அதிசயம் - நோர்வே நக்கீரா

.


ஒளியின்றிப் பார்த்தேன்
ஒசையின்றின் கேட்டேன்
உணவின்றி உண்டேன்
தொடுகையின்றி உணர்ந்தேன்
வாடகையின்றி வாழ்ந்தேன்
உயிருக்குள் உயிரானேன்
அதிசயம்கள் அனைத்தும் 
தாயுள் மட்டும் தான்
தாயே அதிசயம் தான்

கருவறையுள் தான் கடவுள்
தாயெனும் கடவுளினுள் கருவறை
அதிசயங்கள் அனைத்தும்
தாயுள் மட்டும்தான்
தாயே அதிசயம் தான்


என்னைத் தொடாமல் தொட்டவளும்
பார்க்காமல் இரசித்தவளும்
இதயத்தால் தாளம் தட்டி
தூங்கவைத்தவளும் 
என்னைக் காணாமலே சுமந்து 
சுகம் தந்தவளும் தாய்
இது தாய்மையின் அதிசயம் 
தாயே அதிசயம் 

நான் சுகமாகத் து}ங்க
து}ங்கம் தொலைத்தவள்
அழாது இருக்க
அழுதழுதே வாழ்வைக்கழித்தவள்
பசியாதிருக்க
தான் பட்டிணி கிடந்தவளை
பசிக்க விட்டுவிட்டு
வெளிநாட்டில் இருந்து
கடிக்க முடியாத காசையே அனுப்பினேன்.

நான் நோயானபோது
தான் பத்தியம் காத்தாள்
விழுந்தபோது தாங்கிப்பிடித்தாள்
அடியெடுத்து வைக்க
தடிகொடுத்து நடந்தாள்.
அவள் தடிபிடித்து நாடக்க
தடிதொலைத்து ஓடினேன்
காசுக்கோட்டை தேடி
வெளிநாட்டில் வாழ்க்கை நாடி

அன்பாய் ஆசையாய்
உன்வயிற்றை தடவியபோதே
காலால் உதைத்துப் பதிலளித்தவனிடம்
வேறு எதை எதிர்பார்ப்பாய்?

நீ இழுத்த மூச்சையே 
சுவாதித்தேன்
மூச்சையாகிப்போனால்
யாரிடம் யாசிப்பேன்
அதிசயம் அனைத்தும் 
தாயுள் மட்டும் தான்
தாயே நீ அதிசயம் தான்

No comments: