நதியைப்பாடும் நந்தவனங்கள்' 50 கவிஞர்களால் பாடப்பட்ட கவிதைத்தொகுதி

.


50 கவிஞர்களால் பாடப்பட்ட இலங்கையின் முதலாவது கவிதைத்தொகுதி 'நதியைப்பாடும் நந்தவனங்கள்'

ஈழத்து இலக்கிய உலகில் ஒரு புதுமை நிகழ்ந்திருக்கிறது...

அதுதான் மாங்காய்த்தீவின் 50 பிரசித்தி பெற்ற கவிஞர்கள் இணைந்து ஒரு காத்திரமான கவிதை நூலை வெளியிட்டுள்ளனர்.அதுதான் 'நதியைப்பாடும் நந்தவனங்கள்' எனும் கவிதை நூலாகும்
.
மூத்த முஸ்லிம் அரசியில் தலைமையும் 25 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக இருந்துவரும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்அவர்களின் 50தாவது அகவையை ஒட்டி 50 கவிஞர்கள் இணைந்து இக்கவிதை தொகுதியை வெளியீடு; செய்துளளனர் 
மூத்த ஊடகவியலாளரும் சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கான் இதனை தொகுத்துள்ளார்.

கிழக்குமண் பதிப்பகம் இதனை வெளியீடு செய்துள்ளதுஅதன் வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழம (26.9.2014) அன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் தென்கிழக்கு பல்கலைகழக துணைவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெறவுள்ளது.
தென்னிந்திய கவிஞரும் இலக்கியவாதியுமான பேராசிரியர் 
கவிமாமணி தி.மு.அப்துல்காதர் அவர்கள் விஸேட வருகையாளராக கலந்து கொள்ளவுள்ளார்.

அமைச்சர்கள்இஅரசியல்இலக்கிய பிரமுகர்கள் என பலரும் இவ் விழாவில் இணையவுள்ளனர்.நூலின் நயவுரைகளை கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார்

தென்கிழக்கு பல்கலைகழக மொழித்துறைத்தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் நிகழ்த்துகின்றனர்.

நூலாசிரியர் அறிமுகத்தை மகுடம் பிரதம ஆசிரியர் கவிஞர் வீ.மைக்கல்கொலின் நிகழ்த்தவுள்ளார்.

இந்நூலில் கீழ்வரும் கவிஞர்கள் கவிதைகளை யாத்துள்ளனர்.

புலவர்மணி ஜின்னாஹ் ஷரிபுத்தீன்இகவிமணி அ. கௌரிதாசன்இ கலாபூஷணம்.ஆசுகவிஅன்புடீன் சாஹித்யசூரி ரீ.எல். ஜவ்பர்கான்இகவிச்சுடர் அன்பு முகைதீன்இகவிஞர் நிலா தமிழின்தாசன்இகவிஞர். எஸ். ரபீக்இஇகவிஞர். ஏ.எம்.எம். அலி இடாக்டர். தாஸிம் அகமதுஇகவிஞர். செ. குணரத்தினம்இகவிஞர். இப்றாகீம் (நத்வி)இசெழியன் பேரின்பநாயகம;கவிஞர். மருதூர் ஜமால்தீன்இ ஒலுவில் அஸீஸ் எம். பாயிஸ் இதோப்பூர்சிராஜ்தீன்இகவிமணி. எம். நஜ்முல் ஹுசைன் ;தமிழ்மணி அன்புமணிஇதாமரைச் செல்விஇ கவிஞர். கலைவாதி கலீல்இகலாபூஷணம் காத்தான்குடி பாத்திமா பாவரசு பதியத்தலாவ பாறூக்இகலாபூஷணம். பாலமுனை பாறூக்இகவித்தாரகை எம்.எம். ஜனைதீன்இகவிதாயினி கலைமகள் ஹிதாயாரிஸ்வி இ கவிஞர். ஏறாவூர் அனலக்தர்இஆரையூர் இளவல்இ சம்மாந்துறை மசூறாஇஅபூமின்ஹாஜ்இகலைமதி எம்.ஏ.சீ. றபாய்தீன்இகவிஞர். சுஐப் எம். காசிம்இ இக்பால் அலிஇமுகைதீன் சாலிஇஎச்.எம். இக்பால்கான்இஏ.எல்.ஏ. ஜப்பார்இகலாஜோதி அ.மு. அப்துல் கஹ்ஹார்இஇபுஸல்லாவ இஸ்மாலிகாஇகவிஞர். ஓடையூரான்இஏ.எம்.எம். சித்திக்இ எம்.ஐ.எம். முஸ்தபாஇ ஏறாவூர். தாஹிர்இபுன்னகை வேந்தன் நஸீலாஇதமிழ்த்தென்றல் அலி அக்பர; இல்மி அஹமட்லெப்பைஇபாவலர் சாந்தி முஹியித்தின்இகலாஜோதி காத்தான்குடி பௌஸஇ கிண்ணியா அமீர் அலிஇகிண்ணியா ஜெனீரா தௌபீகஇ மூதூர் கலைமேகம் ;கவிமணி நீலாபாலன் ஆகியோர் இந்நூலில் கவிதைகளை யாத்துள்ளமை விஸேட அம்சமாகும்.

குறித்த நூல் வெளியீட்டுவிழாவில் தென்னிந்திய பேராசிரியர் முனைவர் கவிமாமணி தி.மு அப்துல்காதர் தலைமையில் 'நதியே...நீ பாடிக்கொண்டிரு..'எனும் தலைப்பில் கவியரங்கும் இடம்பெறவுள்ளது.

காப்பியக்கோ புலவர்மணி ஜின்னாஹ் செரிபுத்தீன் கவிஞர்களை அறிமுகம் செய்கிறார்.

கவிஞர்களான ரீ.எல்.ஜவ்பர்கான்இநீலாபாலன்இஅன்புடீன; அ.கௌரிதாசன்இஎன்.நஜ்முல் ஹுசைன் செ.குணரட்னம்இஎம்.எச்.ம்.புஹாரிஇ எஸ்.ரபீக; தமிழ்த்தென்றல் அலிஅக்பர் இகலைவாதிகலீல் 
ஆகியோர் கவிமழை பொழியவுள்ளனர்.

கவிஞர்களான சுஐப் எம்.காசீம் கவிதாயினி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி ஆகியோர் வாழ்த்துக்கவிதை பாடவுள்ளனர்

நூலில் கவிதைபாடிய 50 கவிஞர்களும் பொற்கிழி மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை விஸேட அம்சமாகும்.இம்மாபெரும் இலக்கிய விழாவில் சகலரும் கலக்க ஏற்பாட்டாளர்கள் விரும்புகின்றனர்

No comments: