இலங்கைச் செய்திகள்

.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றார்

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்

மஹிந்த தரப்பிலிருந்த 20 உறுப்பினர்கள் மைத்திரியுடன்? கருணாவும் மைத்திரி பக்கம்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1185 முறைப்பாடுகள்

வடக்கில் இதுவரை 21 முறைப்பாடுகள் பதிவு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1498 முறைப்பாடுகள் : கபே

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1185 முறைப்பாடுகள்



ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றார்


09/01/2015 இலங்கையின் 6 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர்  உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வு  கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி 

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்

09/01/2015 இலங்கையின் பிரதமரமராக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நன்றி வீரகேசரி 



மஹிந்த தரப்பிலிருந்த 20 உறுப்பினர்கள் மைத்திரியுடன்? கருணாவும் மைத்திரி பக்கம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரொஜினோல்ட் குரே, சரத் அமுனுகம, பியசேன கமகே, அததாவுட செனவிரட்ன, ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட பதினைந்து பேர் புதிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.
முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.


தற்போது புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் விசேட சந்திப்பொன்று நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரியின் வீட்டில்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 20 முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளனர்.
ஜனக்க பண்டார தென்னகோன், பியசேன கமகே, சரத் அமனுகம, ரொஜினோல்ட் குரே, அதாவுத செனவிரட்ன ஆகிய முன்னாள் அமைச்சர்களும் அதில் அடங்குகின்றனர்.
மேலும் ஜகத் புஷ்பகுமார, பீலிக்ஸ் பெரேரா, எஸ்.பி. நாவின்ன, விஜித் முனி சொய்சா, விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா)ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
முக்கியமான வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் அங்கு சென்றுள்ளனர்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx 


05/01/2015 ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 1185 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் 142 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 1043 முறைப்பாடுகள் கிடைக்கப்பபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 

வடக்கில் இதுவரை 21 முறைப்பாடுகள் பதிவு


06/01/2015 இலங்கையில் 7ஆவது ஜனாதிபதித் தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில்; யாழ்ப்பாணத்தில் 8 முறைப்பாடுகளும் வன்னிப்பகுதியில் 13 முறைப்பாடுகளுமாக வடக்கில் இன்று  காலைவரை 21 முறைப்பாடுகள் பதிவதாகியுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.


கபே அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்.நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பின் போதே கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் மகின் இதனைத் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் இதுவரையில் 21 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 8 முறைப்பாடுகள் யாழ்.மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 13 முறைப்பாடுகள் வன்னிப் பகுதியில் பதிவாகியுள்ளன.
மேலும் நாடளாவிய ரீதியில் பதிவுசெய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளுடன் ஒப்பிடும் போது வடக்கில் ஒரு வீதமான முறைப்பாடுகளே பதிவாகியுள்ளன என்றார். 

அத்துடன் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை தாம் எதிர்பார்ப்பதாகவும், அதற்காக மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் எனவும் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1498 முறைப்பாடுகள் : கபே


07/01/2015 ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இன்று காலை வரை  1498 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் 193 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், 1298  முறைப்பாடுகள் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளதாக கபே அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.  நன்றி வீரகேசரி 

























No comments: