.
“வாலிவதை - ஒரு சமகால நோக்கு” என்ற தலைப்பிலான ஒரு ஒப்பீட்டாய்வு நூல் இன்று கனடாவில் வெளியிடப்படுகிறது . இது வாலி மறைந்திருந்து அன்று கொல்லப்பட்டதன் அன்றைய உலக ஆதிக்க சக்திகளின் பின்னணிகளையும் தேவைகளையும் தேடி , அவற்றை முள்ளிவாய்க்காலுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டதாகும் . வீரத்தை விதைக்கும் சங்க கால இலக்கியங்கள் தந்திரத்தை கையாளும் ஆரிய இதிகாசங்களுடன் ஒப்பிடப்படும் இந்நூலை , தமிழத்திலிருந்து இதற்காக நூலாசிரியரினால் அழைத்து வரப்பட்ட முனைவர் பேராசிரியர் திரு மு பி பாலசுப்பிரமணியன் வெளியிட்டுவைக்கவுள்ளார்.
|
நமது ஈழத்து மஹாகவியான திரு உருத்திரமூர்த்தி அவர்களின் புத்திரரும் , கனடா வினசர் பல்கலைக்கழக பேராசிரியருமான கலாநிதி திரு சேரன் அவர்கள் நூல் ஆய்வுரையை நிகழ்த்தவுள்ளார்; கனடா நேரப்படி செப்ரம்பர் 27 சனிக்கிழமை மாலை 5 30 இற்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது இதே நிகழ்ச்சியின் ஈற்றில் திரு “மு பி பா” அவர்களின் இலக்கியப் பேருரையும் இடம் பெறவுள்ளது.
தமிழகத்திலிருந்து வெளியாகும் தமிழாலையம் இதழின் அறிமுகமும் இடம் பெறவுள்ள இந்த நிகழ்வை கனடா தமிழ் எழத்தாளர் இணையம் நடாத்திவைக்கிறது தொடர்புகளுக்கு தலைவர் 416 267 6712 , 416 292 4109 , நூலாசிரியர் 647 241 1448 இனஅபிமானிகள், இலக்கிய ஆர்வலர்கள் , தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
(இடம் - அன்மையில் இடம் மாறியுள்ள கனடா கந்தசாமி ஆலய பண்பாட்டு மண்டபம் 1380 போர்ஜ்மவுன்ற் றோட் ஸ்பாபறோ கனடா)
|
No comments:
Post a Comment