மலரும் முகம் பார்க்கும் காலம் 12 - தொடர் கவிதை


Click for Options

.

அகங்காரம் அழித்து யாம் எனவே வாழியவே பகைமொழியால்
அகஞ்சூழும் புகையனைத்து எழில் கொண்டு வாழியவே !
அரிச்சுவடி அரவணைத்து தமிழக்குயிலென்று வாழியவே !
அந்தமது இல்லையென்னும் மமதையுடன் வாழியவே !

செருக்கேறும் செழுமைபெற்ற பொற்குயிலே உந்தன்
மலரும் முகம் பார்க்கும் காலமெது உரைத்திடவா ?
ஊனமாய் ஊமைகளாய் உருக்குலைந்த உன் தளிர்கள்
உரக்க அழைத்திடும் காலமே அதுவல்லவா !

குனிந்து குனிந்து கேள்விக்குறியாய் கூன்விழுந்த முதுகுகளே !
பணிந்து பணிந்து படிக்கட்டாய்ப் போன பதிவுகளே !
கல்தோன்றி மண்தோன்றிய காலத்தின் பின்தோன்றிய
மொழிகட்கு அடிபணிதல்தான் முறையோ?

ஏன் அன்னையைப் பெற்றெடுத்த அன்னைக்கும் அன்னையாம்
ஏன் தமிழ்க் கிழவியவளின்
மலரும் முகம் பார்க்கும் காலம் வந்திடுமோ ?

முழுமையாக தொடர் கவிதைகளை பார்க்க விரும்பினால் இடது பக்கம் இருக்கும் மேலும் சில பக்கங்களுக்குள் பார்க்கலாம் 

No comments: