உலகச் செய்திகள்


பூகம்­பத்தில் உயி­ரி­ழந்­த­வர்கள் எண்ணிக்கை 4000 ஆக உயர்வு

இந்­தோ­னே­சிய மர­ண­தண்­டனை கைதி அன்ட்றூ சானை திரு­மணம் செய்த பெண் மதபோதகராக சேவை­யாற்­றிய இள­வ­ரசி

மத்தியதரைக் கடலில் தீப்பற்றி எரிந்த படகு

பூகம்­பத்தில் உயி­ரி­ழந்­த­வர்கள் எண்ணிக்கை 4000 ஆக உயர்வு

வில்லியம் -கேட் தம்பதியருக்கு பெண் குழந்தை



28/04/2015 நேபா­ளத்தை கடந்த சனிக்­கி­ழமை தாக்­கிய 7.8 ரிச்டர் அள­வான பாரிய பூகம்­பத்தில் சிக்கி பலி­யானோர் தொகை 4000 ஆக உயர்ந்­துள்­ளது. அத்­துடன் 7,000 பேருக்கும் அதி­க­மானோர் படு­கா­ய­ம­டைந்­துள்­ளனர்.


அயல் ­நா­டான இந்­தி­யாவில் 72 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.இந்தப் பூமி­ய­திர்ச்­சி­யா­னது 20 அணு­குண்­டுகள் ஒரே சம­யத்தில் வெடிக்கும் போது வெளிப்­படும் சக்­தியை ஒத்த சக்­தியைக் கொண­டுள்­ள­தாக நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர்.


மேற்­படி பூமி­ய­திர்ச்­சியால் தரை­மட்­டா­கி­யுள்ள கட்­டட இடி­பா­டு­களின் கீழ் புதை­யுண்­ட­வர்­களை மீட்கும் பணி தொடர்­கின்ற நிலையில், மேலும் பல சட­லங்கள் மீட்­கப்­ப­டலாம் என அஞ்­சப்­ப­டு­கி­றது.


நூற்­றுக்­க­ணக்­கானோர் தொடர்ந்து காணாமல் போன நிலை­யி­லேயே உள்­ளனர்.அந்­நாட்டில் கடந்த சனிக்­கி­ழமை தாக்­கிய பூகம்­பத்தைத் தொடர்ந்து நேற்று முன் தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை 6.7 ரிச்டர் அளவு கொண்ட பூமி­ய­திர்ச்சி தாக்­கி­யி­ருந்­தது.
இந்­நி­லையில் .அந்த பிந்­திய பூமி­ய­திர்ச்­சியைத் தொடர்ந்து அன்­றைய இரவு 5.4 ரிச்டர் அள­வான பூமி­ய­திர்ச்­சி­யொன்று அந்தப் பிராந்­தி­யத்தை தாக்­கி­யுள்­ளது.இத­னை­ய­டுத்து நேற்று திங்­கட்­கி­ழமை காலை பல பகு­தி­களில் மீண்டும் பல பூமி­ய­திர்ச்­சிகள் இடம்­பெற்­றுள்­ளன.
சனிக்­கி­ழ­மை­யி­லி­ருந்து இது­வரை மேற்­படி பிராந்­தி­யத்தில் 55 தட­வைகள் பூமி­ய­திர்ச்­சிகள் இடம்­பெற்­றுள்­ள­தாக இந்­திய வானிலை ஆய்வு மையத்தின் பொதுப் பணிப்­பா­ள­ரான ரத்தோர் தெரி­வித்தார்.
தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரும் பூமி­ய­திர்ச்­சிகள் கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களை சேர்ந்த மக்கள் தொடர்ந்து இரு நாட்­க­ளாக திறந்­த­வெ­ளியில் கூடா­ரங்­களை அமைத்து தங்­கி­யுள்­ளனர்.
அத்­துடன் அந்தப் பிராந்­தி­யத்தை மீளவும் பாரிய பூகம்பம் தாக்­கலாம் என்ற பீதி கார­ண­மாக மக்கள் இரவு நேரங்­களில் தூக்­கத்தை மறந்து தொடர் பிரார்த்­த­னையில் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

பூமி­ய­திர்ச்­சி­யை­ய­டுத்து நேபாளம் முழு­வதும் மின்­சாரம் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளதால் மக்கள் இரவு நேரங்­களை இருளில் கழிக்க வேண்­டிய அவல நிலைக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.
மேலும் அந்­நாட்டில் கைய­டக்கத் தொலை­பேசி சேவை­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளதால் மக்கள் இன்­னல்­களை எதிர்­கொண்­டுள்­ளனர்.

அத்­துடன் பூமி­ய­திர்ச்­சியால் எவரெஸ்ட் மலைப் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற பனிப்­பாறை சரி­வு­களில் சிக்கி வெளி­யேற முடி­யா­துள்ள மலை ஏறும் வீரர்­களை மீட்கும் நட­வ­டிக்­கையில் உலங்­கு­வா­னூர்­திகள் ஈடு­பட்­டுள்­ளன.

அந்த மலைப்ப பிராந்­தி­யத்தில் சுமார் 150 மலை ஏறும் வீரர்கள் சிக்­கி­யுள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது. எனினும் அவர்கள் எவ­ருக்கும் பார­தூ­ர­மான காயங்கள் எதுவும் ஏற்­ப­ட­வில்லை என கூறப்­ப­டு­கி­றது.
மேற்­படி எவரெஸ்ட் பிராந்­தி­யத்தில் பூமி­ய­திர்ச்­சியின் போது இடம்­பெற்ற பனிப்­பாறைச் சரி­வு­களில் சிக்கி குறைந்­தது 18 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். இந்­நி­லையில் நேபா­ளத்­தி­லுள்ள வெளி­நாட்­ட­வர்கள் அந்­நாட்டை விட்டு வெளி­யேறும் முக­மாக அந்­நாட்டின் ஒரே­யொரு சர்­வ­தேச விமான நிலை­ய­மான திரி­புவன் விமா­ன­நி­லை­யத்தில் நீண்ட வரி­சையில் காத்­தி­ருப்­ப­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரிவிக்கின்றன.
அளவுக்கதிகமான பயணிகளை சமாளிக்க விமானப் பயணங்களை மேற்கொள்வதற்கு சிறுவர்கள், பெண்கள், வ.யோதிபர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.பூமியதிர்ச்சியில் உயிரிழந்த நூற்றுக்கணக்கானோரது சடலங்கள் ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளன.   நன்றி வீரகேசரி 





இந்­தோ­னே­சிய மர­ண­தண்­டனை கைதி அன்ட்றூ சானை திரு­மணம் செய்த பெண் மதபோதகராக சேவை­யாற்­றிய இள­வ­ரசி

30/04/2015 இந்­தோ­னே­சி­யாவில் போதை­வஸ்து கடத்தல் குற்­றச்­சாட்டில் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்­துக்­குள்­ளான 8 கைதி­களில் ஒரு­வ­ரான அன்ட்றூ சானை மேற்­படி தண்­டனை நிறை­வேற்­றத்­திற்கு முன் சிறைச்­சா­லையில் வைத்து திரு­மணம் செய்­ததன் மூலம் பர­ப­ரப்­பாக பேசப்­பட்ட பெப்­யன்தி ஹெர­விலா என்ற பெண் இந்­தோ­னே­சிய ஜாவா பிராந்­திய இள­வ­ர­சி­களில் ஒருவர் என்ற தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

பெபி என அழைக்­கப்­படும் அவர் கடந்த திங்­கட்­கி­ழமை அன்ட்றூ சானை சிறைச்­சா­லையில் வைத்து திரு­மணம் செய்­தி­ருந்தார்.மத்­திய ஜாவா­வி­லுள்ள யொக்­ய­கர்த்­தாவைச் சேர்ந்த அவர் அரச குடும்­பத்தைச் சேர்ந்த தாயொ­ரு­வ­ருக்கு பிறந்­த­வ­ராவார்.
சுமார் 5 வருட காலம் மத­போ­தகர் ஒரு­வ­ராக சிங்­கப்­பூரில் சேவை­யாற்­றிய அவர் பின்னர் தாய்­நாடு திரு ம்பி மேலும் 5வரு­டங்­க ளுக்கு தனது சேவையைத் தொடர்ந்­துள் ளார்.
அவர் பாலி மற்றும் ஜகர்த்­தாவில் கிறிஸ்தவ அமைப்­பொன் றின் உறுப்­பி­ன ராக சேவை­யாற்­றினார்.

இந்­நி­லையில் அவர் 2012 ஆம் ஆண்டு பாலி­யி­லுள்ள கெரோ­போகன் சிறைச்­சா­லையில் மத போத­னை­களை மேற்­கொண்ட போது அன்ட்றூ சானை முதன்­மு­த­லாக சந்­தித்தார்.இதன் போது அன்ட்றூ சான், “நீ உனது ஆத்ம நண்­பரைத் தேடி இங்கே வந்தாயா?” என வேடிக்­கை­யாக பெபி­யி டம் வின­வி­ய­தாக அன்ட்றூ சானுடன் சிறை­வாசம் அனு­ப­வித்த பிறி­தொரு சிறைக்­கை­தி­யான மத்­தியுஸ் ஆரிப் மர்ட்­ஜ­ஜயா தெரி­வித்தார்.
அந்த சிறைச்­சா­லை­யி­லி­ருந்த அனைத்து சிறைக்­கை­தி­க­ளி­டமும் பரிவு காட்டும் ஒரு­வ­ராக விளங்­கிய பெபி, அன்ட்றூ சானிடம் தனி அக்­க­றையை காண்­பித்து வந்­துள்ளார்.இந்­நி­லையில் கடந்த பெப்­ர­வரி மாதம் அன்ட்றூ சான் பெபியை திரு­மணம் செய்­வ­தற்­கான தனது விருப்­பத்தை அவ­ரிடம் வெளி­யிட்­டுள்ளார்.
அன்ட்றூ சான் எந்­நே­ரமும் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்­துக்­குள்­ளாகக் கூடிய கைதி என்­பதை தெளி­வாக அறிந்­தி­ருந்த போதும் பெபி உட­ன­டி­யாக அவ­ரது காதலை ஏற்றுக் கொண்­டுள்ளார்.
தொடர்ந்து அந்த சிறைச்­சா­லைக்கு முறை­யாக விஜயம் செய்த பெபியின் மத போத­னை­களை ஆர்­வத்­துடன் செவி­ம­டுப்­பதில் அன்ட்றூ சான் ஈடுபட்டு வந்துள்ளார்.அன்ட்றூ சான் விடுதலையாவாரானால் இருவரும் இணைந்து குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்து பிள்ளை களை பெற்றுக்கொள்ள அவர் திட்டமிட்டிருந்ததாக மத்தியுஸ் தெரிவித்தார்.     நன்றி வீரகேசரி 









மத்தியதரைக் கடலில் தீப்பற்றி எரிந்த படகு

30/04/2015 மத்­தி­ய­த­ரைக் ­கடல் தீவான மல்­லோர்­கா­வி­லி­ருந்து ஸ்பெயினின் வலென்­சியா துறை­மு­கத்தை நோக்கி 150 பய­ணி­க­ளுடன் சென்ற பட­கொன்று தீப்­பற்றி எரிந்­ததால் பெரும் பர­ப­ரப்பு எற்­பட்­டது.

எனினும் பட­கி­லி­ருந்த அனை­வரும் அவ­சர சேவைப் பிரி­வி­னரால் கப்­பல்கள் மற்றும் உயிர்­காப்பு பட­குகள் மூலம் பாது­காப்­பாக மீட்­கப்­பட்டு கரைக்கு அழைத்து வரப்­பட்­டுள்­ளனர்.
இந்த தீ அனர்த்­தத்­திற்­கான காரணம் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.                   நன்றி வீரகேசரி 










வில்லியம் -கேட் தம்பதியருக்கு பெண் குழந்தை

02/05/2015 பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் சீமாட்டி சற்று முன்னர் பெண் குழந்தையை பிரசவித்துள்ளார்.

இளவரசர் கேட் மிடில்டன் தம்பதியருக்கு தற்போது பிறந்துள்ள பெண் குழந்தை இரண்டாவது குழந்தையாகும்.

லண்டனிலுள்ள செயிண்ட் மேரிஸ் மருத்துவமனையில் இங்கிலாந்து நேரப்படி காலை 08.34 மணிக்கு குறித்த பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்ததுள்ளது.
குழந்தை பிறக்கும்போது இளவரசர் வில்லியம் அருகில் இருந்தார். தாயும் சேயும் நலமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் முடிக்குரிய வாரிசு வரிசையில் இந்தப் பெண் குழந்தை நான்காவது இடத்தில் உள்ளது. பிறந்துள்ள பெண் குழந்தை சுமார் நான்கு கிலோ எடையுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை பிரிட்டிஷ் அரசி, அவரது கணவர் எடின்பரோ கோமகன், இளவரசர் வில்லியமின் தந்தையும் வேல்ஸ் இளவரசருமான சார்ள்ஸ் அவரது மனைவி கார்ண்வால் சீமாட்டி, இளவரசர் ஹரி மற்றும் இரு குடும்பத்தினதும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வில்லியம்ஸ்-கேட் மிடில்டன் தம்பதியனரின் முதல் குழந்தையான இளவரசர் ஜோர்ஜ் கடந்த 2013 ஆண்டு ஜூலை மாதம் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி


No comments: