.
சத்தியங்களால் அவர்கள்
எம்மைச் சமரசம் செய்தது
ஆறு கோடைகளுக்கு முன்னதான
ஆவணி மாதமொன்றின்
இளவெயில் பொழுதினில்தான்
எம்மைச் சமரசம் செய்தது
ஆறு கோடைகளுக்கு முன்னதான
ஆவணி மாதமொன்றின்
இளவெயில் பொழுதினில்தான்
வெந்து கிடந்த எங்கள் ரணங்களை
அவர்கள் முன் விரித்து வைத்தோம்
வசிய வார்த்தைகளால்
வருடிக் கொடுத்தார்கள்
அவர்கள் முன் விரித்து வைத்தோம்
வசிய வார்த்தைகளால்
வருடிக் கொடுத்தார்கள்
எங்கள் வாழ்வுக்கும் வயிற்றுக்குமாய்
தங்கள் ஊண் உறக்கம் துறப்பதாக
மீண்டும்
சத்தியங்களால் அவர்கள்
எம்மைச் சம்மதிக்கச் செய்தார்கள்
தங்கள் ஊண் உறக்கம் துறப்பதாக
மீண்டும்
சத்தியங்களால் அவர்கள்
எம்மைச் சம்மதிக்கச் செய்தார்கள்
எல்லோரும் ஒரு முறை கரகோசித்தோம்
நண்பன் தேநீர் பகிர
எங்கள் விடியலை நினைத்து
சுவைத்தோம்
அவர்களுக்காகப் பிரார்த்தித்து
வழியனுப்பி வைத்தோம்
அவர்களின் பெயரில்
வாக்குகளை இறைத்தோம்
•
நண்பன் தேநீர் பகிர
எங்கள் விடியலை நினைத்து
சுவைத்தோம்
அவர்களுக்காகப் பிரார்த்தித்து
வழியனுப்பி வைத்தோம்
அவர்களின் பெயரில்
வாக்குகளை இறைத்தோம்
•
இன்றைய இரவும் என்றும் போலவே
கஞ்சிதான் உணவு
நேற்று வாப்பா
குண்டடிபட்டு மௌத்தாகிப் போனதாய்
கய்யாம் அழுதான்!
தூக்கம் மறந்த நடு நிசிப்பொழுதில்
அவர்களை நினைத்தோம்
வெள்ளிகளை எண்ணினோம்
அழுதோம்!
•
கஞ்சிதான் உணவு
நேற்று வாப்பா
குண்டடிபட்டு மௌத்தாகிப் போனதாய்
கய்யாம் அழுதான்!
தூக்கம் மறந்த நடு நிசிப்பொழுதில்
அவர்களை நினைத்தோம்
வெள்ளிகளை எண்ணினோம்
அழுதோம்!
•
ஆறு கோடைகள் கடந்துபோன
மெல்லிய மழை மாத
ஒரு புரட்டாதித் திங்களில்
மீண்டும் அவர்கள்
எங்களுர் வந்தார்கள்
மெல்லிய மழை மாத
ஒரு புரட்டாதித் திங்களில்
மீண்டும் அவர்கள்
எங்களுர் வந்தார்கள்
திரும்பிப் பார்த்த போது
ஆறு கடல் குளங்களெல்லாம்
தூர்ந்து போய் காய்ந்து கிடந்தன
ஆறு கடல் குளங்களெல்லாம்
தூர்ந்து போய் காய்ந்து கிடந்தன
கய்யாம் சொன்னான்
இதயத்தை தொலைத்தவர்களின்
சத்தியத்தை
இனி
நம்பக் கூடாது என்று!
இதயத்தை தொலைத்தவர்களின்
சத்தியத்தை
இனி
நம்பக் கூடாது என்று!
(தடைசெய்யப்பட்ட கவிதை தொகுதியிலிருந்து…)
No comments:
Post a Comment