இலங்கைச் செய்திகள்



 யாழில் மலேரியா தடுப்பு

இலங்கையில் கஞ்சா போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா போதைப்பொருள் மீட்பு


தெஹிவளையில் மூன்று பள்ளிகளில் தொழுகைகளுக்கு பொலிஸார் தடை : மறுக்கின்றார் பேச்சாளர்

வவுனியா அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்தை மறு அறிவித்தல்வரை மூடுவதற்கு உத்தரவு

உள்நாட்டு, வெளிநாட்டுக் கலைஞர்கள் வழங்கும் மாபெரும் பரத நாட்டிய நிகழ்வு

யாழில் மலேரியா தடுப்பு

16/12/2013   
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து இந்தியாவுக்கு பயணத்தை மேற்க் கொள்பவர்களுக்க மலேரியா கட்டுப்பாட்டு மருந்து குளிகை கொடுக்கும் நடவடிக்கைகள் சுகாதார வைத்தியதிகாரியினால் மேற்க்கொள்ளப்படவுள்ளது.



யாழ்ப்பாணத்தில் சமீபகாலமாக மலேரியா நோய்த்தாக்கத்திற்கு உள்ளானவர்களில்  பெரும்பாலனாவர்கள் இந்தியா சென்று திரும்பியவர்கள் என இனம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்த ஐயப்பசுவாமி உற்சவத்திற்கு மற்றும் சுற்றுலாவுக்கு  செல்பவர்களும் முன்கூட்டியே மருந்துகளை உட்கொண்டு செல்வதன் மூலம் யாழ்ப்பாணத்தில் மலேரியா பரவுவதை தடுக்கமுடியும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கையை சங்கானை சுகதார வைத்திய அதிகாரி மேற்க் கொண்டுள்ளார்.
நாளை 17 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை சங்கானை பணிமனையில் ஆரம்பமாகவுள்ளதாகவும் இந்தியா செல்லவுள்ளவர்கள் இதனை மேற்க் கொண்டு சென்றால் பாதுகாப்பெனவும் சங்கானை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி





இலங்கையில் கஞ்சா போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

17/12/2013  இலங்கையில் கஞ்சாப் போதைப் பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை குறிப்பிடுகிறது.
 
இது குறித்து அச்சபையின் உதவிப் பணிப்பாளர் பத்ராணி சேனநாயக்க தெரிவிப்பதாவது,
இலங்கையில் 2011 ஆம் ஆண்டை விடவும் அதன் பின்னரான வருடங்களில் கஞ்சாப் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
கஞ்சாப் பாவனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் 11 வீதத்தினால் அதிகரித்துள்ளது. ஒரு இலட்சம் சனத்தொகையில் 184 பேர் கஞ்சா போதைப் பொருள் பாவிப்பவர்களாக உள்ளனர்.
கஞ்சாப் பாவனையின் போது கைது செய்யப்படுபவர்களில் அதிகளவிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். புள்ளி விபரங்களின் படி, கடந்த வருடம் கஞ்சா பாவனையில் ஈடுபட்டு கைது செய்யபட்டவர்களில் 61 வீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாகவும், 11 வீதத்தினர் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாகவும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் 6 வீதமாகவும் உள்ளனர்.
அது மாத்திரமின்றி மாவட்ட மட்டத்தில் 50 வீதமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் 7 வீதத்தினர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் 6 வீதத்தினர் அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அத்துடன் நாட்டில் சட்டவிரோதமாக 500 ஹெக்டேயரில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுகிறது. கிழக்கு மற்றும் தென் மாகாண வறள்வலயங்களில் கஞ்சா அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கஞ்சா பாவனையாளர்களில் இள வயதினர் அதிகளவிலுள்ளமை கவலையளிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.நன்றி வீரகேசரி




மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா போதைப்பொருள் மீட்பு

 16/12/2013
மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் சுமார்  50 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா போதைப்பொருளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட அதிரடிப்படையினரினால் இருவர் செய்யப்பட்டுள்ளனர். 
37 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் வத்தளை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு விசேட அதிரடிப்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து கஞ்சா போதைப்பொருள் மீட்க்கப்பட்டதுடன் மன்னார் பொலிஸார்  மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி








தெஹிவளையில் மூன்று பள்ளிகளில் தொழுகைகளுக்கு பொலிஸார் தடை : மறுக்கின்றார் பேச்சாளர்

18/12/2013  
தெஹி­வளை -- கல்­கிசை மாந­க­ர­ச­பைக்கு உட்­பட்ட பிர­தே­சங்­களில் அமைந்­தி­ருக்கும் மூன்று பள்­ளி­வா­சல்­களில் தொழு­கை­களை மேற்­கொள்ள வேண்­டா­மென நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பொலி­ஸாரால் அறி­விக்­கப்­பட்­டதையடுத்து அங்கு வாழ் முஸ்­லிம்கள் மத்­தியில் சற்று பதற்­ற­மான சூழல் தென்­பட்­டது.
தொழு­கைகள் நடத்­தப்­படும் பட்­சத்தில் தேவை­யற்ற பிரச்­சி­னைகள் உரு­வா­க­லா­மென்ற அச்­சத்தின் கார­ணத்­தி­னா­லேயே அத்­தி­டிய மஸ்­ஜித்துல் ஹிபா, களு­போ­வில மஸ்­ஜித்துல் தாரூல் சாபீய், தெஹி­வளை தாரூல் அர்க்கம் ஆகிய மூன்று பள்­ளி­வா­சல்­க­ளிலும் தொழு­கை­களை நடத்த வேண்டா மென பொலிஸ் தரப்­பி­லி­ருந்து அறி­விக்­கப்­பட்­ட­தாக அமைச்சர் றிஷாட் பதி­யுதீன் தெரி­வித்­துள்ளார்.
குறித்த பள்­ளி­வா­சல்கள் அமைந்­தி­ருக்கும் பிர­தே­சங்­களில் உள்ள சில பெளத்த மத குருமாரும்இ பெளத்­தர்­களும் இணைந்து மேற்­படி பள்­ளி­வா­சல்கள் மூன்றும் சட்­ட­வி­ரோ­த­மா­னவை என பொலி­ஸா­ரிடம் முறை­யிட்­டி­ருப்­ப­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. இதே­வேளை, இவ்­வி­வ­காரம் தொடர்பில் இன்று புதன்­கி­ழமை சம்­பந்­தப்­பட்­டோ­ருடன் பேச்­சு­வார்த்­தை­யொன்று மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருப்­ப­தா­கவும் தேவைப்­படும் பட்­சத்தில் ஜனா­தி­பதி மற்றும் பாது­காப்பு செயலர் ஆகி­யோரின் கவ­னத்­துக்கு கொண்­டு­வர விருப்­ப­தா­கவும் அமை ச்சர் றிஷாத் பதி­யுதீன் தெரி­வித்­துள் ளார்.
பொலிஸார் மறுப்பு
இதே­வேளை, தெஹி­வளை பிர­தேச பள்­ளி­வா­சல்­களில் தொழு­கை­களை மேற்­கொள்­ள­வேண்­டா­மென பொலிஸா ரால் விடுக்­கப்­பட்­டுள்ள அறி­விப்­பினை மறுத்­துள்ள பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோகண, பள்­ளி­வா­சல்­களில் தொழு­கை­களை மேற்­கொள்ள வேண்­டா­மென கூறு­வ­தற்கு பொலி­ஸா­ருக்கு அதி­காரம் கிடை­யாது. அல்­லது தொழு­கை­களை தடை செவ­தற்­கான அதி­கா­ரமும் இல்லை என்று குறிப்­பிட்டார்.
அவர் மேலும் கூறு­கையில்,
எந்த பள்ளி­வா­ச­லிலும் பொலிஸார் தொழு­கையை தடை செய்­ய­வில்லை. தெஹி­வளை பிர­தே­சத்தில் அவ்­வாறு எந்த சம்­ப­வமும் இடம்­பெ­ற­வில்லை. எனினும் கொஹு­வல பிர­தே­சத்தில்,  குர் ஆன் மத்­ர­ஸா­வாக நடத்தி வரப்­பட்ட இடம் ஒன்று தற்­போது தொழு­கைக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரு­வ­தாக பெளத்த பிக்கு ஒருவர் பொலிஸில் முறைப்­பாடு அளித்­துள்ளார். அந்த முறைப்­பாடு தொடர்பில் விசா­ரணை செ ய்ய பெளத்த, முஸ்லிம் தரப்புப் பிரதி நிதிகளை இன்று புத்தசான மற்றும் மதவிவகார அமைச்சுக்கு வருமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். இதனை தவிர எந்த சம்பவமும் அங்கு இடம்பெறவில்லை.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸார் பள்ளி வாசலில் தொழுகைக்கு தடை விதிக் கவில்லை என தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி



வவுனியா அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்தை மறு அறிவித்தல்வரை மூடுவதற்கு உத்தரவு


18/12/2013  வவு­னியா அட்­டம்­ப­கஸ்­கட செத்­செ­வன சிறுவர் இல்­லத்தின் செயற்­பா­டு­க­ளுக்குத் தடை­வி­தித்­துள்ள வவு­னியா மாவட்ட நீதி­மன்றம், மறு அறி­வித்தல் வரையில் அதனை மூடி வைக்­கு­மாறு அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.
அட்­டம்­ப­கஸ்­கட சிறுவர் இல்­லத்தில் இடம்­பெற்­ற­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்ற சிறுவர் மீதான துன்­பு­றுத்­தல்கள் மற்றும் சிறுவர் மீதான பாலியல் துஷ்­பி­ர­யோகம் தொடர்­பாகக் கைது செய்­யப்­பட்­டுள்ள அந்த இல்­லத்தின் நிர்­வா­கி­யான மத­குரு கல்­யா­ண­திஸ்ஸ தேரரை மேலும் 14 நாட்­க­ளுக்கு விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு வவு­னியா மாவட்ட நீதிவான் வி.இரா­ம­க­மலன் உத்­த­ர­விட்­டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்­பான விசா­ர­ணைகள் நேற்று வவு­னியா மாவட்ட நீதி­மன்­றத்தில் எடுக்­கப்­பட்­ட­போது, சந்­தேக நப­ரா­கிய மத­குரு, அவ­ரு­டைய இல்­லத்தில் இருந்த தன்னை அவர் தொடர்ச்­சி­யாகப் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்கி வந்தார் என்று ஒரு சிறுவன் செய்­தி­ருந்த முறைப்­பா­டு­பற்­றிய வழக்­கில் அவரைக் கைது செய்து 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்டார்.
அதே­நேரம் செத்­செ­வன இல்­லத்து சிறு­வர்­களைப் பல வழி­களில் துன்­பு­றுத்­தினார் என சாட்­டப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்டு தொடர்­பான வழக்கில் அவரைப் பிணையில் செல்ல அனு­ம­திக்க வேண்டும் என்று அவ­ரது சார்பில் வாதா­டிய சட்­டத்­த­ர­ணிகள் விடுத்த கோரிக்­கையை நிரா­க­ரித்த நீதிவான் சந்­தேக நபரை மேலும் 14 நாட்­க­ளுக்கு விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.
இந்த வழக்கில் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­களின் நலன்­களைக் கவ­னிப்­ப­தற்­காக சட்­டத்­த­ர­ணி­க­ளான இரா­ஜ­கு­லேந்­திரா வி.என்.தம்பு ஆகியோர் ஆஜ­ராகி சந்­தேக நப­ருக்குப் பிணை வழங்­கு­வதை எதிர்த்­தி­ருந்­தனர்.
அட்­டம்­ப­கஸ்­கட சிறுவர் இல்லம் சிறுவர் இல்ல விதி­மு­றைகள், ஒழுங்­கு­களைக் கடைப்­பி­டித்து நடத்­தப்­ப­ட­வில்லை என்று நீதி­மன்­றத்தின் கவ­னத்­திற்கு சிறுவர் நன்­ன­டத்­தைப்­பி­ரிவு அதி­கா­ரிகள் கொண்டு வந்­த­தை­ய­டுத்து, அந்த சிறுவர் இல்­லத்தின் செயற்­பா­டு­க­ளுக்குத் தடை­வி­தித்து, அதனை மறு அறி­வித்தல் வரை மூடு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார்.
இந்த வழக்கின் சந்­தேக நபர், சிறு­வர்­களைத் துன்­பு­றுத்­தினார், பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு அவர்­களை உட்­ப­டுத்­தினார் என்று மேலும் மேலும் அவ­ருக்கு எதி­ராக முறைப்­பா­டுகள் வரு­வது தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு அறிக்கை சமர்ப்­பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கும், பொலிசாருக்கும் உத்தரவிட்ட நீதிமன்றம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சம்பந்தப்பட்ட அதிகாரியை அடுத்த தவணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் இந்த வழக்குகள் தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.    நன்றி வீரகேசரி










உள்நாட்டு, வெளிநாட்டுக் கலைஞர்கள் வழங்கும் மாபெரும் பரத நாட்டிய நிகழ்வு

20/12/2013   இலங்கை தமிழ் மக்­களின் பாரம்­ப­ரிய கலா­சா­ரங்­களை பறை­சாற்றும் வகையில் டென்மார்க், அவுஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­களை சேர்ந்த இலங்கை கலை­ஞர்கள் மற்றும் இலங்­கையில் 5 மாகா­ணங்­க­ளையும் உள்­ள­டக்­கிய கலை­ஞர்­களும் ஒன்­றி­ணைந்து நாளை கொழும்பு பம்­ப­லப்­பிட்டி கதி­ரேஷன் மண்­ட­பத்தில் விழா ஒன்றினை நிகழ்த்­த­வுள்­ளனர்.

அண்­ணா­மலை பல்­க­லைக்­க­ழகம், பார­தி­தாசன் பல்­க­லைக்­க­ழகம் மற்றும் பம்பாய் சர்­வ­தேச திறந்த பல்­க­லைக்­க­ழ­கங்­களில் நாட்­டி­யத்­து­றையில் பல­பட்­டங்­களைப் பெற்­ற­வரும் ஜெயாஞ்­சலி இன்டர்.நெஷனல் நிறு­வ­னத்தின் நிறு­வு­ன­ரு­மான பிரதீஷ் குமாரின் ஏற்­பாட்­டில் நடை­பெ­ற­வுள்ள இந்­நி­கழ்வில் இலங்­கையில் 5 மாகா­ணங்­களை சேர்ந்த புகழ்­பெற்ற ஆசி­ரி­யர்­களின் மாண­வர்­களும் அவுஸ்­தி­ரே­லியா, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இலங்கை கலை­ஞர்­களும் கலந்து .சிறப்­பிக்­க­வுள்­ளனர்.

மேலும் இந் நிகழ்­விற்கு பிர­தம விருந்­தி­ன­ராக வெளி­நாட்டு பிர­தி­நிதி திரு.திரு­மதி. பேநாட் கில்ரோய் கலந்து சிறப்­பிக்­க­வுள்ளனர்.

இலங்­கை­யி­லி­ருந்து சுமார் 6 மாகா­ணங்­களை சேர்ந்த பர­த­நாட்­டிய குழு­வினர் இந்­நி­கழ்வில் கலந்து கொள்­ள­வுள்ளனர். அவர்­களில் மேல்­மா­கா­ணத்­தி­லி­ருந்து ஸ்ரீமதி வாசுகி ஜெக­தீஸ்­வரன் மற்றும் சூரி­ய­கலா சந்­திரிக்கா ஜீவா­னந்­தனின் மாண­வர்­களும், ஊவா மாகா­ணத்­தி­லி­ருந்து பண்­டா­ர­வளை ஸ்ரீத­ரியின் மாண­வர்­களும் , மத்­தி­ய­மா­காணம் கண்­டி­யி­லி­ருந்து ஸ்ரீமதி வைஜந்தி மாலா செல்­வ­ரட்­ணத்தின் மாண­வர்­களும், கிழக்கு மாகாணம் திரு­ம­லை­யி­லி­ருந்து ரேணுகா செல்­வ­புத்­தி­ரனின் மாண­வர்­களும் , மட்­டக்­களப்­பி­லி­ருந்து
உஷா­தேவி கன­க­சுந்­த­ரத்தின் மாண­வர்­களும் , வட­மா­கா­ணத்­தி­லி­ருந்து சூரி­யா­ழினி வீர­சிங்­கத்தின் மாண­வர்­களும், டென்­மார்க்­கி­லி­ருந்து இலங்­கையைச் சேர்ந்த ஸ்ரீமதி கௌரி வசந்தி ஆசிரியையின் மாணவர்களும்,  அவுஸ்திரேலியா, மெல்போனில் இருந்து சாந்தி இராஜேந்திரனின் மாணவர்களும் இணைந்து இந்த நாட்டிய விழாவில் பங்கேற்கவுள்ளனர்.நன்றி வீரகேசரி

No comments: