உலகச் செய்திகள்

விண்­வெ­ளிக்கு இரண்­டா­வது தட­வை­யாக குரங்கை வெற்­றி­க­ர­மாக அனுப்­பிய ஈரான்

துண்டிக்கப்பட்ட கரத்தை ஒரு மாதத்தின் பின் பொருத்தி சீன மருத்துவர்கள் சாதனை


ஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது தாக்குதல்: 66 பேர் பலி
தென் சூடா­னிய தலை­ந­கரில் உக்­கி­ர மோதல்: 26 பேர் பலி; 130 பேர் காயம்

முசாபர்நகர் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 30 குழந்தைகள் பலி

பண மோகத்தால் இளைஞரை பிணமாக்கிய பெண்கள்

 சோமாலியாவில் 4 மருத்துவர்கள் சுட்டுக்கொலை
 
 தென் சூடானிய பிரதான நகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்


=======================================================================
விண்­வெ­ளிக்கு இரண்­டா­வது தட­வை­யாக குரங்கை வெற்­றி­க­ர­மாக அனுப்­பிய ஈரான்

16/12/2013   ஈரா­னா­னது விண்­வெ­ளிக்கு மனி­த­ரு­ட­னான பய­ணத்தை முன்­னெ­டுப்­ப­தற்­கான தனது நிகழ்ச்­சித்­திட்­டத்தின் அங்­க­மாக இந்த வரு­டத்தில் இரண்­டா­வது தட­வை­யாக குரங்­கொன்றை வெற்­றி­க­ர­மாக அனுப்பி வைத்­துள்­ள­தாக அந்­நாட்டு ஜனா­தி­பதி ஹஸன் ரோவ்­ஹானி தெரி­வித்தார்.
பர்காம் என்ற மேற்­படி குரங்கு விண்­வெ­ளியில் ஆரோக்­கி­ய­மா­க­வுள்­ள­தாக அவர் கூறினார்.
அந்­நாடு இதற்கு முன் முதல் தடவையாக குரங்கொன்றை விண்­வெ­ளிக்கு அனுப்­பிய போது, அனுப்­பப்­பட்ட குரங்கு ஒன்­றா­கவும் தரை­யி­றங்­கிய குரங்கு வேறொன்­றா­கவும் காட்­டப்­பட்­டமை பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
ஈரா­னா­னது தனது விண்வெளி நிகழ்ச்சித் திட்­டத்தை ஏவு­கணை தாக்­கு­தல்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தக்­கூடும் என மேற்­கு­லக நாடுகள் அச்சம் கொண்­டுள்­ளன.
இந் நிலையில் விண்­வெ­ளிக்கு குரங்கை அனுப்பும் செயற்கிரமத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகளுக்கு ஈரானிய ஜனாதிபதி பாராட்டைத் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி 

 துண்டிக்கப்பட்ட கரத்தை ஒரு மாதத்தின் பின் பொருத்தி சீன மருத்துவர்கள் சாதனை
17/12/2013    விபத்தொன்றின் துண்டிக்கப்பட்ட நபரொருவர் கரத்தை அவரது கணுக்காலில் பொருத்தி வைத்திருந்து ஒரு மாத காலமாக பாதுகாத்த பின்னர் அதனை வெற்றிகரமாக அவரது இழந்த கரப் பகுதியுடன் மீண்டும் இணைத்து சீன மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.



ஹுனான் மாகாணத்தில் சஞ்டி நகரிலுள்ள மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களே இந்த சாதனையை படைத்துள்ளனர்.

ஸியவோ வெயி என்ற மேற்படி நபரின் வலது கரம் அவரது பணியிடத்தில் இயந்திரமொன்றில் சிக்கி துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் சக தொழிலாளர்கள் அவரை இயந்திரப் பகுதியிலிருந்து விடுவித்து அவரது துண்டிக்கப்பட்ட கரம் சகிதம் அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஸியவோ வெயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது கரப்பகுதி உயிருடன் இருந்த போதும் அவருக்கு ஏற்பட்டிருந்த கடும் காயம் காரணமாக அதனை மீளவும் அவருக்கு உடனடியாக பொருத்துவது சாத்தியமற்று இருந்தது.

இதனால் செய்வதறியாது திகைத்த மருத்துவர்கள் பிராந்தியத்திலுள்ள பெரிய மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
இதனையடுத்து விபத்து இடம்பெற்ற 7 மணித்தியாலங்களில் சங்ஷா நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸியவோ வெயிக்கு அறுவைச்சிசிக்கையை மேற்கொண்ட மருத்துவர்கள் அவரது துண்டிக்கப்பட்ட கரத்தை அவரது கணுக்காலில் பொருத்தி அது இறந்து விடாது காப்பாற்றினர்.

இந்நிலையில் ஒரு மாதம் கழித்து அவரது துண்டிக்கப்பட்ட பகுதியிலான இரத்த ஓட்டம் சீராகியதும் கணுக்காலில் பொருத்தப்பட்டிருந்த கரம் மீளவும் அதற்குரிய இடத்தில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.  நன்றி வீரகேசரி








ஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது தாக்குதல்: 66 பேர் பலி

17/12/2013  ஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் மற்றும் கார் குண்டு வெடிப்பு சம்பவங்களில் சிக்கி 66 பேர் பரிதாபமாக பலியாகினர்.

முஸ்லிம்களின் ஷியா-சன்னி பிரிவினருக்கிடையிலான குலப்பகை ஈராக்கில் தலைவிரித்து தாண்டவமாடி வருகிறது. இதன் எதிரொலியாக இரு பிரிவினரும் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் பெரும்பான்மை சமுதாயத்தினர் பேராதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதன் விளைவாக ஏராளமான அப்பாவி பொதுமக்கள் நாள்தோறும் பலியாகி வருவது ஈராக்கில் தொடர்கதையாகிவிட்டது.
இந்த தொடர்கதையின் புதிய அத்தியாயமாக ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ரஷித் பகுதியில் ஷியா யத்ரீகர்களை குறி வைத்து நிகழ்த்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 22  ஷியா யாத்திரீகர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இதேபோல், மொசுல் நகரத்தில் ஷியா யத்திரீகர்கள் சென்ற பஸ் மீது துப்பாக்கிகளால் சுட்ட சன்னி பிரிவினர் 12 பேரை சுட்டுக் கொன்றனர். 5 கார்களின் மீது நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதல்களில் 17 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 50 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திர்கித் நகரில் உள்ள உள்ளாட்சி துறை அலுவலகத்தின் மீது கார் குண்டு தாக்குதல் நடத்தி அதனை கைப்பற்றிக் கொண்ட சிலர், உள்ளே இருந்த 40 பணியாளர்களையும் சிறை பிடித்தனர். அவர்களை விடுவிக்க பொலிசார் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.
திர்கித் நகரின் வழியாக செல்லும் எண்ணை குழாய்க்கு காவலாக நின்ற 3 பொலிசாரும் கிர்குக் நகரின் வழியாக செல்லும் எண்ணை குழாய்க்கு காவலாக நின்ற 2 பொலிசாரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். சலாஹெதீன் மாகாணத்தில் உள்ள பைஜி பொலிஸ் நிலையத்தை கைப்பற்றிக் கொண்ட தீவிரவாதிகள் உள்ளே பணியில் இருந்த 2 பொலிசாரை சுட்டுக் கொன்றனர்.
பின்னர், விரைந்து வந்த அதிரடிப் படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் 3 பொலிசார் உள்பட 6 பேர் பலியாகினர்.    நன்றி வீரகேசரி 
 தென் சூடா­னிய தலை­ந­கரில் உக்­கி­ர மோதல்: 26 பேர் பலி; 130 பேர் காயம்

18/12/2013     தென் சூடா­னிய தலை­நகர் ஜுபாவில் செவ்­வாய்க்­கி­ழமை உக்­கிர மோதல் இடம்­பெற்­றுள்­ளது. அதி­காலை வேளை முதல் அங்கு இடம்­பெற்ற துப்­பாக்கிச் சமரால் மக்­களில் பலர் அச்சம் கார­ண­மாக வீடு­க­ளுக்குள் முடங்­கி­யி­ருந்­த­துடன், சிலர் நகரை விட்டு வெளி­யேறும் முயற்­சியில் ஈடு­பட்­­டி­ருந்ததாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­ற­ன.
இந்த மோதல்­களில் குறைந்­தது 26 பேர் பலி­யா­ன­துடன் 130 பேருக்கும் அதி­க­மா­னோர் காய­ம­டைந்­துள்ளனர்.
அந்­ நகரின் வெவ்­வேறு பிர­தே­சங்­க­ளிலும் துப்­பாக்கிச் சூட்டு சமர் தொடர்ந்து இடம்­பெற்று வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.
ஞாயிற்­றுக்­கி­ழமை பின்­னி­ரவு புதி­தாக ஆரம்­ப­மான இந்த பிந்­திய மோதல்களுக்கு தனது எதி­ரா­ளி­யான முன்னாள் உப ஜனா­தி­பதி றியக் மாச­ருக்கு ஆத­ர­வான படை­யி­னரே காரணம் என தென் சூடான் ஜனா­தி­பதி சல்­வா கிர் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.
றியக் மாசர் கடந்த ஜூலை மாதம் இரா­ணுவ சதிப் புரட்சியொன்றை முன்­னெடுக்க முயற்­சித்த குற்­றச்­சாட்டில் பணி­நீக்கம் செய்­யப்­பட்­டி­ருந்தார்.
இந் நிலையில் தென் சூடானில் இடம்­பெற்று வரும் கல­வ­ரங்கள் கார­ண­மாக பல்­லா­யி­ர­க்­க­­ணக்­கான மக்கள் ஐக்­கிய நாடுகள் அலு­வ­ல­கங்­களில் அகதிகளாக தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர்.
பல பிர­தேசவாசிகள் இரா­ணுவ தளங்­க­ளுக்கு அண்­மை­யி­லுள்ள தளங்­களில் வசிப்­பதால் தமது உயிரை பாது­காப்­ப­தற்கு இடம்­பெ­யர வேண்­டிய நிர்ப்­பந்­தத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ள­னர்.      நன்றி வீரகேசரி












 முசாபர்நகர் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 30 குழந்தைகள் பலி

 18/12/2013    உத்­த­ர­பி­ர­தேச மாநி­லத்தில் கல­வ­ரத்தில் பாதிக்­கப்­பட்டு முசா­பர்­நகர் நிவா­ரண முகாம்­களில் தங்கவைக்­கப்­பட்­ட­வர்­களில் 30 குழந்­தைகள் பரி­தா­ப­கரமாகப் பலி­யா­கி­யுள்­ளன.
இவர்கள் அனை­வரும் கடும் குளிர் கார­ண­மாக இறந்­துள்­ளனர் என கூறப்­ப­டு­கி­றது.
கல­வரம் பாதித்து 3 மாதங்கள் ஆகியும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் இன்னும் நிவா­ரண முகாம்­க­ளி­லேயே தங்கியுள்­ளனர். இந்­நி­லையில், மாநில அரசு குழந்­தைகள் இறந்­த­தாக வெளி­யான தக­வ­லுக்கு மறுப்பு தெரி­வித்­துள்­ளது.
இது­கு­றித்து உள்­துறை செய­ல­கத்­துக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையிலும் இதே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.    நன்றி வீரகேசரி









பண மோகத்தால் இளைஞரை பிணமாக்கிய பெண்கள்

18/12/2013      நியூசிலாந்தில்து இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த வாலிபரை உறவுக்கு அழைத்துச் சென்று கொலை செய்த இரு பெண்களுக்கு நியூசி நீதிமன்றம் 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கொலையான அமந்தீப் சிங்(22) என்ற அந்த வாலிபர் நியூசிலாந்தின் கிஸ்போர்ன் நகரில் வசித்து வந்தார். திருமணமான இவர், கிஸ்போர்ன் நகரின் வழியாக காரில் சென்றுக் கொண்டிருந்த போது சாலையோரமாக நடந்து சென்ற கிரிஸ்டல் போக்கை(25)என்ற பெண் அமந்தீப் சிங்கிடம் காரில் பயணிக்க உதவி கோரினார். அவரும் சம்மதித்து அந்த பெண்ணை காரில் ஏற்றிக் கொண்டார். போகும் வழியில் இருவருக்கும் இடையில் நடந்த பேச்சில் கிரிஸ்டலை அமந்தீப் சிங்குக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. இருவரும் தொலைபேசி இலக்கங்களை பரிமாறிக் கொண்டனர்.
 அதன் பின்னர், குறுந்தகவல் மூலமாக இருவரின் நட்பு மேலும் நெருக்கமானது. ஒரு கட்டத்தில், கிரிஸ்டல் போக்கை அமந்தீப் சிங் உறவுக்கு அழைத்தார். முதலில் மறுப்பது போல் பாவனை காட்டிய கிரிஸ்டல்,  திடீரென்று அமந்தீப் சிங்கிற்கு ஒரு  குறுந்தகவல் அனுப்பினார். தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாகவும் தனது வீட்டிற்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் எனவும் கிரிஸ்டல் தெரிவித்தார். இதனையடுத்து, நள்ளிரவில் அமந்தீப் சிங் தனது காரில் கிரிஸ்டல் வீட்டிற்கு தனியாக சென்றார்.
கிரிஸ்டலின் வீட்டில் இன்னொரு இளம் பெண்ணும் உடன் இருந்தார். "எய்ட்டி கடற்கரைக்கு சென்று நாம் 3 பேரும் உல்லாசமாக இருக்கலாம்" என்று அமந்தீப் சிங்கின் மனதில் கிரிஸ்டல் கூறவே அமந்தீப் சிங்,  2 பெண்களையும் காரில் ஏற்றிக் கொண்டு கெய்ட்டி கடற்கரைக்கு சென்றார்.
 இதற்கிடையில், அமந்தீப் சிங்கை காணவில்லை என அவரது குடும்பத்தார் பொலிஸாருக்கு புகார் அளித்தனர். புகாரையடுத்து விசாரணை நடத்திவந்த பொலிஸார், எய்ட்டி கடற்கரையில் உள்ள ஒரு புதர் மறைவில் இருந்து அமந்தீப் சிங்கின் அழுகிப்போன பிரேதத்தை கண்டெடுத்தனர். பிரேத பரிசோதனையில் அமந்தீப் சிங் அடித்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவரை கிரிஸ்டலும் அவரது தோழியும் அடித்து கொன்றுவிட்டு, அமந்தீப் சிங்கின் காசட்டை  மற்றும் காரை இருவரும் திருடிச் சென்றதையும், அந்த காசட்டை மூலம் ஏ.டி.எம்.மில் இருந்து 2 பெண்களும் பணம் எடுக்க முயன்றதையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து, அவர்களை கைது செய்த பொலிஸார், கிஸ்போர்ன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். பொலிஸ் தரப்பு சாட்சியாக அமந்தீப் சிங் மற்றும் கிரிஸ்டல் ஆகியோருக்கு இடையில் நிகழ்ந்த 166 குறுந்தகவல்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. விபச்சாரத்திற்கு வாலிபரை ஆசைகாட்டி வரவழைத்து, பணம் பறிக்கும் நோக்கத்தில் அடித்துக் கொன்றுவிட்டு, காரையும்,  காசட்டையும் திருடிய குற்றத்திற்காக 2 பெண்களுக்கும் தலா 8 ஆண்டு 8 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி முர்ரே கில்பர்ட் தீர்ப்பளித்தார்.   நன்றி வீரகேசரி









சோமாலியாவில் 4 மருத்துவர்கள் சுட்டுக்கொலை

20/12/2013    சோமா­லிய தலை­நகர் மொகா­டி­ஷுவில் 3 சிரிய மருத்­து­வர்­களும் ஒரு சோமா­லிய மருத்­து­வரும் துப்­பாக்­கி­தா­ரி­களால் சுட்­டுக் ­கொல்­லப்­பட்­டுள்­ளனர்.
அவர்கள் மருத்­துவ நிலை­ய­மொன்றை நோக்கி காரில் சென்ற வேளை­யி­லேயே  இந்த தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.
அத்­துடன் மேற்­படி தாக்­கு­தலில் அவர்­க­ளது மெய்ப்­பா­து­கா­வ­லர்கள் இரு­வர் பலியாகியுள்ளதுடன்  சோமா­லியா மருத்­து­வரும் படு­கா­ய­ம­டைந்­துள்­ளனர்.
இந்தத் தாக்­கு­த­லுக்கு அல் – ­கொய்­தா­வுடன் தொடர்­பு­டைய அல்-­ – ஷபாப் போரா­ளி­களே கார­ண­மென குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது. 
எனினும் தாம் அத்­தாக்­கு­தலை நடத்­த­வில்லை என அல் -– ஷபாப் போராளிக் குழுவின் சிரேஷ்ட உறுப்­பி­னர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.    நன்றி வீரகேசரி










 தென் சூடானிய பிரதான நகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

20/12/2013     தென் சூடானின் முன்னாள் உப ஜனா­தி­பதி றெயிக் மாச­ருக்கு விசு­வா­ச­மான கிளர்ச்­சி­யா­ளர்கள், பிர­தான நக­ரான பொரை கைப்­பற்­றி­யுள்­ள­தாக அந்­நாட்டு இரா­ணுவம் வியா­ழக்­கி­ழமை தெரி­வித்­தது.
அந்­நாட்டில் முன்­னெ­டுக்­கப்­பட்டு தோல்­வியைத் தழு­வி­ய­தாக கூறப்­படும் இரா­ணுவப் புரட்சியொன்­றை­ய­டுத்து அங்கு தொடர்ந்து மோதல்கள் இடம்­பெற்று வரு­கின்­றன.
எமது படை­யினர், பொர் நகரின் கட்­டுப்­பாட்டை றெயிக் மாசரின் படையினரி­டம் புதன்­கி­ழமை பின்­னி­ரவு இழந்­துள்­ள­தாக இரா­ணுவ பேச்­சாளர் பிலிப் அகுயர் தெரி­வித்தார்.
புதன்­கி­ழமை இரவு முழு­வதும் துப்­பாக்­கிச்­சூடுகள் இடம்­பெற்­றன. ஆனால் அந் ­ந­கரில் எத்­தனை பேர் உயி­ரி­ழந்­தார்கள் என்ற தகவல் எமக்கு கிடைக்­க­வில்லை என அவர் கூறினார்.
தலை­நகர் ஜுபாவின் வடக்கே சுமார் 200 கிலோ மீற்றர் தொலைவில் பொர் நகர் அமைந்­துள்­ளது.
மாசர் இரா­ணுவ சதிப்­பு­ரட்­சியை முன்­னெ­டுக்க முயன்­ற­தாக தென் சூடா­னிய ஜனா­தி­பதி சல்­வா கிர் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் ஜனா­தி­ப­தியால் பணிநீக்கம் செய்­யப்­பட்ட மாசர், மேற்­படி குற்­றச்­சாட்­டுக்கு மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.
கிர் மேற்­படி குற்­றச்­சாட்டை தனது அர­சியல் எதி­ரா­ளி­களை நசுக்க ஒரு மன்­னிப்­பாக பயன்­ப­டுத்­து­வ­தாக அவர் கூறினார்.
சூடானில் 1983 – 2005 ஆம் ஆண்டு கால உள்­நாட்டுப் போரின் போது இரு தரப்­பிலும் போரா­டிய மாசர், 1991 ஆம் ஆண்டு பொர்ரில் இடம்­பெற்ற கொடூர படு­கொ­லை­க­ளுக்கு தலைமை தாங்­கி­ய­தாக குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ளார்.
முதல் நாள் புதன்­கி­ழமை பொர் நக­ரிலும் தொரித் நக­ரிலும் உக்­கிர மோதல்கள் இடம் பெற்ற போதும் தற்­போது அந்­ந­கர்­களில் அமைதி நில­வு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
தென் சூடானில் கிளர்ந்­துள்ள உள்­நாட்டு போரை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்கு அர­சியல் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட ஐக்­கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்­துள்­ளது.
இந்­நி­லையில் மாச­ருடன் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட விரும்­பு­வ­தாக தெரி­வித்­துள்ள கிர், ஆனால் அந்தப் பேச்­சு­வார்த்­தையின் பெறு­பேறு தொடர்பில் தனக்கு தெரி­யா­துள்­ள­தாக கூறினார்.
மோதல்கள் காரணமாக ஜுபா நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் தூதரகத்தில் சுமார் 20000 பேர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் உறுதிப்படுத்தியுள்ளார்.    நன்றி வீரகேசரி


No comments: