விழுதல் என்பது எழுகையே பகுதி 26 பொலிகை ஜெயா - சுவீஸ்

.
சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா  அவர்கள் பற்றிய அறிமுகம்

பொதுவாக இவர் ஒரு இலக்கியவாதி.முக்கியமாக அவர் ஒரு கட்டுரையாளர்.அதன் பின்பே சிறுகதை,கவி வடிப்பவர்,   அவரது கட்டுரைகள் இலங்கை வீர கேசரி,ஜீவநதி,புதிய பூமிஇஇந்தியா இனிய நந்தவனம்இகனடா உதயன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தன சிறு கதைகள் சில சுவிஸ் தமிழ் ஏடு, வீரகேசரி ஜீவநதி ஆகியவற்றில் பிரசுரமாகியன.
கவிதைகள் பல ஐரோப்பிய வானொலிகளில் வெளிவந்தன அத்தோடு வானொலிகளில் அரசியல் களத்தில் பங்கெடுத்துள்ளார்.
சுவிஸில் பல பட்டிமன்றங்களில் பேச்சாளராகவும் தலமை ஏற்றும் உள்ளார்.
முல்லையமுதன் டழனெழn டைஉ வானொலியில் நடாத்தும் இலக்கியப்பூக்கள் 
நிகழ்வில் அண்மைக்காலமாக பங்குபற்றுகிறார்.
2010 பாரிசிலும்,2014 ஜெர்மன் காம் ல் நடைபெற்ற உலக தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டில் பங்கு பற்றி கட்டுரைகள் சமர்ப்பித்து தமிழ் ஆய்வரங்கத்தில் பங்கெடுத்து தமிழ் ஆய்வு  செய்தார்.

தகவல் தொகுப்பு :பண்ணாகம் இக.கிருட்ணமூர்த்தி (எ.வி.வி)
ஏலையா முருகதாசன் (எ.வி.வி)

கதை தொடர்கிறது

தாயுடனும் காதலி கலாவுடனும் கதைத்த பின் அதிகாலை மூன்று மணிபோல் தூக்கத்திற்கு சென்ற சீலனை தூக்கம் அணைக்க மறுத்தது.படுக்கையில் சிந்தனை ஓட்டங்களை "தெறித்திட்ட முத்துக்களைப்போல சிதறவிட்டு" புரண்டு புரண்டு படுத்து தூக்கத்திற்கு முயன்றான்.


ஆனால் அவனால் தூங்க முடியவில்லை. அவனது மனமோ வேதனையில் துடிக்க பஞ்சணையும் நொந்தது அவனுக்கு.

தாய் தன்னை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக பட்ட கடன் குடியிருக்கும் வீட்டு காணியின் அடகை வட்டி முதலுமாக செலுத்தி மீட்க வேணும் சகோதரியின் படிப்பு செலவு கொழும்பு வெள்ளவத்தையில் வாடகைக்கு பெறவிருக்கும் வீட்டின் மாதாந்த  வாடகை அத்தோடு அதற்கு செலுத்த வேண்டிய முற்பணம்இ இவற்றோடு தான் கற்கவுள்ள ஜேர்மன் ஆங்கில கோசுக்கான செலவு வேறு. 

இயற்றை எல்லாம் சமாளிக்க ஒரு தொகைப்பணம் ஒவ்வொரு மாதமும் கையில் புரளவேணுமே.அதற்குரிய பணத்தை எந்த வழிமுறையை கையாண்டு சமாளிப்பது என ஏங்கினான்  தவித்தான்.

உலக நாடுகளை எடுத்துக்கொண்டால் "சுவிஸில் வாழ்க்கை!
தரம் மிக்கது. ஆனால் வாழ்க்கை செலவோ அதிகமானது". இப்படிப்பட்ட ஒரு நாட்டில் இரு வேலை பாராது எமக்குள்ள அகபுற செலவுகளை இலகுவில் சமாளித்து விட முடியாது.

தான் தற்போது பார்த்திடும் மக்டொனல்ஸ் வேலையில் பெறும் ஊதியம் ஒருபக்க செலவுக்கே போதக்கூடியது.ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் எப்படி முக்கியமோ அதுபோல இரண்டாவது தொழில் முக்கியமாக இருந்தது சீலனுக்கு.

இரண்டாவது வேலை பார்க்கும் சர்ந்தர்ப்பம் கிடைக்குமானால்!தற்போதைய வேலை நேரம் பொருந்தி வராதே என்ற மறு பிரச்சனை தொக்கி நின்றது. "நின்ற வெள்ளத்தை வந்த வெள்ளம் அள்ளி சென்றது போல" ஆகிவிடாமல் பார்க்க வேண்டிய இக்கட்டான நிலையும் சீலனுக்கு.

இருந்த போதும் அப்துல் கலாம் சொன்னது போன்று "நல்லது நடக்க கனவு காணுங்கள் அது நிறைவுறும்" கண்ணதாசன் சொன்னது போல "நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் அது தெய்வமாக காட்சி தரும்" இவற்றை விட அவனது யாழ் பல்கலைக்கழக விரிவுரை ஆசான் குமாரவேலு சொன்னது போல "முயற்சி திருவினையாக்கும்" போன்ற வேத வாக்குகளை மனதில் நிறுத்திஇ மனம் தளராது முயற்சி செய்வோம் என்ற முடிவுக்கு வந்தான்.
மறுநாள் சீலன் மக்டொனால்ஸ் வேலைக்கு செல்வதற்காக தனது வாசல் கதவை திறந்து வெளியில் வந்த போது! வானம் இருட்டி தமக்குள் குழம்பியபடி முகில்கள் மெல்ல மெல்ல நடை போட்டு அசைந்தன.பனிமலைகளுக்கு விடைகூறி அங்கிருந்து புறப்பட்ட இளம் காற்று சீலன் அணிந்திருந்த அழகு மிக்க ரீ சேட்டை ஊடறுத்து அவனுக்கு குளிரை உணர்த்தி நின்றன.

அவன் மேல்நோக்கி அண்ணார்ந்து வானத்தை ஒரு தரம் நோக்கினான்.மழை பெய்வதற்கான அறிகுறிகளை அவனது கண்கள் கண்டு கொண்டன.

தனது வீட்டிலிருந்து சிறிது தூரம் நடந்து சென்றால் அவன் போய் சேர வேண்டிய இடத்துக்கான பேரூந்து நிலையத்தை அடைந்து விடலாம் இதே நேரம் வானம் சிறு சிறு துளிகளாக தனது கண்ணீரை தூறல் வடிவில் சிந்த தொடங்கியது. அவனோ தனது கால் பாதங்களின் இடைவெளியை மேலும் அகட்டி நடையின் வேகத்தை அதிகரித்தான்.அவனிடம் குடை வேறு இல்லை.

சுவிஸில் சொல்லாமல்கொள்ளாமல் காற்று வீசிடும் மழை பெய்திடும்.இவற்றை நாம் புரிந்து கொள்வது கடினமாகவே இன்னும் தோன்றுகிறது.

சீலனின் நடையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்கஇ வானத்தின் தூறல் வேகமும் அதிகரித்து. ஈற்றில் அவனது நடை வேகத்தை தூறல் வேகம் வென்று மழையாக நிலத்தை முத்தமிட்டது.

சிறிது நனைந்தபடி பஸ் தரிப்பிடத்தினுள் நுழைந்து தன் கைக்குட்டையால் நெற்றியிலிருந்து நாடி வரை துடைத்துவிட்டு தனது தலையை துவட்டும் வேளை! அவன் செல்ல வேண்டிய பஸ்சும் வந்து நின்றது.


பஸ்ஸினுள் கூட்டம் அதிகமாக இருந்தது.பஸ்ஸின் இருக்கை கம்பி வளையத்தை தான் விழுந்து விடாதபடி ஆதாரமாக பிடித்தவாறுதான் இறங்க வேண்டிய இடத்தை நோக்கினான்.
ஆனால் மழையோ தனது நீரால் பஸ்ஸின் சாரளத்தை ஆக்கிரமித்து வெளியிடங்களை பஸ்ஸினுள் இருந்து பார்க்க முடியாதவாறு யாழ் ஏலோல சிங்கன் போல தடைபோட்டு நின்றது.

பஸ் எங்கு செல்கிறது எந்த தரிப்பிடத்தில் நிற்கிறது என்பதனை அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை.இருந்த போதும்  பஸ்ஸினுள் உள்ள திரை பஸ் செல்லும் இடத்தையும் தரிப்பிடத்தையும் பறைசாற்றியபடி இருந்தது.

சில வேளை இயற்கையை கூட மனிதன் தனது மூளை சக்தியால் வெல்லுகிறான்.ஆனால் பலமுறை இயற்கையிடம் மனிதன்  தோற்று விடுகிறான்.
பஸ்ஸால் இறங்கி மக்டொனால்ஸ் உடுப்பு மாற்றும் அறைக்கு சென்று தனது வேலைக்கான உடுப்பை மாற்றியபின் இன்னும் வேலை ஆரம்பிக்க 20 நிமிடங்கள் இருந்த படியால் ஒரு கோப்பியை அடித்து எடுத்து வந்து உழியர் இளைப்பாறும் அறையில் மேசைமீது வைத்து விட்டு  கலக்கமான முகத்துடன் கோப்பியை அருந்தாது இருந்தான்.

அதே வேளை  தனது இளைப்பாறும் 30 நிமிட நேரத்தில் பானுவும் ஒரு கோப்பியுடன் அங்கு வந்தாள்.சீலன் சோகமே உருவாக கண்கள் கலங்கியபடி இருப்பதை கண்டு அவனருகில் உட்கார்ந்தாள்.

தொடரும் 27
----------------------------------------------------------------------------------------

No comments: