நெகிழ்ந்து விரியுங்கள் மனங்களே - எச். ஏ. அ ஸீஸ்

.
தயவுடன்  வேண்டுகிறேன்
ஒருவரையும்   எரித்து விட வேண்டாம்
எத்தகைய  அரசியல்வாதியாய்
இருந்த போதும்

அந்த  நச்சுப்  புகையை  நாம்  ஏன்
சுவாசிக்க  வேண்டும்
ஒரு  அச்சுப்பிழையில்  தலையெழுத்து
அடங்குவதில்லை  அன்றோ

அவர்களாக  சாவர்
எதை  அள்ளிக்  கட்டிக்கொண்டு  போவர்

பாவம்  செய்து  கொண்டு
பிறரை,  பார்த்து  ரசிக்க  செய்யும்
சாபம்  ஒன்றுள்ளதோ

நொந்த  மனங்களே  கொஞ்சம்
நெகிழ்ந்து விரியுங்கள்
அந்த  அருளாளன்  அறிவான்
அவரவர்க்கு  எது  தகுமென

எந்த  அரசியல்வாதியையும்
எரித்து  விட வேண்டாம் 
தயவுடன்   வேண்டுகிறேன்

எங்கோ  ஒரு  மூலையில்
ஒன்றிரண்டு
விசித்திரங்கள்  இருக்கக் கூடும்
அரிதாக
மிக  மிக  அரிதாக

நொந்த  மனங்களே  கொஞ்சம்
நெகிழ்ந்து விரியுங்கள்


-எச். ஏ. அ ஸீஸ்

1 comment:

தீராவெளி said...

எச் ஏ அசீஸின் கவிதை யதார்த்தமும் உள்ளடக்கச் செறிவும் மிக்கது. வாழ்த்துக்கள்