இலங்கைச் செய்திகள்

 பிர­தம நீதி­ய­ர­ச­ராக ஸ்ரீபவன்

 'கடூ­ழிய சிறை தண்­ட­னையாய் உணர்ந்தேன்' : ஓய்வு பெறும் நிகழ்வில் பிரதம நீதியரசர் ஷிராணி உருக்கம்

வட மத்திய மாகாண முதலமைச்சராக பேஷல ஜயரத்ன சத்தியப்பிரமாணம்


 பிர­தம நீதி­ய­ர­ச­ராக ஸ்ரீபவன்

31/01/2015 இலங்­கையின் 45 ஆவது பிர­தம நீதி­ய­ர­ச­ராக கன­க­ச­பா­பதி ஸ்ரீபவன் நேற்று வெள்­ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் சத்­தியப் பிர­மாணம் செய்து கொண்டார்.



இவர் இந்­நாட்டின் இரண்­டா­வது தமிழ் பிர­தம நீதி­ய­ர­ச­ராவார். முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் மொஹான் பீரிஸ் பதவி நீக்­கப்­பட்டு அவ்­வி­டத்­திற்கு கலா­நிதி ஷிராணி பண்­டா­ர­நா­யக்க மீண்டும் நிய­மிக்­கப்­பட்டார்.
பிர­தம நீதி­ய­ர­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட கலா­நிதி ஷிராணி பண்­டா­ர­நா­யக்க நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை தனது பத­வியை இரா­ஜி­நாமா செய்­த­தை­ய­டுத்தே கே.ஸ்ரீபவன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் பிர­தம நீதி­ய­ர­ச­ராக நிய­மிக்­கப்­பட்டார்.
கன­க­ச­பா­பதி ஸ்ரீபவன் 1952 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 29 ஆம் திகதி யாழ்­பா­ணத்தில் பிறந்தார் 1962 ஆம் ஆண்டு யாழ் இந்துக் கல்­லூ­ரியில் ஆரம்பக் கல்­வி­கற்ற ஸ்ரீபவன் 1974ஆண்டு இலங்கை சட்­டக்­கல்­லூ­ரியில் சேர்ந்து 1976ஆம் ஆண்டில் முதற்­தரச் சித்­தி­யுடன் சட்­டத்­த­ர­ணி­யானார்.
இத­னை­ய­டுத்து சில ஆண்­டுகள் சட்­டத்­த­ர­ணி­யாக சேவை­யாற்­றிய 1978 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 14ஆம் திகதி பதில் அரச சட்­டத்­த­ர­ணி­யாக இலங்கை சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் இணைந்து கொண்டார். 1979ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி அவ­ருக்கு நிரந்­தர நிய­மனம் வழங்­கப்­பட்­டது.1989ஆம் ஆண்டில் சிரேஷ்ட அரச சட்­டத்­த­ர­ணி­யாக பத­வி­யு­யர்வு பெற்ற ஸ்ரீபவன் 1996ஆம் ஆண்டு பெப்­ப­ர­வரி 22ஆம் திகதி சொலி­சிடர் ஜென­ர­லாக நிய­மிக்­கப்­பட்டார். 1992 ஆம் ஆண்டில் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் கைத்­தொழில் சட்­டத்­து­றையில் டிப்­ளோமா சான்­றி­த­ழையும் 1994ஆம் ஆண்டில் லண்டன் பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து சட்­டத்­துறை முது­மானிப் பட்­டத்­தையும் பெற்­றி­ருந்தார்.
2002 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற நீதி­ய­ர­ச­ராக நிய­ம­னம்­பெற்ற அவர் 2007ஆம் ஆண்டு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றத் தலை­வ­ராக பத­வி­யு­யர்வு பெற்­றி­ருந்தார். 2008ஆம் ஆண்டில் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் நிஹால் ஜய­சிங்­கவின் இடத்­திற்கு ஸ்ரீபவன் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார்.
2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஸ்ரீபவன் பதில் பிர­தம நீதி­ய­ர­ச­ராக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் நியமிக்கப்பட்டார்.இதேவேளை நிறைவேற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன கடந்த 9ஆம் திகதி இவரின் முன்பாகவே சத்தியப்பிரமாணம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி








 'கடூ­ழிய சிறை தண்­ட­னையாய் உணர்ந்தேன்' : ஓய்வு பெறும் நிகழ்வில் பிரதம நீதியரசர் ஷிராணி உருக்கம்

30/01/2015 இலங்கை ஜன­நா­யக சோஷ­லிச குடி­ய­ரசின் 43 ஆவது பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்க நேற்று நள்­ளி­ரவு 12.00 மணி­யுடன் தனது பத­வியில் இருந்து ஓய்வு பெறு­வ­தாக அறி­வித்தார். புதுக்­கடைஇ உயர் நீதி­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் நேற்று முற் பகல் இடம்­பெற்ற பிர­தம நீதி­ய­ர­சரின் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மான ஓய்­வு­பெறும் வைப­வத்­தி­லேயே கலா­நிதி ஷிராணி பண்­டா­ர­நா­யக்க இதனை தெரி­வித்தார்.



2013 ஜன­வரி மாதம் 13 ஆம் திகதி தனக்கு விதிக்­கப்­பட்ட சட்ட விரோத தடை கார­ண­மாக 746 நாட்கள் தன்னால் உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­ச­ரா­கவும்இ பிர­தம நீதி­யர்­ச­ரா­கவும் செயற்­பட முடி­யாது போன­தா­கவும் இந் நாட்­களில் தான் கடூ­ழிய சிறைத் தண்­ட­னையை அனு­ப­விக்கும் நில­மையை உணர்ந்­த­தா­கவும் இதன் போது 43 ஆவது பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டார நாயக்க மேலும் குறிப்­பிட்டார்.
பிர­தம நீதி­ய­ர­சரின் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மான ஓய்­வு­பெறும் இந்த வைப­வத்தில் உயர் நீதி­மன்றின் ஏனைய 10 நீதி­ய­ர­சர்­களும் கலந்­து­கொண்­டி­ருந்­த­துடன், மேன் முறை­யீட்டு நீதி­மன்ற நீதி­ய­ர­சர்­களும்இ மேல் நீதி­மன்றம்இ மாவட்ட நீதி­மன்றம்இ நீதிவான் நீதி­மன்­றங்­களை சேர்ந்த நீதி­ப­தி­களும் கல்ந்­து­கொண்­டி­ருந்­தனர்.
அத்­துடன் சட்ட மா அதிபர்இ சொலி­சிற்ற ஜென­ரல்கள்இ பிரதி சொலி­சிற்ற ஜென­ரல்கள் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டி­ருந்­த­துடன் சட்­டத்­த­ர­ணிகள் சம்ங்­கத்தின் உறுப்­பி­னர்கள் உள்­ளிட்ட உத்­தி­யோ­க­பூ­ரவ இ உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற சட்­டத்­த­ர­ணிகள் என நூற்­றுக்­க­ணக்க்­கானோர் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.
இதன் போது அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
கடந்த இரு வரு­டங்­க­ளாக அடிப்­ப­டை­யற்ற குற்றச் சாட்­டுக்­களை என்­மீது முன் வைத்­தனர். அது­மட்­டு­மன்றி எனது கணவர் பிரதீப் காரி­ய­வசம்இ மகன் ஷவீன் மற்றும் எனது இளைய சகோ­தரி ரேனுகா ஆகி­யோரை பல்­வேறு விதங்­களில் இன்­னல்­க­ளுக்கு உட்­ப­டுத்­தினர். என்னை இலஞ்ச ஊழல் திணைக்­க­ளத்­திற்கும், மஜிஸ்­திரேட் நீதி­மன்­றத்­துக்கும் இழுத்துச் சென்­றனர். என்னை குற்­ற­மற்­றவர் என நிரூ­பிக்க நான் அங்­கெல்லாம் செல்­ல­வேண்­டி­யி­ருந்­தது.
இதன் போது என்­னுடன் இருந்த சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் தலைவர் உபுல் ஜய­சூ­ரிய உள்­ளிட்ட அந்த சங்­கத்தின் உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஏனைய அனைத்து சட்­டத்­த­ர­ணிகள் மற்றும் பொது­மக்­க­ளுக்கும் நான் இந் நேரத்தில் நன்றி தெரி­விக்­கின்றேன்.
746 நாட்­க­ளுக்கு பின்னர் நான் மீண்டும் கட­மை­க­ளுக்கு சமூகம் தந்­துள்ளேன். என்னை சட்­டத்­துக்கு விரோ­த­மான முறையில் செயற்­பட்டு பிர­தம நீதி­ய­ர­ச­ராக செயற்­ப­டு­வதை தடுத்­தனர். எனினும் பொது­மக்கள் என்­னையே நீதி­யர்­ச­ராக நம்­பினர்.
1996 ஆம் ஆண்டு நான் முதன் முத­லாக நீதி­ய­ர­ச­ராக நிய­மனம் பெற்றேன். அன்ரு முதல் இன்று வரை 16 வரு­டங்கள் நான் நீதி­யர்­ச­ராக கட­மை­களை தொடர்ந்­துள்ளேன். 2011 ஆம் ஆண்டு நான் உயர் நீதி­மன்றின் பிர­தம நீதி­ய­ர­ச­ராக நிய­மனம் பெற்றேன். 2013 ஜன­வரி மாதம் 13 ஆம் திகதி முதல் எனக்கு எதி­ரான நடவ்­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. எனது கட­மை­களை முன்­னெ­டுத்துச் செல்ல சட்ட விரோ­த­மான முறையில் எனக்கு தடைகள் விதிக்­கப்­பட்­டன.
இந்த இரண்டு வருடக் காலப்­ப­கு­தியில் அதா­வதுஇ 746 நாட்­களில் நான் மிகவும் புண்­ப­டுத்­தப்­பட்டேன். அந்த இரு வரு­டங்­க­ளிலும் எவ்­வித ஆத­ரமும் இல்­லாத குற்­றச்­சாட்­டுக்கள் எனக்­கெ­தி­ராக முன் வைக்­கப்­பட்­டன. கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையை அனு­ப­விப்­பது போன்று ஒரு அழுத்­த­து­ட­னேயே அவற்­றுக்கு நான் முகம் கொடுக்க வேண்­டி­யி­ருந்­தது. இப்­போது அந்த காலம் முடிந்­து­விட்­டது. நீதி நிலை­நாட்­டப்­பட்­டுள்­ளது.
நான் தனிப்­பட்ட விட­யங்­க­ளுக்­காக இந்த இரு வரு­டங்­களும் போரா­ட­வில்லை. நீதி­மன்­றத்தின் சுயா­தீ­னத்­தன்­மையை பாது­காப்­ப­தற்­கா­கவே இந்த போராட்­டத்தை நான் முன்­னெ­டுத்தேன். அதன்­படி ஆரம்­பத்­தி­லி­ருந்து என்­னுடன் கைகோர்த்­தி­ருந்த, அனி­யா­யத்­துக்கு எதி­ராக எம்­முடன் சேர்ந்து குரல் எழுப்­பிய அத்­தனை பேரையும் நன்­றி­யுடன் நான் நினைவு கூறு­கின்றேன்.
நீதிச் சேவைக்குள் தகு­தி­யா­னவ்ர்­களே உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் நான் உறு­தி­யாக இருக்­கின்றேன். நீதிச் சேவையின் சுயா­தீனம் பேணப்­ப­ட­வேண்டும். நான் இன்று இருக்­கலாம். நாளை இல்­லாமல் போகலாம். எனினும் எனது நாட்டு மக்­க­ளுக்கு நீதி கிடைக்க வேண்டும். கடந்த இரு வரு­டங்­களில் பல்­வேறு பாதிப்­புக்கள் நீதிச் சேவையில் ஏற்­பட்­டி­ருக்­கலாம். எனினும் எனது நாட்டு மக்களுக்கு சுயாதீனமான நீதிச் சேவையை கிடைப்பதை நாம் உறுடி செய்ய வேண்டும்.
அந்த வகையில் நீதிமன்ற சுயாதீனத்துக்காகவே இந்த இரு வருடங்கள் போராடிய நான் இன்னும் ஒன்பது வருடங்கள் என்னால் பதவியில் இருக்க முடியுமாக இருந்த போதிலும் ஓய்வுபெறுகின்றேன். இதனையும் நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையை கருத்தில் கொண்டே நான் முன்னெடுக்கின்றேன். என்னை தொடர்ந்து புதிய நீதியரசராக நியமனம் பெற உள்ள கே. ஸ்ரீபவனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.என குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி







வட மத்திய மாகாண முதலமைச்சராக பேஷல ஜயரத்ன சத்தியப்பிரமாணம்

28/01/2015 வட மத்திய மாகாண முதலமைச்சராக பேஷல ஜயரத்ன வடமத்திய மாகாண  ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 



நன்றி வீரகேசரி

No comments: