இலங்கைச் செய்திகள்


மக்கள் விரும்பாத தீர்வை ஏற்கோம் : வலியுறுத்துகிறார் எதிர்க்கட்சித்தலைவர்

நான் ஒரு கண்காட்சி அமைச்சராக இருக்க போவதில்லை : அமைச்சர் மனோ கணேசன்

அவுஸ்திரேலியா சுற்றுலா பெண் மீது பாலியல் சேஷ்டை

யாழ். நீதிமன்ற தாக்குதல் : மூவருக்குப் பிணை

யாழ். பல்கலைக்கழக மாணவ குழுக்களுக்கிடையில் கைகலப்பு

புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு (அமைச்சர்களின் விபரம் )

மக்கள் விரும்பாத தீர்வை ஏற்கோம் : வலியுறுத்துகிறார் எதிர்க்கட்சித்தலைவர்

08/08/2015 எதிர்க்­கட்­சித் ­த­லைவர் பத­வியை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஏற்றுக் கொண்டுவிட்­டது என்­ப­தற்­காக தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­கி­டைத்து விட்­ட­தாக யாரும் அர்த்தம் கொள்­ளக்­கூ­டாது. மக்கள் விரும்­பாத எந்தத் தீர்­வையும் நாம் ஏற்­கப்­போ­வ­தில்லை என்று எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.




எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ராக பத­வி­யேற்­றுள்ள இரா.சம்­பந்­தனை பாராட்டிக் கௌர­விக்கும் வைபவம் ஞாயிற்­றுக்­ கி­ழமை மாலை திரு­கோ­ண­மலை நக­ர­சபை மண்­டபத்தில் நடை­பெற்றது. அதில் கலந்துகொண்டு உரை­யாற்றும்போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் அங்கு தொடர்ந்து பேசு­கையில்;
மக்­களின் விருப்­பத்­துக்கு மாறாக நாம் எப்­பொ­ழுதும் நடந்துகொள்ளமாட் டோம். எமது இலக்கை நோக்கி நாம் முடியும் வரை தொடர்ந்து பய­ணித்துக் கொண்­டே­யி­ருப்போம். எமது இலக்­குக்கு எதிர்க்­கட்­சித் ­த­லைவர் பத­வி­ யென்­பது எப்­பொ­ழுதும் தடை­யாக இருப்­பதை நாம் ஏற்றுக்கொள்­ள­மாட்டோம்.
எனக்குத் தரப்­பட்ட எதிர்க்­கட்சித் தலைமை பத­வி­யா­னது எனக்­கு­ரி­ய­தல்ல, அது எமது மக்­க­ளுக்­கு­ரி­ய­தாகும், அத்­துடன், அந்த பதவி எமது கட்­சிக்­கு­ரி­ய­தாகும். எமது தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு என்னைப் பாரா­ளு­மன்றக் குழுத்த­லை­வ­ராக நிய­மித்­ததன் கார­ண­மாக இப்­ப­தவி கிடைத்­துள்­ளது.
இப்­ப­தவியை நான் பணி­வு­டனும் அடக்­கத்­துடனும் ஏற்­றி­ருக்­கின்றேன். அதற்­காக எமது மக்­க­ளுக்கும் எம்­கட்சி சார்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் நன்றி கூறக்கட­மைப்­பட்­டி­ருக்­கின்றேன்.
பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யத்­தின்­படி இப்­ப­தவி எமது கட்­சிக்கு வந்து சேர்ந்­துள்­ளது. எமது கட்­சிக்கு பிர­தம கொரடா பத­வி­யொன்று உண்டு. அப்­ப­த­வியை இன்­னு­மொரு எதிர்க்­கட்­சி­யான மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு கொடுக்கத் தீர்­மா­னித்தோம். அவர்­களின் கோரிக்­கைக்கு அமை­வாக இதனை செய்தோம். இந்த முடி­வுக்கு எமது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் தமது பூர­ண­மான சம்­ம­தத்தைத் தெரி­வித்­தி­ருந்­தார்கள்.
இதன் நிமிர்த்­தந்தான் எதிர்க்­கட்சி கொர­டாப்­ப­தவி மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு வழங்­கப்­பட்­டது. கடந்த ஜன­வரி மாதம் 8ஆம் திகதி பாரிய அர­சியல் மாற்­ற­மொன்று நாட்டில் ஏற்­பட்­டது. அண்­மையில் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்தல் ஊடாக தேசிய அர­சாங்­க­மொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கும் இடையில் ஒரு அர­சாங்கம் ஆட்­சி­பு­ரிந்து வந்­தது.
அது ஒரு அது பெரும்­பான்மைப் பல­மற்ற அர­சாங்­க­மாகும். ஆகையால் அந்த அர­சாங்­கத்தால் முக்­கி­ய­மான விட­யங்­களைச் செய்ய முடி­ய­வில்லை. பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெற்ற காலத்தில் எதிர்­பார்த்­தது போல ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் சேர்ந்து ஆட்சி அமைத்­துள்­ளன. விஷே­ட­மாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியைச் சார்ந்­த­வர்கள் ஒன்­றாக இணைந்து 19ஆவது அர­சியல் சாச­னத்தின் அடிப்­ப­டையில் தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தி­ருக்­கின்­றார்கள். இதன் மூலம் இந்த அர­சாங்கம் பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையைப் பெறும்.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் உத­வி­யுடன் ஆளும் அரசு மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெறும் வாய்ப்­புண்டு. ஏதா­வ­தொரு விட­யத்­துக்கு நாம் அவர்­க­ளுடன் சேர்ந்து வாக்­க­ளித்தால் பாரா­ளு­மன்­றத்தில் 2ஃ3 பெரும்­பான்மை வரக்­கூடும். இந்த அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டதன் முக்­கி­ய­மான அடிப்­படை என்­ன­வென்றால் இந்த நாட்டில் நல்­லாட்சி ஏற்­ப­ட­வேண்டும் என்­பதே ஆகும். அத்­துடன் ஊழல் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்டும். மனித உரிமை மதிக்­கப்­பட வேண்டும். சட்ட ஆட்சி இருக்க வேண்டும். யாராக இருந்­தாலும் சட்டம் மதிக்­கப்­பட வேண்டும். பாரா­ளு­மன்­றத்தின் கௌரவம் பேணிப்­பா­து­காக்­கப்­பட வேண்டும் என்­ப­தற்­கா­க­வாகும். இவை­யெல்லாம் நல்­லாட்­சியின் சிறந்த அம்­சங்­க­ளாகும்.
கடந்த 9 ஆண்­டு­களில் மேற்­படி பண்­பு­களில் பல்­வேறு குறை­பா­டுகள் காணப்­பட்­டன. நாடு நல்­லாட்­சி­யி­லி­ருந்து வெகு­தூரம் விலகிச் சென்­றி­ருந்­தது. இந்த குறை­பாடு ஏற்­பட அடிப்­ப­டைக்­கா­ர­ணங்கள் பல இருந்­தன. சமத்­துவம் இருக்­க­வில்லை. இதனால் நிரந்­த­ர­மான சமா­தானம் ஏற்­ப­ட­வில்லை. சமத்­து­வத்தை உண்­டாக்க எடுக்­கப்­பட்ட முயற்­சிகள் தோல்­வி­கண்­டன. இதனால் யுத்­த­மொன்று கூட மூண்­டது. 30 வரு­டங்கள் அந்த யுத்தம் நீடித்­தது. தமிழ் இளை­ஞர்கள் அர­சாங்­கத்­தையும் அர­ச­ப­டை­க­ளையும் எதிர்த்து 30 வரு­டங்கள் போரா­டி­னார்கள். இது ஒரு சாதா­ரண விட­ய­மல்ல, பெரிய சாதனை. இதை­யாரும் மறுக்க முடி­யாது.
இன்று தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சினை சர்­வ­தேச மய­மாக்­கப்­பட்­டுள்­ளது.பொறுப்புக் கூற வேண்­டி­ய­வர்கள் பொறுப்புக் கூற­வேண்டும் உண்மை அறி­யப்­பட வேண்டும். நீதி­வ­ழங்­கப்­பட வேண்டும். பாதித்­த­வர்­க­ளுக்கு பரி­காரம் தேடப்­பட வேண்டும் என சர்­வ­தேச சமூகம் கூறு­கின்­றது . இவ்­வி­த­மான அழி­வுகள் இந்த நாட்டில் மீண்டும் ஏற்­ப­டாமல் உரிய ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். குறிப்­பாகச் சொல்­லப்­போனால் இன்று காணப்­படும் தேசியப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­பட வேண்டும். இதுதான் நமது குறிக்­கோ­ளாகும்.
எதிர்க்­கட்­சியைச் சார்ந்­த­வர்கள் என்ற வகையில் எமது கட்சி இவ்­வி­ரண்டு விட­யங்­க­ளிலும் கவனம் செலுத்தும். தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணும் விட­யத்தில் நாமும் மும்­மு­ர­மாக ஈடு­ப­டுவோம். அக்­க­ட­மை­யி­லி­ருந்து விலகிச் செல்­ல­மாட்டோம். ஏனைய விட­யங்­களில் நாட்டில் முன்­னேற்றம் காணப்­பட வேண்­டு­மாயின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு உட­ன­டி­யான தீர்வு காணப்­பட வேண்டும். என்ன வித­மான தீர்வு தரப்­பட வேண்­டு­மென்­பதை தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெளி­வாகக் கூறி­யி­ருக்­கின்றோம். நாங்கள் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் கூறி­யி­ருப்­பது புரட்­சி­க­ர­மான விட­ய­மல்ல. நியா­ய­மான நீதி­யான கோரிக்­கை­யாகும்.
உலகில் பல­நா­டு­களில் பல்­வேறு இனம், மதம், மொழி சார்ந்த மக்­க­ளுக்கு அரச சாசன ரீதி­யாக, சிறந்த ஒழுங்­குகள் செய்­யப்­பட்­டதன் நிமித்தம் ஆட்சி பகிர்ந்­த­ளிக்­கப்­பட்டு, இறைமை பகிர்ந்­த­ளிக்­கப்­பட்டு, அந்த மக்கள் தங்கள் தலை­வி­தியைத் தாங்­களே நிர்­ண­யிக்­கக்­கூ­டிய வகையில் ஆட்சி ஒழுங்­குகள் உண்டு. நாட்டைப் பிரிக்­கும்­ப­டி­யாக நாங்கள் கோர­வில்லை. பிள­வு­ப­டுத்தக் கேட்­க­வில்லை. ஒரு­மித்த நாட்­டுக்குள் தமிழ் மக்­களும் சம­பி­ர­ஜை­க­ளாக வாழக்­கூ­டிய விதத்தில் போதிய சுயாட்­சி­யைப்­பெற்று வாழ­வேண்டு மென்று விரும்­பு­கின்றோம். சமா­தானத் தீர்­வொன்றே நல்­லாட்­சிக்­கான அத்­தி­வா­ர­மாக இருக்­க­மு­டியும்.
அந்த அத்­தி­வா­ர­மில்­லாமல் இந்த நாட்டில் நல்­லாட்­சியை உரு­வாக்க முடி­யாது. எனவே தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சிப்­ப­த­வியை ஏற்­றி­ருக்கும் இவ்­வே­ளையில் என்­ன­மா­திரி நாம் செயற்­ப­ட­வேண்டும், திட்­ட­மிட்டுக் கொள்ள வேண்டும் என்­பதில் நாம் தெளி­வாக இருக்­கின்றோம். நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்ற மாற்­றங்கள் நாம் எதிர்­பா­ராத மாற்­றங்­க­ளாகும்.
மஹிந்த ராஜபக் ஷவை எதிர்த்துப் போட்­டி­யிட்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி பெற்றார். எதிர்க்­கட்­சி­யி­லி­ருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக நிய­மித்தார். இது ஒரு துணிச்­ச­லான செய­லாகும். ரணி­லுக்கு பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்மை பலம் இருக்­க­வில்லை. பெரும்­பான்­மை­பலம் இல்­லாத ஒரு எதிர்க்­கட்சித் தலை­வரை பிர­த­ம­ராக நிய­மித்­தமை பாரிய சாத­னை­யாகும். அவ்­வாறு அவர் செய்­த­மைக்­கு­ரிய காரணம் ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெற்ற போது மக்­க­ளுக்கு ஒரு வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்தார். நான் வெற்­றி­பெற்றால் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக்­குவே என்று கூறி­யி­ருந்தார்.
தேர்­தலின் பின்னர் மக்கள் ஆணையின் அடிப்­ப­டையில் ரணிலை பிர­த­ம­ராக்­கினார். மஹிந்த ராஜபக் ஷ அண்­மையில் நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட்­ட­போது ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­டணி பெரும்­பான்­மை­யாக வெற்றி பெற்­றாலும் மஹிந்­தவை நான் பிர­த­ம­ராக நிய­மிக்க மாட்டேன் என தனது நிலைப்­பாட்டைத் தெளி­வாகக் மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறினார். பகி­ரங்­க­மாகக் கூறினார். மக்கள் தனக்குத் தந்த ஆணையைத் தொட­ரவே விரும்­பு­கின்றேன் என அடித்துக் கூறினார். இதனால் தான் கடும் முயற்சி செய்தும் மஹிந்­த­வினால் 100 ஆச­னங்­களைக் கூட இத்­தேர்­தலில் பெற­மு­டி­ய­வில்லை.
இம்­மாற்­றங்­களை நாம் அவ­தா­னிக்க வேண்டும். இம்­மாற்­றங்­களை சாதா­ர­ண­மாக எடை­போ­ட­மு­டி­யாது. சாதா­ர­ண­மாக நடை­பெறக் கூடி­ய­து­மல்ல. இது எமக்குக் கிடைத்­தி­ருக்கும் சந்­தர்ப்­பங்கள் ஆகும். இம்­மாற்­றங்கள் நடந்­ததன் கார­ண­மா­கவே நாம் நியா­யத்தின் அடிப்­ப­டையில் நீதியின் பிர­காரம், சத்­தி­யத்தின் பின்­ன­ணியில் தீர்வைப் பெற­லா­மென்று நம்­பு­கின்றோம். மஹிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் வெற்­றி­ய­டைந்­தி­ருந்தால் எதிர்­பார்க்கும் எந்­த­வி­ட­யமும் நடை­பெ­ற­மு­டி­யாது. ஆகை­யினால் இதை நாம் கவ­னத்தில் எடுத்­துக்­கொள்ள வேண்­டு­மென்­பது நமது கட­மை­யாகும்.
என­வேதான் நாம் மிகவும் நிதா­ன­மாகச் செயற்­பட வேண்­டி­ய­கா­லக்­கட்­டத்­தி­லி­ருக்­கின்றோம். பக்­கு­வ­மாக செயற்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. சர்­வ­தேச சமூ­கத்தின் ஆத­ரவை தக்­க­வைக்க வேண்­டிய அவ­சியம் எமக்­குண்டு. எங்­களைப் பொறுத்­த­வரை நியா­ய­மாக நடப்போம். எமது இலக்கில் மிகவும் தெளி­வாக இருக்­கின்றோம்.
நாட்டைப் பிரிக்­காமல் ஒரே நாட்­டுக்குள் சம­பி­ர­ஜை­க­ளாக வாழ விரும்­பு­கின்றோம் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும். இந்தச் செய்­தியை சர்­வ­தேச சமூ­கத்­துக்கு தொடர்ந்து சொல்ல விரும்­பு­கின்றோம். இதை சர்­வ­தேச சமூகம் ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.

இந்த நாட்டைச் சேர்ந்த பல தரப்பு சிங்­கள மக்கள் தமிழ் மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சினை தீர்க்­கப்­ப­ட­வேண்­டு­மென்று இப்­பொ­ழுது விரும்­பு­கின்­றார்கள். அவர்­களின் ஆத­ரவை நாம் பெற­வேண்டும். வட­கி­ழக்கைப் பொறுத்­த­வரை முஸ்லிம் சமூ­கத்தின் ஆத­ர­வையும் பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். அவர்­களை அர­வ­ணைத்துச் செல்­ல­வேண்டும். நாங்கள் எத்­த­கைய பிரச்­சி­னை­களை அனு­ப­விக்­கின்­றோமோ அதே பிரச்­சி­னை­களை அவர்­களும் அனு­ப­விக்­கின்­றார்கள் எதிர்­நோக்­கு­கின்­றார்கள் ஆகையால் அவர்­க­ளையும் நாம் அர­வ­ணைத்­துச்­செல்ல வேண்டும். ஒழிவு மறை­வின்றி நாம் செயற்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.
எம்மை நம்­பி­யி­ருக்கும் மக்­களை நாம் கைவி­ட­மு­டி­யாது. மக்கள் விரும்­பாத எந்தத் தீர்­வையும் நாம் ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை. பொருத்­த­மற்ற எந்தத் தீர்­வையும் நாம் ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. தீர்வு சம்­பந்­த­மாக தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­புக்கும் அர­சாங்­கத்­துக்கும் இடையில் பேச்­சு­வார்த்தை நடை­பெ­று­மாக இருந்தால் தீர்வு பற்­றிய முடிவை எடுப்­ப­தற்­குமுன் மக்­க­ளுடன் ஆத­ர­வா­ளர்­க­ளுடன் புத்­தி­ஜீ­வி­க­ளுடன் பேசி தீர்­மா­னத்­துக்கு வருவோம். அதை­வி­டுத்து தன்­னிச்­சை­யாக செயற்­ப­டப்­போ­வ­தில்லை. எனவே எந்த முடி­வாக இருந்­தாலும் ஜன­நா­யக ரீதி­யா­கவே முடி­வுகள் மேற்­கொள்­ளப்­படும். எவ்­வாறு இருந்­தாலும் இன்­றைய சூழலில் யதார்த்­த­மாகச் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது.
எதிர்க்­கட்சி தலைவர் பதவி எமக்கு கிடைத்­ததால் எல்லாம் முடிந்து விட­வு­மில்லை தீர்ந்து விட­வு­மில்லை. அண்ணன் அமிர்­த­லிங்கம் 1977 ஆம் ஆண்டு எதிர்க்­கட்சித் தலை­வ­ராகத் தெரிவு செய்­யப்­பட்டார். அப்­பொ­ழுது எமக்கு பாரா­ளு­மன்­றத்தில் 18 ஆச­னங்கள் இருந்­தன. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்கு எட்டு ஆச­னங்கள் மாத்­தி­ர­மே­யி­ருந்­தன. நாம் இரண்டாம் பெரும்­பான்மைக் கட்­சி­யாக இருந்தோம். அப்­பொ­ழுது நான் பாரா­ளு­மன்­றத்­துக்கு முதல்­மு­றை­யாகச் சென்­றி­ருந்தேன் அண்ணன் அமிர்­த­லிங்­கத்­துக்­குப்­பின்னால் எனது ஆசனம் அமைந்­தி­ருந்­தது. நாங்கள் அவ­ருக்கு பூர­ண­மான ஆத­ரவை நல்­கினோம் ஒற்­று­மை­யாக இருந்தோம். இன்று நாம் பாது­காக்­க­வேண்­டிய விடயம் எமது ஒற்­று­மை­யாகும்.
எவ்வாறு இருந்த போதிலும் இன்று நாம் பலமாக இருக்கின்றோம். ஏன் நாம் பலமாக இருக்கின்றோம் எமது மக்கள் எம்மை அதிகப்படியாக ஆதரித்து 16 உறுப்பினர்களை வெற்றிபெற வைத்ததன் நிமித்தம் மக்களின் ஒற்றுமையான ஆணையின் அடிப்படையில் நாம் பலம் பெற்று நிற்கின்றோம். நாம் இன்னும் அதிகப்படியான ஆசனங்களை வென்றிருக்க முடியும். திருகோணமலையில் ஐக்கிய தேசியக் கட்சியும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இணைந்து கேட்டதன் காரணமாக இரு ஆசனங்களை எம்மால் பெறமுடியாமல் போய்விட்டது.
இன்னுமொரு ஆசனம் கிடைத்திருக்கலாம். எவ்வாறு இருந்த போதிலும் இதுவொரு நல்ல வெற்றியாகும். எல்லோரும் எமது வெற்றியை மதிக்கின்றார்கள். நாட்டின் ஆட்சியாளர்கள் மதிக்கின்றார்கள். சிங்கள மக்கள் மதிக்கின்றார்கள். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது தமிழ் மக்களின் விசுவாசமான கட்சியென ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை சிங்கள மக்களும் புத்திஜீவிகளும் ஏற்றுக்கொள்கின்றார்கள். சர்வதேச சமூகம் ஏற்றுகொள்கிறது. இது இன்னும் பலமடையும் எதிர்க்கட்சியின் தலைமைப்பதவி கிடைத்திருப்பது எமக்கு இன்னும் பலம்சேர்க்கும். எனவே நாம் தெளிவாக சிந்தித்து பிரிவு பட்டு நிற்காமல் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார். திருகோணமலை தமிழரசுக் கட்சிக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பாராட்டு வைபவத்திற்கு கோ.சத்திய சீவராஜா தலைமை தாங்கினார்.   நன்றி வீரகேசரி 








நான் ஒரு கண்காட்சி அமைச்சராக இருக்க போவதில்லை : அமைச்சர் மனோ கணேசன்

08/09/2015 தேசிய கலந்துரையாடல் என்பது  தேசிய நல்லிணக்கத்துக்கு வழிகாட்டவேண்டும். இந்நாட்டு தமிழ், முஸ்லிம், சிங்கள, மலே, பறங்கி இனத்தவர் மத்தியில், பெளத்த, இந்து, கத்தோலிக்க, இஸ்லாம் மதத்தவர் மத்தியில் மெய்யான நல்லிணக்கம் ஏற்பட வேண்டும்.

நல்லிணக்கத்துக்கு தடை இன, மத சமத்துவம் இன்மைகளாகும். சமத்துவம் இல்லாவிட்டால் எப்படி நல்லிணக்கம் ஏற்படமுடியும்? இது நான் எப்போதும் கேட்கும் கேள்வியாகும். இந்த இனவாத தடைகளை நான் அறிவேன். ஏனென்றால் இன்று நான் பொறுப்பு ஏற்றுள்ள இந்த அமைச்சரவை அமைச்சின் நோக்கங்கள் எனக்கு புதியவை அல்ல. இந்த நோக்கங்களுக்காக நான் தெருக்களின் இருந்து பத்து வருடங்களுக்கு அதிகமாக போராடியவன்.
எனவே இந்த தடைகளை நான் அடி மட்டத்தில் இருந்து நீக்குவேன். மேல் மட்டத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வை நமது அரசு தமிழ், முஸ்லிம் தலைமைகளிடம் பேசி தீர்க்கும். அங்கேயும் நான் கட்சி  தலைவர் என்ற முறையில் இருப்பேன். ஆனால், அமைச்சர் என்ற முறையில் நான் உண்மையான தேசிய நல்லிணக்கத்துக்கு தடையாக இருக்கும் காரணிகளை கண்டு பிடித்து நீக்குவேன். அதை விடுத்து வெறுமனே அமைச்சரவை வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டுஇ இந்த நாட்டில் நல்லிணக்கத்துக்கும் ஒரு அமைச்சர் இருகின்றார் என்று காட்டும் ஒரு கண்காட்சி அமைச்சராக இருக்க போவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணிஇ தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.   
இராஜகிரியவில் அமைந்துள்ள தனது அமைச்சு அலுவலக பொறுப்புகளை இன்று முற்பகல் ஏற்றுக்கொண்ட வைபவத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
1999ல் ஆரம்பித்த என அரசியல் வாழ்வில் இன்றுதான் நான் முதன்முதலில் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளேன். இதையிட்டு எவரும் மனக்கிலேசம் அடைய தேவையில்லை. இதற்கு முன்னர் இரண்டு ஜனாதிபதிகளிடமிருந்து, அமைச்சு பதவியை ஏற்றுகொள்ளும்படி நான்கு முறை எனக்கு அழைப்புகள்  வந்தன. ஆனால், நான் வரப்பிரசாதங்களுக்காக கொள்கைகளை விற்று அணிமாற தயாராகவில்லை. ஆகவேதான் அமைச்சராக இருக்கவில்லை.
இந்த ஆட்சி, எங்கள் ஆட்சி. தம்மை அரசர் என நினைத்துக்கொண்டு நாட்டை ஆண்ட அரச குடும்பம் ஒன்றை தோற்கடித்து எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கொள்கையை நிலைநாட்டி நாம் உருவாக்கியுள்ள ஆட்சி இதுவாகும். இதற்காக நான் பெரும் பாடுபட்டுள்ளேன். நண்பர்கள் ரவிராஜ், லசந்த விக்கிரமதுங்க ஆகியோரை இழந்து நாங்கள், இந்த  இடத்தை வந்து அடைந்துள்ளோம். மக்கள் கண்காணிப்பு குழு, சுதந்திரத்துக்கான மேடை, எதிர்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம், காணாமல் போனோரின் குடும்பத்தவர் இயக்கங்கள் ஆகியவற்றை கடந்து இந்த இடத்தை அடைந்துள்ளோம்.
ஆகவே எனக்கு இந்த அனுபவங்கள் புதியன அல்ல. கடந்த காலத்தில் செய்து வந்தவைகளை இனி நான் அதிகாரப்பூர்வமாக செய்வேன். இந்த நாட்டில் இனி இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம், பிரிவினைவாதம், அரச மற்றும் அரசற்ற பயங்கரவாதம் என்று எதுவும் இருக்க முடியாது. ஆயுத போராட்டத்துக்கு அடித்தளமிடும் காரணிகளை நான் படிப்படியாக தேடி அழிப்பேன். இது எங்கள் அரசின் கொள்கை. இந்த அமைச்சில் இந்த கொள்கையின் அடைப்படையில்தான் காரியங்கள் நடைபெற வேண்டும். அதிகாரிகள் எவராவது இதற்கு இடையூறு செய்தால் அதை நான் சகித்துக்கொள்ள போவதில்லை.
உள்நாட்டில் நமது முன்னுரிமைகள் எதுவாக இருந்தாலும்இ உலகத்தின் பார்வையில் இலங்கையை பொறுத்தவரையில், தேசிய நல்லிணக்கம் என்பதுதான் முதலிடம் வகிக்கும் விஷயமாகும். நல்லிணக்கம் இல்லாவிட்டால், உலக ஒத்துழைப்பு, ஆதாரங்கள் கிடைக்காது. இதனால் ஏனைய அனைத்து பொருளாதார அபிவிருத்திகளும் சரிந்துவிடும். எனவே இந்த அமைச்சு மிகவும் முக்கியமான அமைச்சு. இதை என்னிடம் ஜனாதிபதியும், பிரதமரும் நம்பிக்கையுடன் ஒப்படைத்துள்ளார்கள்.  அந்த பொறுப்பை நான் ஆளுமையுடன் நிறைவேற்றுவேன். எனது அமைச்சு நோக்கங்களை நிறைவேற்ற இலங்கையின் நலனை நாடும் வெளிநாட்டு அரசுகளின் ஒத்துழைப்புகளை தேடி பெறுவேன்.  
அரசுசாரா தொண்டர் அமைப்புகளை கடந்த காலத்தில் தேச விரோத சக்திகளாக மகிந்த தரப்பினர் காட்டினார்கள். அப்படி காட்டியவர்கள்தான் உண்மையான தேச விரோதிகள் என்று நாங்கள்  இன்று எடுத்து காட்டி விட்டோம். எனது அமைச்சின் பொறுப்பில்தான் அரசு சாரா தொண்டர் நிறுவன செயலகம் செயற்படும். சர்வமத சபையும் செயற்படும்.  அது தவிர அரசுகரும மொழிகள் திணைக்களம்இ அரசுகரும மொழிகள் ஆணைக்குழுஇ மொழிகள் பயிலகம் ஆகியவையும் எனது அமைச்சின் கீழ் செயற்படும். அரச நிறுவனங்களுக்கு தொழில்ரீதியான தமிழ் மொழி பணியாளர்களை நாம் நியமனம் செய்வோம். நாட்டில் நல்லிணக்கத்தை  ஏற்படுத்தும் இதுபோன்ற அவசியமான மேலதிக நிறுவனங்களை அமைப்பதற்கான அமைச்சரவை ஆவணத்தை தயாரித்து சமர்பிக்கும்படி பிரதமர் கோரியுள்ளார். அத்துடன் எனது அமைச்சின் கீழ் செயற்படும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை ஆவணம் ஒன்றையும் சமர்பிக்கும்படி பிரதமர் மேலும் என்னிடம் கூறியுள்ளார்.      நன்றி வீரகேசரி                









அவுஸ்திரேலியா சுற்றுலா பெண் மீது பாலியல் சேஷ்டை

08/09/2015 இலங்கைக்கு சுற்றுலா விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவரிடம் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் பாலியல் சேஷ்டை புரிந்த சம்பவம் ஒன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.
கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவிடம் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண் ஒருவர் (46 வயது) முதலில் தங்கல்லயில் உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.
இதன்போது அங்கு சுற்றுலா வழிகாட்டி ஒருவர் இவரைச் சந்தித்துள்ளார். வழிகாட்டியிடம் இப் பெண் கண்டிக்குச் செல்வதற்கு ஒழுங்கு செய்யுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
வழகாட்டி கறுப்புநிற கண்ணாடிகளைக் கொண்ட சொகுசு வேன் ஒன்றினை ஏற்பாடு செய்து அவ்வேனில் அப்பெண்ணை கண்டிக்கு அழைத்து வந்துள்ளார்.
சாரதியுடன் வேனில் இவர்கள் வந்து கொண்டிருந்த போது வழிகாட்டி அப்பெண்மீது பாலியல் துன்புறுத்தல்களைப் புரிந்துள்ளார். கண்டிக்கு வந்து சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள அப்பெண் இச்சம்பவம் குறித்து கண்டி சுற்றுலாப் பிரிவு பொலிஸாரிடம் இன்றுக்காலை முறைப்பாடு செய்துள்ளார்.
வழிகாட்டி தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சந்தேக நபரான வழிகாட்டியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.  நன்றி வீரகேசரி                 









யாழ். நீதிமன்ற தாக்குதல் : மூவருக்குப் பிணை


09/09/2015 யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டிடத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபா்கள் 24 பேர் இன்று புதன் கிழமை யாழ். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது மூவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த  சம்பவத்துடன் தொடர்புடையவா்கள் என்று கருதப்படும் 140 க்கும் மேற்பட்டவா்கள் கைது செய்யப்பட்டு கட்டம் கட்டமாக சிலர் பிணையில் விடப்பட்டிருந்தனர்.
இதேவேளை, மீதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 பேர் இன்று யாழ்.நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியவேளை, அவர்களில் மூவரை தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்து பேர்கள் கொண்ட ஆட்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவர் 17 வயதுக்குட்பட்டவர் என்ற வகையிலும் மற்றும் ஒருவர் வேலை செய்பவர் என்ற வகையிலும் மற்றும் ஒருவர் அவரது தந்தையாரின் சுகயீனம் காரணமாகவும்  பிணையில் செல்வதற்கு யாழ் நீதிமன்ற நீதிவான் பெ.சிவகுமார் அனுமதி வழங்கினார்.
இந்நிலையில் ஏனைய 21பேரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.   நன்றி வீரகேசரி                 







யாழ். பல்கலைக்கழக மாணவ குழுக்களுக்கிடையில் கைகலப்பு

09/09/2015 யாழ். பல் கலைக்கழக வளாகத்தில் இரு மாணவ குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் நான்கிற்கு மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவத்தால் பல் கலைக்கழக வளாகம் பெரும் பதற்றமான நிலமைக்கு உள்ளாகியது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
சிரேஷ்ட மாணவர்கள்  கனிஷ்ட மாணவர்களை இடுப்புப்பட்டி அணிந்து வரக்கூடாது என்றும் பல்கலைக்கழக வளாகத்தில்  நிற்கும் மரங்களின் கீழ் போடப்பட்டுள்ள வாங்குகளில் அமரக்கூடாதென்றும் கட்டளைகளை பிறப்பித்தமையினால்  எழுந்த முரண்பாடு கைகலப்பாக மாறியது.
வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் தாக்கும் நிலைமைக்கு சென்றதையடுத்து சம்பவத்தில் நான்கிற்கு மேற்பட்ட மாணவர்கள்  காயமடைந்தனர்.
 இதையடுத்து பல் கலைக்கழக நிர்வாகம் தலையிட்டதையடுத்து தற்போது அங்கு அமைதியான நிலைமையேற்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ். பல் கலைக்கழக  வளாகத்தில் தமிழ்த் தேசிய முன்னணியினால்  ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் மக்களின் படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கைக்கு ஆதரவாக கையொப்பம் திரட்டும் நடவடிக்கையும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி









புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு (அமைச்சர்களின் விபரம் )

09/09/2015 ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைத்துள்ள தேசிய அர­சாங்­கத்தின் பிரதி மற்றும் இரா­ஜாங்க அமைச்­சர்கள் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் பதவியேற்று கொண்டனர்.

ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னதும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னதும் 45 பேர் இவ்­வாறு இரா­ஜாங்க மற்றும் பிர­தி­ய­மைச்­சர்­க­ளாக  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் பத­வி­யேற்­று கொண்டனர்.
பதவியேற்றுக் கொண்ட புதிய இராஜாங்க, பிரதி அமைச்சர்களின் விபரம்
இராஜாங்க அமைச்ச ர்கள் 
  • லக்ஷ்மன் யாப்பா அபயவர்தன   இராஜாங்க நிதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • டி.பி. ஏக்கநாயக்க காணி இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • ஏ.எச்.எம். பௌசி ஒருங்கிணைப்பு இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • டிலான் பெரேரா நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • திலிப் வேதராச்சி கடற்றொழில மற்றும் நீரியல்வள இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • ரவிந்திர சமரவீர தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • நிரோசன் பெரேரா தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • வீ. இராதாகிருஷ்ணன்  கல்வி இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • சம்பிக்க பிரேமதாஸ தொழிற்துறை மற்றும் வணிக இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • பாலித ரங்கே பண்டார தொழிற்பயிற்சி இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • ப்ரியங்கர ஜயரத்ன சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • மோகன் லால் பல்கலைக்கழக கல்வி இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • ருவான் விஜயவர்தன பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • விஜயகலா மகேஸ்வரன்- மகளீர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக   சத்தியப்பிரமாணம்
  • சுஜீவ சேனசிங்க சர்வதேச வர்த்தக  இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • எம். ஹிஸ்புல்லா மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • வசந்த சேனாநாயக நீர்பாசன இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • வசந்த அலுவிகார விவசாய இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • சுதர்சினி பெர்ணன்மோபிள்ளை நீர்விநியோக  இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம்

பிரதியமைச்ச ர்கள்
  • சுமேதா ஜெயசேனா வனவிலங்கு தொடர்பான பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • அமீர் அலி  கிராமப்புற பொருளாதார பிரதியமைச்சரா சத்தியப்பிரமாணம்
  • லசந்த அழகியவண்ண மேல்மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • சுசந்த புஞ்சிநிலமே அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • இந்திக பண்டாரநாயக்க வீடமைப்பு பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • பைசல் காசிம் சுகாதார பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • லக்ஷ்மன் வசந்த பெரேரா பெருந்தோட்ட பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • துலிப் விஜசேகர தபால் மற்றும் முஸ்லிம் விவகார பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • நிசாந்த முத்துஹெட்டிகம துறைமுக பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • துனேஸ் கன்கந்த அனர்த்த முகாமைத்துவ பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • அனோமா கமகே பெற்றோலிய பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • ஹர்ச டி சில்வா வெளிநாட்டு விவகார பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • அஜித் பி பெரேரா மின்வலு மற்றும் எரிசக்தி பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • எரான் விக்கிரமரட்ன மாநில தொழில் முயற்சியாண்மை பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • ரஞ்சன் ராமநாயக்க சமூக சேவை பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • அசோக அபேயசிங்க போக்குவரத்து பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • அருந்திக்க பெர்னாண்டோ உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • தரணத் பஸ்நாயக தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • எச்.எம்.எம். ஹரிஸ் விளையாட்டுத்துறை பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • நிமல் லன்சா சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்த்தவ விவகார பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • கரு பரனவிதான மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்
  • சிறிபால கமலத் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம்  -  நன்றி வீரகேசரி








No comments: