மலரும் முகம் பார்க்கும் காலம் 25 - தொடர் கவிதை

.
கவிதையை எழுதியவர் மீரா குகன் ஜேர்மனி

கண் முன்னே துயர்துடைத்து மீளும்
கருத்தை கருவிலே செதுக்கி வந்தாலும் 
காத்திருந்த கணநேரத்தில் காவு கொண்ட
களத்தில் பல இன்னுயிர் பலி கொடுத்தும் 

கொண்ட கொள்கையை இன்று 
கொண்டாட நேரமின்றி காற்றில் பறக்க 
கோணல் வழிப் பாதையில்
கொக்கரிக்கும் வீண் மானிடமே 

சொந்தங்கள் தனை விலக்கி
சோதனைகள் எனும் மாயையில்
சோகம் எனும் திரைமறைவில்
சோபிக்கவும் மறந்த நிலையில் 

சுயநல போர்வையில் சுற்றத்தை மறந்து
சுயம் தனை வாழ்வோட்டத்தில் இழந்து 
சுகங்கள் ஒன்றே இன்று குறியாக
சுதந்திரத்தை நாமே பறிகொடுத்த பின்னும்  

மாயை அகலும் இறுதி நேரம் வந்தாலும்
மலரும் முகம் பார்க்கும் காலம்
மகத்துவம் அறிந்த அந்த ஒரு கணம்
மாந்தவர் மாயிந்தும் வாழ்வர் என்றென்றும்