.
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார் ஆனல்ட்
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்தன
சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்
மேற்கு ஆபிரிக்காவில் பரவி வரும் எபோலா வைரஸால் உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார் ஆனல்ட்
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்தன
சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்
மேற்கு ஆபிரிக்காவில் பரவி வரும் எபோலா வைரஸால் உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
இதன்போது, அவர் எபோலா நோயை கட்டுப்படுத்த அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான பிரதேசத்துக்கு 3,000 அமெரிக்கப் படையினரை அனுப்புவதற்கான உத்தரவு மற்றும் புதிய சுகாதார கவனிப்பு வசதிகளை ஸ்தாபித்தல் உள்ளடங்கலான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார் ஆனல்ட்
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்தன
சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்
மேற்கு ஆபிரிக்காவில் பரவி வரும் எபோலா வைரஸால் உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார் ஆனல்ட்
15/09/2014 சென்னை வந்துள்ள ஹொலிவூட் நடிகர் ஆனல்ட், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விக்ரம் - எமி ஜக்ஸன் நடித்துள்ள ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக வந்துள்ளார்.
ஆனல்ட் ஷ்வார்ஸ்நெகர் ஒரு நடிகர் மட்டுமல்ல. கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக இரு முறை (2003 - 2011) பதவி வகித்தவர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிரமுகர்.
அந்த வகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று அவர் சந்தித்தார். பிற்பகல் 2.45 மணிக்கு இந்தச் சந்திப்பு நடந்தது. தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்தன
16/09/2014 ஈராக் தலைநகர் பாக்தாதில் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மீதான முதல் வெடிகுண்டு தாக்குதலை அமெரிக்கப் போர் விமானங்கள் தொடங்கியுள்ளன.
ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி பல முக்கிய நகரங்களை ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் யாஷிதி பழங்குடி மக்களை பிணைய கைதிகளாகவும் அவர்கள் பிடித்து வைத்துள்ளளனர்.
ஐ.எஸ்-ஸ{க்கு எதிரான தாக்குதலையும், ஈராக் மற்றும் குர்திஷ் படைகளுக்கு பயிற்சி அளிக்கும் பணிகளையும் அமெரிக்க இராணுவம் கடந்த மாதம் தொடங்கியது.
ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை நடத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை முதல் அமெரிக்கப் போர் விமானங்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வான்வழித் தாக்குதலை தொடங்கியது. இதில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த 6 வாகனங்கள் வெடித்து சிதறின.
கடந்த இரண்டு மாதங்களாக, இராக்கில் மனிதாபிமான ரீதியாக 162 முறை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி கருத்துத் தெரிவிக்கும் போது,
தென்கிழக்கு பாக்தாத் மற்றும் சிஜார் பகுதிகளில், ஈராக் பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த பகுதிகள் ஞாயிறு முதலே எங்களது போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது என்றார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட நேட்டோ நாடுகளின் ஒத்துழைப்பை அமெரிக்கா பெற்றது. அதில் சில நாடுகள் உடன்படாத நிலையில், அவர்கள் ஆயுதங்கள் வழங்கி உதவி அளிக்கலாம் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதனிடையே, ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மூன்றாவது படுகொலையாக, பிணையக் கைதியாக வைத்திருந்த பிரிட்டிஷ் உதவிப் பணியாளர் டேவிட் ஹெய்ன்ஸ் என்பவரின் தலையை வெட்டி எறிந்த வீடியோவை கடந்த சனிக்கிழமை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி
சீன ஜனாதிபதி இந்தியா விஜயம்
17/09/2014 மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள சீன ஜனாதிபதி சி ஜின்பிங்ற்கு இந்தியாவில் பாரிய வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
சீன ஜனாதிபதி சி ஜின்பிங் உடன் உயர்மட்ட வர்த்தக குழுவினரும் இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்று பிறந்த தினத்தை கொண்டாடும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீன ஜனாதிபதி தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று அவரை வரவேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி வீரகேசரிமேற்கு ஆபிரிக்காவில் பரவி வரும் எபோலா வைரஸால் உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
18/09/2014 மேற்கு ஆபிரிக்காவில் பரவி வரும் எபோலா வைரஸ் நோயானது உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
மேற்படி, நோய் தொற்று தொடர்பில் அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது எனத் தெரிவித்த ஒபாமா, அந்த நோய்க்கு எதிரான உலகளாவிய செயற்பாடு தேவையாகவுள்ளதாக் கூறினார்.

மேற்படி, வைரஸால் இந்த வருடம் 2,461பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது. இது அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் அரைப் பங்காகும்.
எபோலா வைரஸானது நவீன காலத்தின் ஒப்பிட முடியாத சுகாதார பிரச்சினையொன்றாகவுள்ளதாக ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த வைரஸ் நோய் பரவுவதை தடுப்பதற்கான போராட்டத்துக்காக தேவைப்படும் நிதியின் அளவு கடந்த மாதத்தில் 10 மடங்காக அதிகரித்துள்ளது.
ஒவ்வொன்றும் 100 படுக்கை அறைகளைக் கொண்ட 17 சுகாதார கவனிப்பு நிலையங்களை ஸ்தாபித்தல், ஒரு வாரத்துக்கு 500 சுகாதார பராமரிப்பு பணியாளர்களுக்கு பயிற்சி, பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விநியோகங்களை மேற்கொள்ளல், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வீட்டிலேயே சுகாதார கவனிப்பு என்பன ஒபாமாவால் அறிவிக்கப்பட்ட எபோலா நோய்க்கு எதிரான சுகாதார கவனிப்புத் திட்டத்தில் உள்ளடங்குகின்றன.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment