ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் - 9 - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.
யோகினி இரத்தினசபாபதி 


எனது நாட்டிய நாடகம் “உதயம்” இலங்கை, சென்னை, சிட்னி, என பல நகரங்களிலிலே பல தடைவ மேடை ஏறி பலரின் பாராட்டையும் பெற்றது. இந்த நாட்டிய நாடகம் ஒரு சுதந்திர போராட்டத்தை மையமாக கொண்டது.
ஒரு தடைவ கொழும்பு இராமகிருஷ்ணா மண்டபத்தில் நண்பர் பேராசிரியர் சிவத்தம்பி கேட்டதற்கிணங்க “உதயம்” மேடையேறியது. நாட்டியத்திலே வேடர்கள் மிருகங்களை ஒவ்வொன்றாக கொன்று தீர்த்தவண்ணம் இருந்தமையால் புத்திசாலியான குரங்கு தலைவன் தலைமையில் மிருகங்கள் கூட்டம் கூடுகிறது. மிருகங்கள் ஒன்று சேர்ந்து வேடனை கொல்வதென திட்டம் தீட்டப்படுகிறது.
பாடல்
“நாங்கள் வாழும் இந்தக் காட்டில்
நாடு கடந்தவன் வந்தது போல
வேடன் நம்மை கொல்லலாமா?”



ஏன குரங்கு தலைவன் கேட்க, மிருகங்கள் இல்லை என ஆவேசமாக ஆடுவது பின் திட்டத்தின்படி வேட்டுவதலைவனை ஒழிந்திருந்து தாக்கி, சித்திரவதை செய்து கொன்று தீர்த்தார்கள். வேடன் இறந்தபின் அவனது உடலை சுற்றி “கொண்டாட்டம் ஒரு கொண்டாட்டம்” என பாடி ஆடுவார்கள்.

இசை அமைப்பாளர் சம்சன் சில்வா , கார்த்திகா கணேசர் 

இங்கு வேட்டுவ தலைவனாக நடித்தவர் சிவாஞ்சலி பசுபதி, அன்று சட்டமா அதிபராக இருந்த சிவா பசுபதியின் மகள், குரங்குத் தலைவனோ எழுத்தாளர் செ. கணேஷலிங்கனின் மகள் குந்தவி. இருவரும் திறமையா நடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். இறுதிப் பாடல் “கொண்டாட்டம் ஒரு கொண்டாட்டம் கொடியவனை கொன்றதிலே கொண்டாட்டம்”
மிருகங்கள் வேட்டுவ தலைவனை கொன்றதை மகிழ்சியாக கொண்டாடிய அன்றைய தினம் இராமகிறிஷ்ணா மண்டபத்தில் நிறைந்த கூட்டம் கூடி இருந்தது. இந்த பாடலை பாடி ஆட மண்டபம் நிறைந்த கூட்டம் கரஒலி செய்து ஆரவாரம் செய்து இரசித்தது. கூட்டம் இரசிக்க ஆடிய குந்தலியும் திரும்ப திரும்ப ஆட பாடகர் மாணிக்கவேல் மிக உத்வேகமாக பாடினார். நிகழ்ச்சி நிறைவேறியது.
வனிதா முத்துக்குமாரு 

அத்தனை ஆரவாரமாக மண்டபம் நிறைந்த கூட்டம் கரஒலி எழுப்பியதற்கு காரணம் நாட்டியம் மட்டுமா காரணம் அல்ல அன்று யாழ்ப்பாணத்தில் “மேயர் துரை அப்பா” சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அந்த செய்தியை துண்டுப் பிரசுரமாக ஈழவேந்தன் மண்டபத்தில் மக்களிடம் விநியோகித்திருந்தார். நிகழ்ச்சி முடிவுற்றதும் பேராசிரியர் சிவத்தம்பி என்னிடம் வந் “கார்த்திகா நாம் இருவரும் வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.” என்றார். இந்த உதயம் நாட்டியத்தை நாம் திட்டமிட்டு மேடை ஏற்றியதாக யாரோ காவல் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர். அதனாலேயே எம்மை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். உடனே எனது கணவர் சட்டமா அதிபர் சிவா பசுபதியை தொடர்பு கொண்டு நிலமையை விளக்கினார். திரு சிவா பசுபதி அவர்கள் “எனது அழைப்பு வரும்வரை நீங்கள் வீட்டிற்கு போக வேண்டாம்” என கூறி எம்மை மண்டபத்திலேயே நிற்குமாறு கூறினார்.
பின் சிறிது நேரத்தில் நீங்கள் வீட்டிற்கு போகலாம் என அழைப்பெடுத்து கூறினார். யாரிடம் தொடர்பு கொண்டு என்ன செய்தாரோ எமக்குத் தெரியாது. அவரது மகள் சிவாஞ்சலி எனது மாணவியாக முக்கிய பாத்திரம் ஏற்று ஆடாது வேறு ஒருவர் ஆடியிருந்தால் பேராசிரியர் சிவத்தம்பியதும் எனதும் நிலை என்ன ஆகியிருக்குமோ யார் அறிவார்.

“உதயம்” நாட்டிய நாடகத்தை சென்னையிலும் பளக்கி மேடை ஏற்றினேன். அங்கும் ஒரு அரசியல் பிரச்சனை காத்திருந்தது. அது தேர்தல் காலம். துpராவிட முன்னேற்ற கழகத்தின் சின்னம் உதய சூரியன் எனது நாட்டிய நாடகத்திலே சூரியன் (ஒரு சிறுமி) தாமரை தடாகத்தின் பின் வானிலே படிப்படியாக உதயமாகி மேல் எழ தாமரை மலர்கள்க மௌ;ள மௌ;ள இதழை விரிப்பதே காட்சி. ஆனால் “உதயம்” என பெயர் போட்டு சூரியன் உதயமாவதை காட்சிப்படுத்pனால் திராவிட முன்னேற்ற கழக ஆதரவாக அமைந்து விடலாம் என எண்ணினேன். எனது கணவர் “உதயத்தை” “விடிவெள்ளி” ஆக்கலாம் என்றார். என்ன செய்வது பொருத்தம் இல்லாத போதும் மாற்றம் வேண்டி இருந்தது. மீண்டும் பிரச்சனையில் மாட்ட நாம் விரும்பாததே காரணம்.
“உதயம்” விடிவெள்ளியாக மாறி 2 ஏப்ரல் 1994 இல் MUSIC ACADEMY MADRAS அரங்கிலே மேடை ஏறியது. MUSIC ACADEMY மண்டபத்தை பணம் கொடுத்து பெற்று விட முடியாது. நீங்கள் யார்? இசை உலகுக்கு அறிமுகமானவரா என்பதெல்லாம் அவாகளுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதாவது சாமானியர் அவர்களை அணுகி விடமுடியாது.
சிவாஞ்சலி பசுபதி 


எனது நாட்டியத்தை மேடை ஏற்ற வேண்டும் எனும் போது எமது தமிழக வாழ்விலே என்றும் உற்ற துணையாக இருந்தவர்கள் இசை அரசி D. K. பட்டம்மாள் குடும்பத்தவர்.  D. K. பட்டம்மாளின் மகனும் பாடகி நித்தியஸ்ரீயின் தந்தையுமாக திரு சிவகுமார் “அப்பாவை கேளுங்கள் அவரால் உங்களுக்கு MUSIC ACADEMY மண்டபத்தை பெற்று தரமுடியும் என்றார்.”  அவ்வாறே நாம் திரு ஈஸ்வரனை அணுக அவர் MUSIC ACADEMY மண்டபத்தை பெற்றுத் தந்தார். இத்தகைய பெரியவர்களின் நட்பும் உதவியும் இருந்தமையாலேயே இலங்கையை பிறப்பிடமாக கொண்ட கார்த்திகா கணேசரின் நிகழ்ச்சி மிகப் பிரபல்யமான MUSIC ACADEMY MADRAS   மண்டபத்தில் மேடை ஏற முடிந்தது.
நான் சென்னையில் இந்திய மத்திய அரசின் பாடசாலையான Centerall School இல் வகுப்பு நடத்தினேன். பல வருடங்களாக வருட இறுதி விழாவிலே சிறந்த நாட்டிய நாடகங்களை தயாரித்து வளங்கி பாடசாலையில் பலரின் மதிப்பையும் அன்பையும் பெற்றவள் நான். அந்த பாடசாலை மாணவியரே பெரும்பான்மையாக நிகழ்ச்சியிலே பங்கு பற்றினர். ஆதனால் பாடசாலை அதிபர் எனது நிகழ்ச்சியிலன்று பாடசாலைக்கு அரைநாள் விடுமுறை கொடுத்து பாடசாலை மாணவரை “விடிவெள்ளி” நாடகத்தை போய் பார்க்குமாறும் ஊக்குவித்தார். இவையாவும் எனது கலைக்கு கிடைத்த அங்கீகாரமாக இன்று நினைத்து மகிழ்கிறேன்.
இந்தியர்கள் இலங்கையரின் ஆக்கங்களை அங்கீகரிப்பதில்லை என்ற எண்ணம் எம்மவர்களிடையே நிலவுகிறது. ஆனால் இலங்கை தமிழரான நான் சென்னையிலே இவற்றையெல்லாம் சாதிக்க முடிந்தது. எனது அன்றைய நிகழ்ச்சிக்கு பிரபல நடிகர் சிவகுமாரே பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அது மட்டுமல்ல எனது நூல்களான “காலம் தோறும் நாட்டியக் கலை” தமிழக அரசின் பரிசையும் “இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு” தஞ்சை பல்கலைகழகத்தின் பரிசையும் பெற்றது. ஒரு கலைஞன் தான் கொண்ட துறையில் முற்ற முழுதாக ஆர்வத்துடன் ஈடுபடும் போது, அங்கீகாரமும், ஆதரவும் தானாகவே வருமா?
கலைஞன் கலையிலே மூழ்கி தனது ஆக்கங்களை படைக்கிறான் அதை இரசிக்கும் சமூகம் அவனுக்கு ஆதரவு நல்கிறது.