காணாமல் போகும் பாரம்பரிய விளையாட்டுகள் - ச. சுந்தர பெருமாள்.

.
     
                           
  பாட்டுக்கு ஒரு புலவன்  பாரதி  ஓடி விளையாடு பாப்பா  என்று பாடி மறைந்தாலும் காலத்தால் அவர் வாழ்கிறார் .
 ஆனால், அவரது பாடலில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டுகள் நம்மிடையே இருந்தும் காலத்தால் மறைந்து 
வருகிறது .விளையாட்டு மைதானத்திலேயே பொழுதை கழித்த  காலம் மாறி வீட்டில் உட்கார்ந்த இடத்திலே 
   விளையாடும் பிலாண்டேசன் , வீடியோ கேம் போன்றவைகளில் குழந்தைகள் கவனம் செலுத்துகின்றன .     
டெலிவிசன்  இண்டர்நெட்டும் குழந்தைகளை இருக்கைகளிலேயே முடக்கி  உடல் மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த நிலைமையினை மாற்ற பாரம்பரிய விளையாட்டுக்களை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

                                                              கிராம மக்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை இன்றும் விளையாடி வருகிறார்கள் .
அத்தி பூத்தார் போல ஒரு சில பெரு நகர பகுதிகளிலும் இந்த விளையாட்டுகளை பார்க்கலாம் . இவை மனபக்குவத்தை 
கொடுத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விளையாட்டுகளாகும். அதனால் அதனை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.


                                         பல்லாங் குழி ,பாண்டி ஆட்டம் , நொண்டி , பச்சை குதிரை , பம்பரம், கயிறு தாண்டுதல் ,சிலம்பம், கோலி , பூ பறிக்க வருகிறோம் , கல்லாங்காய் ,பரமபதம் ,தாயக்கட்டை,போன்று பல உள்ளன . திருவிழாக்களில் இந்த விளையாட்டுக்களை தவிர ஏற்றம் இறைத்தல் ,கயறு திரித்தல் போன்ற விளையாட்டுகளை ஆடினோம். நமது முன்னோர்கள் வெறும் பொழு போக்கிற்காக மட்டும் விளையாடவில்லை , ஒவ்வொரு விளையாட்டிலும் உடலை சீராக்கும் மருத்துவமுறைகள் இருக்கின்றன .நட்பு ,அன்பு, புத்திசாலித்தனம் எல்லாம் இந்த விளையாட்டுக்கள் மூலம் வளரும்.

                          பாரம்பரிய விளையாட்டுக்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை .யோகசனத்துக்கு நிகரானவை .

கலாங்காய் விளையாட்டு கண் ,கை  ஒருங்கிணைப்பையும் ,மனதை ஒரு நிலைபடுத்தவும் உதவுகிறது. தரையில் அமர்ந்து கல்லை எடுக்கும்போது வயிற்ருப்பகுதியில் உள்ள தசைகளுக்கு பலம் கிடைக்கிறது .சாப்பிட்ட உணவிற்கு 
செரிமான சக்தியை கொடுக்கிறது .கீழிருக்கும் கைககை உள்ளங்கையால் எடுக்கும் போது உள்ளங்கைகளில் இருக்கும் 
முக்கியமான வர்மப்புள்ளிகள் தூண்டப்படுவதால்  இதயம், மன நலம் காக்கப்படுகிறது. உள்ளங்கையில் இருந்து வெளியேறும் வியர்வையும் கட்டுப்படுத்தப்படும். 

                                                          பல்லாங்குழி விளையாடும் போது உடலில் உள்ள யோகச் சக்கரங்கள் இயக்கப்படுகின்றன.
அதனால், சிறுநீரகம் ,கல்லீரல் ,பெருங்குடல், ஆகியவற்றின் இயக்கம் சீராக்கப்படும். இரு நாசிகளிலும் மூச்சுக்காற்று சீராக வந்து போக உதவுவதால் உடல் வலிகளை அகற்றும் மருந்தாக வும் அது அமையும் .தாயக்கட்டை விளையாட்டு கணித அறிவுக்கு சிறந்த டானிக் போன்றது.கில்லி விளையாட்டில் வெற்றி பெற்றவர் கை ஒருங்கிணைப்பு இருந்தால் மட்டுமே முடியும்.

                                         கோலம் போடுவதும் ஒரு விளையாட்டுதான் , கோலம் போடுவதால் தியான நிலைக்கு நிகரானது . கோலம் போடுவதால் மனதை ஒரு நிலை படுத்த முடியும் .பச்ச குதிரை விளையாட்டில் சிறந்து விளங்கிய பெண்களையே  முற்காலத்தில்  இளைங்கர்கள் விரும்பி திரு மணம்செய்து  கொண்ட காதல் கதைகள் நிறைய உள்ளன .

    பம்பரத்தை சாட்டையால் சுழற்றி எடுத்து உள்ளங்கையில் சுழற்றுவதால் உள்ளங்கையின் மையப்பகுதி யில்  உள்ள பெரிகர்டியம் தூண்டப்பட்டு உற்ச்சாகம் கிடைக்கும். இப்படி பாரம்பரிய விளையாட்டுக்கள் மூலம் உடலுக்கும் மனத்துக்கும் எக்கச்சக்கமாக பழங்கள் கிடைக்கும். 

பெரியவர்கள் கூட  சிறு பிள்ளை போல விளையாடி மகிழ்ந்தனர் . இது போன்ற பொது விளையாட்டக்களில் பங்கேற்ப்பதால் மன அமைதி கிடைப்பதுடன் புத்துணர்ச்சியும் புகுந்து விடுகிறது .பாரம்பரிய விளையாட்டுக்களை பார்த்தாலே உடலில் உற்ச்சாகம் பொங்குகிறது.

அதே போல் இயற்க்கை உணவும் நமக்கு மருந்து போன்றது . சுவையோடும் அது  ஆரோக்கியத்தையும் தரும். இன்றும் கிராமப்புறங்களில் சமையல் பொருட்களை  அம்மிகளில்  அரைத்தே பயன் படுத்துகின்றனர். அம்மி, உரல், ஆட்டுக்கல் போன்றவைகளை இயக்குவதால் பெண்கள் உடலுக்கு நல்ல பலன்கள் ஏற்ப்படும் .

      எனவே , வளரும் தலை முறையினர்  விளையாட்டுக்களுக்கும் , பொழுது போக்குவதற்கும்  டெலிவிஷனை  நாடாமல் நம் தமிழர்களின் பாரம்பரிய  விளையாட்டுக்களை விளையாடி உடல் நலமும் ,மன நலமும் பெற்று 
ஆரோக்கியமாக  வாழ்வோமாக. !

No comments: