அனகோண்டாவுக்கு இரையாகப்போவதாக அமெரிக்கர் அறிவிப்பு

.
anaconda


டி.வி. நிகழ்ச்சிக்காக அனகோண்டாவுக்கு இரையாகப்போவதாக அமெரிக்கர் அறிவிப்பு விலங்கியல் ஆர்வலர்கள் கண்டனம்

அனகோண்டா பாம்புக்கு இரையாகப்போவதாக அமெரிக்க இயற்கை ஆர்வலர்யயெஉழனெய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதற்கு விலங்கியல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
உலகில் வாழும் மிகப்பெரிய பாம்பு இனங்களில் அனகோண்டா பாம்புகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. தென் அமெரிக்காவின் வெப்ப மண்டல பகுதிகளை பூர்வீகமாக கொண்ட இந்த பாம்புகள்இ அமேசான் காடுகளில் அதிகமாக காணப்படுகின்றன.

அமெரிக்காவை சேர்ந்த இளம் சாதனையாளரான பால் ரோசாலிஇ அமேசான் காடுகளில் பல ஆண்டுகளாக உயிரினங்கள் மற்றும் இயற்கையை ஆய்வு செய்து வருகிறார். இவர்இ சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு விலங்கின ஆர்வலர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
‘உயிரோடு இரையாதல்’


அதாவதுஇ உயிரோடு இரையாதல் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக பெரிய அனகோண்டா பாம்பு ஒன்றுக்கு உயிரோடு இரையாவேன் என்றும்இ இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைக்காட்சியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 7–ந் தேதி ஒளிபரப்பாகும் என்றும் பால் ரோசாலி அறிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்துவதற்காக சுமார் 30 வினாடி ஓடும் வீடியோ காட்சி ஒன்றையும் டுவிட்டர் இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சியில் அவர்இ ‘என் பெயர் பால் ரோசாலி. நான்இ ‘அனகோண்டாவால் உயிரோடு விழுங்கப்பட்ட முதல் நபர்’ என்ற பெயருக்கு சொந்தக்காரனாகப்போகிறேன்’ என்று கூறியுள்ளார்.

தடைசெய்ய வேண்டும்

மேலும் ஒரு பெரிய அனகோண்டா பாம்பு போன்ற மாதிரியை 7 பேர் பிடித்திருக்கஇ பிரத்யேக உடையணிந்து கொண்டு பாம்பின் வயிற்றுக்குள் பால் ரோசாலி செல்வது போன்ற வீடியோ காட்சியும் (டீசர்) வெளியிடப்பட்டு உள்ளது.

பால் ரோசாலியின் இந்த அறிவிப்பு மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த செயலால் பாம்புக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று விலங்கியல் அமைப்பினர் (பீட்டா) கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பால் ரோசாலி ஒரு போலி வன ஆர்வலர் என கூறியுள்ள அந்த அமைப்புஇ இந்த நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனல் தடை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
காயப்படுத்தமாட்டேன்

எனினும்இ இந்த நிகழ்ச்சியால் பாம்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என பால் ரோசாலி கூறியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் இணையதளத்தில் கூறியுள்ள அவர்இ ‘நான் எந்த ஒரு உயிரினத்தையும் காயப்படுத்தமாட்டேன். அது எப்படி என்பதை ‘உயிரோடு இரையாதல்’ நிகழ்ச்சியை பார்ப்பதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்’ என்று கூறியுள்ளார்.

பால் ரோசாலியின் ‘உயிரோடு இரையாதல்’ அறிவிப்புஇ உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

nantri : தினத்தந்தி

No comments: