தமிழ் சினிமா


காஞ்சனா-2ரயில் மணிரத்னத்தின் செண்டிமெண்ட், மைக் பிடித்து கேள்வி கேட்பது ஷங்கரின் செண்டிமெண்ட், அதேபோல் பேய், பிசாசு என்பது ராகவா லாரன்ஸின் செண்டிமெண்ட் போல. முனியில் ஆரம்பித்து, பழிவாங்கும் பார்முலாவை திருப்பி திருப்பி போட்டு இதன் மூன்றாவது பாகமாக காஞ்சனா-2 வை இயக்கியுள்ளார்.
லாரன்ஸ் படத்திற்கு வரும் பி, சி செண்டர் ரசிகர்களின் பல்ஸை கெட்டியாக பிடித்துள்ளார் போல, எந்த இடங்களில் எப்படி எப்படி காட்சி வைத்தார் வயிறு குலுங்க சிரிப்பார்கள், அதே நேரத்தில் திகிலுடன் சிரிக்க வைப்பதில் கில்லாடி, அதையே இந்த முறையும் கொஞ்சம் பெரிய பட்ஜெட்டில் எடுத்திருக்கிறார்.
கதைக்களம்
முனி படத்தில் என்ன கதை? காஞ்சனா படத்தில் என்ன கதை? அதே தான் இந்த காஞ்சனா-2 விலும். தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒளிப்பதிவாளராக லாரன்ஸ், அதே டிவியில் நிகழ்ச்சி இயக்குனராக டாப்ஸி. போட்டிகள் காரணமாக தாங்கள் வேலை செய்யும் தொலைக்காட்சியின் TRP 2ம் இடத்திற்கு வர, இதை முதல் இடத்திற்கு கொண்டு வர டாப்ஸி ஒரு யோசனை சொல்கிறார்.
பேய் இருக்கா? இல்லையா? கான்செப்ட் தான், ஒரு பாழடைந்த பங்களாவிற்கு இவர்கள் சென்று பேய் சம்மந்தமான ஒரு நிகழ்ச்சியை உருவாக்குகிறார்கள், இதில் எதார்த்தமாக டாப்ஸி அந்த இடத்திலிருந்து ஒரு தாலியை எடுக்க, பேய் அவர் மேல் ஏறுகிறது, அதிலிருந்து லாரன்ஸை சிவா சிவா என்று கூப்பிட்டு, அடி பின்னி எடுக்கிறார்.
சில நிமிடங்களிலேயே சிவா என்கின்ற ஆத்மா லாரன்ஸ் உடம்பில் ஏற, அவர் கோவை சரளாவை டார்ச்சர் செய்து நம்மை வயிறு புண்ணாகும் படி சிரிக்க வைக்கிறார். கோவை சரளா, பயந்து ஒரு பாதிரியாரிடம் சொல்ல, வழக்கம் போல் இந்த ஆத்மாக்களை வரவழைத்து, அதன் குறைகளை கேட்க, விரிகிறது ஒரு ப்ளாஷ்பேக்.
இதில் மொட்டை சிவாவாக லாரன்ஸ், ஊனமாக இருக்கும் நித்யா மேனனை காதலிக்கிறார். இவர்கள் எப்படி இறந்தார்கள், இதற்கு எப்படி பழிவாங்கினார்கள் என்பதே மீதிக்கதை.
நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பங்களிப்பு
லாரன்ஸ் படத்தின் இரண்டாம் பாதியில் பேய் புகுந்து செய்வார் பாருங்க ஒரு கலாட்டா, அந்த ஒரு காட்சி போதும் இவரின் நடிப்பிற்கு ஒரு சிவப்பு கம்பளம் வரவேற்கலாம். டாப்ஸி கிளாமர்+ஆக்டிங் என கிடைத்த வாய்ப்பில் சிக்ஸர் அடிக்கிறார்.
யார் என்ன செய்தால் என்ன? எப்படி நடித்தால் என்ன? நான் தான் முனி தொடரின் முதல் ஹீரோ என்று சில காட்சிகளில் வரும் கோவை சரளா நிரூபித்து விடுகிறார். லாரன்ஸுக்கு கவுண்டர் கொடுக்கும் போதும் சரி, அடி வாங்கி பயந்து ஓடும் நேரத்திலும் சரி, இவரை மட்டும் வைத்து இன்னும் எத்தனை முனி வேண்டுமானாலும் எடுக்கலாம். காமெடி குயின் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.
படத்தின் ஒளிப்பதிவு கலர்புல்லாக இருக்கிறது, 4 இசையமைப்பாளர் இருந்தும், பாடல்கள் ஏதும் மனதில் நிற்கவில்லை, தமனின் பின்னணி இசை மிரட்டல், ஆனால், சில காட்சிகளில் காதில் பஞ்சை வைத்து அடைத்து கொள்ள வேண்டும்.
க்ளாப்ஸ்
லாரன்ஸ் கையில் எடுத்த திகில்+நகைச்சுவை கான்செப்ட் இதிலும் டபூள் ஓகே ஆகியுள்ளது. இதில் கூடுதல் திகில் சேர்த்தது மிரட்டல். கோவை சரளா வரும் காட்சிகள் படத்திற்கு எக்ஸ்ட்ரா போனஸ் தான். இவரை லாரன்ஸை போல் அனைத்து இயக்குனர்களும் பயன்படுத்தினால், இனி ஆண் காமெடி நடிகர்களுக்கு கஷ்டம் தான்.
முந்தைய பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் ஏதோ ஒரு காட்சியில் எட்டிப்பார்க்கிறார்கள், எல்லோரும் பயந்து நம்மை சிரிக்க வைத்து செல்கின்றனர்கள். இதில் ஸ்ரீமன், மயில்சாமி, மனோபாலா செய்யும் கலாட்டாக்கள் சிரித்து சிரித்து முன் சீட்டை முட்ட வைக்கிறது.
பல்ப்ஸ்
லாரன்ஸ் எப்போதும் தன் படங்களை குடும்பமாக தான் பார்க்கும் படி எடுப்பார், அந்த வகையில் இந்த படத்தின் முதல் பாதியில் ஏன் முகத்தை சுழிக்கும் ஒரு சில வசனங்கள்?.
ப்ளாஷ்பேக் காஞ்சனா அளவிற்கு அழுத்தமாக இல்லை, இதை தொடர்ந்து வரும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி என்ன பணப்பிரச்சனை என்று தெரியவில்லை, ப்ளே ஸ்டேஷன் கேம் மாதிரி உள்ளது.
மொத்தத்தில் எப்படியோ திகில்+நகைச்சுவையுடன் கலாட்டா செய்து ‘லாரன்ஸ் எப்போது முனி-4 இயக்குவீர்கள்’ என்று ரசிகர்களை கேட்க வைத்து விட்டார்.
ரேட்டிங்-3/5 நன்றி cineulagam    No comments: