இலங்கைச் செய்திகள்


நிறைவேறியது...!

பசிலுக்கு 3 மாதம் விடுமுறை

பிக்கு மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு கண்ணீர்ப்புகை பிரயோகம்

சீகிரியா சுவரை சேதப்படுத்திய யுவதிக்கு விடுதலை

புதிய கடவுச் சீட்டு, அடை­யாள அட்­டைகள் இரு வரு­டங்­க­ளுக்குள் பாவ­னைக்கு வரும்


நிறைவேறியது...!


28/04/2015  19ஆவது அரசியலமைப்பு திருத்தம் சற்றுமுன்னர் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக 01 வாக்கும் அளிக்கப்பட்டதோடு 7 பேர் இன்று சமூகமளிக்கவில்லை. மேலும் ஒருவர் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தார்.
19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர எதிராக வாக்களித்ததோடு அஜித் குமார எம்.பி. வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.   நன்றி வீரகேசரி 
பசிலுக்கு 3 மாதம் விடுமுறை

28/04/2015  பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான  பசில் ராஜபக்ஷவிற்கு மூன்று மாத கால விடுமுறை வழங்குவதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பசில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்பு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


நன்றி வீரகேசரி 
பிக்கு மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு கண்ணீர்ப்புகை பிரயோகம்

29/04/2015 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட உள்வாரி பல்கலைக்கழக பிக்கு மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நன்றி வீரகேசரி 

சீகிரியா சுவரை சேதப்படுத்திய யுவதிக்கு விடுதலை

30/04/2015 சீகிரியா சுவரில் எழுதி சேதப்படுத்திய குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்ட யுவதி ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பைச் சேர்ந்த 18 வயதுடைய குறித்த யுவதி அநுராதபுர சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி

புதிய கடவுச் சீட்டு, அடை­யாள அட்­டைகள் இரு வரு­டங்­க­ளுக்குள் பாவ­னைக்கு வரும்

01/05/2015 கைவிரல் ரேகையை மையப்­ப­டுத்­திய புதிய கடவுச் சீட்டும் இலத்­தி­ர­னியல் அடை­யாள அட்­டையும் அடுத்து வரும் இரு ஆண்­டு­களில் அறி­முகம் செய்­யப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான பணிகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தின் கட்­டுப்­பாட்­டாளர் எம்.என்.ரண­சிங்க குறிப்­பிட்டார்.
இலத்­தி­ர­னியல் அடை­யாள அட்­டைக்­கன வேலைகள் ஏற்­க­னவே ஆட்­ப­திவு திணைக்­க­ளத்­தினால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் புதிய கடவுச் சீட்டை அறி­முகம் செய்யும் வித­மாக அனைத்து வேலைப்­பா­டு­களும் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.
தற்­போ­துள்ள கடவுச் சீட்­டுக்கள் ஊடாக மோச­டிகள் மிக சூட்­சு­ம­மாக முன்­னெ­டுக்­கப்­படும் நிலையில் அதனை தடுக்கும் வித­மா­கவே இந்த புதிய கடவுச் சீட்­டுக்கள் வடி­வ­மைக்­கப்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்டார்.
புதிய கடவுச் சீட்டில் கைவிரல் ரேகையே பிர­தான இடம் வகிக்கும் எனவும் அதனால் விமான நிலை­யத்­தில் தேவை­யற்ற கால தாம­தத்­தையும் தவிர்க்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.  நன்றி வீரகேசரி
No comments: