காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் எல்லாள காவியத்திற்கு மூன்று விருதுகள்

.
எல்லாள காவியத்திற்கு மூன்று விருதுகள்


காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் எல்லாள காவியத்திற்கு இவ்வாண்டின் சிறந்த காவியத்திற்கான மூன்று விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை யாழ் இலக்கிய வட்டப் பரிசில். எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய தமிழியல் விருதுää கிழக்கு மாகாண நூல்தேர்வுப் பரிசில் என்பனவாகும்

பிரபல நாவலாசிரியர் செங்கை ஆழியானின் ஈழராஜா எல்லாளன் என்ற புதினத்தை கதைக்கருவாகக் கொண்டு வரலாற்றுக்கமைய கற்பனைவளங் கூட்டி 1464 பெரும்பாலும் விருத்தப் பாக்களினால் படைக்கப்பெற்றது இக்காவியம். இது நூலாசிரியரின் பத்தாவது காவியப் படைப்பாகும். இந்நூலுக்கு வடமாகாண முதலமைச்சர் மாண்புமிகு சீ.வி. விக்னேஸ்வரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளார். மூத்த கவிஞர் பன்மொழிப் புலவர் சோ.பத்மநாதன் அவர்கள் பாயிரம் பாடியுள்ளார். பிரபல ஓவியர் ஆசைஇராசையா அவர்கள் அட்டைப்பட ஓவியத்தினை வரைந்துள்ளார்.

No comments: