின்படி விசாரணை நடத்த ஆணையிட்டது  சர்க்காரியா ஆணையம் . இந்த சர்க்காரியா கமிஷன்இ கருணாநிதியின் சொந்தஇ பந்தங்கள்இ வியாபாரங்கள்இ பத்திரிகைகள்இ திரையுலகத் தொடர்புகள்இ கட்சிப் பணிகள்இ அரசின் செயல்பாடுகள் என்று அத்தனையையும் அலசி ஆராய்ந்தது .இவை எல்லாவற்றையும் மீறி எழுந்து நின்றவர் கலைஞர்.



விஜய்காந்த்தின் தே.மு.தி.க

தே.மு.தி.க மதுரையில் 2005-ல் தொடங்கப்பட்டது. அப்போதைய அரசியல் சூழ்நிலையில் தி.மு.க.இ அ.திமு.கவுக்கு எதிரான மாற்று சக்தியாக விஜய்காந்த் உருவாகினார். அப்போது அவரது  பேச்சுக்கள்  மக்களால் ரசிக்கப்பட்டன.  அவர் யதார்த்தமாக பேசியதைஇ ' நடிக்காமல் பேசுகிறார்' என்று பாராட்டினார்கள். மீடியாக்கள் அனைத்தும் தே.மு.தி.க.வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தன. 2006 சட்டமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டார். அதில் விஜயகாந்த் மட்டும் விருத்தாசலத்தில் வெற்றி பெற்றார். அதே தேர்தலில் அக்கட்சி வாங்கிய வாக்கு சதவீதம்தான் அ.தி.மு.க தோல்விக்கு காரணமாக அமைந்தது. அனைத்து கட்சிகளும் தே.மு.தி.க.வை மரியாதையாக பார்க்க ஆரம்பித்தனர். ஆனால் பின்னர்  விஜயகாந்தின் ஆதிக்கம் குறைந்து  அவர் மனைவி பிரேமலதாஇ மைத்துனர் சுதீஷின் ஆதிக்கம் தலை தூக்க ஆரம்பித்தது.

பின் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று கணிசமான வாக்குகளை வாங்கியது தேமுதிக. தி.மு.க ஆட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்இ ஈழத்தமிழர் பிரச்னை போன்றவைகளால் அ.தி.மு.க.வுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்த காலம் அது. தி.மு.க.வை முழுமையாக அகற்றும் நோக்கில் ஜெயலலிதாஇ தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைக்க முயன்றா.இ அப்போது கம்யூனிஸ்ட்களே கூட்டணி இணைப்பு வேலைகளை பார்த்துஇ  அவருக்கு  41 சீட்டுகளை வாங்கி கொடுத்தார்கள். மிகக் குறுகிய காலத்தில்இ தி.மு.க.வை பின்னுக்கு தள்ளிவிட்டுஇ 41-ல் 29 சீட்டுகள் வெற்றி பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சித்தலைவர் ஆனார்.

ஆனால் விதி யாரை விட்டது? பொதுஇடங்களில் கட்சியினரை திட்டுவதுஇ அடிப்பதுஇ மேடைகளில் தரக்குறைவாகப் பேசி முகம் சுளிக்க வைப்பது என்று சினிமாத்தனமாக நடக்க  ஆரம்பிக்கஇ சட்டசபைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அத்தோடு மரியாதை  கிட்டாத காரணத்தால் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட எட்டு பேர் அ.தி.மு.க பக்கம் சாய்ந்தார்கள். தி.மு.க போலவே குடும்ப ஆதிக்கம் தே தி முகவுக்குள் தலையெடுக்க ஆரம்பித்தது.

மார்ச் முற்பகுதியில் இ தி முக தலைவர் கருணாநிதி இ ” விஜயகாந்த்தின் தேமுதிகஇ திமுகவோடு கூட்டணி வைக்கும் என்று இன்னும் நம்புகிறீர்களா? “ என்ற கேள்விக்குஇ தந்து நமபிக்கையை “ திமுக-தேமுதிக கூட்டணி பழம் நழுவி பாலில் விழும் நிலையில் உள்ளது. எப்போது விழும் என்பதை கூற முடியாது என்று உறுதியாகத் தெரிவித்தார். தொடர்ந்து தேமுதிக உடைந்தது



''கருணாநிதிஇ ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழக அரசியலில் தனக்கு ஒரு தலைவர்க்கான தகுதி இருப்பதாக விஜயகாந்த் முடிவெடுத்துஇ ''ம.ந. கூட்டணிக்கு சம்மதம்இ'' என சொன்னதும் 'மறுமலர்ச்சி' வைகோ 'முகமலர்ச்சி' அடைந்தார். விஜய காந்தை முதல்வராக மனப்பூர்வமாக ஏற்கத்தயார் என்றார். ம.ந. கூட்டணிக்கு வித்திட்டது பிரேமலதா. விஜய காந்த் முதல்வர் வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ளார்.



திமுகவுக்கு பழம் நழுவி பாலில் விழுவதற்குப் பதிலாக பலாப்பழம் நழுவி தலையில் விழுந்தது போல ஆயிற்று.

காங்கிரசும் பிரிந்துபூனதுஇ பாஜா க அனாயதியாய் நின்றது.



எழுபது?  முப்பது?

கலைஞரின் அனுபவம் எழுபது ஆண்டுகள்இ செல்வியின் அனுபவம் முப்பது ஆண்டுகள்.எழுபதி முப்பது வெல்லுமா என்பதேஎ கேள்வியாகும்

கலைஞரின் அரசியல்  அனுபவம்  குறித்து எந்த சந்தேகமும் இல்லை ஆனால்இ அவரது கட்சி ஆட்சி அரியணையில் ஏறுமா? என்பது  கேள்விக்குறியாக உள்ளது.

காரணம் 2 ஜி ஊழலும் இ குவிக்கப்பட்ட சொத்துக்களும்  .கட்சியையும்  இ தொண்டர்களையும் விட  அவரது மக்கள் பேரப்பிள்ளைகளும் முக்கியம் என்று புத்திர பாசம் கண்ணை மறைத்ததே காரணம்.

மூத்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. மூத்த தலைவர்களில் ஒருவரான  ஆற்காடு வீராசாமி தற்போது நோயால் அவதிப்படுகிறார்.மற்றொருவரான துரைமுருகன்இ தன் துடுக்கான பேச்சால்இ அனைத்தையும் கெடுத்து விடுகிறார். தவிர திறமைசாலிகள் இல்லை அல்லது திறமைசாலிகள் பேணப்படவில்லை என்பது வெளிப்படையான உண்மை.

வாரிசு அரசியலில் ஈடுபட்டு வரும் காலை வாரும் பிள்ளைகள் இ பேரப்பிள்ளைகள். மாறி வரும் மக்கள் மனப்பாங்கு. பழைய தி மு க விசுவாசிகள் அருகி வருவது. ஜெயலலிதாவின் செல்வாக்கு ஓங்கி வருவது.கூட்டணிகள் விலகிய நிலைப்பாடு. வெவ்வெறு  அணிகளாக உருவாகி உள்ள கூட்டணிகள் புதிய சக்தியாக வெளிப்படுவது என் அடுக்கிக் கொண்டே போகலாம். முதுமையின்  கோடுகள்   அரசியல் அரங்கில்  அடுத்த தலைவர் யார் என உருவாக்கியுள்ள  கேள்விக்குறிஇ இப்படி பட்டியல் இடலாம்..



திருவாரூர் முத்து வேல் கருணா நிதி யே தி மு க என்ற  நிலை மாறி கலைஞர்  மட்டுமே இல்லை தி மு க என்ற புதிய சமூகத்தில்  அரசியலில் போட்டி  போட வேண்டிய காலத்தின்  கட்டயாத்தில்  மூத்த தமிழ் அறிஞரும்இ பழுத்த அரசியல் வாதியுமான கலைஞர்  இ நரை இ திரைஇ மூப்பு ஆகியவற்றின் இயற்கைத் தடைளையும் மீறி  தன்னை இன்னும் ஓர் இளைஞனாகவே திடப்படுத்திக் கொண்டு  அரசியலில் மீண்டும் ஒரு முறை வலம் வரும் நம்பிக்கையோடு குதித்திருக்கும் கருணா நிதி வெல்வாரா  எனப்த்ற்கு காலம் பதில் சொல்லும்இ மக்கள் பதில் சொல்வார்கள்.