உலகச் செய்திகள்


இந்தோனேசிய எரிமலை உக்கிரமாக குமுறல்

நயகரா நீர் வீழ்ச்சியை இப்படிப் பார்த்ததுண்டா?


எகிப்தில் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பில் வன்முறைகள்

நைஜீரியாவில் கார் குண்டுத் தாக்குதல்

ஈராக்கில் மரணச்சடங்கை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்

========================================================================

இந்தோனேசிய எரிமலை உக்கிரமாக குமுறல்


13/01/2014        இந்­தோ­னே­சி­யாவின் சுமாத்திரா தீவி­லுள்ள சினபங் எரி­மலை குமுறி 16,000 அடி உய­ரத்­திற்கு நெருப்புக்குழம்­பையும் சாம்­ப­லையும் சனிக்­கி­ழமை வெளித்­தள்­ளி­ய­தை­ய­டுத்து , அந்த எரி­ம­லையை சூழ­வுள்ள பிராந்­தி­யங்­களைச் சேர்ந்த 25,000 க்கு மேற்­பட்­ட­வர்கள் தமது வீடு­வா­சல்­களை விட்டு வெளி­யே­றி­யுள்­ளனர்.
அந்த எரி­ம­லையைச் சூழ்ந்­துள்ள 5 கிலோ­மீற்றர் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து 25,516 பேர் வெளி­யே­றி­யுள்­ள­தாக அந்­நாட்டு தேசிய அனர்த்த நிவா­ரண முக­வர்­ நி­லையம் ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்­தது.
மேற்­படி எரி­ம­லை­யா­னது கடந்த இரு வார கால­மாக குமுறி வரு­கின்ற போதும், சனிக்­கி­ழமை அதன் குமுறல் என்­று­மில்­லா­த­வாறு தீவி­ர­ம­டைந்­தி­ருந்­தாகக் கூறப்­ப­டு­கி­றது.
இந்தோனேசியாவிலுள்ள 129 உயிர்ப்பான எரிமலைகளில் சினபங் எரிமலையும் ஒன்றாகும்.      நன்றி வீரகேசரி

நயகரா நீர் வீழ்ச்சியை இப்படிப் பார்த்ததுண்டா?

 14/01/2014
இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் மனித மனங்களை நெகிழ வைக்கின்றன. அந்தவகையில் கனடா மற்றும் அமெரிக்காவில்  ஏற்பட்ட வரலாறு காணாத கடும் குளிர்,  மற்றும் உறைய வைக்கும் பனிக் காலநிலையால் நயகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி, அப்படியே உறைந்துவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் 1902,1936 மற்றும் 1848 ஆம் ஆண்டுகளில் நயகரா நீர் வீழ்சி இவ்வாறு உறைந்து காணப்பட்டதாம்.
கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் கனடாவில் நிலவும் கடும் குளிரினால் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன், 11,000 விமானசேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் நயகரா நீர்வீழ்ச்சி பகுதியளவி; உறைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நயாகரா நீர்வீழ்ச்சி அல்லது நயாகரா பேரருவி என்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது.
ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி

எகிப்தில் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பில் வன்முறைகள்

16/01/2014     எகிப்தில் அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­த­மொன்­றுக்­கான முக்­கிய வாக்­கெ­டுப்பு இடம்­பெற்று வரு­கின்ற நிலையில், அங்கு சில பிராந்­தி­யங்­களில் பணி­நீக்கம் செய்­யப்­பட்ட ஜனா­தி­பதி முர்­ஸியின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் அரசாங்க பாதுகாப்புப் படையினருக்குமிடையே இடம்­பெற்ற மோதல்­களில் குறைந்­தது 11 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.
மேற்­படி சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பா­னது முர்ஸி பத­வி­யி­லி­ருந்த போது அவரால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பை மாற்­று­வதை நோக்­காகக் கொண்­டது.
இந்நிலையில் அந்த வாக்­கெ­டுப்­பிற்கு கடும் எதிர்ப்பைத் தெரி­வித்­துள்ள ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் பொலிஸார் மீது கற்­க­ளையும் நெருப்புக் குண்­டு­க­ளையும் வீசி தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.
இந்த வன்­முறை தாக்­கு­தல்­களால் அச்­ச­ம­டைந்த வாக்­கா­ளர்கள் பலர் வாக்­க­ளிக்க செல்­வதை கைவிடும் நிலைக்­குள்­ளா­ன­தாக கூறப்­ப­டு­கி­றது.
இத­னை­ய­டுத்து முர்­ஸியின் முஸ்லிம் சகோ­த­ரத்­துவ அமைப்பைச் சேர்ந்த உறுப்­பி­னர்கள் உட்­பட சுமார் 250 பேர் கைதுசெய்­யப்­பட்­டனர்.
மொஹமட் முர்ஸி ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து பணி­நீக்கம் செய்­யப்­பட்­டது முதற்­கொண்டு அந் நாட்டில் இடம்­பெற்ற வன்­மு­றை­களில் 1000 பேருக்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.
இந்நிலையில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற வன்­மு­றை­களில் 11 பேர் பலி­யா­ன­துடன் 28 பேருக்கும் அதி­க­மானோர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு சுகா­தார அமைச்சு உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.
தலை­நகர் கெய்ரோ, கிஸா, பானி சுயப் மற்றும் சொஹக் மாகா­ணங்­களில் முர்­ஸியின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் பாது­காப்பு படை­யி­ன­ருக்­கு­மி­டையில் உக்­கிர மோதல் இடம்­பெற்­றுள்­ளது.
சொஹக் நகரில் பொலி­ஸா­ருக்கும் பாது­காப்பு படை­யி­ன­ருக்­கு­மி­டையே இடம்­பெற்ற துப்­பாக்கிச் சமரில் 4 பேர் பலி­யா­ன­துடன் சிரேஷ்ட பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் உட்­பட மூவர் காய­ம­டைந்­துள்­ளனர்.
பானி சுயப்பில் வாக்­க­ளிப்பு நிலை­ய­மொன்றை ஊடு­ருவ முயற்­சித்த சுமார் 100 பேரைக் கலைக்க பொலிஸார் நடத்­திய துப்­பாக்கிச் சூட்டில் முர்­ஸியின் ஆத­ர­வாளர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார்.
இந்நிலையில் புதன்­கி­ழமை மேற்­படி அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்தம் தொடர்பான இரண்டாம் நாள் வாக்களிப்பையொட்டி வாக்களிப்பு நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் முதல் நாள் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக அன்றைய தின வாக்களிப்புகள் மந்த நிலையை அடைந்திருந்ததாக கூறப்படுகிறது.
 நன்றி வீரகேசரிநைஜீரியாவில் கார் குண்டுத் தாக்குதல்

16/01/2014     வடகிழக்கு நைஜீரிய நகரான மெய்டுகுரியில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலொன்றில் குறைந்தது 19 பேர் பலியாகியுள்ளனர்.
தாமே இந்தத் தாக்குதலை நடத்தியதாக போகோ ஹராம் போராளி குழு உரிமை கோரியுள்ளது.
இந் நிலையில் இந்தத் தாக்குதலில் தொடர்புபட்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தையொன்றிற்கு அண்மையில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலால் பாரிய புகை மூட்டம் எழுந்துள்ளது.
வட நைஜீரியாவில் மத ரீதியான ஆட்சியை ஏற்படுத்த போகோ ஹராம் போராளி குழு போராடி வருகிறது.


  நன்றி வீரகேசரி 
ஈராக்கில் மரணச்சடங்கை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்
 
ஈராக்கிய தலைநகர் பக்தாத்தின் வடக்கே உள்ள பிராந்தியமொன்றில் மரணச்சடங்கொன்றில் புதன்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 15 பேர் பலியானதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

அதேசமயம் நாடெங்கும் இடம்பெற்ற 7 கார்க்குண்டுத் தாக்குதல்களில் 20 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
தியலா மாகாணத்திலுள்ள புஹ்ருஸ் நகரில் இடம்பெற்ற சஹ்வா போராளி குழுவின் உறுப்பினர் ஒருவரின் மரணச் சடங்கை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேற்படி போராளி குழுவானது 2006 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல் கொய்தா போராளிகளுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயற்பட்டது.
பக்தாத்திற்கு அண்மையிலுள்ள பிராந்தியங்களில் முதல் நாள் இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் பலியானார்கள்
இந்நிலையில் ஈராக்கிய நகரான ரமடியில் அல் – கொய்தாவுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அன்றைய தினம் ரமடி நகரின் சில பகுதிகளதும் பலுஜாஹ் நகரின் அனைத்து பிரதேசங்களதும் கட்டுப்பாட்டை போராளிகள் கைப்பற்றியுள்ளனர்.
ரமடி நகரில் இடம்பெற்ற மோதல்களில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.
இதன்போது 3 பொலிஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ள அதேசமயம் வீடுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.நன்றி வீரகேசரிNo comments: