தமிழ் சினிமா


சிகரம் தொடு

அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மகன் எடுக்கும் ஆக்சன் அவதாரமே சிகரம் தொடு. 
வேலையில் இருக்கும்போதே ஒரு காலை இழந்ததால் போலீசாக தன்னால் சாதிக்க முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று விக்ரம் பிரபுவை போலீசாக்க துடிக்கிறார் சத்யராஜ். 
ஆனால், துளியும் விருப்பம் இல்லாத விக்ரம் பிரபு அப்பாவின் ஆசைக்காக அவ்வப்போது ஜிம்முக்கு சென்று பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில், விக்ரம் பிரபுவும் அவரின் தாத்தாவும் புனித யாத்திரையாக வடநாடு செல்கிறார்கள். அங்கு நாயகி மோனல் கஜ்ஜாரை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார். முதலில் மோதலில் ஆரம்பிக்கும் இவர்களது சந்திப்பு பிறகு காதலில் முடிகிறது. 
விக்ரம் பிரபுவுவை போலவே மோனல் கஜ்ஜாருக்கும் போலீசை கண்டாலே பிடிக்காது. இருவருடைய எண்ணமும் ஒத்துப்போவதால் இருவரும் தொடர்ந்து காதலித்து வருகின்றனர். இந்நிலையில், பயணத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பும் விக்ரம் பிரபுவுக்கு போலீஸ் செலக்ஷனுக்கு அழைப்பு வருகிறது. என்ன செய்வதென்று தெரியாமல், அப்பாவின் விருப்பத்திற்காக அதில் கலந்து கொள்கிறார். 
அங்கே மோனல் கஜ்ஜாரை பார்த்ததும் அதிர்ச்சியடைகிறான். மோனலின் அப்பாவும் போலீஸ் என்பதால் அவரை பார்க்க வந்திருப்பதாக கூறுகிறாள். அவர் விக்ரம் பிரபுவை அழைத்து போலீஸ் செலக்ஷனில் பாஸாகிவிட்டு, சில நாட்கள் கழித்து அந்த வேலையை விட்டுவிடுமாறு கூறுகிறார். அதன்பிறகு தனது மகளை அவனுக்கு கல்யாணம் செய்து கொடுப்பதாகவும் கூறுகிறார். இதனால் விக்ரம் பிரபு அந்த போலீஸ் செலக்ஷனில் பாஸாகி போலீசாகிறார். 
இந்நிலையில் ஒருநாள் சத்யராஜ் வீதியில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்துச் செல்லும் கும்பலை பிடித்து விக்ரம் பிரபுவின் ஸ்டேஷனில் வந்து ஒப்படைத்துவிட்டு செல்கிறார். 
அதன்பின் மோனலுடன் படத்திற்கு விக்ரம்பிரபு போகிறார். அந்தநேரத்தில் சிறையில் இருக்கும் ஏடிஎம் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்துப்போக அங்கு வரும் சத்யராஜ் அவர்களை தடுத்து நிறுத்த பார்க்கிறார். ஆனால், அவர்கள் சத்யராஜை அடித்துப் போட்டுவிட்டு தப்பித்து சென்றுவிடுகிறார்கள். இறுதியில், விக்ரம் பிரபு அந்த ஏடிஎம் கொள்ளையர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை. 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜ் தனது போலிஸ் கதாபாத்திரத்தில் அசத்துகிறார். முதன்முதலாக போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்றுள்ள விக்ரம் பிரபு சிறப்பாக நடித்துள்ளார். தல அஜித் கெட்டப்பை பார்த்து பாராட்டியுள்ளார். இன்று வெளியான வானவராயன் வல்லவராயன் படத்தில் கிராமத்து நாயகியாக வந்த மோனல் கஜ்ஜார் இதில் மாடர்ன் அழகியாக தன் துறுதுறு நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். காமெடியன்களாக வரும் மகேஷ், சதீஷ் ஸ்கோர் செய்துள்ளனர். தூங்கா நகரம் படத்திற்கு இயக்குனர் கௌரவ் இயக்கியிருக்கும் இப்படத்தில் கொள்ளையராக நடித்திருக்கும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஏடிஎம்மில் கொள்ளை நடப்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படமாக்கிய விதம் பாராட்டுக்குரியது. பின்னணி இசையில் பட்டைய கிளப்பியிருக்கிறார் இமான். பாடல்களும் ஓ.கே ரகம். மொத்தத்தில் சிகரம் தொட தொடங்கி விட்டார் சிங்கத்தின் பேரன். - நன்றி cineulagam

No comments: