உலகச் செய்திகள்

பாப்பரசரின் ஆசிர்வாதத்தையடுத்து ஒரு வருடத்தில் புற்றுநோயிலிருந்து பூரண குணமடைந்த சிறுமி 


மேற்கு சிரியாவில் குண்டுத்தாக்குல்களில் 32 பேர் பலி

ஐ.எஸ். தீவிரவாதிகளின் காதல் வலையில் சிக்­கிய இந்­திய விமா­னப்­படை வீரர் கைது

பஞ்சாப் விமானப் படை தளம் மீது தாக்குதல்: 4 தீவிரவாதிகள், 2 விமானப் படை வீரர்கள் பலி
பாப்பரசரின் ஆசிர்வாதத்தையடுத்து ஒரு வருடத்தில் புற்றுநோயிலிருந்து பூரண குணமடைந்த சிறுமி 

28/12/2015 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு வருடத்துக்கு முன்னர் ரோம் நகரில் பாப்பரசரின் ஆசிபெற்ற 12 வயது சிறுமியொருவர் நோயிலிருந்து முழுமை யாக விடுதலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நியூ ஜெர்ஸி மாநிலத்தைச் சேர்ந்த கிரேஸ் என்ற சிறுமியே இவ்வாறு அதிசயிக்கத்தக்க வகையில் புற்றுநோயி ருந்து முழுமையாக குணமடைந்துள்ளார்.
கிரேஸுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச் சையும் அவரது அளவுகடந்த நம்பிக்கையுமே அவருக்கு புற்றுநோயிலிருந்து விடுதலை பெற உதவியதாக தெரிவிக்கப்படு கிறது. நன்றி வீரகேசரி மேற்கு சிரியாவில் குண்டுத்தாக்குல்களில் 32 பேர் பலி

28/12/2015 மேற்கு சிரியாவில் ஹோம்ஸ் நகரத்தில் இன்று இரண்டு குண்டுத்தாக்குல்களில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

ஹோம்ஸ் நகரின் சஃர் பகுதியில் இன்று மதியம் , சிற்றூர்ந்து குண்டு தாக்குதல் மற்றும் தற்கொலை குண்டு தாக்குதலால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்க வில்லை.   நன்றி வீரகேசரி 
ஐ.எஸ். தீவிரவாதிகளின் காதல் வலையில் சிக்­கிய இந்­திய விமா­னப்­படை வீரர் கைது


31/12/2015 இந்­தி­யாவின் அதி­முக்­கி­யத்­துவம் வாய்ந்த இரா­ணுவ இரக­சி­யங்­களை அறிந்­து­கொள்ள இங்­கி­லாந்தில் இருந்து காதல் வலை வீசிய ஐ.எஸ். உள­வாளிப் பெண்ணின் காதல் வலையில் கேரள மாநி­லத்தை சேர்ந்த இந்­திய விமா­னப்­படை வீரர் ஒருவர் விழுந்த அதிர்ச்­சி­கர சம்­ப­வத்தில் சில ருசி­கர தக­வல்கள் வெளியா­கி­யுள்­ளன.
கேரள மாநி­லத்தை சேர்ந்த ரஞ்சித் என்­பவர் இந்­திய விமா­னப்­ப­டையின் தொழில்­நுட்பப் பிரிவில் பணி­யாற்­றி­ய­தோடு, இந்­திய விமா­னப்­படை நிலை­யங்­களில் போர் விமா­னங்­களை பரா­ம­ரித்து, கண்­கா­ணிக்கும் குழுவில் உயர்­பொ­றுப்பு வகித்­து­வந்­துள்ளார். இவ­ருக்கு மூன்­றாண்­டு­க­ளுக்கு முன்னர் பேஸ்புக் மூலம் இங்­கி­லாந்தை சேர்ந்த ஒரு அழ­கிய இளம்பெண் அறி­மு­க­மா­கி­யுள்ளார்.
இங்­கி­லாந்தில் உள்ள பீஸ்டன் பகு­தியில் வசிப்­ப­தா­கவும், புல­னாய்வு பத்­தி­ரி­கையில் பணி­யாற்­றி­வ­ரு­வ­தா­கவும் தன்­னைப்­பற்றி அறி­மு­கப்­ப­டுத்தி கொண்ட அந்­தப்பெண் அடிக்­கடி பேஸ்புக் வாயி­லாக ரஞ்­சித்­துடன் ஆங்­கில மொழி­வா­யி­லாக தொடர்பை ஏற்­ப­டுத்தி அவரை காதல் வலையில் சிக்­க­வைத்­துள்ளார். இதனால் ரஞ்சித் பேஸ்­புக்கே கதி­யென ஆகி­யுள்ளார்.
இதன்­பின்னர் ரஞ்­சித்தின் தொழில் தொடர்­பாக அப்பெண் விசா­ரிக்க தொடங்­கி­யுள்ளார். இதன்­போது போர் பயிற்­சிகள் மற்றும் இந்­திய விமா­னப்­படை விமா­னங்­களின் செயற்­திறன் ஆகி­ய­வற்­றைப்­பற்­றிய முக்­கிய தக­வல்­களை தெரி­வித்த ரஞ்சித் தனது பணி­யைப்­பற்­றிய விப­ரங்கள் அனைத்­தையும் வழங்­கி­ய­தோடு தன்­னு­டைய சில புகைப்­ப­டங்­க­ளையும் வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப் மூலம் பரி­மாற தொடங்­கி­யுள்ளார். பின்னர், இரு­வரும் இணைய அழைப்­பின்­மூலம் பேசிக் கொள்ள தொடங்­கி­யுள்­ளனர்.
இத­னை­ய­டுத்து மெது­வாக, தனது திட்­டத்தின் முதல்­காயை அந்த ஐ.எஸ். தீவி­ர­வாத பெண் நகர்த்­தி­யுள்ளார். அதா­வது இந்­திய விமா­னப்­ப­டையில் என்­னென்ன ரக விமா­னங்கள் உள்­ளன? அவற்றின் செயற்­திறன் என்ன? என்­பது தொடர்­பாக ரஞ்­சித்­திடம் ஒரு பேட்­டியை எடுத்த அவர், அதை தான் தொழில் செய்யும் பத்­தி­ரி­கையில் பிர­சு­ரிக்கப் போவ­தாக தெரி­வித்­துள்ளார்.
அடுத்­த­கட்­ட­மாக, குவா­லியர் நகரில் இயங்­கி­வரும் இந்­திய விமா­னப்­ப­டையின் இர­க­சி­யக்­கூடம் பற்­றிய தக­வல்­களை அளிக்­கு­மாறு அவர் கேட்க, இந்­திய பாது­காப்பு துறையின் மிக­உ­யர்ந்த இர­க­சிய கூட­மான அந்த திட்­டத்தைப் பற்­றிய தக­வல்­களை வெளி­யிட ரஞ்சித் மறுத்­துள்ளார். இதற்­கி­டையே பெல்காம், சென்னை, டில்லி மற்றும் பஞ்­சாப்பில் உள்ள பதின்டா ஆகிய இடங்­களில் மாறி­மாறி தொழில் செய்­து­வந்த ரஞ்­சித்தின் இணை­ய­தள நட­வ­டிக்­கை­களை இரா­ணுவ புல­னாய்வு மற்றும் தேசிய பாது­காப்பு முகாமைத்துவ அதி­கா­ரிகள் தீவி­ர­மாக கண்­கா­ணிக்க தொடங்­கினர்.
குவா­லியர் நகரில் இயங்­கி­வரும் இந்­திய விமா­னப்­ப­டையின் இர­க­சி­யக்­கூடம் பற்­றிய தக­வல்­களை அளிக்க மாட்டேன் என ரஞ்சித் பிடி­வாதம் பிடித்­து­வந்த நிலையில், 'இதற்கு முன்னர் இந்­திய போர் விமா­னங்­களின் தொழில்­நுட்பம் பற்றி பேஸ்­புக்கில் பரி­மா­றிய ரக­சிய தக­வல்கள், அளித்த பேட்­டியின் பதி­வுகள் போன்­ற­வற்றை அம்­ப­லப்­ப­டுத்தி உன்னை காட்டிக் கொடுத்து விடுவேன். மரி­யா­தை­யாக, குவா­லியர் இர­க­சி­யக்­கூடம் பற்­றிய தக­வல்­களை எனக்கு தெரி­வித்தே ஆக­வேண்டும்' என அந்த இளம்பெண் மிரட்டத் தொடங்­கி­யுள்ளார்.
இந்­நி­லையில், ஐ.எஸ். தீவி­ர­வாத இயக்­கத்தின் முக­வ­ராக பணி­யாற்­றி­வந்த அந்த இங்­கி­லாந்து பெண்­ணு­ட­னான ரஞ்சித்தின் மொத்த தொடர்­பு­க­ளுக்­கான ஆதா­ரங்­களை முழு­மை­யாக சேக­ரித்த இரா­ணுவ புல­னாய்வு மற்றும் டில்லி பொலிஸ் அதி­கா­ரிகள் நேற்று முன்­தினம் பஞ்­சாப்பில் உள்ள பதின்டா விமாப்­ப­டைத்­த­ளத்தில் ரஞ்சித்தை கைது செய்துள்ளனர்.   நன்றி வீரகேசரி 
பஞ்சாப் விமானப் படை தளம் மீது தாக்குதல்: 4 தீவிரவாதிகள், 2 விமானப் படை வீரர்கள் பலி

02/01/2016 பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்துக்குள் இராணுவ சீருடையுடன் நுழைந்து தீவிரவாதிகள் இன்று அதிகாலை தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்நிலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இம்மோதலில் 2 விமானப் படை வீரர்களும் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், இமாச்சலபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லையில் உள்ள பதான்கோட் விமானபடை தளத்தில் இன்று அதிகாலை 4 தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் தாக்குதல் மேற்கொண்டனர். 
இதனைத் தொடர்ந்து பதிலடி கொடுத்த விமானப் படையினர் 2 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். 
விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்ட பகுதிக்குள் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா எனவும் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து இராணுவ நிலைகளும் மிகவும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 
இதேவேளை, கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் பஞ்சாப்பின் குருதாஸ்பூரில் இதேபோல் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியிருந்தனர். அதில் மொத்தம் 7 பேர் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி