பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது தாக்குதல்
மஹிந்த ராஜபக்ஷ ஹிலாரி கிளின்டனை சந்தித்தார்
வள்ளம், வலைகள் தீயில் எரிந்து நாசம் - சவுக்கடி கடற்கரை பகுதியில் சம்பவம்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது தாக்குதல்
22/09/2014 மட்டக்களப்பு முகத்துவாரம் வீதியிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இருவர் இன்று திங்கட்கிழமை அதிகாலை நேரம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக கிழக்கு
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தின் இரண்டாம் வருடத்தில் கல்வி பயிலும் ஹட்டன் பகுதியை சேர்ந்த சோதிவேல் டொனால்ட் (வயது 22) மற்றும் கதுறுவெலயைச் சேர்ந்த எம். இஷட் முஹம்மத் ஜறூல் (வயது 22) ஆகிய மாணவர்களே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பீடத்தின் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் 6 பேரை கொண்ட மாணவர்கள் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்து இரண்டாம் வருடத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் குறித்த இரண்டு மாணவர்களின் தங்கும் விடுதியினுள் உள்நுழைந்து தாக்குதலை மேற்கொண்டு தப்பி சென்றுள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான 22 வயதுடைய எம். இஷட் முஹம்மத் ஜறூல் என்ற மாணவன் நினைவாற்றலை இழந்துள்ளதாகவும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
மஹிந்த ராஜபக்ஷ ஹிலாரி கிளின்டனை சந்தித்தார்
24/09/2014 அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்ற காலநிலை உச்சிமாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஹிலாரி கிளின்டனை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வள்ளம், வலைகள் தீயில் எரிந்து நாசம் - சவுக்கடி கடற்கரை பகுதியில் சம்பவம்
22/09/2014 ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடிக் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளமும் மீன்பிடி வலைகளும் இனந்தெரியாதோரால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று இரவு எட்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவற்றின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபா என ஏறாவூரைச்சேர்ந்த உரிமையாளர் நெய்னா முஹம்மத் முஹம்மத் ஷபியான் (வயது 50) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்கிரம வின் பணிப்பின் பேரில் பொலிஸ் சார்ஜன்ட் எம். நஜீமூதீன், கான்ஸ்டபிள்களான ஆர். புருஷோத்தமன், ஏ.எம். மிஸ்பாஹ் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற சவுக்கடிக் கடற்கரைக்குச் சென்று விசாரணைகளில் ஈடுபட்டனர்.
கடந்த 20 வருட காலமாக சவுக்கடிக்கடலில் ஆழ் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும் தனக்கு இதுவரை எதிரிகள் யாரும் இல்லை என்றும் உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment