உலகச் செய்திகள்


'உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன்': சிறுவனின் சடலத்தை எடுத்த பொலிஸ் அதிகாரி

சிரி­யா­வி­லுள்ள பிர­தான எண்ணெய் வயலின் பகு­தி­களைக் கைப்­பற்­றிய ஐ.எஸ். தீவி­ர­வா­திகள்

குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு உத­வு­வ­தற்கு 6 பில்­லியன் யூரோ நிதி ஒதுக்­கீடு

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தில் பாரிய தீ விபத்து: 14 பேர் காயம்

ஜப்பானில் கடும் மழை : 90 ஆயிரம் பேர் பாதிப்பு

மக்கா பள்ளிவாசலில் பாரந்தூக்கி சரிந்து வீழ்ந்ததில் 107 பேர் மரணம்! 230 பேர் காயம்

'உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன்': சிறுவனின் சடலத்தை எடுத்த பொலிஸ் அதிகாரி

07/09/2015 “சிறுவனை பார்த்த போது உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன். ஆனால் உயிரிழந்து காணப்பட்டான்' என்று துருக்கி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சிறுவனின் சடலத்தை எடுத்த துருக்கி பொலிஸ் அதிகாரி மெக்மெட் சிப்லாட் தெரிவித்துள்ளார்.
சிரியாவின் இடம்பெறும் உள்நாட்டுப் போர் காரணமாக அந்நாட்டு மக்கள்  துருக்கி வழியாக அண்டை நாடான ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.
ஆனால் தனது நாடுகளில் அகதிகள் குடியேறுவதை ஐரோப்பிய நாடுகள் வண்மையாக எதிர்த்து வந்தன.

இந்நிலையில் துருக்கி கடற்கரையில் கடலில் உயிரிழந்து கிடந்த சிறுவனின் புகைப்படம், உலகையே சோகத்தில் உலுக்கி விட்டது. இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் தொடர்பான நிலைப்பாட்டிலும் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
துருக்கியில் கடலில் பலியாகிக்கிடந்த குழந்தை அய்லான் சடலத்தை எடுத்த பொலிஸ் அதிகாரி மெக்மெட் சிப்லாட் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், 
 “என்னுடைய சொந்த மகன் என்றே நினைத்தேன்,”என்று கூறிஉள்ளார். மெக்மெட் சிப்லாட் பேசுகையில், “

சிறுவனை பார்த்ததும் அவன் உயிருடன் இருக்கவேண்டும் என்றே கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். சிறுவன் உயிருடன் இருப்பான் என்றே நம்பினேன். ஆனால் சிறுவன் சடலமாக கிடந்தான். நான் அழுதுவிட்டேன். எனக்கும் 6 வயதில் மகன் உள்ளான். சிறுவனை பார்த்ததும் என்னுடைய மகனை போன்றே நினைத்தேன். என்னுடைய துன்பத்தை கூறுவதற்கு வார்த்தையே கிடையாது. மிகவும் சோகமாக இருந்தது என்றார்.
மேலும் சிறுவனின் உடலை தூக்கி எடுத்த போது எனக்கு புகைப்படம் எடுக்கப்படுகின்றது என்பதை அறிந்திருக்கவில்லை. நான் என்னுடைய பணியைதான்  செய்தேன் என்றும் மெக்மெட் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 
சிரி­யா­வி­லுள்ள பிர­தான எண்ணெய் வயலின் பகு­தி­களைக் கைப்­பற்­றிய ஐ.எஸ். தீவி­ர­வா­திகள்

08/09/2015 ஐ.எஸ் தீவி­ர­வா­திகள் சிரி­யாவில் அர­சாங்கக் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த இறுதிப் பிர­தான எண்ணெய் வயலின் பகு­தியை கைப்­பற்­றி­யுள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலையம் திங்­கட்­கி­ழமை தெரி­வித்­தது.
ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் ஜஸால் எண்ணெய் வயலின் பகு­தி­களைக் கைப்­பற்­றி­யுள்­ள­தா­கவும் அந்த எண்ணெய் வயலின் ஏனைய பகு­தி­களை தீவி­ர­வா­திகள் கைப்­பற்­று­வதை அர­சாங்கப் படை­யினர் தடுத்­துள்­ள­தா­கவும் அந்த நிலையம் குறிப்­பிட்­டுள்­ ளது.

தீவி­ர­வா­திகள் முன்­னேறி வரு­வதால் ஹொம்ஸ் மாகா­ணத்­தி­லுள்ள மேற்­படி எண்ணெய் வய­லி­லான எண்ணெய் உற்­பத்தி நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலை­யத்தின் தலைவர் ரமி அப்டெல் ரஹ்மான் தெரி­வித்தார்.
இதற்கு முன் ஜஸால் எண்ணெய் வயலில் தின­சரி சுமார் 2,500 பீப்பா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.   நன்றி வீரகேசரி 


குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு உத­வு­வ­தற்கு 6 பில்­லியன் யூரோ நிதி ஒதுக்­கீடு

08/09/2015 ஜேர்­ம­னிக்குள் பிர­வே­சிக்கும் பெருந்­தொ­கை­யான குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு உத வும் முக­மாக 6 பில்­லியன் யூரோ நிதியைச் செல­விட அந்­நாட்டு கூட்­ட­மைப்பு அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்­துள்­ளது.
ஜேர்­ம­னிய அதிபர் அஞ்­ஜெலா மெர் கெல் குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு நாட்டின் எல்­லை­களைத் திறந்து வைத்­ததன் மூலம் அபா­ய­க­ர­மான சூழ்­நி­லை­யொன்றை .உரு­வாக்­கி­யுள்­ள­தாக அவ­ரது எதிர்ப்­பா­ளர்கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.
புக­லிடம் தொடர்­பான விதி­களைத் தளர்த்­து­வ­தற்கு ஆஸ்­தி­ரியா மற்றும் ஹங்­கே­ரி­யுடன் செய்து கொண்ட உடன்­ப­டிக்­கை­யொன்­றை­ய­டுத்து வார இறு­தியில் சுமார் 18,000 குடி­யேற்­ற­வா­சிகள் ஜேர்­ம­னிக்குள் பிர­வே­சித்­துள்­ளனர்.
இந்­நி­லையில் இவ்வாறு அவ­ச­ர­கால நிலை­மையின் கீழ் புக­லிட விதிகள் தளர்த்­தப்­பட்­டுள்­ளதை முடி­வுக்குக் கொண்டு வர வேண்­டி­யுள்­ள­தாக ஆஸ்­தி­ரிய அதிபர் வெர்னர் பேமான் தெரி­வித்தார்.
குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்­பான நிலைமை படிப்­ப­டி­யாக வழ­மைக்குக் கொண்டு வரப்­படும் என அவர் கூறினார்.
ஜேர்­ம­னிய அதிபர் அஞ்­ஜெலா மெர் கெல் மற்றும் ஹங்­கே­ரிய பிர­தமர் விக்டர் ஒர்பான் ஆகி­யோ­ருடன் தொலை­பே­சியில் உரை­யா­டி­ய­தை­ய­டுத்தே அவர் இவ்­வாறு கூறினார்.
ஹங்­கேரி இதற்கு முன் குடி­யேற்­ற­வா­சிகள் மேற்கு ஐரோப்­பா­வுக்குள் பிர­வே­சிப்­ப­தற்கு தடை விதித்­தி­ருந்­தது ஆனால் கடந்த வெள்­ளிக்­கி­ழமை மேற்­படி கட்­டுப்­பா­டு­களை அந்­நாடு கைவிட்­டி­ருந்­தது.

அதே­ச­மயம் சேர்­பி­யா­வு­ட­னான ஹங்­கே­ரிய எல்­லையில் தடுப்பு வேலி­யொன்றை நிர்­மா­ணிக்கும் பணி தொடர்ந்து வரு­கி­றது.
ஜேர்­ம­னிய அதிபர் அஞ்­ஜெலா மெர்­கெலின் கூட்­ட­மைப்பைச் சேர்ந்த இரு கட்­சிகள் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­ய­தை­ய­டுத்து மேல­திக நிதி தொடர்­பான அறி­விப்பு இடம்­பெற்­றுள் ­ளது.
இந்­நி­லையில் ஜேர்­ம­னிய அர­சாங்கம் குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்பில் மாநி­லங்­க­ளுக்கும் உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கும் 3 பில்­லியன் யூரோ­வையும் நிகழ்ச்சித் திட்­டங்கள் மற்றும் உதவிக் கொடுப்­ப­ன­வு­க­ளுக்­காக மேலும் 3 பில்­லியன் யூரோவை வழங்­கவும் இணக்கம் தெரி­வித்­துள்­ளது.
ஜேர்­மனி இந்த வரு­டத்தில் 800,000 அக­தி­க­ளையும் குடி ­யேற்­ற­வா­சி­க­ளையும் ஏற்க எதிர்­பார்த்­துள் ­ளது.
இந்­நி­லையில் ஜேர்­ம­னிக்குள் தற்­போது புதி­தாக விஜயம் செய்­துள்ள குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு அந்­நாட்டு மக்­களால் மகி­ழ்ச்­சி­யுடன் வர­வேற்பு அளிக்­கப்­பட்­டுள்­ளது.
எனினும் புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்கள் தங்­க­வைக்­கப்­பட்­டி­ருந்த இரு நிலை­யங்­க­ளுக்கு எதிர்ப்­பா­ளர்­களால் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு தீ வைப்­புகள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின் ­றன.

தென் மேற்கு மாநி­ல­மான படென் வுயர்­டெம்­பேர்க்கில் ரொட்­டென்பேர்க் எனும் இடத்­தி­லுள்ள புகலி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான நிலை­யத்தில் ஏற்­பட்ட தீயில் ஐவர் காய­ம­டைந்­துள்­ளனர்.
அதே­ச­மயம் மத்­திய மாநி­ல­மான துறிங்­கி­யாவில் எபெலெபென் எனும் இடத்தி லுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான நிலையத்தில் இரண்டாவது தீ வைப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது அரசியல் நோக்குடைய தீவைப்பு சம்பவம் என பொலிஸார் நம்புகின்றனர்.

மேற்படி இரு மாநிலங்களிலும் அண் மைய வாரங்களில் புகலிடக்கோரிக்கையா ளர்களது தங்குமிடங்களை இலக்கு வைத்து பல தீவைப்புகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தில் பாரிய தீ விபத்து: 14 பேர் காயம்

09/09/2015 அமெரிக்காவின் லாஸ் வேகாசில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு செல்லவிருந்த பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தில், திடீரென பாரிய தீ விபத்து ஏற்பட்டதால் 14 பேர் காயமடைந்ததோடு பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.லண்டன் நகரில் இருந்து 159 பயணிகள் மற்றும் 13 ஊழியர்களுடன் செல்லவிருந்த பிரிட்டிஷ் எயார்வேஸ் போயிங் 777  விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விமானத்தில் இருந்தவர்கள் பயந்து கூச்சலிட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ள போதும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
 விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 


விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து சுமார் 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.


பயணிகள் அனைவரும் உடனடியாக அவசர வழியாக கவனமாக வெளியேற்றப்பட்டனர்.  
லாஸ் வேகாஸ் விமான நிலையத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக எங்களுக்கு தகவல் தெரியும், எங்களுடைய குழுவானது இதுதொடர்பாக மேலும் தகவல்களை பெற்று வருகிறது. விமானம் தீ விபத்தில் சிக்குவதற்கான காரணம் தெரியவரவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. என விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நன்றி வீரகேசரி ஜப்பானில் கடும் மழை : 90 ஆயிரம் பேர் பாதிப்பு

10/09/2015 ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் கடும் வெள்ளத்தின் காரணமாக 90 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெள்ளத்தின் காரணமாக, வீடுகளின் மேல் நின்றவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானின் கிழக்குப் பகுதியில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, மேலும் ஆயிரக்கணக்கானவர்களை தங்களது வீடுகளை விட்டு வெளியேறும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஃபுகுஷிமா உட்பட ஜப்பானின் கிழக்கு, வட கிழக்குப் பகுதிகளின் பெரும்பாலானவற்றில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த மாதம் ஜப்பானின் தென்கோடியில் இருக்கும் கையுஷு தீவை கோணி புயல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 70 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரிமக்கா பள்ளிவாசலில் பாரந்தூக்கி சரிந்து வீழ்ந்ததில் 107 பேர் மரணம்! 230 பேர் காயம்

13/09/2015 சவூதி அரே­பி­யாவின் மக்­கா வில் உள்ள அல் ஹரம் பள்­ளி­வா­சலில் பாரந்­தூக்கி (கிரேன்) ஒன்று சரிந்து வீழ்ந்­ததில் 107 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.
உயி­ரி­ழப்பின் எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கலாம் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பலத்த காற்­றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் மஸ்­ஜிதுல் ஹரமின் மசாஆ பகுதி கூரை திருத்தப் பணி­களில் ஈடு­பட்­டி­ருந்த பாரம் தூக்கி ஒன்றே சரிந்து வீழ்ந்­துள்­ளது.

இம்­மாதப் பிற்­ப­கு­தியில் ஹஜ் யாத்­திரை தொடங்­க­வி­ருக்கும் நிலையில் இந்த விபத்து நடந்­துள்­ளமை மக்கள் மத்­தியில் பெரும் பீதியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.இவ் விபத் தில் 230 க்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.ஜோதிட கணிப்­பின்­படி சில நாட்­களை, திக­தி­களை அதிர வைக்கும், உல­கத்தை உலுக்கும் சம்­ப­வங்கள், நிகழ்­வுகள் ஏற்­படும் என்று கணிப்­பர்கள் தெரி­வித்­தி­ருந்­தனர். இந்­நி­லையில், இந்தச் சம்­பவம் உலகை உலுக்­கி­யுள்­ளது.கடந்த 2001ஆம் ஆண்டு செப்­டெம்பர் 11ஆம் திகதி இதே நாளில் தான் உலக வல்­ல­ர­சான அமெ­ரிக்­காவை ஆட்டம் காண வைத்­தது. அதா­வது, ஒஸாமா பின்­லேடன் தலை­மை­யி­லான அல்­கைதா இயக்­கத்­தினர் அமெ­ரிக்­காவின் இரட்டைக் கோபு­ரத்தின் மீது தாக்­குதல் நடத்­தினர்.இதில், மூவா­யி­ரத்­திற்கும் அதி­க­மான மக்கள் உயி­ரி­ழந்­தனர்.இந்த நாளை இன்று வரை அமெ­ரிக்கா துக்க நாளாக அனுஷ்­டித்­து­வ­ரு­கின்­றது. அதே­போன்று 2012 ஆம் ஆண்டு செப்­டெம்பர் 11 இல் பாகிஸ்­தானில் இரு அரச அலு­வ­ல­கங்கள் மீது ஏற்­பட்ட திடீர் தீ விபத்தில் 315 மக்கள் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தனர்.

இந்­நி­லையில், நேற்று முன்­தினம் சவூதி அரே­பி­யாவில் இன்­னொரு சோகச் சம்­பவம் நேர்ந்­துள்­ளது. இந்தச் சோகச் சம்­பவம் இப்­பொ­ழுது உலகம் முழு­வதும் பேசப்­படும் முக்­கிய செய்­தி­யாக மாறி­யுள்­ளது.பள்­ளி­வாசல் விரி­வாக்கம் மக்­காவில் புனித யாத்­தி­ரி­கர்கள் கூட்ட நெரிசல் ஏற்­பட்டு கடந்த 2006 ஆம் ஆண்டு பெரும் விபத்து ஏற்­பட்­டது. இதில் 300 பேர் வரை­யி­லானோர் உயி­ரி­ழந்­தனர். அத்­துடன் 2004 ஆம் ஆண்டு நடை­பெற்ற நெருக்­க­டியில் 200 பேர் வரையில் உயி­ரி­ழந்­துள்­ளனர்.இத­னை­ய­டுத்து மெக்­காவில் ஆண்­டு­தோறும் அனு­ம­திக்­கப்­படும் புனித யாத்­தி­ரி­கர்­களின் எண்­ணிக்­கையை சவூதி அரசு கண்­கா­ணிக்கத் தொடங்­கி­யது.

நன்றி வீரகேசரி

No comments: