.
தொங்கும் உறவு
தன்னை அறியாமலே
தந்தையில்-பின்
அன்னையில்
தொங்கித் தூங்கினாள்.
ஈன்று புறமெறிந்த பின்
தாயிலும் –பின்
தந்தையில்…
தம்பியில்…
தமையனில்…
தொங்கித் தொங்கியே
சுமையானவளை
ஊர் உறவுகள் கூடி
குடும்பத்தில் காய்ந்து கருவாடாக
மஞ்சள் கையிற்றில் தூக்கிலிட்டனர்
சாகும் வரையும்
தூங்கும் அக்கயிற்றில்
தூங்கத் தொடங்கிவிட்டாள்
அவள் மகளும்.
நோர்வே நக்கீரா
No comments:
Post a Comment