தமிழ் சினிமா -- ஜெய்ஹிந்த்-2

ஜெய்ஹிந்த் என்ற மாபெரும் வெற்றி படத்தின் அடுத்த பாகமாக அர்ஜுன் எடுக்க நினைத்திருக்கும் படம். ஆனால், அந்த படத்திற்கும், இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. முதல் பகுதியின் வெற்றியின் காரணமாக அந்த ப்ராண்ட் டைட்டிலை பயன்படுத்தி வழக்கம் போல் நாட்டிற்கு கருத்து சொல்லும் ஒரு படத்தை இயக்கிவுள்ளார் அர்ஜுன். 


இன்றைய சமூகத்தில் ஊழல் தலை விரித்து ஆடுகிறது. இதை தடுக்க வேண்டும் என்றால் அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டும், இங்கு அந்த படிப்பிலேயே ஊழல் நடக்க அதை தன் பாணியிலிலேயே அர்ஜுன் பழிவாங்குகிறார். 

படத்தின் கதை 

கராத்தே பள்ளி நடத்தி வரும் அர்ஜுன், பணம் கொடுத்து வேலையில் சேர விருப்பமில்லாமல் நேர்மையான முறையில் வாழ வேண்டும் என்று நினைப்பவர். அவர் வசிக்கும் ஏரியாவிலுள்ள ஏழை தொழிலாளி ஒருவரது மகளுக்கு பெரிய பள்ளி ஒன்றில் படிக்க இடம் கிடைக்கிறது. 


ஆனால், அந்த பள்ளி நிர்வாகத்தினர் கேட்ட பணத்தை குழந்தையின் பெற்றோர்களால் கட்ட முடியவில்லை. இதனால் மனவேதனை அடைந்து ஒட்டுமொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதை பார்த்து வெகுண்டு எழும் அர்ஜுன், நாட்டில் உள்ள அத்தனை பள்ளிகளையும் அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும் என்று மீடியாக்களுக்கு பேட்டி அளிக்க, அதற்கு மக்கள் மத்தியிலும் பெரும் ஆதரவு கிடைக்கிறது. 


இதனால் பதறிபோகும் தனியார் பள்ளி அதிபர்கள் ஒன்று சேர்ந்து அர்ஜுனை ஒழித்துக்கட்ட முயற்சிக்கின்றனர். இதிலிருந்து தப்பித்து அர்ஜுன் எப்படி வெற்றி பெறுகிறார் எனபதே ‘ஜெய் ஹிந்த்-2’வின் கதை. 

பலம் 

படத்தின் பலமே ஒன்லி ஒன் அர்ஜுன் மட்டும் தான். திரைக்கதையில் இடை இடையே வரும் திருப்பங்களும், ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ள சண்டை காட்சிகளும், எச்.சி.வேணுகோபாலின் கலர்புல் ஒளிப்பதிவு. பாடல்கள் எடுத்த விதம் அருமை. 


பலவீனம் 

காமெடி காட்சிகள் மிகவும் சோதிக்கிறது. படத்தின் கதாநாயகிகள் சுர்வின் சாவ்லா, சிம்ரன் கபூர் இருவருமே கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுகின்றனர், மற்றப்படி நடிப்பு எத்தனை கிலோ என்று கேட்பார்கள் போல. மொத்தத்தில் டைட்டிலை மட்டும் கம்பீரமாக வைத்து திரைக்கதையில் ஏமாற்றிவிட்டார் ஆக்‌ஷன் கிங். 
நன்றி cineulagam

No comments: