உலகச் செய்திகள்


எயார் ஏசியா விமா­னத்­துக்­கு­ரி­யவை என நம்­பப்­படும் 5 சிதை­வுகள் கண்­டு­பி­டிப்பு ; புதி­தாக 4 சட­லங்கள் மீட்பு

எயார் ஏசியா விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு?

பிரான்ஸில் பத்திரிகை நிறுவனத்தின்மீது துப்பாக்கிச்சூடு

எயார் ஏசியா விமா­னத்­துக்­கு­ரி­யவை என நம்­பப்­படும் 5 சிதை­வுகள் கண்­டு­பி­டிப்பு ; புதி­தாக 4 சட­லங்கள் மீட்பு

05/01/2015   விபத்­துக்­குள்­ளாகி ஜாவா கடலில் விழுந்த எயார் ஏசியா விமா­னத்தின் சிதைந்த பகு­தி­க­ளி­லி­ருந்து எஞ்­சிய சட­லங்­களை விரைவில் மீட்க முடியும் என நம்­பு­வ­தாக மீட்பு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ள இந்­தோ­னே­சிய அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.
சமுத்­தி­ரத்தின் அடித்­த­ளத்தில் அந்த விமா­னத்­து­டை­யவை என நம்­பப்­படும் 5 பாரிய சிதை­வுகள் ஆளற்ற தன்­னி­யக்க நீர்­மூழ்கி உப­க­ர­ண­மொன்றின் மூலம் கண்­ட­றி­யப்­பட்­ட­தை­ய­டுத்தே அதி­கா­ரிகள் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளனர்.
சீரற்ற கால­நிலையால் பார்­வைப்­புலன் தெளி­வற்ற நிலை காணப்­ப­டு­வது மற்றும் கடல் கொந்­த­ளிப்பு என்பன கார­ண­மாக விமா­னத்தின் சிதை­வு­களை மீட்கும் பணி தாம­த­மா­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.
அந்த விமா­னத்தில் பய­ணித்து உயி­ரி­ழந்­த­வர்­க­ளது சட­லங்­களை தேடும் நட­வ­டிக்­கையில் ஞாயிற்­றுக்­கி­ழமை ஈடு­பட்ட மீட்புக் குழு­வினர் நான்கு சட­லங்­களை மீட்­டுள்­ளனர்.
மேற்­படி சட­லங்­களில் 3 சட­லங்கள் அமெ­ரிக்கப் பிர­ஜை­க­ளு­டை­ய­வையாகும். நான்­கா­வது சடலம் சிங்­கப்பூர் பிர­ஜைக்­கு­ரி­ய­தாகும். இதன் மூலம் மீட்­கப்­பட்ட சட­லங்­களின் எண்­ணிக்கை 34 ஆக உயர்ந்­துள்­ளது.


எயார் ஏசியா விமானம் ஒரு வாரத்­திற்கு முன் இந்­தோ­னே­சிய சுர­பயா நக­ரி­லி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு 162 பேருடன் பய­ணித்த வேளை விபத்­துக்­குள்­ளாகி காணா­மல்­போ­யி­ருந்­தது.
8 ஆவது நாளாக ஞாயிற்­றுக்­கி­ழமை மேற்­கொள்­ளப்­பட்ட தேடுதல் நட­வ­டிக்­கையின் போது எயார் ஏசியா விமா­னத்தின் சிதைவு என நம்­பப்­படும் 9.8 மீற்றர் நீளமும் 1.1 மீற்றர் அக­லமும் 0.4 மீற்றர் உய­ர­மு­மு­டைய ஐந்­தா­வது பொருள் நீர்­மூழ்கி உப­க­ர­ணத்தின் மூலம் அவ­தா­னிக்­கப்­பட்­டது.
கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள சிதை­வு­களில் கடலில் 30 மீற்றர் ஆழத்தில் காணப்பட்ட பெரிய சிதை­வான 18 மீற்றர் நீளமும் 5.4 மீற்றர் அக­ல­மு­மு­டைய சிதைவு விமா­னத்தின் முக்­கிய உடல் பாக­மாக தோன்­று­வ­தாக தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகவர் நிலையமான பஸர்னஸின் தலைவர் ஹென்றி பம்பாங் ஸொலிஸ்ரியோ தெரிவித்தார்.இந்தத் தேடுதல் நடவடிக்கையில் சுமார் 30 கப்பல்களும் 6 விமானங்களும் 14 உலங்கு வானூர்திகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நன்றி வீரகேசரி 

எயார் ஏசியா விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு?

07/01/2015 விபத்­துக்­குள்­ளான எயார் ஏசியா கியூ.இஸட்.8501 விமா­னத்தை ஜாவா கடலில் தேடும் நட­வ­டிக்கை விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக இந்­தோ­னே­சிய அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

இந்­தோ­னே­சிய சுர­பயா நக­ரி­லி­ருந்து கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி 162 பேருடன் பய­ணித்த விமா­னமே விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.
அந்த விமா­னத்தின் கறுப்புப் பெட்­டியை உள்­ள­டக்­கி­யுள்ள அதன் வால் பகு­தியை கண்­டு­பி­டித்­துள்­ள­தாக நம்­பு­வ­தாக மீட்பு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ள அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.
இந்­தோ­னே­சிய கடற்­படை கப்­ப­லொன்றால் அந்த விமா­னத்தின் வால் பகுதி என நம்­பப்­படும் பகுதி கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில் மேற்­படி விமான கறுப்­புப்­பெட்­டியை கண்­டு­பி­டித்து மீட்கும் முகமாக நீர்மூழ்கிவீரர்கள் ஜாவா கடலின் அடித்தளத்திற்கு செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி 
பிரான்ஸில் பத்திரிகை நிறுவனத்தின்மீது துப்பாக்கிச்சூடு

07/01/2015 பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள சார்ளி ஹெப்டோ என்ற வாராந்த பத்திரிகை நிறுவனத்தின் மீது ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆறுபேர் காயமடைந்துள்ளனர்.

பத்திரிகை நிறுவனத்துக்குள் திடீரென நுழைந்த ஆயுததாரிகள் பாதுகாப்புத் தரப்பினர் மீதும் ஊழியர்கள் மீதும் துப்பாகிக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக பாரிஸ் நகரின் பிரதி முதல்வர் புருனோ ஜுலியர்ட் தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி 


No comments: