உலகச் செய்திகள்


ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு தாக்குதல் 10 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி

நைஜீரிய பாடசாலையை இலக்குவைத்து தாக்குதல்: 47 பேர் பலி:79 பேர் காயம்

ஆசிய - பசுபிக் பிராந்திய சுதந்திர வர்த்தக திட்டத்திற்கு அபெக் நாடுகள் ஆதரவு


ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு தாக்குதல் 10 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலி


 கிழக்கஆப்கானிஸ்தானில் ன்று திங்கட்கிழமை இடம்பெற்ற இரு குண்டு தாக்குதல்களில் குறைந்தது 10 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியாகியுள்ளனர். 
லோகர் மாகாணத்தில் பொலிஸ் தலைமையகமொன்றை  இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 7 உத்தியோகத்தர்கள் பலியாகியுள்ளனர். மேற்படி தற்கொலைக்குண்டுதாரி பொலிஸ் சீருடையணிந்து வந்ததாக கூறப்படுகிறது. 
அதேசமயம் நன்கர்ஹார் மாகாணத்தில் ஜலாலா பாத்திற்கு அண்மையில் தூர இருந்து செயற்படுத்தும் முறைமை மூலம் குண்டொன்று வெடிக்க வைக்கப்பட்டதில் குறைந்தது 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியாகியுள்ளனர். 
மேற்படி இரு குண்டுத் தாக்குதல்களையும் தாமே நடத்தியதாக தலிபான் போராளிகள் உரிமை கோரியுள்ளனர். 
அதே சமயம் ஆப்கான் தலைநகர் காபூலில் பல்கலைக்கழகமொன்றிற்கு அண்மையிலுள்ள பூஞ்சாடியில் மறைத்து வைக்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்ட  மூன்றாவது குண்டு வெடிப்புக்கு யார் காரணம் என கண்டறியப்படவில்லை. நன்றி வீரகேசரி 

நைஜீரிய பாடசாலையை இலக்குவைத்து தாக்குதல்: 47 பேர் பலி:79 பேர் காயம்

11/11/2014 வட­கி­ழக்கு நைஜீ­ரி­யாவில் பாட­சாலை கூட்­ட­மொன்றை இலக்கு வைத்து திங்­கட்­கி­ழமை நடத்­தப்­பட்ட குண்டுத் தாக்­கு­தலில் குறைந்­தது 47 பேர் பலி­யா­ன­துடன் 79 பேருக்­கும் ­அ­தி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

யொப் மாநி­லத்தில் பொரிஸ்கம் நக­ரி­லுள்ள பாட­சா­லையில் அதி­பரின் தின­சரி உரையை செவி­ம­டுக்க மாண­வர்கள் கூடி­யி­ருந்த போதே குண்டு வெடித்­துள்­ளது.
மேற்­படி குண்டு வெடிப்பில் பல மாண­வர்கள் உடல் சிதறி பலி­யா­கி­யுள்­ள­தா­கவும் காய­ம­டைந்­த­வர்கள் குறிப்­பிட்ட பாட­சா­லை­யி­லி­ருந்து 100 மீற்றர் தொலை­வி­லுள்ள மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­தாகவும் கூறப்­ப­டு­கி­றது.

இந்தத் தாக்­கு­த­லுக்கு இது­வரை எந்­த­வொரு குழுவும் உரிமை கோராத போதும் போகோ ஹராம் போரா­ளி­களே காரணம் என நம்­பப்­ப­டு­கி­றது.
மேற்­படி தாக்­கு­த­லா­னது போகோ ஹராம் போராளி குழுத் தலைவர் அபூ­பக்கர் ஷிகயு தோன்றும் வீடியோ காட்­சி­யொன்று வெளி­யி­டப்­பட்­ட­தை­ய­டுத்து இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
மேற்­படி வீடியோ காட்­சியில் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தையொன்றுக்கு அபூபக்கர் ஷிகயு நிராகரிப்பை தெரிவித்திருந்தார்.  நன்றி வீரகேசரி 
ஆசிய - பசுபிக் பிராந்திய சுதந்திர வர்த்தக திட்டத்திற்கு அபெக் நாடுகள் ஆதரவு

12/11/2014 ஆசிய - பசுபிக் பிராந்­தி­யத்தில் சுதந்­திர வர்த்­த­கத்தை முன்­னெ­டுப்­ப­தற்­காக சீனாவால் முன்­வைக்­கப்­பட்ட திட்­டத்­திற்கு பிராந்­திய தலை­வர்கள் செவ்­வாய்க்­கி­ழமை ஆத­ர­வ­ளித்­துள்­ளனர்.


சீனாவின் பீஜிங் நகரில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஆசிய – பசுபிக் பொரு­ளா­தார கூட்­டு­றவு (அபெக்) உச்சி மாநாட்டின் போதே மேற்­படி திட்டம் தொடர்பில் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.

மேற்­படி கூட்­டத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா, சீன ஜனா­தி­பதி ஸி ஜின்பிங், ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின், ஜப்­பா­னிய பிர­தமர் ஷின்ஸோ அபே, அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் டோனி அப்பொட், மலே­சிய பிர­தமர் நஜிப் ரஸாக், சிங்­கப்பூர் பிர­தமர் லீ ஹஸியன் லூங், தாய்­லாந்து பிர­தமர் பிரயுத் சான் – ஒ –- சான் உள்­ள­டங்­க­லான அங்­கத்­துவ நாடு­களின் தலை­வர்கள் பங்­கேற்­றனர்.
ஆசிய – பசுபிக் பொரு­ளா­தார கூட்டுறவு அமைப்பில் 21 நாடுகள் அங்­கத்­துவம் வகிக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
மேற்­படி மாநாட்டின் போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவும், ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டினும் 3 தட­வைகள் சந்­திப்பை மேற்­கொண்டு உரை­யா­டலில் ஈடு­பட்­டனர். அவர்­க­ளது உரையாடலின் போது சிரியா, உக்ரேன் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நன்றி வீரகேசரி 

No comments: