ஜனாதிபதியினால் மூன்றாவது தடவை போட்டியிட முடியும் :உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையில் 10 நீதியரசர்கள் ஏகமனதான தீர்மானம்
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் ராஜித சேனாரட்னவின் இணைப்புச் செயலாளர் பொன். இராமலிங்கம் காலமானார்!
ஒக்டோபர் மாதம் 3,700 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு
ஜனாதிபதியினால் மூன்றாவது தடவை போட்டியிட முடியும் :உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையில் 10 நீதியரசர்கள் ஏகமனதான தீர்மானம்
11/11/2014 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்று உயர்நீதிமன்றம் ஏகமனதாக ஆலோசனை வழங்கியுள்ளதாக பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி. சில்வா தெரிவித்தார்.
அந்தவகையில் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தின் 10 நீதியரசர்களும் ஏகமனதாக தீர்மானித்து அறிவித்துள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று மாலை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா இதனை அறிவித்தார்.
இது இவ்வாறு இருக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்று உயர்நீதிமன்றமும் அறிவித்துள்ள விடயத்தை உற்பத்தி திறன் அபிவிருத்தி அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தும் உறுதிபடுத்தியுள்ளார்.
ஏறாவூரில் இன்று நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பஷீர் சேகுதாவூத் ஜனாதிபதியினால் மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள தீர்க்கமான காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் ராஜித சேனாரட்னவின் இணைப்புச் செயலாளர் பொன். இராமலிங்கம் காலமானார்!
12/11/2014 புலத்சிங்கள பிரதேச சபையின் முன்னால் உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னால் களுத்துரை மாவட்ட அமைப்பாளரும் மற்றும் இ.தொ.கா. மதுகமை பிராந்திய முன்னால் உப செயலாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் ராஜித சேனாரட்னவின் இணைப்புச் செயலாளரும் பிரபல சமூக சேவையாளருமான பொன். இராமலிங்கம் காலமானார்.
அமரர் பொன்.இராமலிங்கம் அவர்கள் கடந்த சில மாதங்களாக நோய் ஏற்பட்ட நிலையில் நேற்று(11) காலமானார். இறக்கும்போது இவருக்கு 73 வயதாகும்.
அமரர் பொன்.இராமலிங்ம் அவர்கள் பதவி வகித்த காலங்களில் புலத்சிங்கள பிரதேசத்திற்கு மட்டுமல்லாது இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை போன்ற மாவட்டங்களில் உள்ள மலையக தோட்டப் பகுதிக்கு பல்வேறு சமூக தொண்டுகளை புரிந்து அப் பகுதி மலையக மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளார்.
அத்தோடு இ.தொ.காவின் முன்னால் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அமரர் ஏ.எம்.டி.இராஜன் மற்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் உட்பட பல தமிழ் சிங்கள அரசியல் வாதிகள் மத்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்கள் மூலமாக மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்துள்ளார். இறுதியாக இறக்கும் வரை இவர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் ராஜித சேனாரட்னவின் இணைப்புச் செயலாளராக பதவி வகித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அண்ணாரின் புதவுடல் மக்கள் அஞ்கலிக்காக புலத்சிங்களவல் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு நாளை 3.00 மணிக்கு ஹொரனை கத்தோலிக்க தேவஸ்தான மயாணத்தில் இறுதி கிரிளைகள் இடம்பெறும். நன்றி வீரகேசரி
ஒக்டோபர் மாதம் 3,700 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு
12/11/2014 இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் 3,700 பேர் டெங்குக் காய்ச்சலுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு குறிப்பிடுகிறது

இருப்பினும், இவ்வருத்தின் ஒக்டோபர் மாதம் வரையான காலப் பகுதியில் 35,842 பேர் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 32,063 நோயாளர்களே டெங்குக் காய்ச்சலுக்கு ஆளாகியிருந்தனர்.
அத்துடன், மேல்மாகாணத்திலும் கடந்த வருடத்தின் இதே காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 16,540 போ வரை மேல் மாகாணத்தில் பாதிக்கப்பட்டிருந்தனர் இவ்வாண்டில் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 20,235 பேர் டெங்குக்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கமைய, கொழும்பு மாவட்டதில் 11,000க்கு அதிகமனோர் டெங்குக் காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளமை பதிவாகியுள்ளதாக தொற்று நோய்த்தடுப்புப் பிரிவின் தகவல் தெரவிக்கிறது. இவ்வெண்ணிக்கையில் மொறட்டுவை,கல்கிஸ்சை, தெஹிவளை. மஹகரகம, கொலன்னாவை ஆகிய பிரதேசங்களில் 9,000 பேரும் கொழும்பு நகர் பகுதியில் 2700 பேரும் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் தொடச்சியாக நிலவிய மோசமான வரட்சியான காலநிலையின் பின்னர் ஏற்பட்ட மழைவீழ்ச்சியைத் தொடாந்து நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
நிறுவன வளாகங்களையும் வீட்டுச் சூழலையும் சுத்தமாக வைத்திருப்பதுடன் நுளம்புகள் காணப்படும் இடங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளிலும் உரியர்வர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் காய்ச்சல் இருநாட்களுக்கு மேல் நீடித்தால் அரச வைத்தியாசலைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் மக்களை அறிவுறுத்தும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு டெங்கு நுளம்புகளை அழிக்கும் நடவடிக்கைகள் தொடாச்சியாக டெங்கு ஒழிப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment