மெல்பேர்ன் ஸ்ரீ முருகப் பெருமானின் நாலாம் நாள் மகோற்சவத் திருவிழா.

.


மெல்பேர்ன் சண்சயினில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகப் பெருமானின் வருடாந்த மகோற்சவத் திருவிழா கடந்த 08.01.2014 புதன்கிழமையன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றது. மகோற்சவத் திருவிழாவில் கடந்த 11.01.2014 சனிக்கிழமை மாலை மெல்பேர்ன் வடபகுதியில் வாழும் இந்துக் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து திருவிழாவினை ஒழுங்குபடுத்தி இருந்தனர். யாழ்ப்பாணத்தில் எமது ஊர்க்கோயில்களில் நடைபெறுவது போல் மக்கள் தாம் வாழும் பகுதியைப் பிரதிநிதிப்படுத்துவது போன்றிருந்தது.

அன்றைய தினம் மாலை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு யாக பூசைää கொடித்தம்ப பூசைää வசந்த மண்டபப்பூசை நடைபெற்றது. வேதää சிவாகமங்களை பிரபல்யமான சாஸ்திரிகளிடம் நன்கு பயின்றுää இந்துமத சாஸ்திரப்படி குருத்துவப் பட்டம் பெற்றுää கடந்த காலங்களில் எத்தனையோ கொடியேற்றத் திருவிழாக்களை செவ்வனே நடாத்தி வைத்தää அனுபவம் கொண்டää பெருமைக்குரிய பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ.நிர்மலேஸ்வரக்; குருக்கள் ஐயா அவர்கள் இம்முறை காப்புக்கட்டி கொடியேற்றியுள்ளார். அவருடன் சிவஸ்ரீ.ஜானகிராமன் குருக்கள்ää சிவஸ்ரீ.சிவரஞ்சன் குருக்கள் உட்பட அனைத்து சிவாச்சாரியார்களும் வேதபாராயணம் ஓதினர். ஸ்ரீ முருக பக்தர்கள் பஞ்சபுராணம்ää பஜனைப் பாடல்களைப் பாடினார்கள். தவில்ää நாதஸ்வர வித்துவான்கள் மங்கள இசையை வாசித்தனர்.


அதனைத் தொடர்ந்து ஸ்ரீ முருகப்பெருமான் குடும்ப சமேதரராய் மயில் வாகனத்தில் உள்வீதிää வெளிவீதி உலா வந்து சகல அடியார்களுக்கும் அருள்பாலித்தார். வெளிவீதி வலம் வரும் போது விஷேசமாக வருகை தந்நிருக்கும் தவில்ää நாதஸ்வர இசைக்குழுவினர் இனிமையான பக்திப்பாடல்கள் உட்பட தவில்ää நாதஸ்வர இசையை வழங்கியிருந்தனர். அதே போல் பக்தர்கள் பஜனாவளிப் பாடல்களைப் பாடினார்கள். ஆலயம் நிறைந்த வண்ணம் அடியார்கள் வருகையைக் காணக்கூடியதாக இருந்தது. இலங்கைää இந்தியää மலேஷிய நாட்டைச் சேர்ந்த பக்தர்களின் வருகை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டு செல்வதைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. வருகை தந்திருந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து விஷேசமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்த ஸ்ரீ முருகப் பெருமானைää அழகிய மயில் வாகனத்தில் ஏற்றித் தமது தோள்களில் சுமந்து வீதி உலா வந்ததைப் பார்க்கும் போது அழகாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு நன்றி கூற வேண்டும்.


சகல அடியார்களுக்கு ஸ்ரீ முருகப்பெருமானின் அருட்பிரசாகங்களும்ää இரவு அன்னதானமும் வழங்கப்பட்டது. அன்பர்கள் அனைவரும் பக்தி சிரத்தையோடு தினமும் திருவிழாவிற்கு வருகை தந்து சகல உதவிகளையும் செய்து வருகின்றனர்.
மெல்பேர்ண் ஸ்ரீ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

அல்லமதேவன். மெல்பேர்ன்No comments: